தகவல் | சற்றுமுன்...




கணவருடன், ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதம் தாய்லாந்து ஓட்டலில் பரபரப்பு சம்பவம்

June 28th, 2008 பகுப்புகள்: தகவல், திரையுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

கணவருடன், ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதம் தாய்லாந்து ஓட்டலில் பரபரப்பு சம்பவம்

தாய்லாந்து ஓட்டலில் கணவர் அபிஷேக் பச்சனுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நட்சத்திர ஜோடி

முன்னாள் உலக அழகியும், முன்னணி இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராயும், அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பின் கணவன்- மனைவி இருவரும் விழாக்களில் தம்பதி சமேதராய் ஆஜராகி வருகின்றனர். சினிமா விருது விழாவாக இருந்தாலும் சரி… பத்திரிகையாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் சரி… இருவரும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நட்சத்திர ஜோடி சமீபத்தில் ஒரு பொது இடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

திரைப்பட விழா

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் அண்மையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மாமனார் அமிதாப்பச்சன் ஆகியோருடன் சென்றிருந்தார்.

ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார்கள். அங்கிருந்து இருவரும் ஜோடியாக திரைப்பட விழாவுக்கு புறப்பட்டனர். நடிகர் குணால் கபூரும் உடன் இருந்தார்.

கணவருடன் வாக்குவாதம்

அப்போது ஐஸ்வர்யா ராய் உரத்த குரலில் பலமாக பேச ஆரம்பித்தார். உடனே பக்கத்தில் இருந்த அபிஷேக் பச்சன் மனைவியிடம் மெதுவாக பேசு… என்று நாசூக்காக கூறினார். ஆனால் ஐஸ்வர்யா ராய் அதை கண்டுகொள்ளவில்லை. அவர் தொடர்ந்து உரத்த குரலில் பேசிக் கொண்டு இருந்தார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நடிகர் குணால் கபூர் அங்கிருந்து நைசாக நழுவி வேறு இடத்துக்கு சென்று விட்டார்.

உடனே மனைவி ஐஸ்வர்யா ராயை ஓட்டல் வராந்தாவில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அபிஷேக் பச்சன் அழைத்துச் சென்றார். அங்கு அவரை அமர வைத்து, பொறுமையாக பேசினார். ஆனால் ஐஸ்வர்யா ராய் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், கணவருடன் உரத்த குரலில் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்.

அறைக்கு அழைத்துச் சென்றனர்

ஓட்டலில் வருவோர், போவோர் எல்லாம் இதை வேடிக்கை பார்த்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அபிஷேக் பச்சன் தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவர், தனது மெய்க்காப்பாளரை அழைத்து மனைவி ஐஸ்வர்யா ராயை அவரது அறைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

உடனே ஐஸ்வர்யா ராயை அவர்கள் அழைத்துச் சென்று விட்டனர்.

 

 


சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அரசியல், இந்தியா, ஊழல், கலை-இலக்கியம், கிளர்ச்சி, சமூகம், தகவல், தமிழ், போராட்டம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | 6 மறுமொழிகள் » |

சாகித்திய அகாதமியில் புதுச்சேரிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று (08-06-2008) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

சாகித்திய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மகரந்தன, தமிழக அரசின் பிரதிநிதியாக இராம.குருநாதன், பல்கலைக்கழக பிரதிநிதியாக இரா.மோகன் மற்றும் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாக சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராக சிற்பி பாலசுப்ரமணியத்தை மற்ற மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்தனர். மேலே உள்ள நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மேலும் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படியில் புதுச்சேரி மகரந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மூவர் பெயரை ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம் அளித்துள்ளார். ஆனால், இவர் பரிந்துரை செய்த ஒருவரையும் நியமிக்காமல் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய ஒருவரை சிற்பி நியமித்துள்ளார். பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசனையின் அடிப்படையிலோ அவர் தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது புதுச்சேரி இலக்கிய வட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பணத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் தமது உறுப்பினர்களுக்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் போது, பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க இயலும் என்று இந்த தமிழ் அமைப்புகள் கோருகின்றன.

மேலும் புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒன்பது திட்டமங்களை மகரந்தன் அளித்திருந்தார் அதில் அத்தனையும் அதன் ஒருங்கிணைப்பாளர் நிராகரித்துள்ளார். புதுச்சேரியோ அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் எதிலும் நிகழ்ச்சி எதற்கும் இதன் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு ஏன் புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி என்று புதுவையைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுபபினர். சென்ற பத்து ஆண்டுகளாக புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன.

அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும். புதிதாக புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கோரினர்.

புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் திராவிடர்க் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி பூர்வ குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் தேசிய இயக்கம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், சமூக நீதி போராட்டக் குழு இராவணன் பகுத்தறிவு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை உள்ளிட்ட 27 அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் “சாகித்திய அகாதமியின்” நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளாமல் புதுச்சேரியைத் தொடர்ந்துப் புறக்கணிக்குமானால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் தெரிவித்தார்.


அவர் வருவாரா..வரமாட்டாரா..புதிர் அவிழ்ந்தது

January 25th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, சுற்றுலா, தகவல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

sarkozy_bruni_egypt248.jpg

வருவார்,வரமாட்டார் என்று கண்ணாமூச்சி ஆடிய பிரான்ஸ் அதிபரின் தோழி ப்ரூனி இறுதியில் குடியரசுதினமன்று இந்தியா வருவார் என்று தெரிகிறது. அரசு விழாக்களிலும் மரியாதைசடங்குகளிலும் கலந்து கொள்ளமாட்டார்.சனிக்கிழமையன்று பிரெஞ்ச் அதிபருடன் காதல் மாளிகை தாஜ்மகால் வருகை புரிவார்.சர்கோசியின் தாஜ் விஜயம் குறுகியதாகவே இருக்கும்.. அவர் மாலை 3;45க்கு தில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடக்கும் ‘வீட்டு ‘ வரவேற்பிற்கு வரவேண்டும்.

மேலும்…


வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்

January 25th, 2008 பகுப்புகள்: தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்

பாரத ஸ்டேட் வங்கி உள்பட அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைச் சேர்ந்த 9 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (ஜன. 25) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

ரிசர்வ் வங்கியைப் போன்று ஓய்வூதியத் திட்டத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் மீண்டும் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் துணை வங்கிகளை பிரதான வங்கியுடன் இணைக்கக் கூடாது, வங்கிகளில் உள்ள ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும், பணியில் இருக்கும்போது வங்கி ஊழியர் இறந்தால், அவரது மனைவிக்கு அல்லது வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை, வங்கிப் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

www.dinamani.com


கிரண் பேடியின் புதிய இணையதள சேவை

January 15th, 2008 பகுப்புகள்: ஆளுமை, இணையம், இந்தியா, சட்டம் - நீதி, சமூகம், தகவல் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

அண்மையில் ஓய்வுபெற்ற இந்தியாவி முதல் பெண் ஐ.பி.எஸ் கிரண் பேடி புதிய சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார். பாதுகாப்பான இந்தியா (Mission Safer India) எனும் இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சாதாரண மக்களுக்கும் காவல் துறைக்கும் இருக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க முயல்கிறது. பல புகார்களும் காவல் துறையால் பதியப்படுவதில்லை என்று கூறும் http://www.saferindia.com/ வலைத்தளத்தின் வழியே பொது மக்களின் புகார்கள் காவல் துறை உயர் அதிகாரிகளை எட்டும்படி வழி செய்கிறது.


குழந்தைகளுக்கு மன அழுத்தம் : ஆய்வில் தகவல்

December 30th, 2007 பகுப்புகள்: குழந்தைகள், தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

குழந்தைகளுக்கு மன அழுத்தம் : ஆய்வில் தகவல்

குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

பெற்றோருக்குள் ஏற்படும் சண்டை, கவனிப்பின்மை போன்ற காரணங்களால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அன்புக்கு ஏங்குகின்றன. இதுவே, மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. துõக்கமின்மை, உணவில் ஆர்வமின்மை, சோம்பல் போன்றவை ஏற்பட்டால், உடனே குழந்தைகளை டாக்டரிடம் காட்ட வேண்டும்.தாழ்வு மனப்பான் மைக்கு, சிகிச்சை அளிக்க வேண்டும். நாளடைவில் இது குறைந்து விடுகிறது. ஏழு வயதில் இருந்து பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதில் அதிகம் பாதிக்கப்படுவதாக டில்லியில் நடந்த ஓர் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
 
www.dinamalar.com


பெங்களூரில் டிசம்பர் 21ல் காது கேளாத, வாய் பேசாதோருக்கான சுயம்வரம்

December 19th, 2007 பகுப்புகள்: தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பெங்களூரில் டிசம்பர் 21ல் காது கேளாத, வாய் பேசாதோருக்கான சுயம்வரம்

பெங்களூரில் காது கேளாத, வாய் பேச இயலாதோருக்கான சுயம்வரம் டிசம்பர் 21,22,23 ஆகிய தேதிகளில் பெங்களூர் இந்திரா நகரில் உள்ள என்.டி.கே. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

விருப்பமுள்ளவர்கள் சி.என்.விஜயராஜை 9880305877 , சரவணகுமார் 98 412 58454 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எவ்வித கட்டணமும் கிடையாது.


இணையத்தில் திமுக இளைஞரணி மாநாடு

December 14th, 2007 பகுப்புகள்: *வித்தியாசமானவை, அரசியல், இணையம், தகவல், தகவல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | 4 மறுமொழிகள் » |

DMK_meet.JPGநெல்லையில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாட்டு நிகழ்வுகள் இணையத்தில் நேரடி ஒளிபரப்பப் படவிருக்கின்றன.

http://www.dmkyouthwing.in/ எனும் தளத்தில் இதைக் காணலாம்.


சற்றுமுன் வரி விளம்பரம் முழுமையான சேவையாகிறது

December 7th, 2007 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, அறிவிப்பு, தகவல் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

சோதனை ஓட்டத்தில் இருந்த சற்றுமுன் வரி விளம்பர சேவையை முழு சேவையாக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.

தனித் தனி விளம்பரங்களை திரட்டிகளில் சேர்க்காமல் ஒரு தொகுப்பாக அவ்வப்போது சற்றுமுன் வழியாக சேர்க்க முடிவு செய்துள்ளோம்.

இதுவரை வந்துள்ள விளம்பரங்கள் கீழே

விரைவில் வித்யாசமான இணைய இதழ்…

பகுத்தறிவு நூல்கள் விற்பனைக்கு…

தமிழ் ஆன்மீக புத்தகங்கள் விற்பனைக்கு

கணக்காளர் தேவை

அழகு செடிகள் விற்பனைக்கு.

மொழிபெயர்ப்பு/துபாஷி சேவைகள்


மலேசியாவில் வெளிநாட்டவர்க்கு வண்ண அடையாள அட்டை

November 28th, 2007 பகுப்புகள்: ஆசியா, தகவல் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

மலேசியாவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு வண்ண அட்டைகள் வழங்கப்படவுள்ளன. ஆகஸ்ட் 2008க்குள் இந்த வண்ண அடையாள அட்டைகளை விண்ணப்பித்துப் பெறவேண்டும் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது மலேசியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர் எப்போதும் தங்கள் பாஸ்போர்ட்டை உடன் வைத்திருக்க வேண்டும் எனும் சட்டம் உள்ளது. இனிமேல் பாஸ்போர்ட்டிற்குப் பதில் இந்த வண்ண அடையாள அட்டைகள் இருந்தால் போதுமானது.

தற்காலிக வேலை அனுமதி உள்ளவர்களுக்கு நீல வண்ணத்திலும், வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஊதா வண்ணத்திலும், விவசாய வேலை செய்பவர்களுக்கு சிவப்பு வண்ணத்தில் மஞ்சள் கோடிடப் பட்டும், மற்றவர்களுக்கு சிவப்பு வண்ணத்திலும் அட்டைகள் வழங்கப்ப்படும்.

Foreign workers in Malaysia to be issued colour-coded I-cards - The Hindu


ரக்ஷாபந்தன் வாழ்த்துகள்

August 27th, 2007 பகுப்புகள்: *பொது, சற்றுமுன், தகவல், தகவல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Rakshabandhan Rakhiரக்ஷாபந்தன் தினம் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை கடைகளில் விதவிதமான ‘ராக்கி’கள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தனது சகோதரனுக்காக பாரிமுனையில் உள்ள கடையில் ராக்கியைத் தேர்ந்தெடுக்கும் இளம் பெண்.

படம்: தினமணி


ஓணம் வாழ்த்துகள்

August 27th, 2007 பகுப்புகள்: சற்றுமுன், தகவல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Onam Festival Celebrations Flower Kolam
ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அத்தப்பூக் கோலமிட்டு, மகிழம்பூ சிரிப்புடன் மகிழும் மலையாள மங்கையர்.

படம்: தினமணி செய்திப் பார்வை