தேர்தல் | சற்றுமுன்...




மன்மோகன் அரசு தப்பியது ஆதரவு - 275 எதிர்ப்பு - 256

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அரசியல், இந்தியா, தகவல், தேர்தல், தேர்தல்முடிவு, நாடாளுமன்றம், மத்திய அரசியல், வரலாறு | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

மத்திய அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரி இருந்ததை அறிந்திருப்பீர்கள் இவ்வாக்கெடுப்பில் காங்கரசுக்கு ஆதரவாக 256 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் மின்னனு இயந்திரம் மூலம் பதிவானதை அடுத்து மன்மோகன் அரசு தனது ஆட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தங்களது வாக்குகள் பதிவாக வில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததால் பின்னர் வாக்கு சீட்டு அளித்து வாக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து இப்போது ஆதரவு 275 எனவும் எதிர்ப்பு 256 என அறிவித்து  காங்கிரசு அரசு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.


மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதல்: நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழக அரசியல், தேர்தல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதல்: நாளை திமுக மாபெரும் உண்ணாவிரதம்
    

 

Karunanidhi

சென்னை: இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை தாக்குவதைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், கடலோர நகரங்களில் திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதில் தமிழக மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக உயர்மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டம் நேற்று மாலை முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கண்மூடித்தனமாகக் கொல்லப்படுவதும், தேவையற்ற முறையில் கைதுசெய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

மனித உரிமை மீறல்களையும், கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் உரிமைகளையும் சட்ட விரோதமாகத் தடுத்து, நாள்தோறும் தமிழக மீனவர்ளுக்கு பல்வேறு இன்னல்களை இலங்கை கடற்படை ஏற்படுத்தி வருகிறது.

இந்த செயல்களால் ஆழ்ந்த வேதனையுற்ற திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி, இவ்வித அத்துமீறல் நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசின்கவனத்துக்கு பலமுறை எடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் திமுக பொருளாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் ஒரு குழு சென்னையில் உள்ள இலங்கைக்கான தென்னிந்திய துணைத் தூதரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடுகளையும், அத்துமீறல்களையும் கண்டித்து இந்த செயல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும் என்று 12.3.07 அன்று வலியுறுத்தியது.

இலங்கை துணைத் தூதர் இதுபோன்றநிகழ்வுகள் நடைபெறாது என்று இக்குழுவிடம் உறுதி அளித்தார். இருந்தாலும் தமிழக மீனவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், கைது செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இந்த ஆண்டு ஜூலை 2 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இலங்கை கடற்படை பலதமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றும், படுகாயப்படுத்தியும், 900 மீனவர்களைக் கைது செய்தும், 300 மீன் பிடிப் படகுகளை கைப்பற்றியும், அவர்களது உடமைகளை சேதப்படுத்தியும் பல அட்டூழியங்களைச் செய்தது.

இவை தமிழக மீனவர்கள் மனதில் நீங்காத அச்சத்தையும், இதன் காரணமாக அவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொள்வதற்கு பெரும் தடையையும் ஏற்படுத்தி மீனவர்களின் ஒரே வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது.

கடலுக்குள் மீனவர்கள் சென்று மீன் பிடிப்பதை நிறுத்தி இருந்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவச்சங்க பிரதிநிதிகளை முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலகத்திற்கு அழைத்துப் பேசிய பிறகு அவர்கள் திரும்பவும் பணிக்குத் திரும்ப ஒத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதுஅடிக்கடி தேவையற்ற முறையில் நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு உரிய தலையீட்டின் வழியாக இலங்கை அரசிடம் இந்தப் போக்கை எடுத்துக்கூறி தமிழக மீனவர்களுக்கு எதிரான தேவையற்ற நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தி இந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

லட்சக்கணக்கான மீனவ குடும்பங்களை அச்சத்திலும், அச்சுறுத்தலிலும் இருந்து மீட்டு, அவர்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடுமையான நடவடிக்கை தேவைப்படுகிறது.

மீனவர்களின் உயிர், உடமை, உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில தீர்மானங்கள் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

- உடனடியாக இலங்கை தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டிப்பான முறையில் குறிப்பிட்டு, கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் தொடராமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- இந்திய கடற்படையும், கடலோரப் பாதுகாப்புப் படையும் இணைந்து பன்னாட்டு கடல் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளுக்குள் இலங்கை கடற்படை நுழைவதைத் தடுத்து உரிய பாதுகாப்பான நடவடிக்கைளை கையாண்டு, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும், உடமை சேதங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

- கொழும்பு சார்க் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளும்போது இந்தியாவின் கவலையையும், வருத்தத்தையும் இலங்கை அதிபரிடம் தெரிவித்து இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இயல்பான சூழ்நிலையையும், அமைதியான சூழ்நிலையையும் உறுதி செய்ய வேண்டும்.

- மேற்கூறப்பட்ட இந்த தீர்மானங்களை வலியுறுத்துவதற்காகவும், மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும் 19ம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் கடற்கரையோர நகரங்களிலும், ஊர்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைதாங்குகிறார். பிற ஊர்களில் அமைச்சர்கள் தலைமை தாங்குகிறார்கள்.


திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம.நாராயணன் வெற்றி

July 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், திரையுலகம், தேர்தல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம.நாராயணன் வெற்றி

 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராம.நாராயணன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
 


உட்கட்சித் தேர்தலில் ஒபாமா வெற்றி?

June 3rd, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், தேர்தல் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் 2008 அதிபர் பொதுத்தேர்தல் வேட்பாளருக்கான உட்கட்சி தேர்தலில் பராக் ஒபாமா போதிய பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றுள்ளார் என அசொஷியேட்டட் பிரெஸ் செய்தி ஒன்று கூறுகிறது. இதன் மூலம் அவர் அக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என நம்பப்படுகிறது.

MSNBC-ன் கணிப்பின்படி ஒபாமா உட்கட்சித் தேர்தல் வெற்றியைப் பெற இன்னும் 22 பிரதிநிதிகளின் ஆதரவே தேவை. அது இன்றைய வாக்கெடுப்பிற்குப்பின் அவருக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஒபாமாவின் போட்டியாளரான ஹில்லரி ராடம் க்ளிண்டன் இன்று துணை அதிபர் பதவிக்கு போட்டியிட தான் விருப்பப்படுவதாக தனக்கு நெருங்கிய வட்டத்திற்கு தெரிவித்துள்ளார். இவர் இன்று மாலை தேர்தல் முடிவுகள் தெரிந்தபின்னர் ஒபாமாவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு போட்டியை முடித்துக்கொள்வாரா இல்லையா என்பது குறித்து இருவித கருத்துக்கள் நிலவுகின்றன. ஹில்லரி தன் பிரச்சாரக் குழுவின் உயர்மட்ட உருப்பினர்கள் பலரையும் இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

AP: Obama has delegates to clinch nomination - MSNBC

 


பர்மாவில் புதிய அரசியலமைப்பு குறித்த வாக்கெடுப்பு

May 10th, 2008 பகுப்புகள்: ஆசியா, உலகம், தேர்தல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

தங்களுடைய இராணுவ ஆட்சியை மேலும் மேலும் தொடர்வதற்காக இந்த மக்கள் வாக்கெடுப்பு என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய அரசியலைமைப்பு தொடர்பாக சூறாவளியால் சின்னாபின்னமான பர்மாவில் மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. வாக்கெடுப்பை தள்ளி வைக்குமாறு விடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும் நிராகரித்து தேர்தல் நடைபெற்றுள்ளது.

வாக்கெடுப்பு நிலையங்களில் ஏராளமான இராணுவத்தினர் இருந்ததால் தாங்கள் வேறு வழியின்றி ஆதரவாக வாக்களித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். சூறாவளியினால் பாதிக்கப்படாத இடங்களில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

இதற்கிடையே, தரைவழியாக ஐ.நாவின் முதல் நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத் தொடரணி பர்மா சென்றுள்ளது. ஆனால் பர்மாவின் இராணுவத் தலைமை வெளிநாட்டு நிவாரண பணியாளர்களுக்கு தடை விதித்துள்ளது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Asia-Pacific | Burma votes amid cyclone aid row

2. Despite chaos, Myanmar holding referendum - Los Angeles Times

3. Cyclone aftermath overshadows Myanmar vote - CNN.com


இத்தாலி தேர்தல்: பெர்லுஸ்கோனி கட்சி முன்னணி

April 14th, 2008 பகுப்புகள்: அரசியல், ஐரோப்பா, தேர்தல், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இத்தாலிய பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்த ஆரம்பகட்ட தகவல்களின்படி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அவர்கள் தலைமையிலான வலதுசாரி மையவாத எதிர்கட்சிகள் முன்னணியில் இருக்கின்றன.

இவருடைய பிரதான எதிரியான வால்டர் வெல்ட் ரோனி தலைமையிலான இடதுசாரி மையவாத கூட்டணியை விட இவருக்கு சிறிய அளவிலான கூடுதல் ஆதரவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிடைக்கக்கூடும் என்று தேர்தலில் வாக்களித்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்திருந்தன.

செனட் எனப்படும் நாடாளுமன்றத்தின் மேலவை தொடர்பான ஆரம்பகட்ட முடிவுகளும் பெர்லுஸ்கோனிக்கு ஆதரவாகவே அமைந்திருந்தன.

அதேவேளை, இந்த தேர்தலில் இரு கூட்டணிகளுக்கும் இடை யிலான மிக நெருக்கமான போட்டியும், செனட் அவையில் இடங்களை ஒதுக்குவதில் கடைபிடிக்கப்படும் சிக்கல் நிறைந்த நடைமுறையும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெர்லுஸ்கோனி எதிர்பார்க்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்குமா என்பது குறித்து தெளிவாக கூறமுடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Italy votes under cloud of corruption, decay - The Boston Globe: Poor leadership thwarts change, promotes apathy

2. Berlusconi heads to 3rd stint as Italy's prime minister - International Herald Tribune

3. BBC NEWS | The Reporters | Mark Mardell: “Clown Prince of bloggers takes on Italian politics”


நேபாளத்தில் மாவோயியவாதிகள் தேர்தல் வெற்றி

April 14th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, தேர்தல், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

நேபாளத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் முன்னாள் கிளர்ச்சிக்காரர்களான மாவோயிஸ்டுகளின் கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகின்றன.

1996ஆம் ஆண்டு முதல் ஒரு தசாப்த காலம் இந்த மாவோயிஸ்டுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் நேபாளத்தில் பதிமூன்றாயிரம் பேர் இறக்கும் நிலை உருவானது. ஆனால் ஒரு புதிய அரசியலமைப்பு நிர்ணய சபையை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், இதுவரை வந்த முடிவுகளின்படி ஆகக்கூடுதலான இடங்களை பிடித்த மிகப் பெரிய கட்சியாக அவர்களது கட்சி திகழுகின்றது.

இதுவரை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் சுமார் 190 இடங்களில், மாவோயிஸ்ட்கள் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தொண்டுதொட்டு செயற்பட்டுவரும் நேபாளத்தின் பாரம்பரிய கட்சிகள் மிகவும் பின்னணியில் நிற்கின்றன.

வறுமை நிலையில் இருக்கின்ற இந்த நாட்டில், பொருளாதார வளர்ச்சியை, சடுதியான சமூக மாற்றத்தைக் கொண்டுவருவோம், என்ற எதிர்பார்ப்புக்களை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமது மோசமான பழைய பழக்க வழக்கங்களையெல்லாம் விட்டுவிட்டு, பொருளாதார வளர்ச்சியையும், சமூக மாற்றத்தையும் இவர்கள் கொண்டுவருவார்களா? என்பதுதான், இங்கு இப்போது இருக்கின்ற முக்கியமான கேள்வியாகும்.

மன்னர் பதவி விரைவில் நீக்கப்படும்: மாவோயியவாதிகள் கருத்து

நேபாள தேர்தல்களில் பெருமளவு வெற்றிகளை பெற்றிருக்கும் மாவோயிஸ்ட் கட்சி, அடுத்து அங்கே அமைய இருக்கும் ஆட்சிக்கு தலைமைதாங்கும் என்று தாம் நம்புவதாக, முன்பு கிளர்சிக்காரர்களாக இருந்த மாவோயிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நேபாளத்தின் மன்னர் பதவி இன்னும் மூன்று வாரங்களுக்குள் நீக்கப்படும் என்று மாவோயிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் பாபுராம் பட்டாராய் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu : Front Page : Maoists win 110 seats

2. Election, and Maoists, Could Transform Nepal - New York Times

3. BBC NEWS | South Asia | India worries over Nepal's future


கர்நாடக தேர்தல்: காங்.அறிக்கையில் இலவச தொலைக்காட்சி பெட்டி, 2 ரூ அரிசி

April 10th, 2008 பகுப்புகள்: அரசியல், தேர்தல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

தனது தோழமைக் கட்சியான திமுகவின் வழியைப் பின்பற்றி இலவச தொலைக்காட்சிப்பெட்டிகளை கொடுத்து ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடக தேர்தல் அறிக்கையில் அதன் முக்கிய செயல்திட்டங்களாக மாநிலத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியீட்ட முன்னோட்டம்:
*வறுமை கோட்டின் கீழ் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி
*15 இலக்கம் வீடில்லா குடும்பங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடுகள்
* வறுமைக்கோட்டின் கீழுள்ள பச்சை குடும்ப அட்டைகாரர்களுக்கு 25 கிலோ வரை ரூ2 க்கு அரிசி
* விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், குயவர்கள், கைத்தறி நெசவாளர்கள், மீனவர்கள்,இடையர்கள் ஆகியோருக்கு 3%க்கு மிகாத வட்டியுடன் கடன்வசதி
* வறுமைக்கோட்டின் கீழுள்ளவர்களுக்கு யேஷஸ்வனி திட்டத்தின் கீழ் இலவச மருத்துவக் காப்பீடு
* பத்தாம் வகுப்பு தேறிய, திறமைகளை வளர்க்க தயாராக உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ1200 உதவித்தொகை
* அரசு குடியிருப்பு திட்டங்களில் மீதமுள்ள கடன் மற்றும் கட்டணங்களில் தள்ளுபடி
இது ஒரு முன்னோட்டமே என்றும் முழுமையான தேர்தல் அறிக்கை தேர்தலின் அருகாமையில் வெளியிடப்படும் என்று கார்கே கூறினார்.

Cong plays old tune for K’taka polls with free TVs, Rs 2-rice


நேபாள தேர்தல் வன்முறைகளில் 6 பேர் பலி

April 9th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், தேர்தல், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

நேபாளத்தில் புதிய அரசியல் சாசனத்தை எழுதுவதற்காக ஒரு அரசியல் சாசன சபையை தேர்ததெடுக்கும் முகமாக நாடு தழுவிய தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தென்மேற்குப் பகுதியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்களின் பின்னர் ஆறு மாவோயிஸ்டுகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

டாங் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மோதல்கள்தான் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறை சம்பவமாகும்.

மன்னராட்சியை ஒழித்து ஒரு புதிய அரசியல் சாசனத்தை எழுதவுள்ளவர்கள் இந்தத் தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்படவுள்ளனர்.

இந்த தேர்தல் வழிமுறைதான் மாவோயிஸ்டுகளை நீண்ட கால கிளர்ச்சியை கைவிட்டு அரசியல் நீரோட்டத்துகு அழைத்து வந்தது.

நன்றி: பிபிசி

முந்தைய சற்றுமுன்:

1. நேபாள மாவோயிஸ்டுகளுக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் | நேபாள மாவோயிஸ்டுகள் அமைச்சரவையில் இணைந்தனர்

2. நேபாளம்: மன்னர் கட்டவேண்டிய மின்கட்டணம்.

3. நேபாளத்தில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை

மேலும் விவரங்களுக்கு:

1. NDTV.com: Nepal set for historic elections

2. BBC NEWS | South Asia | Seven dead in Nepal poll violence

3. Nine dead in pre-poll violence - Hindustan Times


ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு; முன்பில்லாத பெரும் சவாலை எதிர்கொள்கிறார் முகாபே

March 30th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆப்பிரிக்கா, ஆளுமை, உலகம், தேர்தல், தேர்தல்முடிவு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 2 மறுமொழிகள் » |

ஜிம்பாப்வேயில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடந்த அதிபர் தேர்தலில் ஏமாற்று வேலை செய்ய தனது மனசாட்சி இடம்தரவில்லை என்று அதிபர் ராபர்ட் முகாபே கூறியுள்ளார்.

அங்கு பொருளாதாரம் வீழ்ச்சிநிலையில் இருக்கிறது, பணவீக்கமோ ஒரு லட்சம் வீதத்தில் இருக்கிறது. 1980இல் சுதந்திரம் பெற்றது முதல் அந்த நாட்டை ஆண்டுவரும் அதிபர் ரொபர்ட் முகாபே அவர்கள் இன்னும் ஒரு தரம் மக்கள் தன்னிடம் ஆட்சியைத் தரவேண்டும் என்று கோரி தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆப்பிரிக்காவின் மிகவும் வயதுகூடியத் தலைவரான முகாபே, ஜிம்பாப்வேயில் தான் நடத்திவரும் 28 வருட ஆட்சிக்கு, இதுவரை கண்டிராத மிகப் பெரிய சவாலை இந்தத் தேர்தலில் எதிர்நோக்குகிறார்.

அவரது முக்கிய போட்டியாளர்களாக, ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம் (எம்.டி.சி) கட்சியின் மோர்கன் ஸ்வாங்கிராய் அவர்களும், சுயேச்சையாகப் போட்டியிடும், முகாபே அரசில், முன்பு நிதியமைச்சராக இருந்த சிம்போ மகோனியும் திகழ்கிறார்கள். ஆளும்கட்சியான ஜானு பி.எஃப். கட்சி தொன்றுதொட்டே பலமாகத் திகழும் ஜிம்பாப்வேயின் கிராமப்புறங்களே இங்கு மிகுந்த போட்டி நிறைந்த களங்களாகத் திகழ்கின்றன.

வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்தும், வாக்குச் சீட்டுகள் பல லட்சம் அளவில் கூடுதலாக அச்சடிக்கப்பட்டதாக கசிந்த விபரங்கள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கவலைகளை வெளியிட்டிருந்தனர். வாக்களிப்பதற்காக மக்கள் பொறுமையுடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Opposition claims early lead on partial results in Zimbabwe's election - International Herald Tribune

2. BBC NEWS | Africa | Warning on Zimbabwe victory claim

3. AFP: Zimbabwe counts votes after rigging charges


பூட்டானில் முதன்முறையாக ஜனநாயகத் தேர்தல்

March 24th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், தேர்தல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

பூட்டானில் முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவை ஒன்றைத் தேர்வுசெய்வதற்கான தேர்தலில் அந்நாட்டு மக்கள் இன்று வாக்களித்திருக்கிறார்கள்.

பூட்டான் தனது பாரம்பரிய முடியாட்சி முறையிலிருந்து மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களால் ஆட்சிசெய்யப்படும் முறைக்கு சுமூகமாக மாறுவதை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தல்கள் குறிக்கின்றன. இருந்தபோதும், மக்களாட்சி அறிமுகம் செய்யப்பட்டால், பூட்டானின் பழங்கால வழக்கங்களும், குடிமக்களின் நலனும் பாதிக்கப்படும் என்ற கவலைகளும் இங்கு காணப்படுகின்றன.

இமாலய இராஜ்ஜியமான பூட்டான், பல நூற்றாண்டுகளாக உலகின் மற்ற பாகங்களிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருந்தது. நாற்பது வருடங்களுக்கு முன்னால் அங்கே தார் வீதிகளோ, மின்சாரமோ, மருத்துவமனைகளோ கிடையாது. ஒரு சில வருடங்களுக்கு முன்புதான் அந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டிலும் மக்களின் சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் தரும் நாடு பூட்டான். மக்கள் சந்தோஷத்தை அளவுகோளாக கொண்டு நாடுகளைப் பட்டியலிடும்போது அதில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது பூட்டான்.

தற்போது நாற்பத்து ஏழு உறுப்பினர்கள் கொண்ட ஒரு தேசிய பேரவையை தேர்ந்தெடுப்பதற்காக, முதல்முறையாக பூட்டானில் இன்று திங்கட்கிழமை நடக்கும் தேர்தலில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்கவிருக்கிறார்கள்.

முக்கியமாக மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் பூட்டான் நல்லிணக்கக் கட்சிக்கும் இடையில் போட்டி காணப்படுகிறது. தொலைதூர மலைப் பகுதிகளில் விரவி இருக்கும் வாக்காளர்களை, நாட்கணக்கில் நடந்தும் கோவேறு கழுதைகள் மீது சவாரி செய்தும் வேட்பாளர்கள் சந்தித்துவந்தனர்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Bhutan rebels vow to fight for 'real democracy' - ABC News

2. FACTBOX - Bhutan holds first parliamentary poll | Top News | Reuters

3. The Associated Press: Royalist Party Wins Election in Bhutan


தாய்வானின் புதிய அதிபராக எதிர்க் கட்சி வேட்பாளர் தேர்வு

March 23rd, 2008 பகுப்புகள்: