சற்றுமுன்...




உறவினருக்கு பரிந்துரை: அமைச்சர் பூங்கோதை ராஜினாமா

May 14th, 2008 | பகுப்புகள்: ஊழல், சட்டம் - நீதி, தமிழக அரசியல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றுவதற்காக ஏடிஜிபியிடம் பரிந்துரை செய்த விவகாரத்தில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

DMK Minister - Resignation for Corruption: Phone tapping by Subramania Swamyதமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் துணை இன்ஜினியர் ஜவஹர் என்பவர் சமீபத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் அமைச்சர் பூங்கோதையின் உறவினர் ஆவார். ஜவஹரை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, தமிழக ஏடிஜிபி உபாத்யாயாவை அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடியை, ஜனதா தளம் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆதாரத்துடன் வெளியிட்டார். இதுகுறித்து கவர்னரிடமும் அவர் புகார் செய்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் பேரவையில் இன்று எழுப்பிய பிரச்சனைக்கு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போதைய விஞ்ஞான யுகத்தில் ஒருவர் பேசுவதை மற்றொருவர் பதிவு செய்வது எளிதானது. எனினும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியுடன் பேசியதாக செய்தி வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அமைச்சர் என்பது வேதனையை தருகிறது.

இதற்கு பொறுப்பேற்று தனது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் பூங்கோதை அனுப்பி வைத்துள்ளார். உறவினரை காப்பாற்ற முயற்சிக்கும் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று. தனது தவற்றை உணர்ந்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து வேறொரு விசாரணைக் குழு தேவையா? அல்லது தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்கும் குழுவே போதுமா? என்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படுகிறது.

லஞ்சம் வாங்குவோருக்கு ஆதரவாக செயல்படுவது குற்றம் ஆகும். நிச்சயம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

நன்றி: எம்.எஸ்.என் & யாஹு

மேலும் விவரங்களுக்கு: Tamil Nadu minister quits after expose - National News – News – MSN India - News


ஜஸ்டின் ஹெனின் ஓய்வு

May 14th, 2008 | பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

பெண்கள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலில் இருக்கும் ஜஸ்டின் ஹெனின் முதல்தர டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓர்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.

World No. 1 Henin quits pro tennis - Fox Sports


2008-05-13 - செய்தி இணைப்புகள்

May 13th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன் | தொகுப்பாளர்: சற்றுமுன் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

  • ஈ.பி.டி.பி. ஆலோசகரும் சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் அவரது சொந்த ஊரில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்: http://snurl.com/28pec
  • மூவாயிரம் பெண்களை வக்கிரமாக புகைப்படம் எடுத்த வெனிஸ்காரர் கைது: http://snurl.com/28pko #
  • ஹைதி: பிரதம மந்திரி வேட்பாளரை ஒப்புக்கொள்ள எம்.பிக்கள் மறுப்பு - http://snurl.com/28pmz #
  • உயருன் உணவு விலைகளினால் 15 லட்சம் இந்தியக் குழந்தைகளுக்கு ஆபத்து: யூனிசெஃப் - http://snurl.com/28pnf #
  • திரைப்பட, சிற்பக் கலைஞர்களுக்கான டர்னர் பரிசு பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டுள்ளது - http://snurl.com/28pnr #
  • பீடி பிடிப்பதால் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் பேருக்கு மேல் காச நோயால் பாதிக்கப்பட்டு மரணமுறுகிறார்கள்: http://snurl.com/28q5z


ஜெய்ப்பூரில் தொடர் குண்டு வெடிப்புகள்

May 13th, 2008 | பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, குண்டுவெடிப்பு, சுற்றுலா, தீவிரவாதம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூட்டம் நிறைந்த சந்தைப்ப்பகுதியில் தொடர்ந்து குறைந்தபட்சம் ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

Blasts rock Indian tourist city - BBC


2008-05-12 - செய்தி இணைப்புகள்

May 12th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன் | தொகுப்பாளர்: சற்றுமுன் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

  • பஞ்சாப்: பள்ளியில் படிப்பதற்கு, ஹிந்து மாணவர்களும் டர்பன் அணியவேண்டும் - http://snurl.com/28e9p #
  • அன்னையர் தினம்: தாய்மை தரப்பட்டியலில் 71 நாடுகளில் இந்தியாவிற்கு 66வது இடம் - http://snurl.com/28ecf #
  • பர்மா ராணுவத்தை ஆதரித்து இயங்குவதால், அமெரிக்க வேட்பாளர் ஜான் மெகெயினின் தேர்வுக்குழுவில் இருந்து இருவர் விலகல்: http://snurl.com/28jc8
  • நவாஸ் ஷெரிஃப் கட்சி பாகிஸ்தான் அரசை விட்டு விலகியது: http://snurl.com/28jck #
  • மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென்னை விடுதலை செய்யக் கோரி நோபல் பரிசு வென்றவர்கள் கடிதம் எழுதினார்கள்: http://snurl.com/28jd5
  • ஆறு மில்லியன் சிலி நாட்டு மக்க்ளின் அந்தரங்கங்களை இணயத்தில் அம்பலமாக்கிய கொந்தர்: http://snurl.com/28jdp #
  • வெனிசுவேலா நாட்டின் மிகப் பெரிய எஃகு தொழிற்சாலையை தேசியமாக்கினார் ஹ்யூகோ சாவெஸ்: http://snurl.com/28je2 #
  • மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்: நந்திகிராம் டிஐஜி-யை மார்க்சிஸ்ட் எம்.பி. மிரட்டினாரா? - சர்ச்சை: http://snurl.com/28jeu


சீனாவில் 7.8 அளவு நிலநடுக்கம்

May 12th, 2008 | பகுப்புகள்: ஆசியா, இயற்கை, நிலநடுக்கம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

சீனாவில் தென்மேற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளி கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்தன.

‘Thousands dead’ in Chinese quake - BBC


2008-05-11 - செய்தி இணைப்புகள்

May 11th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன் | தொகுப்பாளர்: சற்றுமுன் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

  • பர்மாவில் செஞ்சிலுவை நிறுவனத்தின் படகு கவிழ்ந்து சேவைப் பொருட்கள் நாசம்: http://snurl.com/28cfs #
  • நேபாளில் 560 திபெத்திய பெண்கள் கைது: http://snurl.com/28cio #
  • ஜாம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி ஃப்ரெட்ரிக் காலத்தில் அவரால் திருடப்பட்ட அறுபது மில்லியன் டாலர் கைப்பற்றப்பட்டது: http://snurl.com/28cjf
  • துருக்கியில் 19 குர்து போராளிகள் கொல்லப்பட்டனர்: http://snurl.com/28cjz #
  • 2000த்தில் ஸ்லோபோதன் விலகியபின் நடக்கும் முக்கிய தேர்தலில் செர்பியர்கள் வாக்குப்பதிவு: http://snurl.com/28c #
  • லஷ்கர்-இ-தொய்பாவுடன் நடந்த மோதலில் நான்கு காஷ்மீரிகள், ஒரு இராணுவத்தினர், இரு போராளிகள் பலி: http:/ #
  • அமெரிக்க ஜனாதிபதியின் மகள் ஜெனா புஷ்ஷின் திருமணம்: http://snurl.com/28e92 #
  • அசாம்: இராணுவத்திற்கு பதிலடியாக நடந்த ‘கறுப்பு விதவை’ போராளிக்குழுவின் தாக்குதல்களில் 6 இஸ்லாமியர் உட்பட 8 பேர் மரணம்:http://snurl.com/28e9


2008-05-10 - செய்தி இணைப்புகள்

May 10th, 2008 | பகுப்புகள்: *சற்றுமுன் | தொகுப்பாளர்: சற்றுமுன் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

  • தந்தையின் தவணை அட்டையைத் திருடி முப்பதாயிரம் டாலர் செலவழித்தான் 13 வயது சிறுவன் - http://snurl.com/288ei #
  • டார்ஃபர் போராளிகள் சுடானின் தலைநகரான் கார்ட்டூமின் வடக்கு பகுதிகளைக் கைப்பிடித்து இருக்கிறார்கள் - http://snurl.com/288hm
  • ‘தகவலறியும் சட்டம் நீதிபதிகளுக்கும் பொருந்தும்’ - தலைமை நீதிபதி: http://snurl.com/288k1 #
  • ‘தாவூத் இப்ராகிமுக்கு எதிராக நம்பக்கூடிய ஆதாரம் கொடுத்தால் பாகிஸ்தானை விட்டு வெளியேற்றப்படு #
  • பலதாரங்களை வைத்திருக்கும் நைஜீரிய கிறித்துவர்களுக்கு எச்சரிக்கை: http://snurl.com/288pz #
  • கர்நாடகாஇல் முடிந்த முதல் சுற்று தேர்தலில் பா.ஜ.க. முன்னிலை; காங். பின்னடைவு: கருத்துக்கணிப்பு - http://snurl.com/288qp
  • 20 வயது மகள் காதலனை மணந்ததற்காக இருவரையும் கொன்ற தந்தை: ஹரியானா - http://snurl.com/288r7 #
  • கணினி வேலை தேடிய 500 பேரை ஏமாற்றிய சென்னை நிறுவனம்: http://snurl.com/288rf #


மே-11 ஞாயிறன்று விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு

May 10th, 2008 | பகுப்புகள்: இணையம், கணினி, தமிழ், பதிவுலகம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு நடத்துவது என கடந்த ஞாயிறு அன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரம் அவசரமாக நடத்திவிட வேண்டும் என்பது போல விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் கோரிக்கையின் பேரில் நாளை காலை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் நடக்க விருக்கிறது.

அரசுக் கல்லூரி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மாதாக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் சற்று தூரம் நடந்தால் அரசுக் கல்லூரி உள்ளது.

காலை 9.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் காலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி வருகை தர உள்ளார்.

சென்னை மற்றும் புதுச்சேரியிலிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இப்பயிற்சியில் சுமார் 100 கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு எழுதுகோல் குறிப்பேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பல்வேறு தமிழ் மென்பொருட்கள் குறுந்தகடு விலை ரூ15/- என வசூலிக்க இருப்பதாக விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் தமது வலைப்பூவில் தெரிவித்துள்ளனர், அதனால் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தம் பொறுப்பில் குறுந்தகடு இலவசமாக வழங்குவது என முடிவு செய்துள்ளது.

நிகழ்ச்சி நிரல் கீழே உள்ளவாறு நடக்க உள்ளது.

வருகை தர உள்ள அனைவர்க்கும் இந்த நிகழ்ச்சிநிரல் பயிற்சி அரங்கத்தில்அளிக்கப்படும்.

தமிழ் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு-2008. விழுப்புரம்

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – விழுப்புரம்
நாள் 11 மே 2008

நிகழ்ச்சி நிரல்

காலை 08.50 - 9.00 பங்கேற்பாளர்கள் பதிவு செய்தல் (15 நிமிடம்)

காலை 09.00 - 9.30 நிகழ்ச்சிகள் தொடங்கி வைத்தல் (30 நிமிடம்) (

காலை 09.30-10.00 : தமிழ் எழுத்துறுக்கள் செயலி நிறுவுவது - க.அருணபாரதி

ஏகலப்பை (15 நிமிடம்)
குறள் (5 நிமிடம்)
இளங்கோ (5 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 10.01-10.30 : தமிழில் தட்டச்சு செய்வது பேராசிரியர் மு.இளங்கோவன்
தமிழ் 99 (15 நிமிடம்)
ஒலியியலில் உள்ள குறைகள் (5நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 10.30-11.30 வலைப்பதிவு அறிமுகம் – திரு. பாலபாரதி & மா.சிவக்குமார்

மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் (5 நிமிடம்)

வலைப்பதிவு தொடக்கம் (BLOGGER) (20 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (15 நிமிடம்)

வலைப்பதிவில்பின்னூட்டமிடுவது (10 நிமிடம்)

மறுமொழி மட்டுறுத்தல் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

காலை 11.30- 11.45 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

பகல் 11.46- 12.15 வலைப்பதிவு தொடக்கம் - விக்கி

(WORD PRESS) (10 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 12.16-12.30 படங்கள் இணைப்பது (10 நிமிடம்) – கோ.சுகுமாரன்

காட்சிப்படம் இணைப்பது (10 நிமிடம்)

ஒலிகளை இணைப்பது (5 நிமிடம்) - வினையூக்கி

கேள்வி பதில் (5 நிமிடம்)

பகல் 12.31- 01-00 திரட்டிகளில் இணைப்பது (20 நிமிடம்) – விக்கி & வெங்கடேஷ்

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 01.00-02.00 உணவு இடைவேளை (60 நிமிடம்)

பகல் 02.01- 2.30 குறுந்தகடில் உள்ள மென்பொருட்கள் அதன் பயன்பாடுகள் –க.அருணபாரதிகேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 02.31- 3.00 தமிழில் இயங்குதளங்கள் - மா. சிவக்குமார்

விண்டோஸ் (10 நிமிடம்)

லினக்ஸ் (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 3.01-3.30 : கணினியில் தமிழ்ப் பயன்பாடு - இரா.சுகுமாரன்

ஒப்பன் ஆபீஸ் தமிழ் (5 நிமிடம்)

எம்.எஸ் ஆபிஸ் தமிழ் (5 நிமிடம்)

தமிழில் மின்னஞ்சல் (5 நிமிடம்)

தமிழில் அரட்டை (5 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பிற்பகல் 3.31- 4.00 இணைய உலவிகள் பயர் பாக்ஸ் – வினையூக்கி

அதியன் இணைப்பு (10 நிமிடம்)

பத்மா இணைப்பு(10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பிற்பகல் 04.01-4.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

மாலை 4.16.- 4.30 தமிழில் இணையதளங்கள் - பேராசிரியர் மு.இளங்கோவன்

விக்கிப்பீடியா (10 நிமிடம்)

மதுரைத்திட்டம் (5 நிமிடம்)

யாழ் நூலகம் (5 நிமிடம்)

பிற தளங்கள் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

மாலை 04.31- 4.45 RSS FEED கூகுல் திரட்டியில் இணைப்பது (8 நிமிடம்) சீனுவாசன் கடலூர்

மாலை 4.46-5.15 கூட்டு வலைப்பதிவுகள் அமைப்பது - தூரிகா வெங்கடேஷ்(10 நிமிடம்)

மாலை 5.15-5.45 சொந்தத் தளத்தில் வலைப்பதிவு

word press எப்படி நிறுவுவது (15 நிமிடம்) விக்கி

மாலை 6.00 நிறைவு விழா மற்றும் சான்றிதழ் அளிப்பு

*************************************************
வலைப்பதிவர்களுக்கான பயனுள்ள தளம்
தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கம் http://tamilblogging.blogspot.com/

வலைப்பதிவு பயிற்சி :
தமிழ் வலைப்பதிவர்கள்: http://www.tamilbloggers.org/ (தமிழ்நாடு-புதுச்சேரி)

பயிற்சி ஒருங்கிணைப்பு
புதுச்சேரிவலைப்பதிவர் சிறகம் http://www.pudhuvaitamilbloggers.org/

நிகழ்ச்சி ஏற்பாடு:
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்

http://vizhuppuramvalaippathivar.blogspot.com/

********************************************
தமிழின் முழு தானியங்கி வலைத்திரட்டி + வலைவாசல் - தமிழ்.கணிமை.காம் - http://tamil.kanimai.com/

தமிழ்வலைப்பதிவர் கூட்டு முயற்சியில் ஒரு செய்தித்தளம் - சற்றுமுன் -

http://satrumun.com/

புதிய வலைப்பதிவு தொடங்குவதற்கு

தமிழ்ப் பதிவுகள் http://tamilblogs.com/new-index.php

வலைப்பதிவு திரட்டிகள்

தமிழ்மணம் http://www.tamilmanam.net/index.html
தேன்கூடு http://www.thenkoodu.com/
தமிழ்வெளி http://www.tamilveli.com/
திரட்டி http://www.thiratti.com/
மாற்று http://www.maatru.net/
கில்லி http://gilli.in/


பர்மாவில் புதிய அரசியலமைப்பு குறித்த வாக்கெடுப்பு

May 10th, 2008 | பகுப்புகள்: ஆசியா, உலகம், தேர்தல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

தங்களுடைய இராணுவ ஆட்சியை மேலும் மேலும் தொடர்வதற்காக இந்த மக்கள் வாக்கெடுப்பு என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய அரசியலைமைப்பு தொடர்பாக சூறாவளியால் சின்னாபின்னமான பர்மாவில் மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. வாக்கெடுப்பை தள்ளி வைக்குமாறு விடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும் நிராகரித்து தேர்தல் நடைபெற்றுள்ளது.

வாக்கெடுப்பு நிலையங்களில் ஏராளமான இராணுவத்தினர் இருந்ததால் தாங்கள் வேறு வழியின்றி ஆதரவாக வாக்களித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். சூறாவளியினால் பாதிக்கப்படாத இடங்களில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

இதற்கிடையே, தரைவழியாக ஐ.நாவின் முதல் நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத் தொடரணி பர்மா சென்றுள்ளது. ஆனால் பர்மாவின் இராணுவத் தலைமை வெளிநாட்டு நிவாரண பணியாளர்களுக்கு தடை விதித்துள்ளது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Asia-Pacific | Burma votes amid cyclone aid row

2. Despite chaos, Myanmar holding referendum - Los Angeles Times

3. Cyclone aftermath overshadows Myanmar vote - CNN.com


பெய்ரூட்டின் மேற்குப் பாதி ஹெஸ்புல்லா கிளர்ச்சிக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது

May 10th, 2008 | பகுப்புகள்: ஆசியா, உலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

லெபனானில் அரசாங்க ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இடையே மூன்று நாட்களாக மோதல்கள் நடந்துவரும் நிலையில், தலைநகர் பெய்ரூட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேற்குப் பாதியின் பெருமளவு கட்டுப்பாடு லெபனான் ஷியா குழுவான ஹெஸ்புல்லா வசம் வந்துள்ளது.

ஹெஸ்புல்லாவின் இந்த செயற்பாட்டை ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்போடு ஒப்பிட்டு லெபனான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பேசினார். வீதிகளை மட்டும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை, ஆனால் பத்திரிகை அலுவலகங்களையும் அரசியல் கட்சி அலுவலகங்களையும் அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஆதரவுப் பிரிவினருக்கு இது ஒரு பெரும் பின்னடைவு என்று பெய்ரூட்டிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

நன்றி: பிபிசி


தசாவதாரம்: தடை கோரி வழக்கு

May 10th, 2008 | பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, திரைப்படம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » | Ping: தமிழ்மணம், தேன்கூடு

பிரபல தமிழ் நடிகர் கமலஹாசன் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘தசாவதாரம்’ என்கிற தமிழ் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்கும்படி, உலகளாவிய ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சங்கம் என்கிற அமைப்பை சேர்ந்த கோவிந்த ராமானுஜதாசா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

திரைப்படத்தின் விளம்பரங்களில் காட்டப்படும் காட்சிகள், வைஷ்ணவர்கள் பெரிதும் மதித்துப் போற்றும் ராமானுஜரையும் பெருமாளையும் இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், அவர் தமது மனுவில் கூறியிருக்கிறார். அவரது மனுவை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

கோவிந்த ராமானுஜதாசா அவர்களின் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்கள், தமது திரைப்படத்தில் ராமானுஜரையோ, இந்துமதத்தையோ இழிவுபடுத்தும் காட்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று கூறினார்.

தமது திரைப்படத்தை அதன் முழுமையான வடிவத்தில் பார்த்தால் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாது என்றும் கூறிய அவர், இந்து மதம் உட்பட எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தமக்கோ தமது திரைப்படத்திற்கோ இல்லை என்றும் கூறினார்.

நன்றி: பிபிசி