மத்திய அரசியல் | சற்றுமுன்...




மன்மோகன் அரசு தப்பியது ஆதரவு - 275 எதிர்ப்பு - 256

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அரசியல், இந்தியா, தகவல், தேர்தல், தேர்தல்முடிவு, நாடாளுமன்றம், மத்திய அரசியல், வரலாறு | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

மத்திய அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரி இருந்ததை அறிந்திருப்பீர்கள் இவ்வாக்கெடுப்பில் காங்கரசுக்கு ஆதரவாக 256 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் மின்னனு இயந்திரம் மூலம் பதிவானதை அடுத்து மன்மோகன் அரசு தனது ஆட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தங்களது வாக்குகள் பதிவாக வில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததால் பின்னர் வாக்கு சீட்டு அளித்து வாக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து இப்போது ஆதரவு 275 எனவும் எதிர்ப்பு 256 என அறிவித்து  காங்கிரசு அரசு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.


பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மத்திய அமைச்சர் அறிவிப்பு

June 4th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சமூகம், தகவல், பொருளாதாரம், பொருளாதாரம், மத்திய அரசியல், வணிகம் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இன்று தெரிவித்தார்.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தல் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. இந்த விலை உயர்வுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.

எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் ரூ. 2.2 லட்சம் கோடியைத் தாண்டியது. என அரசு அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் விலையேற்றத்தின் காரணமாக இந்த விலை உயர்வு என்ற காரணம் சொன்னாலும் நமது நாட்டில் உற்பத்தி செய்து விற்கப்படும் பெட்ரோலுக்கும் இந்த விலை உயர்வு அமல் செய்யப்படுகிறது என்பதும் உண்மை.

எண்ணை விலையேற்றம் இதனால் நட்டம் என காரணம் காட்டினாலும் இறுதியில் இந்த எண்ணை நிறுவன்ங்கள் பலகோடி இலாபக்கணக்கையே கடந்த காலங்களில் காட்டியுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் எட்டு சதவிகிதத்தை எட்டிவிட்ட்தாக மத்திய அரசே ஒப்புக்கொண்டாலும் உண்மையில் பணவீக்க விகிதம் இதைவிட அதிகமாகவே உள்ளது. என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இந்த பெட்ரோல் உயர்வு மேலும் விலையேற்றத்திற்கு காரணமாக பணவீக்க விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால சாதாரண மக்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.


பா.ஜ.க., தேசிய செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

April 2nd, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, தமிழக அரசியல், நதிநீர் பிரச்சினை, மத்திய அரசியல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!காவிரிப் பிரச்னையில் கர்நாடக காங்கிரசார் அணுகுவதைப் போலவே ஒகேனக்கல்லில் கர்நாடக பாரதிய ஜனதாவினர் நடந்து கொண்டுள்ளனர். அவரவர் மாநிலத்துக்கு அங்குள்ள கட்சியினர் முக்கியத்துவம் தருவதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

நன்றி: தினமலர்


மகாத்மாவிற்கும் மன்மோகனுக்கும் இடையே பாலம் அமைக்கிறேன்: மணிசங்கர அய்யர்

March 13th, 2008 பகுப்புகள்: பொருளாதாரம், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

அனைவருக்குமான முன்னேற்றம் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியாலேயே அமையும். இந்தியா முன்னேறுகிறது என்பதிலிருந்து இந்தியர்கள் முன்னேறுகிறார்கள் என்ற நிலையை அடைய பஞ்சாயத்து ராஜ் வெற்றியடைய வேண்டியது இன்றியமையாதது மணிசங்கர் அய்யர்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர அய்யர் நாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்தும் பஞ்சாயத்து தலைவர்களின் மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறார். பஞ்சாயத்து ராஜ் பிரகடனத்தின் பதினைந்தாவது வருடவிழாவை யொட்டி பெண்கள்,பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் அடங்கிய ஆயிரம் பஞ்சாயத்து தலைவர்கலை எல்லா மாநிலங்களும் பங்குபெறுமாறு அழைக்கப்படுவர். மன்மோகன்சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் மகாத்மா விரும்பிய கிராம பஞ்சாயத்துக்களை உடனடக்கிய நிர்வாக சீர்திருத்தங்களுக்கும் இதன்மூலம் ஒருங்கிணைக்க தாம் பாலமாக அமையப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியொன்றில் “அனைவருக்குமான முன்னேற்றம் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியாலேயே அமையும். இந்தியா முன்னேறுகிறது என்பதிலிருந்து இந்தியர்கள் முன்னேறுகிறார்கள் என்ற நிலையை அடைய பஞ்சாயத்து ராஜ் வெற்றியடைய வேண்டியது இன்றியமையாதது” என்றார். வியாழனன்று கூடும் இரண்டுநாள் சந்திப்பில் நிர்வாகசீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வரைவுசாசனம் ஒன்று தயாரிக்கப்படும்,இது அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அனுப்பப்பட்டு அவர்களது மேம்படுத்தல்களை கருத்தில் கொண்டு ஏப்ரல் 22-24 நாட்களில் நடக்கவிருக்கும் மாநாட்டில் இறுதியாக்கப்படும். விடைபெறும் நாளில் முடிவான சாசனம் சோனியாகாந்தியிடம் சமர்ப்பிக்கப்படும்.

I’ll bridge the gap between Manmohan and Mahatma, says Aiyar


மாநிலங்களவையில் அமளி: அவை ஒத்திவைப்பு

March 10th, 2008 பகுப்புகள்: நாடாளுமன்றம், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியவுடன், துணை அவைத்தலைவர் ரகுமான்கான் புதில்லியில் நடந்த வன்முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ.வின் சீதாராம் எச்சூரியை சீரோ அவரில் குறிப்பிட அழைத்தார். இதனை எதிர்த்து பிஜேபி கட்சியினர் தங்கள் கட்சியினர் மீது கண்ணூரில் நடந்த வன்முறையை குறிப்பிட வேண்டினர். இதனையொட்டி இருகட்சினரிடையேயும் கடும் விவாதமேற்பட்டது. கம்யூ.வை ஆதரித்து காங்கிரஸ்,RJD, சமாஜ்வாடி கட்சியினரும் பிஜேபி தரப்பிற்கு ஆதரவாக சிவசேனா,BJD கட்சியினரும் துணைக்கு வர அவையில் அமளி ஏற்பட்டது. இரு தரப்பினரும் வன்முறைகாட்சிகள் படங்கள் கொண்ட நாளிதழ் துண்டுகளை காட்டியவாறு பேசிக் கொண்டிருந்தனர்.

அவைநாயகர் ரகுமான்கானின் தொடர்ந்த முறையீடுகளுக்கு எந்த பலனுமில்லாததால் மாநிலங்களவை 30 நிமிட நேரம் தள்ளிவைக்கப்பட்டது.

Left, BJP clash in RS; house adjourns


காங்கிரஸுடன் கூட்டனியா? விஜயகாந்த் சூசகம்

February 16th, 2008 பகுப்புகள்: அரசியல், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

சமிபத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அருண்குமாரை விமானத்தில் எதேச்சையாக  சந்தித்தபிறகு கூட்டனிக்கு தயாராவதுபோல் அவருடைய பேட்டி அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர் !

தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பற்றி நான் தொண்டர்களிடம் கருத்து கேட்கிறேன் என விஜயகாந்த் கூரியுள்ளார். பல தொண்டர்கள் தங்கள் கருத்துக்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் பொதுக்கூட்டங்களில் கேட்டு வருகிறேன். இது பல தலைவர்கள் கையாண்ட முறைதான்.

மக்கள் ஆதரவோடு டெல்லியை நான் கலக்கும் நேரம் வந்தால் காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு உள்பட தமிழ்நாட்டு பிரச்சினைகளை கையில் எடுப்பேன். அதற்காக போராடுவேன். மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால் வாழப்பாடியார் வழியில் நானோ, என் கட்சிக்காரர்களோ பதவியை தூக்கி வீசி விட்டு வருவோம் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறி வந்தவர் விஜய்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தான் தேசியக் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டு வருவதாக முதல் முறையாகக் கூறியுள்ளார்.


புதுதில்லியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதவாக பேரணி ஆர்ப்பாட்டம் - புதுச்சேரியில் வழி அனுப்புவிழா

February 3rd, 2008 பகுப்புகள்: அரசியல், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம் - இலங்கை, கிளர்ச்சி, சமூகம், சென்னை, தமிழக அரசியல், தமிழ்நாடு, நாடாளுமன்றம், போராட்டம், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | 2 மறுமொழிகள் » |

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 06-02-2008 புதனன்று, காலை 11 மணியளவில், புதுதில்லியில் பாராளுமன்றம் முன்பு இந்திய அரசே! தமிழர்களைக் கொல்லும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே என வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.    இதில், கலந்துக் கொள்வதற்காக புதுச்சேரிலிருந்து பெரியார் தி.க. அமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் 60 பேர், 03-02-2008 ஞாயிறன்று மதியம் 4.00 மணியளைவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர். சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் புதுதில்லி செல்கின்றனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி அனுப்பினர்.  தமிழகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் இப்போரட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளதாக அவ்வமைப்பின் புதுச்சேரி செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ கூறினார்.


இஸ்ரேல் உடனான உறவைதுண்டிக்காவிட்டால் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம்

February 1st, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, குற்றம், சட்டம் - நீதி, போராட்டம், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | 2 மறுமொழிகள் » |

தமுமுக எச்சரிக்கை!!!

தமுமுக தலைவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கும் பேட்டி

 ஐக்கிய முற்போக்கு கூட்டனியின் குறைந்தபட்ச செயல்திட்டதில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை மீறும் வகையில் இஸ்ரேல்நாட்டின் உளவு செயற்க்கைகோளை இந்தியாவிலிருந்து செலுத்தியதற்காகவும், காஸா நிலப்பரப்பை திறந்தவெளி சித்திரவதை கூடரமாக்கி அன்றாடம் பாலஸ்தீன மக்களை கொடுமைபடுத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதத்தை கண்டிகாமல் பாராமுகமாக இருக்கும் மத்தியில் ஆளும் மன்மோகன் சிங் அரசை கண்டித்து தமுமுக சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் சற்றுமுன் (4.30மணியளவில்)  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் தமுமுகவின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைமை வகித்தார் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துக்கொன்டு கோஷங்களை எழுப்பினர்.

படம் :  காயல்அலா


இந்தியாவில் இஸ்ரேலின் ஏவுகணை சோதனையா?

January 29th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அரசியல், உலகம், சட்டம் - நீதி, நீதிமன்றம், போராட்டம், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

இஸ்ரேலின் புதிய உளவு ஏவுகனை சோதனையை இந்தியாவில் நிகழத்த மத்தியில் ஆளும் மன்மோகன் சிங் அரசு இதற்க்கு அனுமதியளித்துள்ளது.

இச்செயலை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தினை தமுமுக வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை மெமோரியல் ஹால் எதிரில் நடத்த உள்ளது.


உபி முதல்வர் மாயாவதி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்

January 15th, 2008 பகுப்புகள்: ஆளுமை, மத்திய அரசியல், விழா | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

மாயாவதிஉபி முதல்வர் மாயாவதியின் பிறந்தநாள் தலைநகர் இலக்னோவை அவரது பிரம்மாண்ட கட் அவுட்களும் தோரணங்களும் அலங்கரிக்க அரசு அதிகாரிகளும் காவல் அதிகாரிகளும் அவருக்கு கேக் துண்டை ஊட்டிவிட போட்டியிடவும் கோலாகலமாகக் கொண்டடப்பட்டது. புதிய தலையலங்காரத்துடன் சல்வார் கமீஸ் உடையில் தனது 52ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாயாவதி அரசாங்க பனம் தனது பிறந்தநாள் விழாவில் செலவிடப்படுவதாக எதிர்கட்சிகள் பொய்பிரசாரம் செய்வதாக குற்றம் சாட்டினார்.இது சில கட்சிகள் மற்றும் ஊடகங்களின் தலித்துகளுக்கு எதிரான மனச்சாயலை வெளிப்படுத்துகிறது என்று கூறினார். தனது அரசு இல்லத்தில் அவர் வெளிர்சிவப்பு கேக்கை வெட்டியதும் அவருக்கு ஒரு துண்டைக் கொடுக்க கூடியிருந்த அரசு அலுவலர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் மாநில அமைச்சர்களிடையே போட்டி ஏற்பட்டு பெரும் அமளி ஏற்பட