தேர்தல்முடிவு | சற்றுமுன்...




மன்மோகன் அரசு தப்பியது ஆதரவு - 275 எதிர்ப்பு - 256

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அரசியல், இந்தியா, தகவல், தேர்தல், தேர்தல்முடிவு, நாடாளுமன்றம், மத்திய அரசியல், வரலாறு | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

மத்திய அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரி இருந்ததை அறிந்திருப்பீர்கள் இவ்வாக்கெடுப்பில் காங்கரசுக்கு ஆதரவாக 256 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் மின்னனு இயந்திரம் மூலம் பதிவானதை அடுத்து மன்மோகன் அரசு தனது ஆட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தங்களது வாக்குகள் பதிவாக வில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததால் பின்னர் வாக்கு சீட்டு அளித்து வாக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து இப்போது ஆதரவு 275 எனவும் எதிர்ப்பு 256 என அறிவித்து  காங்கிரசு அரசு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.


இத்தாலி தேர்தல்: பெர்லுஸ்கோனி கட்சி முன்னணி

April 14th, 2008 பகுப்புகள்: அரசியல், ஐரோப்பா, தேர்தல், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இத்தாலிய பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்த ஆரம்பகட்ட தகவல்களின்படி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அவர்கள் தலைமையிலான வலதுசாரி மையவாத எதிர்கட்சிகள் முன்னணியில் இருக்கின்றன.

இவருடைய பிரதான எதிரியான வால்டர் வெல்ட் ரோனி தலைமையிலான இடதுசாரி மையவாத கூட்டணியை விட இவருக்கு சிறிய அளவிலான கூடுதல் ஆதரவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிடைக்கக்கூடும் என்று தேர்தலில் வாக்களித்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்திருந்தன.

செனட் எனப்படும் நாடாளுமன்றத்தின் மேலவை தொடர்பான ஆரம்பகட்ட முடிவுகளும் பெர்லுஸ்கோனிக்கு ஆதரவாகவே அமைந்திருந்தன.

அதேவேளை, இந்த தேர்தலில் இரு கூட்டணிகளுக்கும் இடை யிலான மிக நெருக்கமான போட்டியும், செனட் அவையில் இடங்களை ஒதுக்குவதில் கடைபிடிக்கப்படும் சிக்கல் நிறைந்த நடைமுறையும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெர்லுஸ்கோனி எதிர்பார்க்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்குமா என்பது குறித்து தெளிவாக கூறமுடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Italy votes under cloud of corruption, decay - The Boston Globe: Poor leadership thwarts change, promotes apathy

2. Berlusconi heads to 3rd stint as Italy's prime minister - International Herald Tribune

3. BBC NEWS | The Reporters | Mark Mardell: “Clown Prince of bloggers takes on Italian politics”


நேபாளத்தில் மாவோயியவாதிகள் தேர்தல் வெற்றி

April 14th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, தேர்தல், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

நேபாளத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் முன்னாள் கிளர்ச்சிக்காரர்களான மாவோயிஸ்டுகளின் கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகின்றன.

1996ஆம் ஆண்டு முதல் ஒரு தசாப்த காலம் இந்த மாவோயிஸ்டுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் நேபாளத்தில் பதிமூன்றாயிரம் பேர் இறக்கும் நிலை உருவானது. ஆனால் ஒரு புதிய அரசியலமைப்பு நிர்ணய சபையை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், இதுவரை வந்த முடிவுகளின்படி ஆகக்கூடுதலான இடங்களை பிடித்த மிகப் பெரிய கட்சியாக அவர்களது கட்சி திகழுகின்றது.

இதுவரை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் சுமார் 190 இடங்களில், மாவோயிஸ்ட்கள் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தொண்டுதொட்டு செயற்பட்டுவரும் நேபாளத்தின் பாரம்பரிய கட்சிகள் மிகவும் பின்னணியில் நிற்கின்றன.

வறுமை நிலையில் இருக்கின்ற இந்த நாட்டில், பொருளாதார வளர்ச்சியை, சடுதியான சமூக மாற்றத்தைக் கொண்டுவருவோம், என்ற எதிர்பார்ப்புக்களை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமது மோசமான பழைய பழக்க வழக்கங்களையெல்லாம் விட்டுவிட்டு, பொருளாதார வளர்ச்சியையும், சமூக மாற்றத்தையும் இவர்கள் கொண்டுவருவார்களா? என்பதுதான், இங்கு இப்போது இருக்கின்ற முக்கியமான கேள்வியாகும்.

மன்னர் பதவி விரைவில் நீக்கப்படும்: மாவோயியவாதிகள் கருத்து

நேபாள தேர்தல்களில் பெருமளவு வெற்றிகளை பெற்றிருக்கும் மாவோயிஸ்ட் கட்சி, அடுத்து அங்கே அமைய இருக்கும் ஆட்சிக்கு தலைமைதாங்கும் என்று தாம் நம்புவதாக, முன்பு கிளர்சிக்காரர்களாக இருந்த மாவோயிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நேபாளத்தின் மன்னர் பதவி இன்னும் மூன்று வாரங்களுக்குள் நீக்கப்படும் என்று மாவோயிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் பாபுராம் பட்டாராய் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu : Front Page : Maoists win 110 seats

2. Election, and Maoists, Could Transform Nepal - New York Times

3. BBC NEWS | South Asia | India worries over Nepal's future


ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு; முன்பில்லாத பெரும் சவாலை எதிர்கொள்கிறார் முகாபே

March 30th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆப்பிரிக்கா, ஆளுமை, உலகம், தேர்தல், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 2 மறுமொழிகள் » |

ஜிம்பாப்வேயில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடந்த அதிபர் தேர்தலில் ஏமாற்று வேலை செய்ய தனது மனசாட்சி இடம்தரவில்லை என்று அதிபர் ராபர்ட் முகாபே கூறியுள்ளார்.

அங்கு பொருளாதாரம் வீழ்ச்சிநிலையில் இருக்கிறது, பணவீக்கமோ ஒரு லட்சம் வீதத்தில் இருக்கிறது. 1980இல் சுதந்திரம் பெற்றது முதல் அந்த நாட்டை ஆண்டுவரும் அதிபர் ரொபர்ட் முகாபே அவர்கள் இன்னும் ஒரு தரம் மக்கள் தன்னிடம் ஆட்சியைத் தரவேண்டும் என்று கோரி தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆப்பிரிக்காவின் மிகவும் வயதுகூடியத் தலைவரான முகாபே, ஜிம்பாப்வேயில் தான் நடத்திவரும் 28 வருட ஆட்சிக்கு, இதுவரை கண்டிராத மிகப் பெரிய சவாலை இந்தத் தேர்தலில் எதிர்நோக்குகிறார்.

அவரது முக்கிய போட்டியாளர்களாக, ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம் (எம்.டி.சி) கட்சியின் மோர்கன் ஸ்வாங்கிராய் அவர்களும், சுயேச்சையாகப் போட்டியிடும், முகாபே அரசில், முன்பு நிதியமைச்சராக இருந்த சிம்போ மகோனியும் திகழ்கிறார்கள். ஆளும்கட்சியான ஜானு பி.எஃப். கட்சி தொன்றுதொட்டே பலமாகத் திகழும் ஜிம்பாப்வேயின் கிராமப்புறங்களே இங்கு மிகுந்த போட்டி நிறைந்த களங்களாகத் திகழ்கின்றன.

வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்தும், வாக்குச் சீட்டுகள் பல லட்சம் அளவில் கூடுதலாக அச்சடிக்கப்பட்டதாக கசிந்த விபரங்கள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கவலைகளை வெளியிட்டிருந்தனர். வாக்களிப்பதற்காக மக்கள் பொறுமையுடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Opposition claims early lead on partial results in Zimbabwe's election - International Herald Tribune

2. BBC NEWS | Africa | Warning on Zimbabwe victory claim

3. AFP: Zimbabwe counts votes after rigging charges


நாகாலாந்தில் எதிர்க்கட்சி கூட்டணி அரசு

March 9th, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, தேர்தல், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!நாகாலாந்தில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள நாகாலாந்து மக்கள் முன்னணிக்கு 25 இடங்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.

60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டப் பேரவைக்கு மார்ச் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 6,64,604 வாக்காளர்களில் 85% பேர் வாக்களித்தனர். 57 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை தொடங்கியது. 3 தொகுதிகளில் மறுவாக்குப் பதிவு நடந்ததால், வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலைதான் தொடரும்.

Host unlimited photos at slide.com for FREE!நாகாலாந்து மக்கள் முன்னணி (என்.பி.எஃப்) என்ற கட்சிக்கு 25 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கட்சியின் தலைமையில் நாகாலாந்து ஜனநாயக கூட்டணி (டி.ஏ.என்) என்ற அமைப்பு செயல்படுகிறது.

தேர்தலுக்கு முன்னதாக நாகாலாந்து மக்கள் முன்னணி, பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி ஏற்படுத்திக் கொண்டன. ஆனால் தனித்தனியான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு போட்டியிட்டன.

ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் எண்ணப்படவுள்ள 3 தொகுதிகளுமே நாகாலாந்து மக்கள் முன்னணியின் செல்வாக்குள்ள தொகுதிகள்தான் என்பதால் அந்தக் கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

முந்தைய சற்றுமுன் | நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. The Morung Express: “Team Rio strikes Cong base”

2. The Hindu News Update Service: “DAN all set to form govt. in Nagaland, Rio to become CM”

3. All eyes on Nagaland guv as verdict unclear - India - The Times of India


மேகாலயாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

March 7th, 2008 பகுப்புகள்: அரசியல், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மேகலாயா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 59 இடங்களில், காங்கிரஸ் 27 இடங்களில் முன்னிலை வகித்ததால் அந்த கட்சி, அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தேர்தல் முடிவுகளின் போக்கு வேறுமாதிரி அமைந்தது. மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்கள் கிடைத்துள்ளன. அதற்கடுத்தபடியாக தேசியவாத காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், யுடிபி 10 இடங்களிலும், சுயேச்சைகள் உள்ளிட்ட இதர கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் டி. டி. லாபாங் நோங்போ தொகுதியிலும், துணை முதல்வர் முகுல் சங்மா அம்பாதிகிரி தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.

எந்த் கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், மேகாலயாவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள், கட்சி மேலிடத்துடன் தொடர்பு கொண்டு ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர்.

முந்தைய சற்றுமுன் | நன்றி: யாஹு

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu News Update Service: “Hung Assembly in Meghalaya, Cong set to form coalition Govt.”

2. NDTV.com: Red march in Tripura, hung House in Meghalaya

3. Zee News - Fractured verdict in Meghalaya


திரிபுராவில் மீண்டும் ஆட்சியை பிடித்தது இடதுசாரி

March 7th, 2008 பகுப்புகள்: அரசியல், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

திரிபுரா மாநிலத்தில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நான்காவது முறையாக இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

மொத்தமுள்ள 60 இடங்களுக்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் இடது சாரி கூட்டணி 49 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

கடந்த 1993 ல் திரிபுராவில் ஆட்சியை பிடித்த இடதுசாரி , அதற்கு அடுத்து நடைபெற்ற 1998 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களிலும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில் கடந்த தேர்தலில் 41 இடங்களில் வெற்றி பெற்ற இடதுசாரி கூட்டணி , இந்த தேர்தலில் 49 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய சற்றுமுன் | முழுவதும் வாசிக்க: யாஹு

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu : Front Page : Left Front sweeps Tripura polls

2. After big Tripura victory, Left gets tough on N-deal - India - The Times of India

3. NDTV.com: Manik Sarkar poster boy of CPM in Tripura


தேர்தல்: திரிபுராவை தக்கவைத்துக் கொண்டது இடது முன்னணி; மேகாலயாவில் இதுவரை காங்.தனிப்பெரும் கட்சி

March 7th, 2008 பகுப்புகள்: தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

ஆளும் இடது முன்னணி திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் இன்று பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 60 பேர் கொண்ட மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ.விற்கு 30 இடங்களும் அதன் தோழமைக் கட்சி ஆர் எஸ் பிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன. இந்திய கம்யூ ஒரு இடத்திலும் ஆர் எஸ் பி மற்றொரு இடத்திலும் முன்னணி வகிக்கின்றன. காங்கிரஸிற்கு 5 இடங்களே கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் இக்கூட்டணி 41 இடங்களைப் பெற்றிருந்தது. அப்போது உடனிருந்த பார்வர்ட் பிளாக் இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுள்ளது.

மேகாலயாவில் மன்றத்தின் 60 இடங்களில் 47 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சங்க்மா தலமையேற்கும் NCP 11 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் 20 இடங்களை கைப்பற்றியுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்படாத காரோ மலைப்பிரதேசத்தில் சங்க்மாவும் அவரது கட்சியினரும் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. முந்தைய ஆளும் கூட்டணியில் இருந்து தனித்துப் போட்டியிடும் UDP எட்டு இடங்களை இதுவரை வென்றிருக்கிறது.பிஜேபி ஒரு இடம் பெற்றிருக்கிறது.தவிர ஏழு சுயேட்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

UDP மற்றும் சுயேட்சைகள் ஆட்சியமைப்பில் முக்கிய பங்கேற்பார்கள்.

Left takes Tripura, Cong single largest in M’laya


உலக செய்திகள்: கொலம்பியா, அர்மீனியா

March 3rd, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், ஆசியா, இராணுவம், உலகம், கிளர்ச்சி, சட்டம் - நீதி, தீவிரவாதம், தேர்தல், தேர்தல்முடிவு, போராட்டம், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

1. BBC NEWS | South Asia | S Lanka finds boat migrants dead: இலங்கையின் திருகோணமலை அருகே திசை தவறிய படகில், உணவு மற்றும் தண்ணீர் இல்லாதபடியால் இருபது பேர் மரணமடைந்துள்ளார்கள். பர்மாவிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் அகதிகளாய் கிளம்பி வாய்ப்புகளைத் தேடி தாய்லாந்து மற்றும் மலேஷியாவை நோக்கி செல்ல ஆரம்பத்த படகில் இருந்தவர்களில் 71 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

2. Chavez warns of war with Colombia - Yahoo! News: கொலம்பியா நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகே வெனிசுவேலா இராணுவமும் ஈக்வடார் நாட்டின் படைகளும் அணிவகுத்திருக்கின்றன. அமெரிக்காவின் ஆணைக்குட்பட்டு ஈகுவடருக்குள் அத்துமீறி நுழைந்து ஈக்வடரின் போராளியை (Revolutionary Armed Forces of Colombia - FARC) கொலம்பியா கொன்றதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Photobucket3. Emergency Order Empties Armenian Capital’s Streets - New York Times: அர்மீனியாவில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனமானது. இதன் விளைவாக நடந்த போராட்டங்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். ருஷியாவின் முன்னாள் அங்கத்தினரான் ஜார்ஜியா போன்ற நாடுகளிலும் இது போன்ற போராட்டங்கள் ஆட்சி மாற்றத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது.


உருசிய தேர்தல்: அதிபராக மெத்வெதேவ் தேர்வு

March 3rd, 2008 பகுப்புகள்: உலகம், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

medvedev.jpgஇந்தியாவுடனான பொருளாதார பிணைப்புகளை வலுப்படுத்துவதை தனது கொள்கையாக அறிவித்திருந்த, தற்போதைய அதிபர் விளாடிமிர் புடினின் நேசத்திற்குறிய, டிமித்ரி மெத்வெதேவ் உருசிய தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 42 வயதான மெத்வெதேவ் உலகின் மிகப்பெரும் எரிவாயு நிறுவனம் காஸ்ப்ரோமின் (gazprom) முன்னாள் தலைவராவார். இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாத அவர் ஞாயிறு அன்று 70.23 சதவீத வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். இது புடின் 2000இல் பெற்ற 50% மற்றும் 2004இல் பெற்ற 60% வாக்குகளைவிட அதிகமானது.

புடின் பிரதமராகப் பொறுப்பேற்று ஆட்சியில் தொடர்ந்து அங்கம் வகிப்பார்.


தாய்வான் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு சரிவு

January 12th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

தாய்வானில் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான கூவோ மின்தாங் கட்சிக்கு பெரு வெற்றி கிட்டியள்ளது. அதிபர் சென் சுவி பியான் அவர்களுக்கும் அவருடைய ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சிக்கும் பெருத்த அடி.

கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து அதிபர் சென் விலகியிருக்கிறார். வரலாற்றிலேயே தமது கட்சிக்குக் கிடைத்த மிக மோசமான தோல்வி இது என்று தெரிவித்துள்ளார்.

தாய்வானிய தேர்தல் ஆணையகம் கூவோ மின்தாங் கட்சிக்கு 70 வீதத்துக்கும் மேலான வாக்குகள் கிடைத்தன என்று தெரிவித்துள்ளது.

சுதந்திரத்துக்கு ஆதரவான கொள்கைகளுக்கு ஆதரவளித்ததன் மூலம் அதிபர் சென் சீனாவுடனான உறவுகளை நெருக்கடிக்குள் தள்ளினார் என்று விமர்சனங்கள் அதிகரித்திருந்தன.

அடுத்த மார்ச் மாதம் அதிபருக்கான தேர்தல் நடக்கவுள்ளது. அந்தத் தேர்தலில் கூவோ மின்தாங் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள மா-யிஹ்-யுவொ அவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி பெற்ற வெற்றி உதவியாக அமையும்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Asia-Pacific | Taiwan nationalists in huge win

2. Opposition sweep to victory in Taiwan - CNN.com

3. Reuters.com: “China ‘elects’ own Taiwan representatives”


தாய்லாந்து தேர்தல் முடிவுகள் மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன

January 3rd, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, தேர்தல், தேர்தல்முடிவு, மோசடி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Economistதாய்லாந்தில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில், முன்பு பதவியகற்றப்பட்டிருந்த பிரதமர் தக்ஷின் ஷினாவத்ரவுக்கு ஆதரவான கட்சிகள் வெற்றி பெற்றதாகக் கோரும் இடங்களில், கால்வாசிக்கும் மேலான இடங்களில் அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளதை அடுத்து, அந்நாட்டின் தேர்தல் முடிவுகள் மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன.

480 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 230க்கும் அதிகமான இடங்களில் மக்கள் சக்தி கட்சி வெற்றிபெற்றதாக ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவித்திருந்தன.

ஒரு கூட்டணி அரசை உருவாக்க உடன்பாடு கண்டுள்ளதாக இக்கட்சியின் தலைவர் அறிவித்திருந்தார், ஆனால் 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை இன்னும் தாங்கள் விசாரித்துவருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Thailand Election Commission investigates 83 poll victors on suspicion of fraud - International Herald Tribune

2. BBC NEWS | Asia-Pacific | Vote-buying claims mar Thai poll

3. Thaksin allies claim deal with small parties to form coalition | The Guardian | Guardian Unlimited