ஆளுமை | சற்றுமுன்...




துபாய் நூலகங்களில் காந்தி நூல்!

July 21st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, *வித்தியாசமானவை, அறிவிப்பு, ஆளுமை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாய் நூலகங்களில் காந்தி நூல்!     

 

Mahatma Gandhi

துபாயிலுள்ள பொது நூலகங்களில் ( http://www.libraries.ae ) மகாத்மா காந்தியடிகள் குறித்த அரபி மொழி நூல் கிடைக்கிறது. 

காந்தியடிகளின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து அரேபிய நாட்டவர் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மாவைப் பற்றி அறியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் சிறப்பான முறையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நூலை இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் சிறப்பான முறையில் தயாரித்துள்ளது. இதனை அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இலவசமாகவும்  வழங்கப்பட்டுகிறது.


90வது பிறந்த நாளைக் கொண்டாடினார் நெல்சன் மண்டேலா

July 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அரசியல், அறிவிப்பு, ஆளுமை, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

90வது பிறந்த நாளைக் கொண்டாடினார் நெல்சன் மண்டேலா
    

 

டர்பன்: தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நேற்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடினர். அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இனப் பிரச்னையை எதிர்த்து போராடியதற்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா. கடந்த 1990ல் விடுதலையானார். 1994ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தென் ஆப்ரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்தான் முதல் கருப்பர் இனஅதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

1999ம் ஆண்டு பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து, ஆப்ரிக்காவின் அவலநிலையாக இருக்கும் ஏழ்மை, கல்லாமை, எய்ட்ஸ் நோய்க்கு எதிராக போராடி வருகிறார் மண்டேலா.

உலக மக்களை ஈர்த்த தலைவரான மண்டேலா நேற்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார். கேப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான கியூனுவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அவருக்கு ஏராளமாக மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது மண்டேலா கூறுகையில், “ஓய்வு பெற்ற இந்த மனிதனுக்காக மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனால் நெல்சன் மண்டேலா அறக்கட்டளை, நெல்சன் மண்டேலா குழந்தைகள் நிதி மற்றும் மண்டேலா-ரோட்ஸ் அறக்கட்டளைகள் மூலம் எனது பணி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்பதை மக்கள் நினைவு கூரவேண்டும்” என்று கூறினார்.


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா காலமானார்

June 25th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அறிவிப்பு, ஆளுமை, தலைவர்கள் மறைவு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | 2 மறுமொழிகள் » |

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!
இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10

http://muduvaihidayath.blogspot.com/
http://kayalpatnam.com/shownews.asp?id=1898

அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-

ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சட்டமன்ற - பாராளுமன்ற பணிகள்:

மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.

ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல் அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்… முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்… வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேசிய பாதுகாப்பு சட்டம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட் ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

பாராட்டுகள்:

பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் ‘சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் ‘விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் ‘சமாஜ்ரத்னா விருது சிறந்த பாராளுமன்றவாதிக்கான ‘மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். ‘பயானீர் இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் ‘முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பொறுப்புகள்:

காயிதெமில்லத் பாபகி தங்கள் இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் - பணியாற்றியும் வருகிறார்.

வெளியீடுகள்:

‘மார்க்கமும் - அரசியலும் ‘சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.

பயணித்த நாடுகள்:

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ரோம் ஜெர்மனி மால்டா துருக்கி சைப்ரஸ் ஆஸ்திரேலியா நார்வே பாகிஸ்தான் ஸவுதி அரபிய்யா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேயன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

கடந்த ஜூன் 2021 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.

 


அதிகாரம் என்பது அதிகாரம் செலுத்துவதற்குக் கிடையாது : நாஞ்சில் குமரன்

June 1st, 2008 பகுப்புகள்: *பொது, ஆளுமை, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

போலீஸ் கமிஷனராக இருந்த படியே பணியில் இருந்து ஓய்வு பெறுவது காவல் துறை வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சென்னை மாநகர கமிஷனராக இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாஞ்சில் குமரனுக்கு, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பணி நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அவருக்கு சிறப்பு அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது. மனைவி மங்களம், மகள் திவ்யா ஆகியோருடன் நாஞ்சில் குமரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “அதிகாரம் என்பது அதிகாரம் செலுத்துவதற்குக் கிடையாது. மக்களுக்கு சேவை செய்யவே அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். சென்னை கமிஷனராகப் பொறுப்பில் இருப்பது என்பது சவால் நிறைந்த பணியாகும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்’ என்றார்.

கமிஷனராக இருந்த படியே ஓய்வு பெற்றது சிறப்பு: 93-வது கமிஷனராகப் பொறுப்பேற்ற கமிஷனர் நாஞ்சில் குமரன், கமிஷனராக இருந்தபடியே ஓய்வு பெறுவது என்பது சிறப்பம்சம். இதற்கு முன்னர் யாருக்கும் இம்மாதிரி வாய்ப்பு கிட்டவில்லை. சென்னை காவல்துறை வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
 


பாராசூட் பயிற்சி மையத்தில் புருணை சுல்தான்

May 24th, 2008 பகுப்புகள்: ஆளுமை, சற்றுமுன் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பாராசூட் பயிற்சி மையத்தில் புருணை சுல்தான்

 
பெங்களூரில் உள்ள, ராணுவ வீரர்கள் பாராசூட் பயிற்சி பெறும் மையத்தை புருணை நாட்டு சுல்தான் தாருஸ் சலாம் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

ராணுவ அதிரடிப் படையினர் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம், போர்க்களத்தில் எதிரி அணிகளுக்குப் பின்னால் இறங்கித் தாக்குவது, ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாத பகுதிகளில் பாராசூட் மூலம் ராணுவ வீரர்கள் குதிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை ராணுவ வீரர்கள் செய்துகாட்டினர். அவற்றை புருணை சுல்தான் பார்வையிட்டார்.

பாராசூட் மையத்தை 2 மணி நேரம் சுற்றிப் பார்த்த சுல்தான், அங்குள்ள உள்ளரங்க நவீன துப்பாக்கிசுடும் பயிற்சி மையத்தையும் அங்கு நிகழ்த்திக்காட்டப்பட்ட செயல்விளக்கத்தையும் பார்வையிட்டார்.
 
 


தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

May 24th, 2008 பகுப்புகள்: ஆளுமை, விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சமுதாய நல்லிணக்க அமைப்பின் தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனிநபர், ஓர் அமைப்பு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகத்தில் செயல்படும் மாணவர் பேரவை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு தனிநபர் தேசிய ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கத்திற்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது 35-க்கு மேல் இருக்க வேண்டும். சட்டப் பேரவை, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும்.

அமைப்பைப் பொருத்த வரையில், அந்த அமைப்பு சட்டப் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் துறையில் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற மாணவர் பேரவை சம்பந்தப்பட்ட துணைவேந்தர் விருதுக்கான செயற்குறிப்பை பரிந்துரைக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் குறைந்தது 5 ஆண்டுகால அளவில் தொடர்ச்சியாக, குறிப்பிடும்படியாக செயலாற்றியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதியில் சமுதாய நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்யும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையைப் பொருத்தவரை மாநகர காவல்துறை ஆணையரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.
 
 


ஜஸ்டின் ஹெனின் ஓய்வு

May 14th, 2008 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

பெண்கள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலில் இருக்கும் ஜஸ்டின் ஹெனின் முதல்தர டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓர்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.

World No. 1 Henin quits pro tennis - Fox Sports


த. கிருட்டினன் கொலை வழக்கு: அழகிரி நிரபராதி

May 8th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, குற்றம், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | ஒரு மறுமொழி » |

முன்னாள் அமைச்சர் த. கிருட்டினன் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து தகுந்த ஆதாரங்களில்லாததால் மு.க. அழகிரியும் மேலும் 12பேரும் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Karunanidhi’s son acquitted in murder case - IBNLive


ஆப்கான் அதிபர் கலந்து கொண்ட அணிவகுப்பில் தாக்குதல்

April 28th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, ஆளுமை, உலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் கலந்துகொண்டிருந்த ஒரு இராணுவ அணிவகுப்பில் நடந்த தாக்குதலை அடுத்து தமது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக அவர் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் நிலைமை சரியாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். காபூல் நகரம் சோவியத் இராணுவத்திடமிருந்து முஜாஹிதீன் படைகள் வசம் வந்ததன் 16ஆம் ஆண்டு பூர்த்தியைக் நினைவுகூரும் வகையில் நடந்த வைபவத்தில், அதிபர் கர்சாயும் பிற ஆப்கான் பிரமுகர்களும் மேடையேறிய சமயத்தில், தானியங்கி துப்பாக்கிகளும் குண்டுகளும் வெடித்தன.

அதிபரை அவரது மெய்க்காவலர்கள் உடனடியாக சூழ்ந்துகொண்டு அப்புறப்படுத்தியுள்ளனர். ஆப்கானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட மூன்று பேர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர் குறைந்தபட்சம் 11 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு தாலிபான்கள் உரிமைகோரியுள்ளனர். தங்கள் படையைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி: பிபிசி

விழியம்: Karzai Escapes Unharmed After Taliban Attack

மேலும் விவரங்களுக்கு:

1. Karzai escapes attack in Kabul by gunmen - International Herald Tribune

2. Hundreds held after presidential assassination attempt in Afghanistan - Times Online

3. AFP: Afghan president escapes deadly parade attack, three killed


சிறிலங்காவில் அமைதி ஏற்பட உதவ விரும்புகிறேன்:ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

April 18th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், ஆளுமை, ஈழம் - இலங்கை | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

Peace and reconcilation conference osloசிறிலங்கா யுத்தபூமியில் அமைதி நிலவிட தாம் உறுதுணையாக இருக்க விரும்புவதாக ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார். இருதரப்பினரின் நம்பிக்கையையும் பெற்றிருப்பதாகக் கூறும் குரு தமக்கு யாரும் அழைப்பு அனுப்ப வேண்டியதில்லை என்று கூறினார். வீடு பற்றி எரியும்போது யாராவது அழைப்பிற்கு காத்திருப்பார்களா என்று நார்வேயிலிருந்து IANSக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கள் ஆஸ்லோவில் கடந்த வாரம் அவரது வாழும் கலை சார்பில் நடந்த அமைதி மாநாட்டின் முடிவுறையில் கூறினார்.

இந்த அமைதி மாநாட்டில் சிறிலங்கா அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், புத்த பிக்குகள்,தமிழகத்திலிருந்து மதிமுக தலைவர் வைகோ, நார்வேயின் சிறிலங்கா சிறப்பு தூதர் யொன் ஹான்சென் பௌர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநாடு சூடாக இருந்தபோதும் ஒருவரும் வெளிநடப்பு செய்யவில்லை, அனைவருக்கும் அமைதிக்கான தீர்வு காண்பதில் முனைப்பு இருந்தது என்கிறார் ரவிசங்கர்.

அரசியல் தலைவர்களால் தீர்வு காணமுடியாத பிரச்சினைக்கு ஆன்மீகத் தலைவரால் முடியுமா என்ற கேள்விக்கு வல்லரசுகளால் மனிதர்களின் இதயங்களையும் மனதையும் இணைக்க முடியாது; மகாத்மா காந்தி தனது ஆன்மீக பலத்தால் சுதந்திர போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். கொசொவோ,அயர்லாந்து,பாகு இங்கெல்லாம் அமைதி திரும்பியிருக்கும்போது சிறிலங்கா பிரச்சினையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணுதல் முடியாத செயலல்ல எனக் கூறினார்.

I want to bring peace to Sri Lanka: Sri Sri Ravi Shankar


சார்கோசியை தொடரும் உருசிய அதிபர் புடின்

April 17th, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை, ஆளுமை, தகவல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

உலகத் தலைவர்களின் திருமணங்கள் இன்று ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. உருசிய அதிபர் விளாடிமிர் புடின் தன்னைவிட பாதி வயதுள்ள ஜிம்நாஸ்டிக் பெண்ணை மணக்க விருக்கிறார். 54 வயதாகும் புடின் 24 வயதுள்ள ஜிம்னாஸ்டிக்கும் உருசிய நாடாளுமன்ற உறுப்பினருமான அலினா கபேவாவை திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய நாளிதழ் தி டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ளது. தனது அதிபர் பதவியிலிருந்து விலகியபின்னர் ஜுன் மத்தியில் திருமணம் நடக்கவிருப்பதாக அச்செய்தி கூறுகிறது. தனது 50 வயது மனைவி லுட்மிலாவிடமிருந்து மணமுறிவு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிடினும் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன் பிரிந்ததாக தெரிகிறது.

Putin set to marry 24-yr old gymnast


அம்பேத்கர் விருது: திருமாவளவன் நாளை வழங்குகிறார்

April 14th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, விருது | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் நாளை நடைபெறும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. திருச்சி உழவர் சந்தை திடலில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை புரிந்த 6 பேருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்,

  1. பாவலர் இன்குலாபிற்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்படுகிறது.
  2. ‘சொல்லின் செல்வர்’ ஆ.சக்திதாசனுக்கு ‘அயோத்தி தாசர் ஆதவன்’ விருதும்,
  3. வே.ஆணைமுத்துவிற்கு ‘பெரியார் ஒளி விருது’ம் வழங்கப்படுகிறது.
  4. இலக்கிய செல்வர் குமரி அனந்தனுக்கு ‘காமராசர்’ விருது,
  5. அப்துல் நாசிர் மதானிக்கு ‘காயிதே மில்லத் பிறை’ விருது,
  6. கவிஞர் காசி ஆனந்தனுக்கு ‘செம்மொழி ஞாயிறு’

ஆகிய விருதுகளை திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார்.

நன்றி: யாஹூ