தலைவர்கள் மறைவு | சற்றுமுன்...




இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா காலமானார்

June 25th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அறிவிப்பு, ஆளுமை, தலைவர்கள் மறைவு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | 2 மறுமொழிகள் » |

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10

http://muduvaihidayath.blogspot.com/
http://kayalpatnam.com/shownews.asp?id=1898

அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-

ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சட்டமன்ற - பாராளுமன்ற பணிகள்:

மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.

ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல் அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்… முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்… வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேசிய பாதுகாப்பு சட்டம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட் ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

பாராட்டுகள்:

பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் ‘சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் ‘விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் ‘சமாஜ்ரத்னா விருது சிறந்த பாராளுமன்றவாதிக்கான ‘மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். ‘பயானீர் இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் ‘முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பொறுப்புகள்:

காயிதெமில்லத் பாபகி தங்கள் இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் - பணியாற்றியும் வருகிறார்.

வெளியீடுகள்:

‘மார்க்கமும் - அரசியலும் ‘சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.

பயணித்த நாடுகள்:

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ரோம் ஜெர்மனி மால்டா துருக்கி சைப்ரஸ் ஆஸ்திரேலியா நார்வே பாகிஸ்தான் ஸவுதி அரபிய்யா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேயன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

கடந்த ஜூன் 2021 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.

 


கம்யூனிஸ்ட் தலைவர் தோப்பில் கோபாலகிருஷ்ணன் மறைவு

February 20th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, தலைவர்கள் மறைவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பத்திரிகையாளருமான தோப்பில் கோபாலகிருஷ்ணன் (63) உடல் நலக்குறைவால் கொச்சி மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தினசரி பத்திரிகையான “ஜனநாயகத்தில்’ 1986 முதல் 93 வரை அவர் ஆசிரியராக பணியாற்றினார். கொல்லம் கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

அவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவரது சொந்த ஊரான வள்ளிக்குன்னம் அருகிலுள்ள தோப்பிலில் வியாழக்கிழமை அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu : Kerala / Kollam News : CPI leader Thoppil Gopalakrishnan dead

2. Thoppil Gopalakrishnan dead


டி‌ஜிஎ‌ஸ் ‌தி‌னகர‌ன் மரணம்: முதல்வர் அஞ்சலி

February 20th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், ஆளுமை, தலைவர்கள் மறைவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!பிரபல ‌கி‌றி‌ஸ்தவ மத போதக‌ர் டி‌ஜிஎ‌ஸ் ‌தினகர‌ன் இ‌ன்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பிரபல கிறிஸ்தவ மதபோதகர் டிஜிஎஸ் தினகரன் (74). நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சென்னை அடையாறில் ‘இயேசு அழைக்கிறார்’ என்ற கிறிஸ்தவ அமைப்பை துவங்கி, மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

தினகரனுக்கு ஸ்டெல்லா தினகரன் என்ற மனைவி மற்றும் பால் தினகரன் என்ற மகன், வாஞ்சலின் என்ற மருமகள் ஆகியோர் உள்ளனர். தினகரனின் மகள் ஏஞ்சல், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் மரணமடைந்துவிட்டார்.

முழுவதும் வாசிக்க: தமிழ் யாஹூ

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu News Update Service: “Evangelist D.G.S. Dinakaran passes away”

2. Popular evangelist D G S Dinakaran dead


டி.ஜி.எஸ். தினகரன் மரணம்

February 20th, 2008 பகுப்புகள்: *பொது, தலைவர்கள் மறைவு | தொகுப்பாளர்: லக்கிலுக் | மறுமொழிகள் இல்லை » |

புகழ்பெற்ற கிறிஸ்தவ மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன், சென்னையில் 20.2.2008 அன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த டி.ஜி.எஸ். தினகரன் உடலுக்குத் தமிழக முதல்வர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்த போது கருணாநிதி, “கிறிஸ்தவ மதத்தில் புகழ் பெற்ற போதகராக இருந்த டி.ஜி.எஸ். தினகரன் மறைந்த செய்தி அவருடன் நீண்ட காலம் நட்பும் தொடர்பும் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. டி.ஜி.எஸ். தினகரனுடைய குரலைக் கேட்பதற்காக லட்சக் கணக்கான மக்கள் கூடுவார்கள். இன்று அந்த மக்கள் எல்லாம் விம்மி அழும், வேதனையில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர் மறைந்து விட்டாலும் அவருடைய புகழ் என்றென்றும் நம் உள்ளங்களில் நிலைத்து நிற்கும்” என்று கூறினார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சுரண்டையில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த டி.ஜி.எஸ்.தினகரன் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது ஏசுநாதர் “ஒளி”யாகத் தோன்றி காட்சி அளித்து அற்புதம் செய்ததாகக் கூறினார். அதன் பிறகு அவர் கிறிஸ்தவ மத போதகராக மாறினார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மத பிரசாரம் செய்த இவர் பிறகு சென்னையில் குடியேறினார். அடையாறில் “ஏசு அழைக்கிறார்” என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் சமூக சேவை செய்து வந்தார்.

தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ மதபிரசாரம் செய்தார். இவரது ஜெபத்தால் லட்சக் கணக்கானோர் பயன் பெற்றுள்ளனர். மற்றவர்களுக்காக கடவுளிடம் வேண்டுவதற்காக ‘ஜெபகோபுரம்’ என்ற அமைப்பையும் நடத்தி வந்தார்.

நீண்ட நேரம் முழங்கால் படியிட்டு ஜெபம் செய்யும் பழக்கம் கொண்டவர் தினகரன். இதனால் இவரது மூட்டுகள் பாதிக்கப்பட்டன. நீண்ட நாள் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு குணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு சளித் தொல்லை மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்பு அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் தினகரனுக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தது. அவரது மனைவி ஸ்டெல்லா தினகரன், மகன் பால்தினகரன் மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வந்தனர். 19.2.2008 அன்று இரவு நிலைமை மோசம் ஆனது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் பலனின்றி 20.2.2008 அன்று காலை 6 மணிக்கு தினகரன் மரணம் அடைந்தார்.


ஹெஸ்பொல்லாஹ் அமைப்பின் தலைவர் படுகொலை

February 13th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, ஆளுமை, உலகம், தலைவர்கள் மறைவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மேற்குலக மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து குற்றஞ்சாட்டப்படும், லெபனானிய ஹெஸ்பொல்லாஹ் அமைப்பின் அதியுயர் தலைவர் இமாட் மொஹ்னியா சிரிய தலைநகரான டமாஸ்கஸில் கார் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார்.

1980 களில் லெபனானில் மேற்கத்தைய நாட்டவர்கள் கடத்தப்பட்டமை மற்றும், பெய்ரூட்டில், அமெரிக்க மற்றும் பிரஞ்சு இலக்குகள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தியமை ஆகியவற்றுடன் இவருக்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆர்ஜண்டீனாவில் இஸ்ரேலியத் தூதரகம் மற்றும் யூத கலாச்சார நிலையம் ஆகியவற்றின் மீதான குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் இவர் மீது சந்தேகம் கொண்டுள்ளது.

இவரது கொலை தொடர்பில் இஸ்ரேலிய ஏஜண்டுகள் மீது ஹெஸ்பொல்லாவும், அவர்களது ஆதரவு நாடான இரானும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இஸ்ரேல் அதனை மறுத்துள்ளது.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. The Associated Press: A Look at Imad Mughniyeh

2. CHRONOLOGY: Events in Lebanon since Hariri's killing | Special Coverage | Reuters

3. Hariri's assassination anniversary seen pushing Lebanon to the brink of strife - International Herald Tribune


‘கலைஞர்கள் வாழும்போதே அவர்களை பாராட்டுங்கள்’: கமல்ஹாசன்

February 11th, 2008 பகுப்புகள்: ஆளுமை, கலை-இலக்கியம், தலைவர்கள் மறைவு, திரையுலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 2 மறுமொழிகள் » |

(c) Dinamani.com

எனக்கு தெரிந்த பெரிய ஹீரோ ஜெயகாந்தன் தான். அவரை நான் ஆறேழு முறை பார்த்திருக்கிறேன். ஒரு கலைஞனுக்கு உரிமை, தைரியம் எப்போதும் இருக்கவேண்டும்.

சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் ‘உயிர் எழுத்து’ பதிப்பக தொடக்கவிழாவும், எழுத்தாளர் மணா எழுதிய ‘ஆதிமூலம்- அழியாக்கோடுகள்’ நூல் வெளியீட்டு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் நூலை வெளியிட அதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டு நடிகர் கமல்ஹாசன் பேசியது:

இந்த விழா ஓவியர் ஆதிமூலம் இருக்கும்போதே செய்திருக்க வேண்டியது. அப்போது செய்தால் அவர் வேண்டாம் என மறுத்திருப்பார். நானும் ஒரு காலத்தில் ஓவியம் கற்றுக்கொள்ள விரும்பினேன். அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். அப்போது பனிக்கர் என்பவரிடம் சென்றேன்.

ஓவியத்தில் உள்ள கோடுகள் குறித்து எனக்கு சொல்லிக் கொடுத்தவர் சிவக்குமார். இந்தக் கோட்டிற்கு இந்த அர்த்தம் என அவர் விளக்கிக் கூறிய பின்னரே பல ஓவியங்கள் குறித்து நான் பல விஷயங்களை தெரிந்துக் கொண்டேன்.

மகாத்மா காந்தியடிகள் கோபமாக இருக்கும் ஒரு ஓவியத்தை வரைந்திருந்தார். அந்த ஓவியத்தை ‘ஹே ராம்’ படத்தில் காட்டியிருந்தேன். இத்தகைய கலைஞர்களை பாராட்டிவிட வேண்டும். ஆதிமூலம் மறைவுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் பணி நல்ல பணி. நிறைவான பணி என்றார் கமல்.

எழுத்தாளர் ஜெயகாந்தன்: சென்னை ஓவியக் கல்லூரியில் பனிக்கர் பேராசிரியராக இருந்த சமயத்தில், அங்கு சொற்பொழிவாற்ற சென்றபோது ஓவியர் ஆதிமூலத்துடன் பழக்கம் ஏற்பட்டது. மேற்கில் இருந்து வருவது தான் நவீனத்துவம் என்ற நினைப்பு பலருக்கும் உள்ளது. நம்மிடம் இருந்து உருவாகும் புதிய சிந்தனைகளே நவீனத்துவம் என்பதை ஏற்க வேண்டும்.

எனது கருத்துகளுடன் ஒத்துப் போனவர் ஓவியர் ஆதிமூலம். ஆண்டுதோறும் எனது பிறந்த நாளின் போது புதிய வேட்டி, சட்டை வாங்கித்தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது அவர் இல்லை இனி யார் எனக்கு அப்படி வாங்கித் தருவார்களோ தெரியவில்லை.

மேதாவித்தனம் என்பது முயற்சி இல்லாமல் வருவது என்பதற்கு உதாரணமாக அவரது ஓவியங்கள் திகழ்கின்றன. ஆதிமூலத்தின் நினைவை போற்றும் வகையிலான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனது பாக்கியம்.

எழுத்தாளர் பிரபஞ்சன்: ஆதிமூலம் குறித்த அழியா நினைவுச்சின்னமாக இன்று வெளியிடப்பட்ட நூல் அமைந்துள்ளது. அடுத்தவரை பாராட்டும் சிறந்த குணத்தை பெற்றிருந்தார் ஆதிமூலம்.

எழுத்தாளர் மாலன்: நவீன ஓவியம் மேல்தட்டு மக்களிடம் மட்டும் தங்கிவிடாமல், அதனை வெகுஜன ரசனைக்கு கொண்டு சென்றவர் ஆதிமூலம்.

நடிகர் நாசர்: ஓவியர் ஆதிமூலம் படைப்புகளுடன் மாறுபடாத மனிதர். அவர் நிரந்தரமானவர், அழிந்தவர் அல்ல.

எழுத்தாளர் சா. கந்தசாமி, சிற்பி தட்சிணாமூர்த்தி, ஓவியர்கள் கிருஷ்ணமூர்த்தி, ‘ட்ராஸ்கி’ மருது, நூல் ஆசிரியர் மணா, ‘உயிர் எழுத்து’ பதிப்பகத்தின் சுதீர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி: தினமணி | தினத்தந்தி


சமூகவியலாளர் பாபா ஆம்டே மரணம்

February 9th, 2008 பகுப்புகள்: தலைவர்கள் மறைவு, போராட்டம், மரணம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

பாபா ஆம்டே

சமூகநல ஊழியரும் மக்சேசே விருது, பத்மவிபூஷண் முதலிய விருதுகளை பெற்றவருமான பாபா ஆம்டே தனது ஆனந்த்வன் ஆஸ்ரமத்தில் இன்று இயற்கை எய்தினார். அன்னாருக்கு வயது 94.

நர்மதாநதி அணை கட்டுமானப்பணியால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக முதலில் குரல் கொடுத்தவரகளில் ஒருவர்் ஆவார்.புற்றுநோயால் வருந்திவந்த அவரது முடிவு இன்று விடிகாலை 4.40க்கு ஏற்பட்டதாக அவரது மகன் விகாஸ் கூறினார்.

சற்றுமுன் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறது.

Magsaysay award winner Baba Amte dies

பாபா ஆம்டே - விக்கிபக்கம்

Baba Amte was a great social activist who from young age worked with the lepers, the greatest outcastes of the world, and made them his own. The poem above is about his journey with the lepers. Born in December 1914 to wealthy high-caste Brahmin parents in a village in Central India, Murlidhar Devidas Amte is known to millions of Indians as Baba Amte - “Father” Amte. Like Gandhi, Baba Amte trained as a lawyer and was involved in the Indian freedom struggle against the British empire. He spent time at Mahatma Gandhi’s ashram in Sevagram and was also influenced by Acharya Vinoba Bhave, Gurdev Rabindranath Tagore, and Sane Guruji - other important freedom fighters. Baba Amte’s story is a fascinating one — one man’s colourful odyssey to conquer his own fears and expand the notion of justice and peace through innovative experiments. Baba’s most famous experiment is Anandwan [The Forest of Joy] which His Holiness, the Dalai Lama described as “practical compassion, real transformation; the proper way to develop India.” Baba Amte is also known for his advocacy work including his many peace and justice marches across the length and breadth of India, his solidarity with the aborigine tribes of India, and his opposition to the Sardar Sarovar Dam, a controversial and colossal “super-dam” project across one of India’s largest rivers. Baba has been awarded the U.N. Human Rights Prize, the Magsaysay award, the Templeton Prize, the Gandhi Peace Prize, and many other humanitarian and environmental prizes. But many people still don’t know much about this charismatic and unique human being. The book, “Wisdom Song: a Life of Baba Amte” is an attempt to share Baba Amte’s life, legacy, and wisdom with the world.


மகரிஷி மகேஷ் யோகி மறைந்தார்

February 6th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், தகவல், தலைவர்கள் மறைவு, மரணம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

மகேஷ் யோகி

உலகெங்கும் இந்திய ஆழ்நிலை தியானமுறையை (Transcendental Meditation) பரப்பிய, அறுபதுகளில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்கு குருவாக விளங்கிய, மகரிஷி மகேஷ் யோகி நெதர்லாந்தில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91 (என நம்பப்படுகிறது).

அவரது செய்தி தொடர்பாளர் பாப் ராத் குருஜி தனது உறக்கத்தில் ‘இயற்கையான காரணங்களால்’ இறந்ததாகத் தெரிவித்தார். அவரது சீடர்களாக பீட்டிஸ்களைத் தவிர பீச் பாய்ஸ், தோனோவன், கிளிண்ட் ஈஸ்ட்வுட் மற்றும் டேவிட் லின்ச் இருந்தனர்.

Maharishi Mahesh Yogi dead

Beatles guru Maharishi Yogi passes away

Beatles guru Maharishi Yogi dead | Pics: Guru cool

Beatles guru Mahesh Yogi passes away


இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுகார்தோ மரணம்

January 27th, 2008 பகுப்புகள்: தலைவர்கள் மறைவு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுகார்தோ மரணம்

இந்தோனேசிய முன்னாள் அதிபர் சுகார்தோ உடல் நலக்குறைவு காரணமாக தனது 86 ஆம் வயதில் மரணமடைந்தார்

http://www.gulfnews.com/world/Indonesia/10185177.html 


பிரதமர் விதர்பா செல்கிறார்

January 22nd, 2008 பகுப்புகள்: அரசியல், தலைவர்கள் மறைவு | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

பிரதமர் மன்மோகன்சிங் வரும் 9ம் தேதி அன்று ஒருநாள் பயணமாக   விதர்பா செல்கிறார். விதர்பா, காண்டியாவில் தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்கிறார். அதனைத்தொடர்ந்து ராஜிவ் காந்தி விமானிகள்  பயிற்சி மையத்தையும்,   திறந்து வைக்கிறார். காண்டியா கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழாவிலும் கலந்து கொண்டு பிரதமர் டில்லி திரும்புவதாக அவரது டில்லி அலுவலகம் தெரிவித்துள்ளது.


பெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்பு

December 28th, 2007 பகுப்புகள்: தலைவர்கள் மறைவு, தீவிரவாதம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்பு
    

Osama with Zawahiri

இஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.

இத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.

இதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.

தான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்.பி.ஐ:

இதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இன்று உடல் அடக்கம்:

இதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

பாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.