நாடாளுமன்றம் | சற்றுமுன்...




மன்மோகன் அரசு தப்பியது ஆதரவு - 275 எதிர்ப்பு - 256

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அரசியல், இந்தியா, தகவல், தேர்தல், தேர்தல்முடிவு, நாடாளுமன்றம், மத்திய அரசியல், வரலாறு | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

மத்திய அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரி இருந்ததை அறிந்திருப்பீர்கள் இவ்வாக்கெடுப்பில் காங்கரசுக்கு ஆதரவாக 256 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் மின்னனு இயந்திரம் மூலம் பதிவானதை அடுத்து மன்மோகன் அரசு தனது ஆட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தங்களது வாக்குகள் பதிவாக வில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததால் பின்னர் வாக்கு சீட்டு அளித்து வாக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து இப்போது ஆதரவு 275 எனவும் எதிர்ப்பு 256 என அறிவித்து  காங்கிரசு அரசு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.


வாக்கெடுப்பில் அரசு முன்னணி: ஆதரவு- 253 எதிர்ப்பு-232

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், நாடாளுமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வாக்கெடுப்பில் அரசு முன்னணி: ஆதரவு- 253 எதிர்ப்பு-232
    

 

Manmohan Singh

டெல்லி: மக்களவையில் இன்று பெரும் பரபரப்புக்கு இடையே நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 20 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. மேலும் சுமார் 54 எம்பிக்களின் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்து வருகின்றனர்.

மி்ன்னணு எந்திரம் மூலம் நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் 487 வாக்குகளே பதிவாயின. இதில் அரசுக்கு ஆதரவாக 253 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்தனர். 2 பேர் வாக்களிக்கவில்லை என ஓட்டளித்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் ஓடி வந்து பிரதமருடனும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனும் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

மீதமுள்ள சுமார் 54 எம்பிக்கள் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்து வருகின்றனர். இவர்களது வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகே இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

முன்னதாக பிரதமர் பேசிய பின்னர் வாக்கெடுப்பு நடக்கும் என சபாநாயகர் அறிவித்தார். ஆனால், பிரதமர் தனது பதிலை அறிக்கையாக தாக்கல் செய்துவிட்டார், பேசவில்லை.

இதையடுத்து ஓட்டெடுப்பு தொடங்கியது. நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் ஆம் என்க, எதிர்ப்போர் இல்லை என சபாநாயகர் அறிவிக்க ஆதரிப்போர் ஆம் என்றும், எதிர்ப்போர் இல்லை என்றும் குரல் தந்தனர்.

இதையடுத்து மின்னணு எந்திரத்தில் வாக்களிக்குமாறு எம்பிக்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனால், பாஜக எம்பிக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டபடி இருந்ததால் ஓட்டெடுப்பு தாமதமானது. ஒருவழியாக 7.30 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது.



பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் மௌனப் புரட்சி

May 5th, 2008 பகுப்புகள்: அரசியல், அரசியல், நாடாளுமன்றம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 32பேருக்கு ஒழுங்கின்றி செயல்பட்டு அவையின் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் செய்ததாக உரிமைக்குழுவுக்கு அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கடிதம் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பள்ளி மாணவர்களைப்போல வாயை விரலால் மூடி அவையில் அமர்ந்திருந்தனர்.

பின்னர் கடிதங்கள் திரும்பப்பெறப்பட்டன.

Speaker silenced, drops notice to unruly MPsVideo IBNLive


ஹஜ் : 2008 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து !

April 18th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், இந்தியா, சட்டம் - நீதி, சவூதி, நாடாளுமன்றம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

வரும் 2008ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர். ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம்விளக்கினார்.

இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் ‘பச்சை’ வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் வெள்ளை’ வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி ‘அசிசியா’ பகுதி என்றும் குறிப்பிடப்படும். இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும்.

கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது சௌதிக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், சார்தூதர் டாக்டர்.அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.வரும் 2008ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர். ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம்விளக்கினார்.

இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் ‘பச்சை’ வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் வெள்ளை’ வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி ‘அசிசியா’ பகுதி என்றும் குறிப்பிடப்படும். இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும்.

கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது சௌதிக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், சார்தூதர் டாக்டர்.அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.


மாநிலங்களவையில் அமளி: அவை ஒத்திவைப்பு

March 10th, 2008 பகுப்புகள்: நாடாளுமன்றம், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியவுடன், துணை அவைத்தலைவர் ரகுமான்கான் புதில்லியில் நடந்த வன்முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ.வின் சீதாராம் எச்சூரியை சீரோ அவரில் குறிப்பிட அழைத்தார். இதனை எதிர்த்து பிஜேபி கட்சியினர் தங்கள் கட்சியினர் மீது கண்ணூரில் நடந்த வன்முறையை குறிப்பிட வேண்டினர். இதனையொட்டி இருகட்சினரிடையேயும் கடும் விவாதமேற்பட்டது. கம்யூ.வை ஆதரித்து காங்கிரஸ்,RJD, சமாஜ்வாடி கட்சியினரும் பிஜேபி தரப்பிற்கு ஆதரவாக சிவசேனா,BJD கட்சியினரும் துணைக்கு வர அவையில் அமளி ஏற்பட்டது. இரு தரப்பினரும் வன்முறைகாட்சிகள் படங்கள் கொண்ட நாளிதழ் துண்டுகளை காட்டியவாறு பேசிக் கொண்டிருந்தனர்.

அவைநாயகர் ரகுமான்கானின் தொடர்ந்த முறையீடுகளுக்கு எந்த பலனுமில்லாததால் மாநிலங்களவை 30 நிமிட நேரம் தள்ளிவைக்கப்பட்டது.

Left, BJP clash in RS; house adjourns


பட்ஜெட் 2008..விவசாயக் கடன்கள் தள்ளிவைப்பு…

February 29th, 2008 பகுப்புகள்: நாடாளுமன்றம், பட்ஜெட், பொருளாதாரம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

இன்று பதினொரு மணிக்கு துவங்கிய வரவுசெலவுக்கணக்கிற்கான வரைவு இன்னும் PC.jpgதொடர்கின்றநிலையில் சில ஹைலைட்ஸ்:

திட்டங்கள்: 

-பாரத் நிர்மாண் என்னும் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.31,280 கோடி அனுமதிப்பு…உலகின் மிகப் பெரிய மதிய உணவுத் திட்டம்
-கல்விக்கான செலவு 20% அதிகரிப்பு
-16 மத்திய பல்கலைகளும் மூன்று IITக்களும் அமைக்கப்படும்.
-விஞ்ஞான கல்விக்கான உதவித்தொகைக்கு வயது வரம்பு உயர்வு
-தேசிய அறிவு இணையம் (National Knowledge Network) அமைக்க ரூ100 கோடி
-வறுமைக்கோட்டின் கீழுள்ள தொழிலாளர்களின் உடல்நலனுக்காக ராஷ்டிரிய ஸ்வாஸ்த்ய பீமா யோஜனா
-மொத்த திட்டப்பணிக்கான வரைவு 2இலக்கத்து நாற்பதினாயிரம்
-31.3.2007க்கு முந்தைய அனைத்து விவசாயக்கடன்களும் தள்ளுபடி
-சிறு விவசாயிகள் (1-2 ஹெக்டர் சொந்தக்காரர்கள்)பயன்பெறுவர்
-ஜூன்2008க்குள் ரூ60,000 கோடி பெறுமான இந்தக் கடன்கள் அடைக்கப்பட்டுவிடும்.
-4 கோடி விவசாயிகள் பயன்பெறுவர்
-பாதுகாப்பு செலவு ரூ1,05,600 கோடி
-காமன்வெல்த் விளையாட்டை நடத்திட ரூ624 கோடி
-வருமான துண்டு 1.4% ..எதிர்பார்த்தது 1.5%

வரிகள்
-விளையாட்டு சாதனக்களுக்கு சுங்கவரி 7.5%இலிருந்து 5%ஆகக் குறைப்பு
-ஸ்டீல் மெல்டிங் ஸ்க்ராப்,அலுமினியம் ஸ்க்ராப் சுங்கவரி குறைப்பு
-செட் டாப் பாக்ஸ் ..முழு சுங்கவரிவிலக்கு
-கன்வெர்ஜென்ஸ் (தொலைதொடர்பு,தொலைக்காட்சி,கணினி) பொருட்களுக்கு சுங்கவரி 5%
-எய்ட்ஸ் எதிர்ப்பு மருந்துகளுக்கு கலால்வரி குறைப்பு
-சிறுகார்களுக்கு கலால்வரி 14%
-கம்பியில்லா தரவுஅட்டைகளுக்கு (Wireless data card) கலால்வரி குறைப்பு
-பில்டரில்லா சிகரெட் விலை உயர்வு
-தனிநபர்வருமானவரி விலக்கு ரூ1.1 இலக்கத்திலிருந்து 1.5இலக்கமாக உயர்வு
 -பெண்களூக்கான வரம்பு 1.45L இலிருந்து 1.8Lஆக உயர்வு
-நிறுவன வருமானவரி விகிதங்களில் மாற்றம் இல்லை
-முதிய குடிமக்களுக்கு வரிவிலக்கு வரம்பு 2.25 இலக்கம்
-GDPக்க்கும் வரிகளுக்கும் உள்ள விகிதம் 9.2%
-commodities transaction tax அறிமுகம்
-குறைந்தகால முதல்உயர்வு வரி (Short term Capital Gains Tax) அதிகரிப்பு..15%
-வங்கி டிரான்ஸாக்சன் வரி நீக்கம்
-வரி மாற்றங்களால் வருமான பாதிப்பு இல்லை

அமைச்சரின் பட்ஜெட் வாசிப்பிற்குப் பிறகு அவை மார்ச் 3 வரை தள்ளிவைக்கப்பட்டது.


இரயில்வேயின் நிதிநிலையறிக்கை: லாலு வெளியிட்டார்

February 26th, 2008 பகுப்புகள்: இரயில், நாடாளுமன்றம், பட்ஜெட், பொருளாதாரம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

Lalu_IIM.jpgஇரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் தமது தொடர்ந்த ஐந்தாம்இரயில்வே நிதிநிலையறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். சரக்கு போக்குவரத்தினால் ரூ2000 கோடி அதிக வருமானம் கண்டு ரூ20,480 கோடி இலாபகர இருப்பை கணக்கில் காட்டியுள்ளார்.
முக்கிய சிறப்பம்சங்கள்:
-சரக்கு போக்குவரத்து 790 மிலியன் டன் எட்டியது. (இலக்கு:785 மி.டன்)
-பயணிகள் போக்குவரத்து மூலம் வருமானம் 14% உயர்வு
-செல்பேசிகள் மூலம் டிக்கெட் விற்பனை திட்டமிடப்பட்டுள்ளது
-இடிக்கெட்களில் WL அனுமதிப்பு
-2008இலிருந்து துருப்பிடிக்காஎஃகு (Stainless Steel) பெட்டிகள் தயாரிப்பு
-இரண்டாம்தர மூன்றாம்தர நடைபாதைகள் முதல்தரத்திற்கு மேம்பாடு
-195 நிலையங்களில் மேல்நடைபாலங்கள் மற்றும் 50 நிலையங்களில் மின் ஏணி(எஸ்கலேடர்) வசதி
-2009இலிருந்து கணினிவழி இரயில்போக்குவரத்து கட்டுப்பாடு
-20000கிமீக்கு அதிகபோக்குவரத்து தாங்கும் இரயில் நெட்வர்க்

- பள்ளி மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்
- ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர்கள்
- எஸ்எம்எஸ் மூலம் டிக்கெட் கன்பர்மேசன்
- 10 புதிய ஏழைகள் ரதம் ரயில்கள்
- கேரளாவில் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலை
- முதிய பெண்களுக்கு 50% கட்டண சலுகை
- ஆளில்லா கிராசிங்குகள் அனைத்திலும் ஊழியர்கள் நியமனம்
- எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50% கட்டண சலுகை
- முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி
- அசோக் சக்ரா வென்றவர்களுக்கு சதாப்தி, ராஜதானியில் இலவச டிக்கெட்
- ரயில்வே நிலம் தனியாருக்கு குத்தகை
- 2010ல் முழு அளவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கோச்கள்
- இந்த ஆண்டு 15,000 புதிய ரயில் பெட்டிகள்
- 2007ல் சரக்கு போக்குவரத்தில் 8.2% வளர்ச்சி
- டிக்கெட்டில் ரயில் போய்ச் சேரும் நேரமும் அச்சிடப்படும்
- பிளாட்பாரங்களை மேம்படுத்த ரூ. 500 கோடி
- அனைத்து கோச்சுகளிலும் பசுமை டாய்லெட்டுகள்
- ரயில்களிலும் தானியங்கி அறிவிப்பு வசதி
- 30 ரயில் நிலையங்களில் பல அடுக்கு பார்க்கிங் வசதி
- கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 68,778 கோடி உபரி லாபம்
- 2 ஆண்டுகளி்ல் 6,000 தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள்
- நவீன ரயில் பெட்டிகளை வடிவமைக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை
- கழிப்பறைகளை மேம்படுத்த ரூ.4000 கோடி
- ஐ.மு.கூட்டணி கொள்கைகளால் ரயில்வே லாபத்தில் இயக்கம்
- வெயிட்டிங் லிஸ்ட் இ-டிக்கெட் அறிமுகம்
- வட மாநிலங்களில் ரயில் பாதை மி்ன்மயமாக்கல் தீவிரமாகும்
- 3 லட்சம் இ-டிக்கெட்கள் விற்பனை
- ரிசர்வேசன் கவுண்டர் கூட்ட நெரிசலை குறைக்க நடவடிக்கை
- எஸ்எம்எஸ் மூலம் டிக்கெட் ரிசர்வேசன் திட்டம்
- 560 ரயில் நிலையங்களின் பிளாட்பாரங்கள் நீட்டிப்பு
- எண்ணூர் துறைமுகம்-புத்தூர் தனி சரக்கு ரயில் பாதை
- ஸ்மார்ட்கார்ட் மூலம் டிக்கெட் விற்க திட்டம்
- கூடுதல் ரயில்வே கால் சென்டர்கள்

Lalu presents Railway Budget

ரயில்வே பட்ஜெட்-2008

Lalu angers MPs with allocation of new trains
Highlights of Railway Budget 2008-09


புதுதில்லியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதவாக பேரணி ஆர்ப்பாட்டம் - புதுச்சேரியில் வழி அனுப்புவிழா

February 3rd, 2008 பகுப்புகள்: அரசியல், அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம் - இலங்கை, கிளர்ச்சி, சமூகம், சென்னை, தமிழக அரசியல், தமிழ்நாடு, நாடாளுமன்றம், போராட்டம், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | 2 மறுமொழிகள் » |

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 06-02-2008 புதனன்று, காலை 11 மணியளவில், புதுதில்லியில் பாராளுமன்றம் முன்பு இந்திய அரசே! தமிழர்களைக் கொல்லும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே என வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.    இதில், கலந்துக் கொள்வதற்காக புதுச்சேரிலிருந்து பெரியார் தி.க. அமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் 60 பேர், 03-02-2008 ஞாயிறன்று மதியம் 4.00 மணியளைவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர். சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் புதுதில்லி செல்கின்றனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி அனுப்பினர்.  தமிழகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் இப்போரட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளதாக அவ்வமைப்பின் புதுச்சேரி செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ கூறினார்.


மூன்றாவது அணி உருவாக்க கம்யூனிஸ்ட் கட்சி தீவிரம்

January 23rd, 2008 பகுப்புகள்: அரசியல், நாடாளுமன்றம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத கட்சிகளுடன் இணைந்து 3வது அ‌ணியை உருவாக்கும் முயற்ச்சியை கம்யூனிஸ்ட் கட்சி செய்துவருகிறது .  காங்கிரஸ், பாரதியஜனதா கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்க வேண்டும் எனவும் இடது சாரி கட்சிகள், மதசார்பற்ற கட்சிகளுடன் இணைந்து புதிய அணியை உருவாக்கி மக்களுக்காக உழைப்போம் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.  மேலும் மேற்கு வங்கத்தில் இருப்பது புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான ஆட்சியே தவிர தனிப்பட்ட கட்சியின் ஆட்சி அல்ல எனவும் கூறியுள்ளது.


பெட்ரோல் விலை : முடிவெடுக்காமல் முடிந்த கூட்டம்

January 18th, 2008 பகுப்புகள்: அரசியல், நாடாளுமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பெட்ரோல் விலை உயர்வு குறித்து முடிவெடுப்பதற்காக கூடிய அமைச்சர்கள் கூட்டம் ஒரு சில அமைச்சர்கள் வராததால் முடிவெடுக்கப்படவில்லை என பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.

வெள்ளி அல்லது பிறிதொரு நாளில் இக்கூட்டம் மீண்டும் கூடும் என அவர் தெரிவித்தார்.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.hinduonnet.com/thehindu/holnus/000200801180327.htm


நிதியமைச்சக இணைய தளம்

January 17th, 2008 பகுப்புகள்: *பொது, இணையம், நாடாளுமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

நிதியமைச்சக இணைய தளம்

புதுடில்லி : நிதியமைச்சகம் தரப்பில் புதிதாக ஒரு இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது. 

www.financeminister.gov.in   என்ற பெயரில் துவங்கப்பட்டிருக்கும் அந்த இணைய தளத்தில் மத்திய நிதியமைச்சகம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. நிதியமைச்சகம் குறித்து பொதுமக்களுக்கு என்னென்ன விவரங்கள் தெரிய வேண்டுமோ அவை அனைத்தும் இடம்பெற்றிருக்கும் வகையில் இந்த இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் ப.சிதம்பரம் பற்றிய குறிப்புகளும், அவரது முக்கிய உரைகளும் இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. பொங்கல் பண்டிகைக்காக டில்லியில் தனது இல்லத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்திய போது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் துவக்கி வைத்தார்.

www.dinamalar.com


பூடானில் முதல் முறையாக தேர்தல்

December 31st, 2007 பகுப்புகள்: தேர்தல், நாடாளுமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பூடானில் முதல் முறையாக இன்று தேர்தல்

பூடான் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் திங்கள்கிழமை(டிச.31) நடைபெறுகிறது.

மன்னராட்சியில் இருந்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பும் முதல் மாபெரும் முயற்சியாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.

இதில் இந்தியா மற்றும் ஐ.நா.வை சேர்ந்த பிரதிநிதிகள் சர்வதேச பார்வையாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக பூடான் தலைமை தேர்தல் ஆணையர் குன்சங் வாங்டி தெரிவித்துள்ளார்.

மேலவையில் மொத்தம் 25 இடங்கள் உள்ளன. அதில் 20 இடங்களுக்கு நேரடித் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், மீதமுள்ள 5 இடங்கள் நியமனம் மூலம் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஹா, காசா, திம்பு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் ஒரே ஒரு வேட்பாளர் அல்லது யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாத காரணத்தால் ஜனவரி 29-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள 15 தொகுதிகளில் 44 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பதிவுபெற்ற மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 12 ஆயிரத்து 817 பேர். இன்றைய தேர்தலில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 963 பேர், சுமார் 723 மையங்களில் வாக்களிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பதிவு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இதையடுத்து, பூடான் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலைக் கண்காணிக்க சர்வதேச பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனநாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட அந்நாட்டு மன்னர் ஜிக்மி சிங்கி, 2001 ஆம் ஆண்டு அமைச்சரவையிடம் அதிகாரத்தைக் கொடுத்து ஆட்சி நடத்தினர்.

பின், கடந்த ஆண்டு தன் மகனும், ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பட்டதாரியுமான ஜிக்மி கேசர் நம்க்யாலிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

இந்நிலையில், தற்போது முதல் முறைய