சட்டமன்றம் | சற்றுமுன்...




சட்டசபையில் ஆங்கிலத்தில் பேச உரிமை உள்ளது - எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

July 24th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சட்டமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சட்டசபையில் ஆங்கிலத்தில் பேச உரிமை உள்ளது - எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

சட்டசபையில் ஆங்கிலத்தில் பேச எங்களுக்கு உரிமை உள்ளது என்று கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கூறினார்கள்.

ஆங்கிலத்தில் பேச எதிர்ப்பு

கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் செய்யது யாசின் பேசினார். அப்போது அவர் ஆங்கிலத்தில் பேசினார். உடனே பல்வேறு உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னடத்தில் பேசும்படி கூறினார்கள். அதைத்தொடர்ந்து சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டர் உறுப்பினர்கள் கன்னடம் தெரிந்தால் கன்னடத்தில் பேச வேண்டும் என்றார்.

அப்போது மற்றொரு காங்கிரஸ் உறுப்பினரான கமருல் இஸ்லாம் எழுந்து பேசினார். அவர் கூறியதாவது:-

உரிமை உள்ளது

நாங்கள் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்து இருக்கிறோம். நாங்கள் கன்னடர்கள்தான். ஆனால் எங்கள் தாய் மொழி உருது. ஐதராபாத் மாகாணத்தில் இருந்து எங்களை கர்நாடகத்தில் சேர்த்தார்கள். எங்களுக்கு சரியாக கன்னடம் பேச வராததால் ஆங்கிலத்தில் பேசுகிறோம். இது எங்கள் தவறு அல்ல.

நாங்கள் உருது பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது கன்னட ஆசிரியர்களை ஏற்பாடு செய்து தரவில்லை. இப்போதும் பல்வேறு உருது பள்ளிக்கூடங்களில் கன்னட ஆசிரியர்கள் இல்லை. உடனடியாக அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, நாங்கள் ஆங்கிலத்தில் பேச உரிமை இருக்கிறது. எனவே, எங்களை ஆங்கிலத்தில் பேச அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு கமருல் இஸ்லாம் பேசினார்.

கட்டாயப்படுத்தவில்லை

அப்போது சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டர் நான் உறுப்பினர்களை கன்னடத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. உறுப்பினர்கள் கன்னடம் தெரிந்து இருக்கும்பட்சத்தில் அவர்கள் கன்னடத்தில் பேச வேண்டும் என்றுதான் கூறினேன்.

ஆங்கிலோ-இந்திய உறுப்பினர்

இதேபோல் ஆங்கிலோ-இந்திய உறுப்பினர் டெரிக் ஆங்கிலத்தில் பேசினார். இதற்கு சில எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கன்னடத்தில் பேசுமாறு கோஷமிட்டனர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டர், நியமன உறுப்பினர் டெரிக் கன்னடத்தில் பேச முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய டெரிக், எனக்கு கன்னட மொழி மீது அபார மரியாதை உள்ளது. எனது கருத்துக்களை ஆங்கிலத்தில் எடுத்து கூறினால் தெளிவாக பேச முடியும். இதனால் நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். ஆனால் சில உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேச கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சபையில், ஆங்கிலத்தில் பேச எனக்கு உரிமை உள்ளது என்றார்.

முயற்சி

இதைத்தொடர்ந்து பேசிய மந்திரி விசுவேஸ்வர ஹெக்டே, நியமன உறுப்பினர் டெரிக், எங்களது நண்பர். அவருக்கு கன்னடம் தெரியும். என்னுடன் பேசும்போது அவர் கன்னடத்தில்தான் பேசுவார். சபையில் கன்னட பேச அவர் முயற்சிப்பார் என்றார்.

இத்துடன் விவாதம் முடிந்தது.

முன்னதாக டெரிக் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

மானியம் குறைந்துள்ளது

ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தை சேர்ந்த பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு அந்த மானியத்தை குறைத்து இருப்பதாக தெரிய வந்து உள்ளது. மேலும் குறைந்த அளவு மாணவர்களுக்கே இந்த பயன் சென்று அடைகிறது. இது பற்றி அரசு பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு டெரிக் எம்.எல்.ஏ. பேசினார்.

இதற்கு பதில் அளித்து கல்வி மந்திரி விசுவேஸ்வர ஹெக்டே கூறியதாவது:-

ஆங்கிலோ-இந்திய சமுதாய மாணவர்களுக்கு அளிக்கப்படும் மானியம் பள்ளிக்கூடங்களுக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது. மானிய குறைப்பு செய்யவில்லை. சராசரி தலா ஒரு மாணவருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த மானியத்தை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக எம்.எல்.ஏ. கூறி உள்ளார். இது தொடர்பாக ஆங்கிலோ-இந்திய மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் பயனை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மந்திரி விசுவேஸ்வர ஹெக்டே கூறினார்.

 


சென்னை : இடிக்கப்படுகிறது கலைவாணர் அரங்கம்

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அறிவிப்பு, சட்டமன்றம், தமிழக அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இடிக்கப்படுகிறது கலைவாணர் அரங்கம்

1954-ல் சட்டப் பேரவைக் கூட்ட அரங்கமாக சில காலம் செயல்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கலைவாணர் அரங்கம் 2 மாதங்களில் இடிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு உள்பட பல முக்கியத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த அரங்கமாக அது விளங்கி வருகிறது. சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ளது கலைவாணர் அரங்கம். பல்வேறு அரசு மற்றும் தனியார் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கமாக இருந்து வருகிறது.

தற்போது, புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட உள்ளதால் கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது.

1954 முதல்…1954-ல் சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் அரங்கமாக செயல்பட்டு வந்தது. பின்னர், 1957 - ம் ஆண்டு அந்த அரங்கத்துக்கு “பாலர் அரங்கம்’ என்று நேரு பெயர் சூட்டினார். குழந்தைகளின் கலை - இலக்கிய நிகழ்ச்சிகள் அந்த அரங்கத்தில் நடைபெற்றன.

குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களும், நல்ல தரமான ஆங்கிலப் படங்களும் திரையிடப்பட்டன. குழந்தைகளோடு, அப்பகுதியில் உள்ள பொது மக்களும் அரையணா, ஓரணா கொடுத்து திரைப்படங்களைக் கண்டு ரசித்தனர்.

கால ஓட்டத்தில்…காலம் செல்லச் செல்ல மக்களின் ரசனை மாற ஆரம்பித்தது. இதனால், பாலர் அரங்கத்தில் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. அதை வர்த்தக ரீதியிலான அரங்கமாக மாற்ற அரசு முடிவு செய்தது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், குறைந்த கட்டணத்தில் நாள் கணக்கு அடிப்படையில் அரங்கத்தை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டது.

1974 ஜனவரி 29-ம் தேதி அரங்கத்தின் பெயரை “கலைவாணர் அரங்கம்’ என்று மாற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதி அதைத் திறந்து வைத்தார்.

அதற்கான கல்வெட்டு அரங்க மேடையின் இரு புறங்களிலும் இப்போதும் காட்சி அளிக்கிறது.

செப்டம்பர் வரை மட்டுமே…

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அருகே உள்ள காலியிடத்தில் 3 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புதிய அரங்கம் கட்டப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளித்த நிகழ்ச்சிகளை முடிக்க வசதியாக செப்டம்பர் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று கலைவாணர் அரங்க நிர்வாகிகள் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அரசும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளதால், 2 மாதங்களில் கலைவாணர் அரங்கக் கட்டடம் இடிக்கப்படும். “கலைவாணர் அரங்கம்’ வரலாற்றில் முக்கிய நினைவுச் சின்னம் என்கின்றனர் அப்பகுதியில் வசிக்கும் மூத்த குடிமக்கள்.
 
 


புதுச்சேரி அமைச்சர் வல்சராஜ் பதவி விலக கோரி சட்டசபை முற்றுகை - 500 பேர் கைது!

March 13th, 2008 பகுப்புகள்: அரசியல், அரசியல், இந்தியா, ஊழல், கைது, சட்டமன்றம், சுகாதாரம், போராட்டம் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

demo-against-valsarajjpg.jpg

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி 13-03-2008 காலை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், மாகேயில் கூட்டுறவுத் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கு நிலம் வாங்கியதில் நடந்த ஊழல், முறைகேடுகள் தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் வழக்குப் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர் இ.வல்சராஜை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், ஜனநாயக முன்னேற்றக் கழக அமைப்பாளர் பா.அழகானந்தம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, தமிழர் திராவிடர் கழகத் தலைவர் மு.அ.குப்புசாமி உள்ளிட்ட கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துக் கொண்ட 150 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.


திரிபுராவில் வாக்களிப்பு: சட்டமன்ற தேர்தல்

February 23rd, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டமன்றம், தேர்தல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

300px_Palace_tripura.jpg

திரிபுரா மாநில 60 பேர் கொண்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு அமைதியாக நடைபெறுகிறது. பெருந்திரளான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையாக நின்று வாக்களிக்கிறார்கள். 20 இலக்கம் வாக்காளர்களுக்கும் நிழற்பட அடையாளச்சீட்டு வழங்கபட்டுள்ளது. அறுபது இடங்களுக்கு 31 பெண்கள் உட்பட 313 பேர் போட்டியிடுகின்றனர்.

மூன்று முறை அரசில் அமர்ந்துள்ள இடதுமுன்னணி நான்காம் முறையும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது. நந்திகிராம் வன்முறைக்குப் பின் இடதுமுன்னணி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதால் அரசியல்பார்வையாளர்களின் கவனத்தை இந்தத் தேர்தல் ஈர்த்துள்ளது.

மதியம் 12:45 வரை 45% வாக்கெடுப்பு நடந்துள்ளதாக தெரிகிறது.

Left Front wants 4th term as Tripura goes to polls

Polling underway in Tripura


‘ராமர் கலாச்சார சின்னம்’ - பீட்டர் அல்போன்ஸ்

February 1st, 2008 பகுப்புகள்: அரசியல், ஆன்மீகம், சட்டமன்றம், தமிழக அரசியல் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

தமிழக சட்டச்பையில் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய தமிழக காங்கிரசின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் இராமர் இந்தியாவின் கலாச்சார சின்னம் என்றும் எல்லா இந்தியர்களும் அவரை பின்பற்ற முயலவேண்டும் என்றும் கூறினார்.

“ராம்சேது திட்டம் நிறைவேற்றப்படுவதை காங்கிரஸ் விரும்புகிறது ஆனால் ராமர்பாலத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களின் உணர்வுகளை நோகடிப்பதில் விருப்பமில்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.

Lord Ram a symbol of Indian culture, says Cong. leader -The Hindu


எனது தமிழை எள்ளி நகையாடாதீர்!: அதிமுக பெண் எம்.எல்.ஏ. ஃபதர் சயீத் ஆவேசம்

January 30th, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டமன்றம், தமிழ், பெண்கள், மொழி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

எனது தமிழை எள்ளி நகையாடாதீர்!: அதிமுக பெண் எம்.எல்.ஏ. ஃபதர் சயீத் ஆவேசம்

“எனது தமிழ்ப் பேச்சை கேட்டு சிரிக்காதீர்கள்’ என்று சட்டப் பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து அதிமுக பெண் எம்.எல்.ஏ. ஃபதர் சயீத் ஆவேசமாகக் கூறினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது அவர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

ஆளுநர் உரையில் அரசின் புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. மத்திய அரசில் பங்கேற்றுள்ள உங்களுக்கு, நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்ற சக்தி இல்லை.

தமிழகத்தில் இலவச நிலம் வழங்கும் திட்டத்துக்கு காலி நிலம் இல்லை என்று ஜெயலலிதா கூறியதை தற்போது அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் விரிவான செய்திக்கு ………………. www.dinamani.com


புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட தவ்ஹீத் ஜமா அத் முடிவு

January 23rd, 2008 பகுப்புகள்: அரசியல், இடஒதுக்கீடு, கல்வி, கிளர்ச்சி, சட்டமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட தவ்ஹீத் ஜமா அத் முடிவு

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து காங்., அரசு மவுனம் சாதிப்பதைக் கண்டித்து தவ்ஹீத் ஜமா அத் சார்பில் வரும் 27ம் தேதி சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடக்கிறது.

இதுகுறித்து தவ்ஹீத் ஜமா அத் செய்தி தொடர்பாளர் பீர் முகமது நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி மாநில முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து காங்., அரசு இடஒதுக்கீடு குறித்து எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அரசின் கவனத்தைத் திருப்பும் வகையில் வரும் 27ம் தேதி சட்ட சபை முன்பு முற்றுகைப் போராட்டம் நடக்கிறது. இதில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி பகுதி முஸ்லிம்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.ஜமா அத் தலைவர் தாசின், செயலாளர் ஜின்னா, பொருளாளர் அக்பர் கரீம், துணை செயலாளர் ரசூல் மாலிமார், காரைக்கால் மாவட்டத் தலைவர் சுல்தான் அப்துல் காதர், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் உடனிருந்தனர்.

www.dinamalar.com


மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

January 16th, 2008 பகுப்புகள்: அரசியல், அறிவிப்பு, சட்டமன்றம், தேர்தல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திரிபுராவில் பிப்ரவரி 23-ம் தேதியும், மேகாலயத்தில் மார்ச் 3-ம் தேதியும் நாகாலாந்தில் மார்ச் 5-ம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திரிபுரா, மேகாலயத்தில் இந்தத் தேர்தலில் தான் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. 99 சதவீத வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி என், கோபால்சாமி தெரிவித்தார்.

மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா சட்டப்பேரவைகளில் தலா 60 தொகுதிகள் உள்ளன.

திரிபுராவில் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 30-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 6-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் பிப்ரவரி - 9.

மேகாலயத்தில் பிப்ரவரி 8-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிறது. பிப்ரவரி 15-ம் தேதி நிறைவு பெறுகிறது. மனுவை வாபஸ் பெற கடைசி நாள் பிப்ரவரி - 18.

நாகாலாந்தில் பிப்ரவரி 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு கடைசி நாள் பிப்ரவரி - 16. பிப்ரவரி 20 மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்.

வாக்கு எண்ணிக்கை: திரிபுரா மற்றும் மேகாலயத்தில் மார்ச் 7-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. நாகாலாந்தில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 8-ம் தேதி நடைபெறும்.

மேகாலயத்தில் தற்போதைய சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் 10-ம் தேதியுடனும் திரிபுராவில் மார்ச் 19- தேதியுடனும் முடிவடைகிறது.

நாகாலாந்து சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் 13-ம் தேதி முடிவடைந்தாலும் அங்கு தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறது.

7 மாநிலங்களில் தேர்தல்: மூன்று வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து, கர்நாடகம், தில்லி, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், மிúஸôரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியதுள்ளது.

www.dinamani.com


மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

January 15th, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டமன்றம், தேர்தல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மூன்று வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து, கர்நாடகம், தில்லி, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியதுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • திரிபுராவில் பிப்ரவரி 23-ம் தேதியும்,
  • மேகாலயத்தில் மார்ச் 3-ம் தேதியும்
  • நாகாலாந்தில் மார்ச் 5-ம் தேதியும்

சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திரிபுரா, மேகாலயத்தில் இந்தத் தேர்தலில் தான் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை முதல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. 99 சதவீத வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி என், கோபால்சாமி தெரிவித்தார்.

மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா சட்டப்பேரவைகளில் தலா 60 தொகுதிகள் உள்ளன.

வாக்கு எண்ணிக்கை: திரிபுரா மற்றும் மேகாலயத்தில் மார்ச் 7-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. நாகாலாந்தில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 8-ம் தேதி நடைபெறும்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu : Front Page : Single-phase election for three States

2. NDTV.com: EC announces poll dates for 3 NE states

3. The Hindu News :: Meghalaya MLAs on resignation spree on poll-eve”


நாகாலாந்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

January 2nd, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, சட்டமன்றம், தேர்தல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

நாகாலாந்து சட்டப்பேரவைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்று சந்தேகம் வலுத்துள்ள நிலையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில் அம்மாநில பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.

பாஜக ஆதரவு பெற்ற ‘ஜனநாயக நாகாலாந்து கூட்டணி’ ஆட்சி இங்கு நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்றது. அதன் பிறகு ஆளும் கூட்டணிக்கு எதிராக செயல்பட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து நாகாலாந்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரினர்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. President’s rule in Nagaland- Hindustan Times

2. IndianExpress.com :: Cong demands dismissal of Nagaland Govt

3. Hectic political activities on in Nagaland ahead of Feb polls - India - The Times of India


ஜனவரி 23ல் தமிழக சட்டசபை கூடுகிறது

December 31st, 2007 பகுப்புகள்: சட்டமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஜனவரி 23ல் தமிழக சட்டசபை கூடுகிறது

சென்னை, டிச. 31: தமிழக சட்டசபை வரும் ஜனவரி 23ம் தேதி கூடுகிறது.

2008ம் ஆண்டின் முதல் கூட்டமாக தமிழக சட்டசபை வரும் ஜனவரி 23ம் தேதி கூடுகிறது.

2008ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் சுர்ஜீத் சிங் பர்னாலா சட்டசபை துவக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். ஆளுநரின் உரையில் அரசின் திட்டங்கள் குறித்தும் இடம்பெறும்.

சட்டசபையை கூடுவதற்கான அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டுள்ளதாக சட்டசபை செயலாளர் செல்வராஜ் கூறினார்.

www.dinamani.com 


மோடியை வெற்றிபெறச் செய்த காங்கிரஸ்

December 27th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா, சட்டமன்றம், சட்டம் - நீதி | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | ஒரு மறுமொழி » |

குஜராத்தில் மீண்டும் பாசிசம் படர்ந்து விட்டது. மனு அதர்ம ஆட்சி குஜராத்தில் குடிகொண்டு விட்டது. இதற்கு முக்கியமாக மோடி நன்றி கூற வேண்டியது காங்கிரஸ்காரர்களுக்குத்தான்.

மோடி தன் மீதான குற்றச்சாட்டு களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த அதேவேளையில்தான் நேற்று மோடியோடு கூடிக் குலாவியர் களை அழைத்துக் கொண்டு பிரச்சாரத் தில் ஈடுபட்டது காங்கிரஸ்.

மோடிக் கூட்டத்தையும் மோடி இல்லாத காங்கிரஸ் கூட்டத்தையும் தனித்தனியே பார்த்தவர்களுக்கு பெரிதாக வேறுபாடு ஒன்றும் தோன்றவில்லை.

மோடியின் கட்சி RSS ன் ஏ.பிரிவு அணி என்றால் குஜராத் மாநில காங்கிரஸ், RSS ன் பி பிரிவு அணியாகவே கருதப்பட்டது. சங்கர்சிங் வகேலா உள்ளிட்ட நேற்றைய காக்கி டவுசர் பார்ட்டிகளுக்கு கதர் டவுசர் மாட்டி காங்கிரஸுக்கு அழைத்து வந்த போதே காங்கிரஸின் கொள்கை உறுதி (!) புலப்பட்டது.

காங்கிரஸ் தன் கொள்கை என்பது மதச்சார்பின்மை என்பதாக சொல்லிக் கொண்டது அவ்வாறே பாஜகவின் கொள்கை ஹிந்துத்துவா என்று சொல்லிக் கொண்டது.

காங்கிரஸின் கொள்கைக்கு பிதா மகன் ‘காந்தி’ என்பதைப் போல சங்கும்பல் கொள்கையின் பிதாமகன் கோட்சே என கருதப்படுகிறது.

57 வயதான நரேந்திர மோடி 1966ல் ஆர்.எஸ்.எஸ்.சில் சேர்கிறார். 1987ல் பாரதீய ஜனதாவில் முக்கிய செயலாற்றும் ஊழியராக உருவெடுக்கிறார்.
2001 அக்டோபரில் பாஜக சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு, பாஜக தேசிய தலைமையினால் குஜராத் முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படு கிறார். அதுவரை பாஜகவின் முதல்வராக இருந்த சங்கர்சிங் வகேலாவும் கேசுவாய் கேசுபாய் பட்டேலும் ஓரங்கட்டப்பட்ட னர். அவ்வாறே 2002ல் நிகழ்ந்த குஜராத் இனப்படுகொலையில் தொடர்பு டையவர்களுக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இந்த செயல் எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதாக அமைந்தது.

காங்கிரஸ் கட்சிக்கென ஒரு ஓட்டு வங்கி உண்டு. சிறுபான்மையினர், தலித்துகள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள்தான் காங்கிரஸின் ஓட்டு வங்கியாக கருதப்பட்டது.

விடுதலைப் பெற்ற காலத்திலிருந்து காங்கிரஸ் இந்த அடிப்படையிலேயே வாக்குகளைப் பெற்று வெற்றிகளைக் குவித்தது.

காங்கிரஸ் ஓட்டுவங்கியில் ஓட்டையைப் போட்டு மதவாதம் பேசி பாரதீய ஜனதா அரசியலில் வளரத் தொடங்கியது. எதிர்வினை ஆற்ற வேண்டிய காங்கிரஸ் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் பாத்திரத்தை பாஜகவிடம் பறிகொடுத்துவிட்டு பாஜகவின் பின்னால் செல்லும் அவல நிலையை அடைந்தது.

குஜராத்தில் தொழிற்சங்சங்கள் காவிமயமாயின. ஆதிவாசி மக்களை ஆதிக்க சாதியினர் தங்களின் விருப்பத் திற்கேற்ப ஆடும் பொம்மைகளாக மாற்றினர். ஏறக்குறைய பல்வேறு பிரிவு மக்களிடையேயும் விஷத்தை விதைத்து ஆதரவை அறுவடை செய்த பாஜகவுக்கு மத்தியில் டெல்லிக்கும் அகமதாபாத்துக் கும் சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செல்வதையே முழுநேரக் கடமையாக குஜராத் காங்கிரஸார் கொண்டனர்.

பாஜகவினரால் வளைக்க முடியாதவர் கள் முஸ்லிம்கள் மட்டுமே என்பது தெள்ளிய நீரோடையாக தெரிய வரவும் முஸ்லிம்களை கருவறுக்கும்