புது விசை ஏப்ரல் - ஜூன் 2008 இதழ்
www.puthuvisai.com
தீண்டப்படாதவர்களின் தீண்டப்பட்ட அறிவியல் தொழில்நுட்பம்: கோ. ரகுபதி
பார்ப்பனர்கள் உற்பத்தி என்றால் என்ன? அதை எவ்வாறு செய்து கொள்வது என்பதை வேதகாலம் தொட்டு காலனியாட்சிக் காலம்வரை கிஞ்சித்தும் அறிந்திருக்கவில்லை என்பது வேதங்களிலிருந்தும் காலனிய ஆட்சியாளர்களின் ஆவணங்களிலிருந்தும் அறிந்து கொள்ள இயலும். வேதத்தை பிறரின் வாசிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு அதில் உற்பத்தி குறித்த எந்த ஒரு சூத்திரங்களும் இல்லை. இதிலிருந்து, நிலவுடைமையாளர்களாகயிருந்த பார்ப்பனர்கள் தலித்துகளின் உடலுழைப்பிற்கான மூளையாக ஒரு போதும் இருந்திருக்கவில்லை என்று உறுதிபடக்கூற முடியும். அவ்வாறென்றால் தலித்துகளின் உடலுழைப்பிற்கு மூளையாக இருந்தது யார்?
உங்களை என் முகத்தைப் பார்க்கும்படி செய்த கதை - 2: அழகிய பெரியவன்
சிறுவயதில் என்னுடன் அதிகம் பேசியவர்களில் முதலில் நிற்பவர் அம்மாதான். அவர் என்னுடன் பேசிக் கொண்டேயிருப்பார். நான் கல்யாணம் கட்டிக்கொள்ளும்வரை இது நடந்தது. என்னிடம் சொல்வதற்கு அம்மாவிடம் ஏகப்பட்ட கதைகள் இருந்தன. தன்வீட்டாரைப் பற்றி, தன்னை பெண் பார்க்க வந்தவர்களைப் பற்றி, தன் இளமைக் காலங்களைப் பற்றி, தன் மூதாதையர்களைப்பற்றி, தன் ஊரைப்பற்றி. என்னுடன் மட்டுமல்ல சித்திகளோடும் பக்கத்து அக்கத்து வீட்டுப் பெண்களோடும் கூடத்தான் அவர் இப்படி பேசினார்.
ரம்ழான் - ஷோபாசக்தி
ஒருநாள் விசாரணை அதிகாரியொருவன் மரியத்திடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக ஒரு நூதனமான வழியைக் கையாண்டான். மரியம் கீழ்த் தளத்தலிருந்து பன்னிரெண்டாம் மாடிவரை நிற்காமல் படிகளில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். மறுபடியும் மேலிருந்து கீழ்த்தளம் வரைக்கும் படிகளில் இறங்கி ஓடிவர வேண்டும். அப்படி ஓடும்போது ஒவ்வொரு தளத்திலும் காவலுக்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பொலிஸ்காரனின் கைகளையும் அவள் தனது கையால் தொட்டுவிட்டுத் தொடர்ந்து ஓட வேண்டும். மரியம் நான்கு தடவைகள் ஏறி இறங்குவதற்குள்ளேயே முற்றாகத் தளர்ந்து விட்டாள்.
அருந்ததியர் உள் ஒதுக்கீடும் தலித் கட்சிகளும்: எம். அசோகன்
திருமாவளவன் அருந்ததியரை வந்தேறிகள் என்று பழித்தார். ஆரியர்களை வந்தேறிகள் என்று சொன்ன காலம் போய் அருந்ததியரை வந்தேறிகள் என்று சொல்கிற அளவிற்கு தமிழ் இனவாதம் எவ்வளவு ‘முன்னேறியிருக்கிறது’ பாருங்கள்! தமிழ் மொழிவாத அரசியல் என்பது பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதியினர் அணிந்திருக்கும் முகமூடி என்ற உண்மைக்கு இந்த தலித் தலைவர்கள் சாட்சியம் கூறியிருக்கிறார்கள். அருந்ததியர் தமிழரில்லை என்றால் பின்னர் அவர்களுக்கு மட்டுமானதாக ஏன் மலம் அள்ளும் தொழில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? தமிழரல்லாதவர்களான அவர்களை விரட்டிவிட்டு தமிழர்களுக்கு அந்த வேலைவாய்ப்புகளைக் கொடுக்கலாமில்லையா?
மெலுஞ்சி: டி.அருள் எழிலன்
அவனுக்காக வாழ்ந்த அந்த ஒரு ஜீவனும் தன்னை உலகத்திலிருந்து விடுவித்துக் கொண்டது. ஒரு மாட்டு வண்டியின் பின்னால் தொங்கவிடப்பட்ட அசைந்தாடிய லாந்தர் ஒளியைப் பின்பற்றி அவன் தன் தாயோடு அந்த ஊருக்கு வந்ததையும் அவளது எந்த ஒரு நடவடிக்கையும் மகனின் நன்மையின் பேராலே நடத்தப்பட்டது என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். அவனுக்கு இப்போது அழுகை வரவில்லை. அவன் அழுது யாரும் பார்த்ததும் இல்லை. அவன் தனது துன்பமான இந்த வாழ்வு குறித்தும் யாரிடமும் புலம்பியதில்லை. மனைவியாக வந்தவர்கள் சில மாதங்களில் ஓடிப் போன போதுகூட அவன் கலங்கவில்லை.
மேலும் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் படிக்க www.puthuvisai.com

Loading ...