43 வருடங்களுக்குப் பிறகு கொல்கொத்தாவிற்கும் பங்களாதேச தலைநகர் தாக்காவிற்கும் இடையேயான தொடர்வண்டி சேவைகள் இன்று துவங்கியது; இரு நகரங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் ‘மைத்ரி எக்ஸ்பிரஸ்’ –நட்பு விரைவுவண்டி– தனது பயணத்தை இரு அண்டைநாடுகளுக்கும் இடையேயான நட்பை வலுப்படுத்துமாறு துவங்கியது.
ஆறு பெட்டிகள் கொண்ட தொடர்வண்டி அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது; இன்று காலை 0710 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி தூரத்திலிருந்தே புறப்பட சமிக்ஞை கொடுக்க வங்காள புதுவருட தினமான முதல் பைசாகி நாளில் தனது 15 மணி பயணத்தை ஆரம்பித்தது. அதே நேரம் தாக்காவின் கண்டோன்மெண்ட் நிலையத்திலிருந்து கொல்கொத்தாவை நோக்கி அவர்களது தொடர்வண்டியை பயணிகளுக்கு பூக்கொத்துகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
1965 இல் பங்களாதேஷ் சண்டையின் போது இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 1996இல் இரு நகரங்களுக்கும் இடையே பேருந்து சேவை துவக்கப்பட்டது.
538 கிமீ தூரத்தில் 120 கி.மீ தூரம் இந்தியாவில் உள்ளது; மற்றவை பங்களாதேச பரப்பில் உள்ளது.
Kol-Dhaka train services resume after 43 yrs