விலைவாசி | சற்றுமுன்...




டீசல் பற்றாகுறை: பலபாடசாலைகள் மூடல்

July 2nd, 2008 பகுப்புகள்: தமிழ்நாடு, போக்குவரத்து, போராட்டம், விலைவாசி | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை மற்றும் அதன் சுற்றுபுற நகர்களில் இயங்கிவரும் பிரமாண்ட பொறியியல், மருத்துவ கல்லூரிகள், டீசல் பற்றாக்குறை காரணமாக மாணவர்களைக் கூட்டிவர பேருந்துகளை இயக்க முடியாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறிப்பாக புறநகர்களில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளுமே உள்ளூர் மாணவர்களை நம்பி செயல்படுபவைஅல்ல. இக்கல்லூரிகளில் 30 சத விகித மாணவர்கள் மட்டுமே ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலோர் கல்லூரிகள் இயக்கும் வாகனங்களிலும், வெகு சிலர் மட்டும் இரு சக்கர வாகனங் களிலும் கல்லூரிக்குச் சென்று வருகின்றனர்.
டீசல் சப்ளை சீராகும் வரை இனி பேருந்துகளை நிறுத்தி வைக்கலாம், கல்லூரிகளையும் மூடி வைக்கலாம் என நிர்வாகங்கள் முடிவெடுத்து அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிகள் மூடப்படுவதாக நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
எஸ்ஆர்எம் போன்ற பெரிய கல்லூரிகள் மட்டும் தங்கள் கல்லூரி பேருந்துகளுக்கென்று தனியாக வளாகத்துக்குள்ளேயே பங்க் வைத்துள்ளன. அதாவது மொத்தமாக டீசல் வாங்கி இருப்பு வைத்துள்ளன. ஒரு வேளை இன்னும் சில தினங்கள் இதே நிலை நீடித்தால் அனைத்துக் கல்லூரிகளுமே மூடப்பட்டாலும் வியப்பில்லை.


4 விவசாயிகள் தற்கொலை

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, தற்கொலை, தொழில், பொருளாதாரம், மரணம், வணிகம், விலைவாசி, விவசாயம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மகாராஷ்டிரம், விதர்பா பகுதியில் கடன்தொல்லை காரணமாக 2 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். மழையால் பயிர்கள் நாசமானதால் கேரள விவசாயி ஒருவரும், ஆந்திர விவசாயி ஒருவரும் தற்கொலை செய்துக் கொண்டனர்.

நந்துரா பிங்லே கிராமத்தைச் சேர்ந்த கோட்டே (30), பாட்குலி கிராமத்தைச் சேர்ந்த தேஷ்முக் (32) ஆகியோர் உள்ளூர் வங்கியில் கடன் பெற்றிருந்தனர். இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கேரளத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாயின. இதில் பாதிக்கப்பட்ட ஆலப்புழை மாவட்ட விவசாயி புஸ்கரன் என்பவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டார். இதே பிரச்னை காரணமாக ஆந்திரத்தின் கிருஷ்ணா மாவட்ட விவசாயி அச்சுதராமையா என்பவரும் தற்கொலை செய்துக் கொண்டார்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. 74 farmers suicides in Vidarbha after Chidambaram's farm loan waiver

2. » 14 farm suicides in three days in Vidarbha

3. The Telegraph - Calcutta (Kolkata) | Nation | Waiver can’t stop Vidarbha suicides


மேற்குலக நாடுகள் தாவரத்திலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கு இந்தியா கண்டனம்

March 26th, 2008 பகுப்புகள்: இயற்கை, பொருளாதாரம், வணிகம், விலைவாசி, விவசாயம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

உலக அளவில் உணவின் விலைகள் ஏறிக்கொண்டே இருப்பதை சமாளிக்க முடியாமல், உலகின் வறியவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அமெரிக்க போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகள் தானியங்களை முலமாகக் கொண்டு எரிபொருள் தயாரிக்கும் திட்டங்களில் ஈடுபடுவது ஆத்திரமூட்டுவதாக இருக்கிறது என்று இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அமைச்சர் சிதம்பரம் அவர்கள் இதைத் தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விஷயங்களை அடிப்படையாக் கொண்டுதான், மேற்குலக நாடுகள் தாவர மூலமான எரிபொருளைத் தயாரிப்பதில் தமது ஆர்வத்தை அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

நியாமான விலையில், உணவுப் பொருட்களை வாங்குவதற்கு, உலக ஜனத்தொகையில், பெரும் பங்கு மிகவும் கஷ்டப்பட்டுவர, மலிவான எரிபொருள் கிடைப்பதற்காக சோளம் போன்ற தானியங்களை எரிபொருளாக மாற்றுவது கண்டிக்கப்பட வேண்டியது என்றும் அமைச்சர் சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Expensive oil, food places huge burden on developing countries, Indian finance minister says - International Herald Tribune

2. AFP: Diverting food products to make biofuels is foolish: Indian finance chief

3. PIB Press Release: “The text of the speech of Finance Minister, Shri P. Chidambaram delivered at the Lee Kuan Yew School of Public Policy in Singapore”


சரிவில் உலகப் பங்குச் சந்தைகள்: அமெரிக்க வங்கி திவால் எதிரொலி

March 17th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, பங்குச்சந்தை, பொருளாதாரம், விலைவாசி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

அமெரிக்காவின் மிகப் பழமையான வங்கிகளில் ஒன்றான பியர் ஸ்டேர்ன்ஸ் வங்கி, வங்குரோத்து (திவால்) நிலைமைக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்காக, அதனை விற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து, உலக பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

நியூயார்க்கில், டோவ் ஜோண்ஸ் சுட்டெண் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஐரோப்பியச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டிருந்தாலும், மந்தமாகவே காணப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரம், மிகவும் சவால் நிறைந்த காலப்பகுதியை கடப்பதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள், ஆனாலும் நிலைமை சமாளிக்கக்கூடிய நிலையில்தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், மேலும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என்று உலக வங்கியின் தலைவர் எச்சரித்துள்ளார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. The Associated Press: After Bear Stearns Rescue, Who's Next?

2. AT A GLANCE: JPMorgan Chase To Buy Bear Stearns For $2/Share

3. Timeline of a Crisis - WSJ.com: “key dates from the stock, bond and commodities markets as U.S. investment banks and the Federal Reserve struggled to contain the fallout of the mortgage meltdown.”

4. ‘Fundamentals’ also in jeopardy - livemint: More and more economists are revising their growth forecasts downward. An Indian GDP growth rate of 7% for fiscal 2009 is increasingly becoming the consensus estimate


இந்திய ரயில்வே மறைமுகக் கட்டணங்களினால் இலாபம் ஈட்டுகிறதா?

March 16th, 2008 பகுப்புகள்: இந்தியா, இரயில், பட்ஜெட், பொருளாதாரம், விலைவாசி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 5 மறுமொழிகள் » |

நஷ்டத்தில் இயங்கி வந்த இந்திய ரயில்வே, சமீபகாலமாக லாபம் ஈட்டிவருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த லாபம் எந்த வகையில் ஈட்டப்படுகிறது என்பதில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில்கூட, ரயில் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டதுடன், வேறு பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.

ஆனால், ரயில் பட்ஜெட்டில் அறிவிக்காமல், நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல், நிர்வாக உத்தரவுகள் மூலமாக, ரயில்வே நிர்வாகம் மறைமுகமாக கட்டணங்களை உயர்த்தியிருப்பதாக கோவை கன்ஸ்யூமர் காஸ் என்ற நுகர்வோர் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இது குறித்து கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கே. கதிர்மதியோன் வழங்கிய செவ்வியை பிபிசி தமிழோசையில் கேட்கலாம்.

நன்றி: பிபிசி


நடுவண் அரசு ஊழியர்களுக்கு அடுத்த பரிசு ?

March 7th, 2008 பகுப்புகள்: தகவல், தொழிலாளர்கள், விலைவாசி | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடிசெய்த சூட்டோடு மைய அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கி மகிழ்விக்க அரசு இன்று அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்கின்றனர். நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து இன்று கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் நடுவண் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியக்காரர்களுக்கும் தரவேண்டியுள்ள 6% பஞ்சப்படி உயர்வை அளிக்க முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Sops for government employees likely Friday


உணவுப் பொருள் விலையேற்றம் தொடரும்: உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை

March 6th, 2008 பகுப்புகள்: இந்தியா, உலகம், பொருளாதாரம், வணிகம், விலைவாசி, விவசாயம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!உலகின் எண்ணை விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட அடிப்படை உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மேலும் இரண்டு வருடங்களுக்காவது தொடரக்கூடும் என்று உலக உணவுத் திட்டத்தின் தலைவி செல்வி ஜொசெட் ஷீரன் எச்சரித்திருக்கிறார்.

தாவரங்கள் மூலமான எரிபொருள் பற்றி பேரார்வம் காட்டிவரும் அரசுகள் இந்த ஆர்வம் பற்றி கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தாவரங்கள் மூலமான எரிபொருள் பெறும் நோக்கிலான இத்தாவர பயிர்ச் செய்கை அதிகரித்தலுக்கும் உலக உணவு விலை அதிகரிப்புக்கும் இடையினால தொடர்பையும் அரசாங்கங்கள் பக்குவமாக ஆராயவேண்டும் என்றும் செல்வி ஷீரன் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. U.N. sees more hunger, unrest over food inflation | World | Reuters

2. BBC NEWS | Special Reports | UN warns on food price inflation

3. An uptick in prices of food products puzzles consumers - livemint: Agflation, a term coined to mean inflation in agri goods, has ruled the globe since last year.


மத்திய அரசிடம் ரூ.15,500 கோடி திட்ட ஒதுக்கீடு கோருகிறது தமிழக அரசு

February 11th, 2008 பகுப்புகள்: அரசியல், சென்னை, தமிழ்நாடு, பட்ஜெட், பொருளாதாரம், விலைவாசி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

தமிழகத்துக்கு 2008-2009-ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடாக 15,500 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய திட்டக்குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆண்டு திட்ட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி புதுடெல்லி வருவதாக இருந்தது. உடல்நலக் குறைவு காரணமாக, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன், திங்கள்கிழமை புதுடெல்லியில் மத்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அஹ்லுவாலியாவுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் தலைமைச் செயலர் திரிபாதி, நிதித்துறைச் செயலர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டார்கள்.

முதல்வரின் சார்பில் அவரது உரையை, நிதியமைச்சர் அன்பழகன் வாசித்தார். இந்த நிதியாண்டுக்கு ரூ.15,500 கோடி ஒதுக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால், வளர்ச்சி விகிதத்தை நிலைநிறுத்த வேண்டுமானால், திட்ட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் முதல்வர் தனது உரையில் வலியுறுத்தியிருக்கிறார்.

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையி்ல், தமிழக அரசு ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கி வருகிறது. அதேபோல், சமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருகள் பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்படுவதால், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு அந்தப் பொருள்கள் கிடைக்கின்றன. இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று கருணாநிதி யோசனை தெரிவித்திருக்கிறார்.

ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் கேஸ் அடுப்புக்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வழங்கப்பட்டதைப் போன்று இந்தத் திட்டத்துக்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழகத்துக்குள் ஓடும் ஆறுகளை இணைக்கு்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்.

மத்திய அதிகாரிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அன்பழகன், தமிழகத்துக்கான ஆண்டு திட்ட ஒதுக்கீடு நாளை முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu News Update Service: “Karunanidhi cancels Delhi visit”

2. Plan panel, Tamil Nadu agree on Rs 16,000 cr outlay for 08-09 : Policy -Economy - News - The Economic Times


‘இயந்திரா’வில் ரஜனியுடன் ஐஸ்வர்யா

February 9th, 2008 பகுப்புகள்: திரையுலகம், விலைவாசி | தொகுப்பாளர்: மணியன் | 4 மறுமொழிகள் » |

aiswarya.jpg

ரோபோ ( தமிழில் இயந்திரா) படம் 130 கோடி செலவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாக்கப்படுகிறது. இதில் இரஜினி காந்துடன் நாயகியாக நடிக்க த்ரிசா,நயன் தாரா, ஸ்ரேயா என எதிர்பார்த்திருந்த வேளையில் இயக்குனர் சங்கர் இரஜினியின் நீண்டநாள் கனவான ஐஸ்வர்யா ராய் பச்சனை படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார். ஆனால் இதற்கான விலையாக இந்திய திரைப்பட வரலாற்றிலேயே அதிகபட்ச ஊதியமாக ஆறு கோடி ரூபாய் பேசியிருக்கிறார். ஐஸ்வர்யா இதுவரை இந்தி படங்களுக்கு இரண்டு கோடியும் ஹாலிவுட் படங்களுக்கு நான்கு கோடி ரூபாய்களும் ஊதியம் பெற்று வந்தார்.

Ash gets a lofty deal for Robot


எக்ஸான் - மோபில் நிறுவனம் நிகர லாபம் ஈட்டுவதில் சாதனை

February 1st, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, பொருளாதாரம், வணிகம், விலைவாசி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் இதுவரை ஈட்டாத அளவு நிகர லாபம் ஈட்டி எக்ஸான் - மோபில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனமான எக்ஸான் - மோபில் நிறுவனத்தின் நிகரலாபம் $40.6 பில்லியனைத் தொட்டுள்ளது.

பங்குச்சந்தைக்கு வழங்கியுள்ள எக்ஸான் - மோபிலின் இறுதி காலாண்டு அறிக்கையில், கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த 4ம் காலாண்டிற்கான நிகரலாபம் $11.7 பில்லியனாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டில் எந்த நிறுவனமும் இத்தகைய லாபத்தை இதுவரை ஈட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

முழு விவரங்களுக்கு:

1. Exxon sets fresh quarterly, annual profit records - Feb. 1, 2008

2. BBC NEWS | Business | Exxon Mobil reports record profit


வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி

January 29th, 2008 பகுப்புகள்: பொருளாதாரம், விலைவாசி | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

கடன்வழங்கும் வட்டி விகிதங்கள் கீழிறங்கும் என்ற சந்தை எதிர்ப்பார்ப்புகளைப் பொய்ப்பித்து, விலைவாசி ஏற்றத்தைக் கட்டுபடுத்துவதை முன்னிறுத்தி, ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட செலாவணி கொள்கையில் எந்த ஒரு பொருளாதார விகிதங்களிலும் மாற்றத்தை அறிவிக்கவில்லை. பொருளாதார வளர்ச்சி 8.5 % ஆக இருக்கும் என எதிர்பார்க்கிறது. விலைவாசியேற்றத்தை ஐந்து சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

RBI keeps key interest rates unchanged


லெபனானில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

January 25th, 2008 பகுப்புகள்: போக்குவரத்து, விலைவாசி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

லெபனானில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

 

லெபனானில் அதிகரித்து வரும் அத்திவாசியப் பொருட்கள் விலையேற்றத்தைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

http://www.gulfnews.com/region/Lebanon/10184411.html