வணிகம் | சற்றுமுன்...




வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி

July 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், உலகம், சவூதி, துபாய், பொருளாதாரம், வணிகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி

காப்பீட்டுத்துறையில் இந்தியாவில் முன்னணியில் விளங்கிவரும் அரசுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சமீப ஆண்டுகளாக வெளிநாடுகளில் வர்த்தகத்தை இழந்து வருகிறது.

வெளிநாடுகளில் எல்ஐசி-யின் ஆண்டு வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருவதிலிருந்தே இதை உணர முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் எல்ஐசியின் வெளிநாட்டு வர்த்தகம் 12 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.

2004-05ம் நிதி ஆண்டில் முதல் பிரீமியமாக வசூலான தொகை ரூ. 123.41 கோடி. இது அடுத்த ஆண்டு ரூ. 120.8 கோடியாகவும் கடந்த ஆண்டு 2007 மார்ச்சில் 108.67 கோடியாகவும் குறைந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவன போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் எல்ஐசி வருவாய் குறைந்து வருகிறது. மேலும் புதிய வாடிக்கையாளரை ஈர்ப்பதற்கு எல்ஐசி தவறிவிட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல தனிநபர் காப்பீட்டுத் திட்டங்களும் போதிய அளவுக்கு விற்பனையாகவில்லை. 2004-05-ம் ஆண்டில் பஹ்ரைனில் தனிநபர் பாலிசி விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும் பழைய பாலிசிகளை புதுப்பிப்பது உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. முதல் பிரீமியம் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எல்ஐசி. ஆசிய நாடுகளில் கிளைகளைத் தொடங்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் எல்ஐசி ஈடுபட்டுள்ளது.

இது தவிர, சவூதி அரேபியாவில் வர்த்தகத்தை மேம்படுத்த சவூதி இந்திய கூட்டுறவு நிறுவனத்துடன் கூட்டு வணிகம் செய்ய திட்டமிட்டு அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளது எல்ஐசி. தற்போது எல்ஐசி நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஏமன், நேபாளம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் எல்ஐசி நிறுவனத்துக்கு 2007-08-ம் நிதி ஆண்டில் முதல் பிரீமியமாக வசூலான தொகை ரூ. 59,182 கோடி.
 
 


பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மத்திய அமைச்சர் அறிவிப்பு

June 4th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சமூகம், தகவல், பொருளாதாரம், பொருளாதாரம், மத்திய அரசியல், வணிகம் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இன்று தெரிவித்தார்.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தல் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. இந்த விலை உயர்வுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.

எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் ரூ. 2.2 லட்சம் கோடியைத் தாண்டியது. என அரசு அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் விலையேற்றத்தின் காரணமாக இந்த விலை உயர்வு என்ற காரணம் சொன்னாலும் நமது நாட்டில் உற்பத்தி செய்து விற்கப்படும் பெட்ரோலுக்கும் இந்த விலை உயர்வு அமல் செய்யப்படுகிறது என்பதும் உண்மை.

எண்ணை விலையேற்றம் இதனால் நட்டம் என காரணம் காட்டினாலும் இறுதியில் இந்த எண்ணை நிறுவன்ங்கள் பலகோடி இலாபக்கணக்கையே கடந்த காலங்களில் காட்டியுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் எட்டு சதவிகிதத்தை எட்டிவிட்ட்தாக மத்திய அரசே ஒப்புக்கொண்டாலும் உண்மையில் பணவீக்க விகிதம் இதைவிட அதிகமாகவே உள்ளது. என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இந்த பெட்ரோல் உயர்வு மேலும் விலையேற்றத்திற்கு காரணமாக பணவீக்க விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால சாதாரண மக்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.


குடியரசுத் தலைவரின் வெளிநாட்டுப் பயணம்

April 12th, 2008 பகுப்புகள்: அறிவிப்பு, வணிகம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை லாத்தின் அமெரிக்க நாடுகளான பிரேசில்,மெக்சிகோ,சிலி நாடுகளில் துவக்குகிறார். தனது 12 நாள் பயணத்தின்போது பிரெசில் நாட்டு அதிபர் லூயி இனாசியோ லூலா டசில்வா, மெக்சிகன் அதிபர் பிலிப் டெ ஜெசஸ் கால்ட் ரான் ஹினோயோசா மற்றும் சிலியின் அதிபர் மிஷேல் பாஷ்லே ஆகியோரை சந்திப்பார். தனது போகும் வழியில் லிஸ்பனிலும் திரும்பும் வழியில் கேப் டௌனிலும் சற்று இளைப்பாறிச் செல்வார்.

அவரது பயண மேல் விவரங்களுக்கு...


அஞ்சலக சேவை ஒரு குடும்பமாக செயல்படவேண்டும்: தகவல் தொடர்பு இணை அமைச்சர்

April 9th, 2008 பகுப்புகள்: தகவல், தகவல் தொழில்நுட்பம், வணிகம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

புதிதாக பதவியேற்றிருக்கும் தகவல் மற்றும் தொலைதொடர்பு இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மின்னஞ்சல்கள் தனித்தன்மையின்றி விளங்குகின்ற மற்றும் தனியார் அஞ்சல்தூதர் சேவைகள் கைக்கு எட்டாத விலையில் இயங்குகின்ற வேளையில் அரசு அஞ்சல்துறை மக்களிடம் ஒரு தனித்தன்மையுடன் ஒன்றிணைந்து சேவை வழங்க தாம் முயலப்போவதாக கூறினார். தன்னுடைய தந்தை, மாதவ்ராவ் சிந்தியா, தொடர்வண்டி அமைச்சகத்தில் கொண்டுவந்த மாறுதல்களைப்போல தானும் அஞ்சல்துறையை நடத்தவிருப்பதாகக் கூறினார். குவாலியர் அரச பரம்பரையச் சேர்ந்த சிந்தியா தனது பதவியேற்பிற்குப் பின் நடத்திய ஊடக சந்திப்பில் அஞ்சல்துறை தற்போது 1250 கோடி நட்டத்தில் இயங்கி வருகிறது, மக்கள் தொடர்பிற்கும் பணபட்டுவாடா தேவைகளுக்கும் ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறது என்று கூறினார். செஞ்சுரியன் வங்கியின் துணையுடன் அந்நிய செலாவணி மாற்றிற்கும் வகை செய்கிறது.நாட்டிலுள்ள 1,55,000 அஞ்சலகங்கள் மூலம், மற்ற வங்கிகளுடன் இணைந்து, கிராமப்புறங்களில் வீட்டு கடன்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

இந்திய தகவல் தொழிற்நுட்பதுறை பற்றி கூறும்போது உலகின் மென்பொருள் நிரலாளர்களாகவும் திரைமறைவு பணியாளர்களாகவும் இருப்பதிலிருந்து அறிவுசார் உரிம வாய்ப்புள்ள மென்பொருள் பொருளாக்கத்திற்கு முன்னேறவேண்டும் என்றார். மேலும் வன்பொருள் உற்பத்தியிலும் அதிக விலையுள்ள தளத்திற்கு செல்ல வேண்டும் என்றார்.

Postal services should be run like a family: Scindia


போபால் விஷவாயுக் கசிவு: பாதிக்கப்பட்டவர்கள் தில்லியில் போராட்டம்

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, உடல்நலம், குழந்தைகள், சட்டம் - நீதி, சுகாதாரம், தொழில், பொருளாதாரம், போராட்டம், மரணம், வணிகம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் போபால் நகரில் கடந்த 1984ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், 24 ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று போராடிவருகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் இருந்து தலைநகர் புதுடெல்லிக்கு 800 கி.மீ. பாதயாத்திரை நடத்தி, இவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

ஆனால் அப்போது பிரதமர் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லி வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. AFP: Bhopal tragedy survivors reach Delhi after 37-day protest march

2. Tehelka - India's Independent Weekly News Magazine: “Timeline: The Toxic Trail”

3. Indians Pressure Dow on Bhopal Cleanup - washingtonpost.com


4 விவசாயிகள் தற்கொலை

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, தற்கொலை, தொழில், பொருளாதாரம், மரணம், வணிகம், விலைவாசி, விவசாயம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மகாராஷ்டிரம், விதர்பா பகுதியில் கடன்தொல்லை காரணமாக 2 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். மழையால் பயிர்கள் நாசமானதால் கேரள விவசாயி ஒருவரும், ஆந்திர விவசாயி ஒருவரும் தற்கொலை செய்துக் கொண்டனர்.

நந்துரா பிங்லே கிராமத்தைச் சேர்ந்த கோட்டே (30), பாட்குலி கிராமத்தைச் சேர்ந்த தேஷ்முக் (32) ஆகியோர் உள்ளூர் வங்கியில் கடன் பெற்றிருந்தனர். இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கேரளத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாயின. இதில் பாதிக்கப்பட்ட ஆலப்புழை மாவட்ட விவசாயி புஸ்கரன் என்பவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டார். இதே பிரச்னை காரணமாக ஆந்திரத்தின் கிருஷ்ணா மாவட்ட விவசாயி அச்சுதராமையா என்பவரும் தற்கொலை செய்துக் கொண்டார்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. 74 farmers suicides in Vidarbha after Chidambaram's farm loan waiver

2. » 14 farm suicides in three days in Vidarbha

3. The Telegraph - Calcutta (Kolkata) | Nation | Waiver can’t stop Vidarbha suicides


மேற்குலக நாடுகள் தாவரத்திலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கு இந்தியா கண்டனம்

March 26th, 2008 பகுப்புகள்: இயற்கை, பொருளாதாரம், வணிகம், விலைவாசி, விவசாயம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

உலக அளவில் உணவின் விலைகள் ஏறிக்கொண்டே இருப்பதை சமாளிக்க முடியாமல், உலகின் வறியவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அமெரிக்க போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகள் தானியங்களை முலமாகக் கொண்டு எரிபொருள் தயாரிக்கும் திட்டங்களில் ஈடுபடுவது ஆத்திரமூட்டுவதாக இருக்கிறது என்று இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அமைச்சர் சிதம்பரம் அவர்கள் இதைத் தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விஷயங்களை அடிப்படையாக் கொண்டுதான், மேற்குலக நாடுகள் தாவர மூலமான எரிபொருளைத் தயாரிப்பதில் தமது ஆர்வத்தை அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

நியாமான விலையில், உணவுப் பொருட்களை வாங்குவதற்கு, உலக ஜனத்தொகையில், பெரும் பங்கு மிகவும் கஷ்டப்பட்டுவர, மலிவான எரிபொருள் கிடைப்பதற்காக சோளம் போன்ற தானியங்களை எரிபொருளாக மாற்றுவது கண்டிக்கப்பட வேண்டியது என்றும் அமைச்சர் சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Expensive oil, food places huge burden on developing countries, Indian finance minister says - International Herald Tribune

2. AFP: Diverting food products to make biofuels is foolish: Indian finance chief

3. PIB Press Release: “The text of the speech of Finance Minister, Shri P. Chidambaram delivered at the Lee Kuan Yew School of Public Policy in Singapore”


பெட்ரோல் நிலையங்களை மூடுகிறது ரிலையன்ஸ்

March 25th, 2008 பகுப்புகள்: தொழில், பொருளாதாரம், வணிகம், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தி வரும் 1,400 பெட்ரோல் நிலையங்களை ஏப்ரல் இறுதியில் மூடிவிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனால் 55 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், ரிலையன்ஸை விட குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பதால் போட்டியை சமாளிக்க முடியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சுற்றறிக்கை அனைத்து ரிலையன்ஸ் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu Business Line : Reliance Ind to shut down 900 fuel retail outlets

2. Petrol pumps closure to benefit RIL: Experts- Oil & Gas - Energy - News By Industry - News - The Economic Times

3. The Telegraph - Calcutta (Kolkata) | Business | Oil retail rules under strain


தமிழகத்தில் மழை : பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

March 25th, 2008 பகுப்புகள்: இயற்கை, பொருளாதாரம், மரணம், வணிகம், வானிலை, விவசாயம், வெள்ளம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மழைக்