அரசியல் | சற்றுமுன்...




ஜனதா தள மாநாடு தேவகவுடா கலந்து கொள்கிறார்

August 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஜனதா தள மாநாடு தேவகவுடா கலந்து கொள்கிறார்

நெல்லையில் ஜனதா தள மாநாடு நடைபெறுகிறது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கலந்து கொள்கிறார்.

மத சார்பற்ற ஜனதா தள மாநில பொதுச் செயலாளர் ஜான் மோசஸ் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மத சார்பற்ற ஜனதா தள மண்டல மாநாடு நெல்லையில் வருகிற 30 ம் தேதி நடைபெறுகிறது. இதில் கட்சியின் அகில இந்திய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்து கொள்கிறார். மற்றும் தமிழ்நாடு ஜனதா தள தலைவர் இஸ்மாயில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்படுகிறது. பணவீக்கம், காஷ்மீர் பிரச்சினை, தீவிரவாதிகள் அச்சுறுத்தல், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மத்திய மாநில அரசுகள் வருகின்ற தேர்தலில் தோல்வியை தழுவும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் லிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நியமிக்க நேர்காணல்: தங்கபாலு

August 26th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நியமிக்க நேர்காணல்: தங்கபாலு

சென்னை, ஆக.26: இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

மதவாத சக்திகளின் தடைகளை உடைத்து நாட்டைக் காக்க இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய நேர்காணல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் மதியம் 2 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜிதேந்திர சிங், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் ஆகியோர் இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

தேசிய உணர்வு கொண்ட 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தங்கபாலு அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு குடிகாரர்கள் நாடாக மாறி வருகிறது: ராமதாஸ்

August 26th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தமிழ்நாடு குடிகாரர்கள் நாடாக மாறி வருகிறது: ராமதாஸ்

சென்னை, ஆக. 26: தமிழ்நாடு குடிகாரர்கள் நாடாக மாறி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க மாற்று மதுவிலக்குக் கொள்கை அறிக்கையை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டு ராமதாஸ் அளித்த பேட்டி:

மதுவை ஒழிக்க புதிய வழிமுறைகள் அடங்கிய “மாற்று மது ஒழிப்புக் கொள்கை’யை பாமக தயாரித்துள்ளது. கள்ளச் சாராயத்தை ஒழிக்க தனி உளவுப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை அதில் தெரிவித்துள்ளோம்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாமக கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருகிறது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மாவட்டம் தோறும் பாமக மகளிர் அணி சார்பில் மாநாடுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை 8 மாநாடுகள் முடிந்துள்ளன.

மாநாடுகள் முடிந்ததும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் போராட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080826062128&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/26/2008&dName=No+Title&Dist=


காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக?: தங்கபாலு சூசகம்

August 26th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக?: தங்கபாலு சூசகம்

சென்னை, ஆக. 25: காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சிகள் சேரும் வாய்ப்புகள் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:

நாட்டில் அமைதியும், வளர்ச்சியும் நிலைக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். தமிழகத்துக்கும் இது பொருந்தும்.

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வலுப்பெறும். பாமக உள்ளிட்ட கட்சிகளிடையே தற்போதுள்ள கருத்துவேறுபாடுகள் விரைவில் நீங்கிவிடும். தேர்தல் நேரத்தில் தேமுதிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், காமராஜரின் திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080825135953&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/26/2008&dName=No+Title&Dist=0


திமுக கூட்டணியில் மீண்டும் பாமக?

August 24th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

திமுக கூட்டணியில் மீண்டும் பாமக?

சென்னை, ஆக.24} திமுக தலைமையிலான கூட்டணிக்கு மீண்டும் பாமக வந்தால் கூட்டணி பலம்பெறும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, திமுக}பாமக இடையே உள்ள பிரச்சினைகளை களையும் பொருட்டு முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று காலை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இரு கட்சிகளுமே மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. எனவே, மாநிலத்தில் அவர்கள் மீண்டும் இணைவதில் ஆச்சரியமில்லை” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், ”பாமகவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பாமக நிறுவனர் ராமதாசுடன் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளை நாங்கள் தொடங்குவோம்” என்றார்.

முதல்வர் கருணாநிதி மற்றும் சில மூத்த திமுக தலைவர்களை பாமக பிரமுகர் காடுவெட்டி குரு கடுமையாக விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையில், திமுக கூட்டணியிலிருந்து பாமக நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 


புத்தகத்துக்கு வேலையில்லை: வீணாகும் பல கோடி

August 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

புத்தகத்துக்கு வேலையில்லை: வீணாகும் பல கோடி

சென்னை, ஆக. 21: தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் தற்போது புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்களுக்காக அச்சிடப்படும் கோடிக்கணக்கான மதிப்பிலான புத்தகங்களுக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்கால சமுதாயத்தின் ஆணிவேராக அமைவது இன்றைய குழந்தைகளின் தொடக்கக் கல்வியே. இதில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னையும் எதிர்காலத்தில் சமுதாய பிரச்னையாக உருவெடுக்கும். தமிழகத்தில் தற்போதும் மிகப் பழமையான மெக்காலே கல்வித் திட்டத்தின்படியே கல்வி முறை இயங்கி வருகிறது.

இந் நிலையில் தமிழக அரசு கடந்த 2007-2008 கல்வி ஆண்டில் “செயல்வழிக் கற்றல்’ (ஏ.பி.எல்.) என்ற புதிய கற்பித்தல் முறையை ஆரம்பப் பள்ளிகளில் (ஒன்று முதல் 4-ம் வகுப்பு வரை) அறிமுகப்படுத்தியது.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080821121210&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/22/2008&dName=No+Title&Dist=


பெரிய கூட்டணி ஊழலுக்கு வழி வகுக்கும்’- விஜயகாந்த்

August 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழக அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பெரிய கூட்டணி ஊழலுக்கு வழி வகுக்கும்’- விஜயகாந்த்

சென்னை, ஆக. 18: கூட்டணி பெரிதானால் அது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் திங்கள் கிழமை அவர் அளித்த பேட்டி:

நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்கியதைப் பற்றி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா “தமிழகத்தைப் பிடித்திருந்த வியாதி ஆந்திரத்துக்கும் பரவிவிட்டது’ என்று கூறியதைப் பற்றி..?

நாங்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெயலலிதா பெருவியாதிக்காரரா?

மேலும் விரிவான செய்திக்கு

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080818140044&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/19/2008&dName=No+Title&Dist=


தலித்-முஸ்லிம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது: திருமாவளவன்

August 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தலித்-முஸ்லிம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது: திருமாவளவன்

சென்னை, ஆக. 19: “தலித்கள் - முஸ்லிம்கள் இடையே பிரச்னையை ஏற்படுத்த சில அமைப்புகள் முயற்சிக்கின்றன. ஆனால் தலித் - முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கட்சி விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 17-ம் தேதி சென்னை வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுக்கும், கல்பாக்கம் அருகில் உள்ள புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த விரும்பத் தகாத, வேதனை அளிக்கும் நிகழ்வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இது குறித்து கள ஆய்வு மேற்கொண்டு தவறு செய்த கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை விடுதலைச் சிறுத்தைகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரச்னை நடைபெறவில்லை. தலித் மக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் அவர்களுக்கு பக்கபலமாக முஸ்லிம்கள் இருந்துவருகின்றனர்.

தமிழகத்தில் எங்களது ஒற்றுமையை விரும்பாத சில அமைப்புகள் இப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி உள்ளனர். ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்க உறுதி ஏற்கிறோம்.

புதுப்பட்டினத்தில் பிரச்னை நடைபெற்ற இடத்தில் போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லை. போலீஸôரின் அஜாக்கிரதை, முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாதது, போலீஸôரின் தவறான அணுகுமுறை ஆகியவையே இப் பிரச்னை பெரிய அளவில் ஏற்பட காரணமாக இருந்தன என்றார் திருமாவளவன்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் உமர் பரூக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


நான் அரசியலுக்கு வர உந்துதலாக இருந்தவர் கலாம்: சிரஞ்சீவி

August 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

நான் அரசியலுக்கு வர உந்துதலாக இருந்தவர் கலாம்: சிரஞ்சீவி

ஹைதராபாத்:

பதவி சுகம், அதிகார சுகத்திற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. முன்னாள்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான் நான் அரசியலுக்கு வர உந்து சக்தியாக
இருந்தார் என்று கூறியுள்ளார் அரசியல் தலைவராக அவதாரம் எடுத்துள்ள
தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

ஆந்திர அரசியல் வானில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் சிரஞ்சீவி.
வருகிற 26ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ள பிரமாண்ட பொதுக் கூட்டத்தில்
தனது புதிய கட்சியை அவர் தொடங்குகிறார்.

இந்த நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று ஹைதராபாத் ஜூபிளி
ஹில்ஸில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை அழைத்து மனம்
திறந்து பேசினார் சிரஞ்சீவி.

அரசியல்வாதிகளுக்கே உரிய வெள்ளை நிற உடையில் கம்பீரமாக வந்த சிரஞ்சீவி
புகைப்படங்களுக்கு முகம் சுளிக்காமல் போஸ் கொடுத்தார்.

பின்னர் அவர் பேச ஆரம்பித்தார். சிரஞ்சீவி பேசுகையில், என்னை அரசியலுக்கு
வரத் தூண்டிய அனைவருக்கும் முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோடானு கோடி தெலுங்கு மக்கள், எனது ரசிகர்கள், ஆதரவாளர்களின் ஆசை, கனவு
இது. அதை இப்போது நிறைவேற்றப் போகிறேன்.

கடந்த சில மாதங்களாக மீடியாக்களில் எனது அரசியல் பிரவேசம் குறித்து
செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இன்று எனது வாழ்க்கையில் மறக்க
முடியாத நாள். எனது அரசியல் பிரவேசம் குறித்து பேச விரும்பினேன்.

கடந்த 30 ஆண்டுகளாக நான் திரையுலகில் இருந்து வந்தேன். ஆனால்
பொதுமக்களின் தேவைகள் என்னை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளன. எனது அரசியல்
எதிர்காலத்தை பொதுமக்கள்தான் நிர்ணயிக்கப் போகிறார்கள்.

எனது வாழ்க்கையும், சேவையும் ஆந்திர மக்களுக்காகவே. இது கடவுள் எனக்குக்
கொடுத்துள்ள வாய்ப்பு. சமூக பிரச்சினைகளை தீர்க்க மனிதர்களை
பயன்படுத்துவார் கடவுள். அப்படித்தான் என்னை அரசியலுக்கு அனுப்பி
சமூத்திற்கு சேவை செய்ய அவர் அனுப்பியுள்ளதாக கருதுகிறேன்.

கடவுளிடமிருந்து வந்த அழைப்பு இது. நான் அரசியலுக்கு வர வேண்டும்
என்பதற்காக மாநிலம் முழுவதும் பேரணிகள், கூட்டங்களை நடத்தினர் எனது
ஆதரவாளர்கள், அன்புக்குரியவர்கள். அதற்கு இப்போது நான் பதிலளிக்க வேண்டிய
நேரம் வந்து விட்டது.

உந்து சக்தியான கலாம் - என்.டி.ஆர்

கடந்த பல நாட்களாக பலரையும் நான் சந்தித்து வந்தேன். சமூகத்தின் அனைத்து
தரப்பினரையும் சந்தித்து வந்தேன். எனது உணர்வுகளை அவர்களிடம்
தெரிவித்தேன். அப்படி நான் சந்தித்தவர்களில் ஒருவர் முன்னாள் குடியரசுத்
தலைவர் அப்துல் கலாம்.

அவர் என்னிடம் பேசுகையில், சிரஞ்சீவி, நான் சண்டிகரில் ஒரு மாணவர்
சந்திப்புக்காக போயிருந்தபோது, பல கேள்விகளை அவர்களிடம் கேட்டேன்.
அவர்களில் பலர் நான் என்ஜீனியர் ஆவேன், வக்கீல் ஆவேன், டாக்டர் ஆவேன்
என்று கூறினர். ஆனால் மிகக் குறைந்த சிலரே அரசியல்வாதி ஆவேன் என்றனர்.

அந்த அளவுக்கு மக்கள் மனதில் அரசியல் குறித்த பயம், அவமதிப்பு
இருக்கிறது. அந்த நிலையை உங்களைப் போன்றவர்கள்தான் போக்க வேண்டும்.
உங்களுக்கு உங்களைப் பற்றித் தெரியாது. நீங்கள் நடிகரை விட மேலானவர்
என்றார்.

அப்துல் கலாம் கூறிய இந்த வார்த்தைகள்தான் என்னுடைய மன மாற்றத்திற்கு
முக்கிய காரணம். அரசியல் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல செய்ய வேண்டும்
என்ற எண்ணமும் பிறந்தது.

இளைஞர்களும், மன வலிமை படைத்தவர்களும், உறுதியாக செயல்படக் கூடியவர்களும்
சமூகத்தை மாற்றும் வல்லமை படைத்திருந்தால், நிச்சயம் அரசியல் மூலம் அதை
சாதிக்கலாம். நான் அரசியலில் நுழைய மறுத்திருந்தால் அது வரலாற்றுப்
பிழையாக மாறியிருக்கும். எனவே இந்த நேரத்தில் அப்துல் கலாமுக்கு நான்
நன்றி கூற விரும்புகிறேன். அவருடைய வார்த்தைகள்தான் எனக்கு உந்து
சக்தியாக இருந்தது.

மறைந்த என்.டி.ஆர். ஆந்திர மாநில சமூக அமைப்பில் பெரும் மாற்றத்தை
ஏற்படுத்தியவர். அவரும் எனக்கு உந்து சக்தியாக இருக்கிறார். திரைக்
கலைஞர்களால் அரசியலிலும், சமூகத்திலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு
அவர் ஒரு உதாரணம். அவருக்கும் நான் மானசீக நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

வக்கீல்கள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், பழங்குடியினர் என்னை
அரசியலுக்கு வரத் தூண்டியவர்கள். இவர்களும்தான் எனக்கு உந்து
சக்தியாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க
விரும்புகிறேன்.

கம்மம் மாவட்டத்தில் ஒரு ஊர்க்காவல் படை வீரர் எனக்காக தற்கொலை செய்து
கொண்டார். அதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், சிரஞ்சீவியை
முதல்வராக காண முடியவில்லையே என்று எழுதியிருந்தார். இது என்னை நெகிழ
வைத்து விட்டது.

அதேபோல ஐடி வேலையில் இருந்து வந்த ஒரு தம்பதியினரும் இதே காரணத்திற்காக
தற்கொலை செய்து கொண்டனர். இது எல்லாம் என்னை நிறைய சிந்திக்க
வைத்துவிட்டது.

எனவே இனிமேலும் அரசியலுக்கு வராமல் இருக்கும் பிழையை செய்யக் கூடாது என்ற
முடிவை எடுத்தேன்.

நான் அரசியல்வாதியாக நடிக்க மாட்டேன். அதிகாரத்திற்காகவும்,
பதவிக்காகவும் நான் அரசியலுக்கு வரவில்லை. மன திருப்தியுடன் நான்
அரசியலுக்கு வருகிறேன். எனக்கு கடவுள் புகழையும், பணத்தையும்
கொடுத்துள்ளார். எனது ரத்த வங்கிகள் மூலம் ஏராளமான மக்கள்
பலனடைந்துள்ளனர்.  என்னைப் பார்க்கும்போதெல்லாம் கைகளைப் பிடித்துக்
கொண்டு பாராட்டுகிறார்கள், அது போதும் எனக்கு.

30 வருடங்களாக நடித்து விட்டேன். இனிமேல் ஒரு அரசியல்வாதியாக செயல்படப்
போகிறேன். இங்கு நடிப்பு எடுபடாது. இதை நான் உண்மையாகவும், நிஜமாகவும்
செய்தாக வேண்டும். அதை கெளரவத்துடனும், களங்கமில்லாமலும் செய்யப்
போகிறேன்.

எனது கட்சியின் பெயர், கொள்கைகள், கொடி உள்ளிட்டவை குறித்து ஆகஸ்ட் 26ம்
தேதி திருப்பதியில் நடைபெறவுள்ள  கூட்டத்தில் அறிவிக்கவுள்ளேன்.

ஆந்திராவை சந்தோஷம் மிக்க மாநிலமாக திகழச் செய்ய வேண்டும் என்பதே எனது
ஒரே லட்சியம் என்றார் சிரஞ்சீவி.

அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த பெரும் திரளான ரசிகர்கள்,
சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று பட்டாசுகள் வெடித்துக்
கொண்டாடினர்.
http://thatstamil.oneindia.in/news/2008/08/17/india-abdul-kalam-and-ntr-inspired-me-chiranjeevi.html


நூலகங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை’: முதல்வர்

August 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அரசியல், தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

நூலகங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை’: முதல்வர்

சென்னை, ஆக. 16: நூலங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 120 கோடியில் உலக தரத்தில் அமைக்கப்பட உள்ள அரசு நூலக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி சனிக்கிழமை அவர் பேசியது:-

தங்கம் தென்னரசுவை எதற்காக அமைச்சராக நியமித்தேனோ அது நிறைவேறியுள்ளது. எனது நினைப்பை நுகர்ந்து பார்த்து நிறைவேற்றுகிறார். அதில் ஏமாறவில்லை. நானும் ஏமாற மாட்டேன்.

யார், யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும், யார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்த்து நாங்கள் செயல்படுகிறோம்.

கோட்டூர்புரம் எனது வாழ்க்கையின் முழுமையான அத்தியாயம். ஒரு பொதுத் தேர்தல் நேரத்தின்போது இப்பகுதியில் சிலர் என்னையும், உடன் வந்தவர்களையும் ஒரு மண்டபத்தில் சிறைவைத்து தாக்கினர்.

அவர்களிடம் இருந்து என்னை ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த சாரங்கன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காப்பாற்றினர். அவர்களுக்கு வேஷ்டி, சேலைகளை பரிசாக அண்ணா வழங்கினார்.

அவர்கள் என்னைக் காப்பாற்றாவிட்டால், என்னை முதல்வராக நீங்கள் பார்த்திருக்க முடியாது. எனது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

வீடுகள்தோறும் நூலகம்: வீட்டில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் அது, எந்த இடத்தில் வாங்கப்பட்டது என்பது குறித்து அதன் சரித்திரத்தைக் கூறுவார்கள். நூலகம் நமது அடிப்படைத் தேவை. வீட்டுக்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று விரும்பினார் அண்ணா. அவரது ஆவல் இன்னமும் நிறைவேறவில்லை. அதை நிறைவேற்றும் வகையில் நாம் நடைபோடுவோம். எனவே, இந் நூலகம் சிறப்பாக அமைக்கப்படும்.

வருங்காலத்தில் இந்த நூலகத்தை பல்லாயிரக் கணக்கானோர் பயன்படுத்தினால், இந்த விழா வெற்றி பெற்றதாக அமையும்.

நூலகங்களின் செயல்பாடு சரியில்லை: தமிழகத்தில் மொத்தம் 3,924 பொது நூலகங்கள் உள்ளன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்கூட, நூலகங்களின் சிறப்பு, செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எழுத்தாளர்களின் கோரிக்கையை ஏற்று, நூலகங்களில் பெறப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை 1000-மாக அரசு உயர்த்தியுள்ளது. நூலகங்களுக்கு மேலும் அதிக புத்தகங்கள் தேவைப்படுமானால், இதை 2 ஆயிரமாக உயர்த்த அரசுக்கு அதிக நேரம் ஆகாது.

கோட்டூர்புரத்தில் நூலகம் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை நான் பெற்றதற்கு எனது மகள் கனிமொழியே காரணம் என்று குறிப்பிட்டனர். கனிமொழியின் ஆர்வத்தை செயல்படுத்தி இருக்கிறோம்.

விரைவில் இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவுக்கு என்னை அழைப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

இதில் அமைச்சர்கள் க. அன்பழகன், துரைமுருகன், தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலர் எல்.கே திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


மதுக்கடைகளை மூடாவிட்டால் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ்

August 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கருணாநிதியை வரலாறு மன்னிக்காது: ராமதாஸ்

திருச்சி, ஆக. 17: மதுக்கடைகளை மூடாவிட்டால், முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என்றார் பாமக நிறுவனர் ச. ராமதாஸ்.

திருச்சியில் மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசியது:

“மதுவை ஒழிப்பது தொடர்பாக இங்கு நிறைவேற்றப்பட்ட ஒட்டுமொத்தத் தீர்மானம் தமிழக அரசுக்கு எட்ட வேண்டும். அவ்வாறு எட்ட வேண்டுமானால், வீட்டில், தெருவில், ஊரில், குழாயடியில் இதுபற்றி பெண்கள் பேச வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு குடும்பத்தையும் சீரழிக்கும் இந்த மதுவை ஒழிக்க முடியும்.

மதுவை ஒழிக்க கடந்த 20 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தினாலும், வெற்றி கிட்டவில்லை. அதனால்தான், மகளிரைத் திரட்டி, இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

குடிப் பழக்கம் என்பது ஒரு கொடிய நோய். சமுதாயத்தைப் பாதிக்கும், வீட்டைக் கெடுக்கும் இந்த நோயை ஒழிக்க வேண்டும்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080817091957&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/17/2008&dName=No+Title&Dist=

 


நேரு கொள்கைக்கு நேர்மாறாக செயல்படும் மத்திய அரசு

August 16th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

நேரு கொள்கைக்கு நேர்மாறாக செயல்படும் மத்திய அரசு

சிவகங்கை, ஆக. 15: நேருவின் கொள்கைகளுக்கு நேர்மாறாக மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.

சிவகங்கையில் வெள்ளிக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியது:

நாடு சுதந்திரம் அடைந்து 61 ஆண்டுகள் கடந்து விட்டன. சுதந்திர இந்தியாவில் ஜவஹர்லால் நேரு கட்டிக்காப்பாற்றி வந்த நடுநிலைக்கொள்கை, பொதுத்துறை கொள்கை ஆகியவற்றுக்கு நேர்மாறாக மத்திய அரசு செயல்படுகிறது.

மதவாத அரசு ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற காரணத்துக்காக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உள்ள அம்சங்களை செயல்படுத்த நாங்கள் மிகவும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அணுசக்தி ஒப்பந்தத்தை எங்கள் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றத் துணிந்தனர். இதுபோன்ற காரணங்களால் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றோம்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி ரூ. 2,45,000 கோடியை மத்திய அரசு 4 தனியார் கம்பெனிகளில் முதலீடு செய்ய இருந்ததை கடுமையாக எதிர்த்தோம்.

நாங்கள் வெளியேறிய பிறகு வைப்பு நிதியை தனியாரிடம் துணிந்து ஒப்படைத்துவிட்டனர். மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் ஆட்சி நடத்துகிறது காங்கிரஸ்.

மக்கள் நலனை முன்னிட்டு நாங்கள் வாபஸ் பெற்றோம். நாடு முழுவதும் இனி காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத அணி அமைக்க முயற்சி செய்வோம் என்றார்.