பொருளாதாரம் | சற்றுமுன்...




வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி

July 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், உலகம், சவூதி, துபாய், பொருளாதாரம், வணிகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வெளிநாட்டில் பொலிவிழந்து வரும் எல்ஐசி

காப்பீட்டுத்துறையில் இந்தியாவில் முன்னணியில் விளங்கிவரும் அரசுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சமீப ஆண்டுகளாக வெளிநாடுகளில் வர்த்தகத்தை இழந்து வருகிறது.

வெளிநாடுகளில் எல்ஐசி-யின் ஆண்டு வர்த்தகம் தொடர்ந்து குறைந்து வருவதிலிருந்தே இதை உணர முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் எல்ஐசியின் வெளிநாட்டு வர்த்தகம் 12 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.

2004-05ம் நிதி ஆண்டில் முதல் பிரீமியமாக வசூலான தொகை ரூ. 123.41 கோடி. இது அடுத்த ஆண்டு ரூ. 120.8 கோடியாகவும் கடந்த ஆண்டு 2007 மார்ச்சில் 108.67 கோடியாகவும் குறைந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவன போட்டிகளைச் சமாளிக்கத் தவறியதால் எல்ஐசி வருவாய் குறைந்து வருகிறது. மேலும் புதிய வாடிக்கையாளரை ஈர்ப்பதற்கு எல்ஐசி தவறிவிட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல தனிநபர் காப்பீட்டுத் திட்டங்களும் போதிய அளவுக்கு விற்பனையாகவில்லை. 2004-05-ம் ஆண்டில் பஹ்ரைனில் தனிநபர் பாலிசி விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும் பழைய பாலிசிகளை புதுப்பிப்பது உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. முதல் பிரீமியம் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எல்ஐசி. ஆசிய நாடுகளில் கிளைகளைத் தொடங்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் எல்ஐசி ஈடுபட்டுள்ளது.

இது தவிர, சவூதி அரேபியாவில் வர்த்தகத்தை மேம்படுத்த சவூதி இந்திய கூட்டுறவு நிறுவனத்துடன் கூட்டு வணிகம் செய்ய திட்டமிட்டு அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளது எல்ஐசி. தற்போது எல்ஐசி நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஏமன், நேபாளம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் எல்ஐசி நிறுவனத்துக்கு 2007-08-ம் நிதி ஆண்டில் முதல் பிரீமியமாக வசூலான தொகை ரூ. 59,182 கோடி.
 
 


பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மத்திய அமைச்சர் அறிவிப்பு

June 4th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சமூகம், தகவல், பொருளாதாரம், பொருளாதாரம், மத்திய அரசியல், வணிகம் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இன்று தெரிவித்தார்.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தல் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. இந்த விலை உயர்வுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.

எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் ரூ. 2.2 லட்சம் கோடியைத் தாண்டியது. என அரசு அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் விலையேற்றத்தின் காரணமாக இந்த விலை உயர்வு என்ற காரணம் சொன்னாலும் நமது நாட்டில் உற்பத்தி செய்து விற்கப்படும் பெட்ரோலுக்கும் இந்த விலை உயர்வு அமல் செய்யப்படுகிறது என்பதும் உண்மை.

எண்ணை விலையேற்றம் இதனால் நட்டம் என காரணம் காட்டினாலும் இறுதியில் இந்த எண்ணை நிறுவன்ங்கள் பலகோடி இலாபக்கணக்கையே கடந்த காலங்களில் காட்டியுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் எட்டு சதவிகிதத்தை எட்டிவிட்ட்தாக மத்திய அரசே ஒப்புக்கொண்டாலும் உண்மையில் பணவீக்க விகிதம் இதைவிட அதிகமாகவே உள்ளது. என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இந்த பெட்ரோல் உயர்வு மேலும் விலையேற்றத்திற்கு காரணமாக பணவீக்க விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால சாதாரண மக்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.


மகாத்மாவிற்கும் மன்மோகனுக்கும் இடையே பாலம் அமைக்கிறேன்: மணிசங்கர அய்யர்

March 13th, 2008 பகுப்புகள்: பொருளாதாரம், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

அனைவருக்குமான முன்னேற்றம் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியாலேயே அமையும். இந்தியா முன்னேறுகிறது என்பதிலிருந்து இந்தியர்கள் முன்னேறுகிறார்கள் என்ற நிலையை அடைய பஞ்சாயத்து ராஜ் வெற்றியடைய வேண்டியது இன்றியமையாதது மணிசங்கர் அய்யர்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர அய்யர் நாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்தும் பஞ்சாயத்து தலைவர்களின் மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறார். பஞ்சாயத்து ராஜ் பிரகடனத்தின் பதினைந்தாவது வருடவிழாவை யொட்டி பெண்கள்,பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் அடங்கிய ஆயிரம் பஞ்சாயத்து தலைவர்கலை எல்லா மாநிலங்களும் பங்குபெறுமாறு அழைக்கப்படுவர். மன்மோகன்சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் மகாத்மா விரும்பிய கிராம பஞ்சாயத்துக்களை உடனடக்கிய நிர்வாக சீர்திருத்தங்களுக்கும் இதன்மூலம் ஒருங்கிணைக்க தாம் பாலமாக அமையப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியொன்றில் “அனைவருக்குமான முன்னேற்றம் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியாலேயே அமையும். இந்தியா முன்னேறுகிறது என்பதிலிருந்து இந்தியர்கள் முன்னேறுகிறார்கள் என்ற நிலையை அடைய பஞ்சாயத்து ராஜ் வெற்றியடைய வேண்டியது இன்றியமையாதது” என்றார். வியாழனன்று கூடும் இரண்டுநாள் சந்திப்பில் நிர்வாகசீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வரைவுசாசனம் ஒன்று தயாரிக்கப்படும்,இது அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அனுப்பப்பட்டு அவர்களது மேம்படுத்தல்களை கருத்தில் கொண்டு ஏப்ரல் 22-24 நாட்களில் நடக்கவிருக்கும் மாநாட்டில் இறுதியாக்கப்படும். விடைபெறும் நாளில் முடிவான சாசனம் சோனியாகாந்தியிடம் சமர்ப்பிக்கப்படும்.

I’ll bridge the gap between Manmohan and Mahatma, says Aiyar


பட்ஜெட் 2008..விவசாயக் கடன்கள் தள்ளிவைப்பு…

February 29th, 2008 பகுப்புகள்: நாடாளுமன்றம், பட்ஜெட், பொருளாதாரம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

இன்று பதினொரு மணிக்கு துவங்கிய வரவுசெலவுக்கணக்கிற்கான வரைவு இன்னும் PC.jpgதொடர்கின்றநிலையில் சில ஹைலைட்ஸ்:

திட்டங்கள்: 

-பாரத் நிர்மாண் என்னும் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.31,280 கோடி அனுமதிப்பு…உலகின் மிகப் பெரிய மதிய உணவுத் திட்டம்
-கல்விக்கான செலவு 20% அதிகரிப்பு
-16 மத்திய பல்கலைகளும் மூன்று IITக்களும் அமைக்கப்படும்.
-விஞ்ஞான கல்விக்கான உதவித்தொகைக்கு வயது வரம்பு உயர்வு
-தேசிய அறிவு இணையம் (National Knowledge Network) அமைக்க ரூ100 கோடி
-வறுமைக்கோட்டின் கீழுள்ள தொழிலாளர்களின் உடல்நலனுக்காக ராஷ்டிரிய ஸ்வாஸ்த்ய பீமா யோஜனா
-மொத்த திட்டப்பணிக்கான வரைவு 2இலக்கத்து நாற்பதினாயிரம்
-31.3.2007க்கு முந்தைய அனைத்து விவசாயக்கடன்களும் தள்ளுபடி
-சிறு விவசாயிகள் (1-2 ஹெக்டர் சொந்தக்காரர்கள்)பயன்பெறுவர்
-ஜூன்2008க்குள் ரூ60,000 கோடி பெறுமான இந்தக் கடன்கள் அடைக்கப்பட்டுவிடும்.
-4 கோடி விவசாயிகள் பயன்பெறுவர்
-பாதுகாப்பு செலவு ரூ1,05,600 கோடி
-காமன்வெல்த் விளையாட்டை நடத்திட ரூ624 கோடி
-வருமான துண்டு 1.4% ..எதிர்பார்த்தது 1.5%

வரிகள்
-விளையாட்டு சாதனக்களுக்கு சுங்கவரி 7.5%இலிருந்து 5%ஆகக் குறைப்பு
-ஸ்டீல் மெல்டிங் ஸ்க்ராப்,அலுமினியம் ஸ்க்ராப் சுங்கவரி குறைப்பு
-செட் டாப் பாக்ஸ் ..முழு சுங்கவரிவிலக்கு
-கன்வெர்ஜென்ஸ் (தொலைதொடர்பு,தொலைக்காட்சி,கணினி) பொருட்களுக்கு சுங்கவரி 5%
-எய்ட்ஸ் எதிர்ப்பு மருந்துகளுக்கு கலால்வரி குறைப்பு
-சிறுகார்களுக்கு கலால்வரி 14%
-கம்பியில்லா தரவுஅட்டைகளுக்கு (Wireless data card) கலால்வரி குறைப்பு
-பில்டரில்லா சிகரெட் விலை உயர்வு
-தனிநபர்வருமானவரி விலக்கு ரூ1.1 இலக்கத்திலிருந்து 1.5இலக்கமாக உயர்வு
 -பெண்களூக்கான வரம்பு 1.45L இலிருந்து 1.8Lஆக உயர்வு
-நிறுவன வருமானவரி விகிதங்களில் மாற்றம் இல்லை
-முதிய குடிமக்களுக்கு வரிவிலக்கு வரம்பு 2.25 இலக்கம்
-GDPக்க்கும் வரிகளுக்கும் உள்ள விகிதம் 9.2%
-commodities transaction tax அறிமுகம்
-குறைந்தகால முதல்உயர்வு வரி (Short term Capital Gains Tax) அதிகரிப்பு..15%
-வங்கி டிரான்ஸாக்சன் வரி நீக்கம்
-வரி மாற்றங்களால் வருமான பாதிப்பு இல்லை

அமைச்சரின் பட்ஜெட் வாசிப்பிற்குப் பிறகு அவை மார்ச் 3 வரை தள்ளிவைக்கப்பட்டது.


வருடந்தோறும் 10 லட்ச மக்களை கொள்ளும் அரக்கன்

February 20th, 2008 பகுப்புகள்: உடல்நலம், பொருளாதாரம், மரணம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் மக்கள் புகையிலை என்னும் அரக்கனுக்கு அடிமைபட்டு பலியாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புகையிலை எந்த வடிவில் பயன் படுத்தினாலும் அது பயன்படுத்துவோரின் உயிருக்கு அபத்தாக முடியும். 10ல் ஒரு பகுதி ஆண்களின் மரணத்திற்கு புகை பிடிப்பது முக்கிய காரணமாக இருப்பதாக அய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைபிடிப்பதால் மரணமடையும் 10 லட்சம் மக்களில் 70 சதவீதம் பேர் இளவயதிலேயே மரணத்தை தழுவு கிறார்கள் ஊனவும் இந்த அதிர்ச்சி செய்தி குறிப்பிடுகிறது.

யார் சிகரெட்டை தொடர்ந்து பயன் படுத்துகிறார்களோ அவர்கள் தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள். பீடி புகைக்கும் ஆண்கள் 6 ஆண்டுகளை தங்கள் வாழ்நாளில் இழக்கிறார்கள். பீடி புகைக்கும் பெண்கள் தங்கள் வாழ்நாளில் 8 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள் எனவும் அந்த அதிர்ச்சி செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் மரணத்தை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பான A Nationally Representative Care - Control - Study of Smoking and Death in India வும் பிரிட்டனிலிருந்து வெளியாகும் The New England Journal of Medicine  பத்திரிக்கையும் இணைந்து அந்த ஆய்வினை மேற்கொண்டன.
பொதுவாக ஆண்களில் இறப்பு விகிதத்தை கணக்கெடுக்கும்போது 30 முதல் 69 வயது வரை மரணம் அடைபவர்களில் கணிசமானோர் புகை பிடிப்பவர்கள்தான் எனவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2010அம் ஆண்டில் இந்தியாவில் நிகழும் 10 இறப்புகளில் ஒன்று புகைப் பிடிப்பதால் நிகழும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்தியாவில் 60 கோடி மக்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் அவர். நமது இளைய தலைமுறையை புகையிலை அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டி யுள்ளது,அதற்கென சட்டங்களை வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

புகையிலையை அதிகமாகப் பயன் படுத்தி மரணமடைபவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கல்வியறிவு பெறாதவர்களாகவும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புகை பிடிக்கும் தீய பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் வெறும் இரண்டு சதவீதம் தான். அனால், சீனாவில் 9 சதவீதத்தினர் தங்களை புகை பிடிப்பதிலிருந்து மீட்டுக் கொண் டுள்ளனர்.

பிரிட்டனில் புகை பிடிப்பவர்களில் 40 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்துள்ளனர். இது 20 அண்டு காலத்தில் நிகழ்ந்த மாற்றமாகும். 2003ல் ஜெனிவாவில் கூடிய மாநாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தங்கள் நாடுகளில் பின்பற்றப்போவதாக 183 நாடுகள் அறிவித்திருக்கின்றன.

நன்றி: தமுமுக இணையம்


பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது

February 14th, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, பொருளாதாரம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

 

ஆனால் பல முறை மத்திய அமைச்சரவை இதுபற்றி விவாதித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்ப்படாமல் இருந்து வந்தது. இன்று கூடிய மத்திய அமைச்சரவை குழு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை உறுதி செய்து அறிவித்தது.இது இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசலுக்கு ஒரு ரூபாயும் உயரும் என தகவலரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


எக்ஸான் - மோபில் நிறுவனம் நிகர லாபம் ஈட்டுவதில் சாதனை

February 1st, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, பொருளாதாரம், வணிகம், விலைவாசி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் இதுவரை ஈட்டாத அளவு நிகர லாபம் ஈட்டி எக்ஸான் - மோபில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனமான எக்ஸான் - மோபில் நிறுவனத்தின் நிகரலாபம் $40.6 பில்லியனைத் தொட்டுள்ளது.

பங்குச்சந்தைக்கு வழங்கியுள்ள எக்ஸான் - மோபிலின் இறுதி காலாண்டு அறிக்கையில், கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த 4ம் காலாண்டிற்கான நிகரலாபம் $11.7 பில்லியனாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டில் எந்த நிறுவனமும் இத்தகைய லாபத்தை இதுவரை ஈட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

முழு விவரங்களுக்கு:

1. Exxon sets fresh quarterly, annual profit records - Feb. 1, 2008

2. BBC NEWS | Business | Exxon Mobil reports record profit


சிறுபான்மையினர் கல்வி உதவி தொகைபெற பிப் 10ம் தேதி கடைசி நாள்

January 29th, 2008 பகுப்புகள்: கல்வி, சட்டம் - நீதி, தமிழ்நாடு, பொருளாதாரம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

பதினோராம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மை (முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் மற்றும் புத்த மதத்தினர்) மாணவ, மாணவிகளுக்கு 2007-08 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பற்றிய விவரங்கள் www.minorityaffairs.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்பவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உதவித்தொகை பெற தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை இணைய தள முகவரியில் பெற்றுக் கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களிடம் அளிக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் உதவித் தொகைக்குரிய படிவத்தை பூர்த்தி செய்து பிப். 10-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மூவலூர் ராமாமிர்தம் அம