ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூட்டம் நிறைந்த சந்தைப்ப்பகுதியில் தொடர்ந்து குறைந்தபட்சம் ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
May 13th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, குண்டுவெடிப்பு, சுற்றுலா, தீவிரவாதம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |
ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூட்டம் நிறைந்த சந்தைப்ப்பகுதியில் தொடர்ந்து குறைந்தபட்சம் ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
March 10th, 2008 பகுப்புகள்: இந்தியா, கொலை, சட்டம் - நீதி, சமூகம், சுற்றுலா, பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |
பதின்ம வயதைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டதை, பொலிஸார் மறைக்க முயன்றதாக, இந்தியாவின் கோவா மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிதும் கவனத்தை ஈர்த்த இந்த விடயத்தில், பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கார்லெட் கீலிங் என்ற பெண் போதைப் பொருளை உட்கொண்டதை அடுத்து நீரில் மூழ்கியதாக ஆரம்பத்தில் பொலிஸார் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்தப் பெண்ணின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பாக மறுவிசாரணை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளூர் நபர் ஒருவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் ராய்ட்டர் செய்தி சேவைக்குக் கருத்து கூறிய கோவாவின் சுற்றுலாத்துறை அமைச்சர், இது ஒரு கொலை என்றும், இதனை பொலிஸார் மறைக்க முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நன்றி: பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
1. British teen raped, killed on Goa beach- Hindustan Times
2. The Hindu News Update Service: “Goa death case may affect tourism adversely: Pacheco”
January 31st, 2008 பகுப்புகள்: உடல்நலம், சட்டம் - நீதி, சுகாதாரம், சுற்றுலா, சென்னை, மருத்துவம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |
சென்னை மாநகராட்சி பொது இடங்களில் துப்ப, மல ஜலம் கழிக்க குப்பை போட தடை வித்தித்துள்ளது.
சாலைகள், நடைபாதைகள், விளையாட்டு மைதானங்கள், நீர்நிலைகள், பாலங்கள் வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் பொதுவில் துப்புபவர்கள், மலஜலம் கழிப்பவர்கள் குப்பை போடுபவர்கலுக்கு ரூ. 50 அபராதமும், குப்பைகளை எரிப்பவர்களுக்கு ரூ. 500ம் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000மும் அபராதமாய் விதிக்க்கப்படும்.
பொது இடங்களில் துணி துவைப்பதையும், வாகனங்களை கழுவவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Chennai Corporation bans spitting in public places - The Hindu
January 30th, 2008 பகுப்புகள்: குற்றம், கைது, சர்ச்சை, சுற்றுலா | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |
சுற்றுலா பயணிகளையும் வெளிநாட்டுவர்களையும் ராமர்பாலத்தை காட்டுவதாக கூறி படகில் அழைத்து சென்றதாக 4 மீன்பிடிபடகுகளை போலிசார் பறிமுதல் செய்தனர் தனுஷ்கோடி பகுதியில் ஏராளமான சுற்றுலா பயனிகள் வந்த வன்னம் உள்ளனர் இவர்களில் வெலிநாட்டவரும் அதிகம்.
கடந்த திங்கள் கிழமையன்று ராமர்பாலத்தை காட்டுவதாககூறி வெளிநாட்டவர்களையும் மற்ற சுற்றுலா பயணிகளையும் நாட்டு படகு மூலம் கடலுக்கு அழைத்து செல்வதாக மீன் வளத்துறக்கு புகார்கள் வந்ததையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர் அப்பொழுது கடலுக்கு சென்று திரும்பிய 4 நாட்டு படகுகளில் சுற்றுலா பயனிகளை ஏற்றி வந்தனர் அவ்ர்களிடம் அதிகாரிகள் விசாரித்தபொழுது ராமர்பாலத்தை காட்டுவதாக கூறி அதிக கட்டனங்ககளை வசூலித்து ஏமாற்றியது தெருயவந்தது அதன் பின்னர் 4 மீன் பிடி படகுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதே போன்று கடந்த வாரம் கர்நாடகாவில் இருந்து ராமர் பாலத்தை காட்டுவதாக கூறி ஏமாற்றிய இரண்டு படகுகளை போலிசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
January 25th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, சுற்றுலா, தகவல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |
வருவார்,வரமாட்டார் என்று கண்ணாமூச்சி ஆடிய பிரான்ஸ் அதிபரின் தோழி ப்ரூனி இறுதியில் குடியரசுதினமன்று இந்தியா வருவார் என்று தெரிகிறது. அரசு விழாக்களிலும் மரியாதைசடங்குகளிலும் கலந்து கொள்ளமாட்டார்.சனிக்கிழமையன்று பிரெஞ்ச் அதிபருடன் காதல் மாளிகை தாஜ்மகால் வருகை புரிவார்.சர்கோசியின் தாஜ் விஜயம் குறுகியதாகவே இருக்கும்.. அவர் மாலை 3;45க்கு தில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடக்கும் ‘வீட்டு ‘ வரவேற்பிற்கு வரவேண்டும்.
January 17th, 2008 பகுப்புகள்: சுற்றுலா, தமிழ்நாடு, விளையாட்டு | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |
வெளி நாட்டவர் உள்ளிட்ட ஒரு லட்சம் மக்கள் பார்வையிட அலங்காநல்லூரில் சல்ல்லிக்கட்டு நடைபெற்றது.
மாவட்ட அலுவலர்களின் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புடன் இது நடத்தப்பட்டது. மொத்தம் 400 காளை அணைபவர்களும் 500 காளைகளும் பங்கெடுத்ததாகத் தெரிகிறது. பார்வையாளர்கள் களத்தில் குதிக்காமலிருக்க தடுப்பு கட்டப்பட்டிருந்தது, அணைபவர்களுக்கு சீருடைகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.
5 பேர் காளைகளை அடக்கி வெற்றி பெற்றனர்.
Jallikattu held under tight security The Hindu
December 31st, 2007 பகுப்புகள்: சுற்றுலா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |
தேக்கடி ஏரிக்கரையில் உலாவரும் யானைகள்
தேக்கடி ஏரிக் கரையில் யானைகள் அதிக அளவில் வரத் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேக்கடி வனப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வனப்பகுதிக்குள் பனியில் நிற்கும் யானைகள் பகலில் சூரிய வெளிச்சத்திற்காக தேக்கடி ஏரி கரையை நோக்கி வருகின்றன.மண்ணை உடம்பில் அள்ளி போட்டு பனித் தாக்கத்தை குறைக்க செய்யும் யானையின் செயல்களை சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம், அதிகமாக உள்ள நிலையில் கரைப்பகுதிக்கு அதிக அளவில் யானைகள் வரத் துவங்கியுள்ளன. மான்கள், காட்டெருமைகள் அதிகளவில் வருகிவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
December 31st, 2007 பகுப்புகள்: சுற்றுலா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |
மதுரை தெப்பக்குளத்தில் படகு சவாரி துவக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சவாரி நேற்று துவங்கியது.
மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் ஜன.23ம் தேதி காலை 10 மணி முதல் 10.30க்குள் தெப்ப உற்சவம் நடக்க உள்ளது. இதையொட்டி வறண்டு கிடந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக வைகையில் வந்த வெள்ளத்தால் நிரம்பிய தெப்பக்குளம், சுற்றுலா பயணிகளுக்குகண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. தெப்பக்குளத்தில் நேற்று படகு சவாரி துவங்கியது. இதனை மீனாட்சி கோயில் இணை கமிஷனர் ராஜா நேற்று துவக்கி வைத்தார். ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட படகும், 3 பெடல் படகுகளும் இதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன. விசைப் படகில் ஒரு நபருக்கு ரூ. 20ம், பெடல் படகில் பெரியவர்களுக்கு தலா ரூ.10ம், சிறியவர்களுக்கு தலா ரூ.5ம் கட்டணம் வசூலிக்கப்படும். ராஜா கூறுகையில், “படகு சவாரி வாரநாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 12 வரையும், மதியம் 3 மணி முதல் மாலை 5 வரையும், சனி, ஞாயிறு தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக பணிக்கான திருப்பணிகள் மற்றும் மின்வேலைகள் சுமார் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. அம்மன் தங்க விமானத்தில் கூடுதல் திருப்பணி வேலைகள் சுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது’ என்றார்.
December 31st, 2007 பகுப்புகள்: சுற்றுலா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |
சுற்றுலா பயணிகளை கவரும் பூக்கோடு ஏரி
கேரள எல்லையில் பூக்கோடு ஏரிக்கு, சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்களை ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். நீலகிரியை சுற்றிபார்த்து விட்டு, கர்நாடக மாநிலம் மைசூர் பகுதிக்கும், கேரள மாநிலத்தில் உள்ள எல்லையோர சுற்றுலா மையங்களையும் ரசிக்கின்றனர்.கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, பூக்கோடு ஏரி, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூக்கோடு ஏரிக்கும் வருகின்றனர். இயற்கை காட்சிகள், நீரோடைகள் நீலகிரியைப் போன்றே காணப்படுவதால் சுற்றுலா பயணிகளை இப்பகுதி ஈர்த்துள்ளது.
December 29th, 2007 பகுப்புகள்: சுற்றுலா, சென்னை, பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |
சென்னை மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த பணி மூன்று கட்டமாக நடைபெறும் என்று சென்னை மேயர் தெரிவித்தார். இதற்காக 27 கோடி ஒதுக்கப்படும் என்றார். மேலும் கடந்த மழையில் தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அதைப்போல் அங்குகடைகளை நடத்த சென்னை மாநகராச்சி தடைபோட்டுள்ளதால் வார இறுதிநாட்களில் கடற்கரைக்குவரும் கூட்டம் நாளுக்குநாள் குறைந்துவருவதை கவனத்தில் கொண்டு அங்கு வியாபாரம் செய்வதை அனுமதிக்க வேண்டும் என ஒருவியாபாரி தெரிவித்தார்
December 19th, 2007 பகுப்புகள்: அமீரகம், சுற்றுலா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |
ஆங்கிலப் புத்தாண்டை துபாயில் கொண்டாட ஏற்பாடு
பயண ஏற்பாட்டு நிறுவனமான சக்தி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனம் சுற்றுலாப் பயணிகள் துபாய் பாலைவனத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.
போக்குவரத்து, தங்கும் வசதி, காட்சி காணுதல் என நான்கு நாள் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று டிராவல்ஸ் நிறுவனத் தலைவர் பி. ரமேஷ் தெரிவித்தார்.
கட்டணம் மற்றும் இதர விபரங்களுக்கு 044 2852 4067 / 98 410 40880
மின்னஞ்சல் : shakthitravels@airtelbroadband.in
Shakthi.travels@gmail.com
www.shakthitoursandtravels.in
October 6th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா, ஈழம் - இலங்கை, சட்டம் - நீதி, சுற்றுலா | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |