தடகளம் | சற்றுமுன்...




விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம்

August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தடகளம், விளையாட்டு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம்
அமைச்சர் மைதீன்கான் பேச்சு

தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த மக்கள் பங்களிப்பும் அவசியம் தேவை என்று கோவையில் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற செயற்கை இழை ஓடுதள தொடக்க விழாவில் அமைச்சர் மைதீன்கான் பேசினார்.

கோவை நேரு விளையாட்டரங்கில் ரூ.21/2 கோடி மதிப்பில் 400 மீட்டர் செயற்கை இழை ஓடுதளம் (சிந்தடிக் டிராக்) அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று காலை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.

தமிழக சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் கலந்துகொண்டு புதிய ஓடுதளத்தையும், புல்வெளி கால்பந்து மைதானத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

மக்கள் பங்களிப்பு அவசியம்

1972-ம் ஆண்டு முதல்-அமைச்சராக கருணாநிதி பொறுப்பில் இருந்தபோது கோவையில் நேரு விளையாட்டரங்கம் தொடங்கப்பட்டது. அதற்கு பிறகுதான் சென்னையில் நேரு விளையாட்டரங்கம் தொடங்கப்பட்டது. பார்வையாளர்கள் அமர்ந்து காணக்கூடிய அளவில் முழு காலரியுடன் அமைக்கப்பட்ட முதல் விளையாட்டரங்கம் என்ற பெருமையை கோவை நேரு விளையாட்டரங்கம் பெற்றது.

விளையாட்டு துறைக்கு இந்த ஆட்சியில் அதிக நிதி தரப்படுகிறது. அரசு என்னதான் நிதி கொடுத்தாலும் மக்கள் பங்களிப்பு என்பது மிகவும் அவசியம். அப்போதுதான் விளையாட்டு துறையை சிறப்பாக செயல்படுத்த முடியும். விளையாட்டு துறைக்காக தனது தொகுதி நிதியை தருவதாக இங்கு அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. மக்கள் பிரதிநிதிகள், ஆர்வலர்கள், விளையாட்டு சங்கத்தினர் ஆர்வம் இருந்தால்தான் தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களை சிறந்த வீரர்களாக மாற்ற முடியும்.

நீச்சல் குளம்

தி.மு.க அரசு விளையாட்டு துறை மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 10 மாவட்டங்களில் நீச்சல் குளம் இருந்தது. இந்த ஆண்டு 75 லட்சத்தில் விழுப்புரத்தில் பணி நடந்து வருகிறது. விளையாட்டு துறை சார்பில் விளையாட்டரங்கம் மற்றும் நீச்சல் குளம் ஏற்படுத்த அரசு தயாராக இருக்கிறது. ஆனால் அதற்குரிய இடம் மாநகராட்சியிலோ, உள்ளாட்சி அமைப்புகளிலேயே இருக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்தவும், தேவையான வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் பேச உள்ளோம்.

இதுபோன்ற செயற்கை ஓடுதளம் அமைக்க 3 கோடி ஆகிறது. இதேபோல் மதுரை மற்றும் சென்னையில் செயற்கை ஓடுதளம் இருக்கிறது. இதன் உழைப்பு 6 அல்லது 7 ஆண்டுகள் மட்டும் வரும் என்கிறார்கள். இந்த ஆண்டு திருச்சியில் ஆக்கி மைதானம் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் ரூ.3 கோடியே 10 லட்சத்தில் விளையாட்டு வீரர்கள் விடுதி கட்டப்படுகிறது.

மினி ஸ்டேடியம்

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மினி ஸ்டேடியம் அமைக்க 15 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு 5 இடங்களில் பணிகள் முடிந்தது. அதேபோல் கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டு தேர்வு செய்யப்பட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் கோவை சூலூரில் பயிற்சி வழங்க ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடலோர மீனவர்களின் குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி, களைக்கூத்தாடிகளின் குழந்தைகளுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் சிறப்பு எது என்று பார்த்தால் தற்போது ஒலிம்பிக் விளையாட்டுகளில் எந்த நாடு அதிக பதக்கம் வென்றது என்றுதான் பார்க்கிறார்கள். அந்த வகையில் சிறந்த வீரர்களை உருவாக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம். ஒலிம்பிக் மற்றும் பிற விளையாட்டுகளில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.3 கோடியே 15 லட்சம் ஊக்க தொகை வழங்கி வருகிறோம். வலுவான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையோடு சத்துணவில் தற்போது 3 முட்டை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் கூறினார்.

விழாவில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

உள்விளையாட்டரங்கம்

ஒலிம்பிக்கில் அதிகம் பதக்கம் பெறும் நாடுதான் வலிமையான நாடு என்கிறார்கள். அந்த வகையில் அமெரிக்கா, சீனா, பிரான்சு உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட நம் நாட்டவர்கள் அதிக பதக்கம் பெறமுடியவில்லை. ஆனால் மக்கள் தொகை குறைந்த நாடுகளில்கூட வீரர்கள் அதிக பதக்கம் குவிக்கிறார்கள்.

கோவையில் ஒரு உள்விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க அரசு ரூ.5 கோடி ஒதுக்கியது. ஆனால் அப்போது இருந்த மேயர் கோவையில் இடம் இல்லை என்று கூறிவிட்டார். அந்த நிதி தற்போது செலவு செய்யப்பட்டு இருக்கலாம். அதனால் விளையாட்டு துறை அமைச்சர் தற்போது ரூ.10 கோடி ஒதுக்கித்தந்து உள்விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும். சாயிபாபா காலனியில் குப்பை கிடங்கு பகுதியில் பள்ளிக்கூடம் வருகிறது என்கிறார்கள்.

அந்த பள்ளிக்கூடத்தின் அருகில் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். மேலும் சர்வதேச தரத்துடன் கூடிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க வேண்டும். கோவையில் உள்விளையாட்டரங்கம் அமைப்பதற்காக எனது தொகுதி நிதியில் இருந்து ரூ.3 கோடியை ஒதுக்கி தர தயாராக உள்ளேன். இன்னொரு தொண்டு நிறுவனம் 2 கோடி ஒதுக்குவதாக கூறி உள்ளது. அரசு அங்கு உள்விளையாட்டரங்கம் அமைக்குமானால் கோவையில் உள்ள வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்குபெறுவதற்கான பயிற்சிகள் அளிக்க ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறினார்.

கலந்துகொண்டோர்

விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ம.ரா.மோகன் திட்ட விளக்க உரையாற்றினார். மாநகராட்சி ஆணையாளர் வி.கே.சண்முகம், மேயர் வெங்கடாசலம், சர்வதேச கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், துணை மேயர் நா.கார்த்திக், மண்டல தலைவர் பைந்தமிழ்பாரி, மாவட்ட தலைவர் சி.ஆர்.ராமச்சந்திரன், வெ.ந.உதயகுமார், நாச்சிமுத்து, முன்னாள் எம்.பி.க.ரா.சுப்பையன், கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ், தமிழ்செல்வி, அசோக்குமார், ராஜேந்திரபிரபு, யமுனாதேவி, மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உமாபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகளை செய்திமக்கள் தொடர்பு உதவி அலுவலர் தமிழ்மொழி அமுது தொகுத்து வழங்கினார். முடிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் மேரி ராஜாத்தி நன்றி கூறினார்.

 

 


ஒலிம்பிக் போட்டி: முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்களின் பங்கு

August 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தடகளம், விளையாட்டு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஒலிம்பிக் போட்டி: முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்களின் பங்கு

சீன நாட்டின் தலைநகரமான பீஜிங்கில் இன்று இரவு 29வது ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக தொடங்குகிறது. இந்தியா சார்பில் இதில் 56 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். முதல் நாள் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கு பெறும் போட்டிகள் விவரம் வருமாறு:-

பேட்மிட்டன்:-
அரூப் ஸ்ரீதர்-மார்கோ வாஸ்கோன் செலஸ்(போர்ச்சுக்கல்)
சானியா நெய்வால் தில் கரசோவா(ரஷ்யா)
குத்துச்சண்டை:-
விஜேந்தர்(75கிலோ),தினேஷ்குமார்(81கிலோ)
சூட்டிங்:-ஆரம்ப சுற்று
மன்விஜித் சந்து,மன்சர் சிங்(டிராப்)
சமரேஸ் சங்(ஏர்பிஸ்டல் 10மீட்டர்)
வினித் கவு சிது(பெண்கள் ஏர்ரைபிள் 10 மீட்டர்)
நீச்சல்:- சந்தீப் சஜ்வர் (100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்)
படகு போட்டி:-
ஜோல்(ஹெவி வெயிட் முதல் சுற்று)
ரோவிங்:-
பஜ்ரங் தாகூர்(ஒற்றையர் பிரிவு)
தேவேந்தர் சந்த்லால் மஞ்சித் சிங்(இரட்டையர் பிரிவு)
குமுஜம் தொம்பி தேவி(48 கிலோ)
 


இலங்கை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 12 பேர் பலி

April 7th, 2008 பகுப்புகள்: அரசியல், ஈழம் - இலங்கை, குண்டுவெடிப்பு, கொலை, தடகளம், மரணம், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையின் மேல்-மாகாணத்திலுள்ள கம்பஹா மாவட்டத்தில் ஞாயிறு காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலொன்றில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே உட்பட சுமார் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஞாயிறு காலை கம்பஹா மாவட்டத்தில் வலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் புத்தாண்டையொட்டிய மராதான் ஓட்டப்போட்டியொன்றில் பிரதான விருந்திரனாக கலந்துகொண்டிருந்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே, அந்த ஓட்டப் போட்டியினை தொடக்கிவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது.

இதில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயுடன்,

  • இலங்கையின் முன்னாள் தடகளவீரரும், தெற்காசிய மராதான் ஓட்டப் போட்டியில் தங்கப்பதங்கம் வென்றிருந்தவருமான கே.எஸ் கருணாரட்ண மற்றும்
  • தேசிய தடகளப் பயிற்றுவிப்பாளருமான லக்ஸ்மன் டீ அல்விஸ்

உட்பட சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 90க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரியான எஸ்.எஸ்.பி. ஹெக்டர் தர்மசிறி உட்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கம்பஹா, மற்றும் ராகம தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் மிகவும் மோசமான நிலையிலிருந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளூர் தொலைக்காட்சிகளில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும், அதன் பின்னர் மராதான் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையும் விசேட செய்தி அறிவித்தல்களின்போது காண்பிக்கப்பட்டன.

பாதுகாப்புத்தரப்பினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனாலும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து இந்தக் குண்டுவெடிப்புக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியே காரணம் என்று ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தேசிய தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குண்டுத்தாக்குதலையும், அமைச்சரின் படுகொலைச் சம்பவத்தையும் விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயலெனக் கண்டித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கும் தனது அரசின் நடவடிக்கைகளிலும், திடசங்கற்பத்திலும் எவ்வித மாறுதல்களையும் இது ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

55 வயதான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஒரு சட்டத்தரணி ஆவார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததோடு, தனது அரசியல் வாழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து, கிறிஸ்தவ விவகாரங்கள், இனவிவகாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பல துறைகளில் பலவருடங்கள் அமைச்சராகவும் பதவிவகித்திருக்கிறார்.

இறக்கும்போது இவர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், பொருளாளராகவும் கடமையாற்றியிருந்ததோடு, அடுத்தமாதம் கிழக்கு மாகாணசபைக்காக இடம்பெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிய வருகிறது.

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் பின்னர் தென்னிலங்கையில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 8ம் திகதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற தேசநிர்மாண அமைச்சர் தஸ்ஸநாயக, ஜா-எல பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. VIRAKESARI ONLINE: “அமைச்சர் மீதான குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை இரகசிய பொலிஸாரிடம் மரதன் ஓட்டப் போட்டியாளர் போன்றே குண்டுதாரி ஊடுருவல்” | பூரண அரச மரியாதையுடன் வியாழனன்று இறுதிக்கிரியை

2. Pathivu: TAMIL NATIVE! :: பதிவு: தமிழரின் பூர்வீகம்! Tamil: “அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கம்பஹாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலி”

3. TamilNet: 06.04.08 Jeyaraj Fernandopulle killed in bomb blast


பி.டி.உஷா சர்வதேச வீராங்கனை அல்ல: அஞ்சு பாபி ஜார்ஜ்

March 18th, 2008 பகுப்புகள்: தடகளம், விளையாட்டு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பி.டி.உஷா சர்வதேச வீராங்கனை அல்ல: அஞ்சு பாபி ஜார்ஜ்
    

Anju Bobby George

மேலும் புதிய படங்கள்

கொச்சி: பி.டி.உஷா ஒன்றும் சர்வதேச தரத்திலான வீராங்கனை அல்ல. அவரும், மில்காசிங்கும் ஆசிய அளவிலான தரம் கொண்டவர்களாகவே விளங்கினர். உஷாவை எனது முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் அஞ்சு பாபி ஜார்ஜ். இருப்பினும் கேரள அரசு அவரை சரிவர கண்டு கொள்ளாததால் சென்னைக்கு இடம் பெயர்ந்து தமிழக வீராங்கனையாக நீளம் தாண்டும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் பய்யோலி எக்ஸ்பிரஸ் என செல்லமாக வர்ணிக்கப்பட்ட, இந்தியாவுக்கு சர்வதேச அளவில் தடகளத்தில் பெயர் வாங்கிக் கொடுத்த, ஒலிம்பிக் போட்டியில் இந்திய அளவில் சாதனை படைத்தவரான பி.டி.உஷா மீது பாய்ந்துள்ளார் அஞ்சு.

சமீபத்தில் மலையாள மனோரமா டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், பி.டி.உஷாவும், மில்கா சிங்கும் சர்வதேச தரத்திலான வீரர்கள் அல்ல. ஆசிய அளவிலான வீரர்களாகவே அவர்களது காலத்தில் திகழ்ந்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2008/03/18/india-chennai-exp-clashes-with-payyoli-express.html


தஞ்சையில் மினி மராத்தான் ஓட்டப்பந்தயம் 85 வயது இளைஞருக்கு சிறப்பு பரிசு வழங்கல்

January 14th, 2008 பகுப்புகள்: தடகளம், விளையாட்டு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தஞ்சையில் மினி மராத்தான் ஓட்டப்பந்தயம் 85 வயது இளைஞருக்கு சிறப்பு பரிசு வழங்கல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தஞ்சாவூர் பிரிவு சார்பில் தஞ்சாவூர் சத்யா ஸ்டேடியத்தில் பல்வேறு பிரிவினருக்கான மினிமராத்தான் போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளை ஆபாஷ்குமார் துவக்கி வைத்தார். இதில், கல்லுõரி ஆடவர் மற்றும் இளைஞர்களுக்கான மினிமராத்தான் போட்டி சத்யா ஸ்டேடியத்தில் இருந்து குந்தவை கல்லுõரி வழியாக பழைய வீட்டுவசதி வாரியம், புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று அதே வழியாக சத்யா ஸ்டேடியத்துக்கு வந்து சேர வேண்டும். பள்ளி மாணவர்கள், வயது வரம்பின்றிய பிரிவு மகளிர் மற்றும் பெண்களுக்கான போட்டி ஸ்டேடியத்தில் துவங்கி குந்தவை நாச்சியார் கல்லுõரி வழியாக புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சென்று மீண்டும் ஸ்டேடியம் திரும்ப வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்கள் பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தையம், ஸ்டேடியத்தில் உள்ள ஓடுபாதையை இரு முறை சுற்றிவர வேண்டும், என்ற விதிகளுடன் போட்டிகள் நடந்தது. பள்ளி ஆடவர் மற்றும் இளைஞர் பிரிவில் உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளி மருதையன், தஞ்சாவூர் வாண்டையார்இருப்பு மேல்நிலைப்பள்ளி ஆனந்த், ஒரத்தநாடு அரசு மேல்நிலைப்பள்ளி குமரேசன், கும்பகோணம் நேடிவ் மேல்நிலைப்பள்ளி வினோத், சாலியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பாலமுருகன் ஆகியோர் முதல் ஐந்து இடங்களை வென்றனர். கல்லுõரி மாணவர்களுக்கான மராத்தான் போட்டியில் தஞ்சாவூர் கரந்தை உமாமகேஸ்வரனார் கல்லுõரி ராஜா, பேராவூரணி சக்கரபாணி, கும்பகோணம் அரசு கலைக்கல்லுõரி கோபிநாத், தஞ்சாவூர் கலைசெல்வன், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக முத்துகுமாரசாமி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை வென்றனர். அனைத்து மகளிர் மற்றும் பெண்களுக்கான மராத்தான் போட்டியில் திருவையாறு பள்ளி அருள்ரேவதி, கவுதமி, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லுõரி சுபத்ரா, தஞ்சாவூர் அரசு பெண்கள் பள்ளி செந்துõரதேவி, திருவையாறு பள்ளி ஜெயபிரியா ஆகியோர் முதல் ஐந்து இடங்களை வென்றனர். 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் தஞ்சாவூர் வீரையன், தட்சிணாமூர்த்தி, ராமசாமி, துளசி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முதல் ஐந்து இடங்களை வென்றனர். 85 வயதான தஞ்சாவூர் சபாபதிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுõரி ஆடவர், பெண்கள், இளைஞர்கள் பிரிவினருக்கு ரூ.2,000, ரூ.1,000, ரூ.700, ரூ.500, ரூ.200 என்றும், பிற பிரிவினருக்கு ரூ.600, ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200 என முதல் ஐந்து நபர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட தடகள கழக தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் பரிசுகளை வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் தமிழ்செல்வன், புள்ளப்பூதங்குடி உடற்கல்வி ஆசிரியர் உமாபதி ஆகியோர் செய்திருந்தனர்.

 www.dinamalar.com


ஒலிம்பிக் தங்க மங்கை மரியோன் ஜோன்ஸிற்கு ஆறு மாத சிறை: ஊக்கமருந்து

January 12th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, தடகளம், தீர்ப்பு, நீதிமன்றம், விளையாட்டு | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

சிட்னி ஒலிம்பிக்ஸில் மூன்று தங்க பதக்கங்கள் உட்பட ஐந்து பதக்கங்களை வென்ற மரியோன் ஜோன்ஸ் தனது புகழிலிருந்து சரிந்து இன்று காவலர்களிடம் பொய் சொன்னதிற்காக ஆறுமாத சிறைதண்டனை விதிக்கப்பட்டார். கடந்த அக்டோபரில் விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற்ற,பலமுறை தான் ஊக்கமருந்து எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்று மறுத்துவந்த, ஜோன்ஸ் அமெரிக்க மாவட்ட நீதிபதி கென்னத் கராசிடம் கண்ணீர்மல்க  தனது குற்றங்களையும் தனது இரசிகர்களின் நம்பிக்கையை குலைத்ததையும் ஒப்புக் கொணிருந்தார். தானிழைத்தக் குற்றங்களின் முழு தாக்கத்தையும் உணர்வதாகவும் மிகவும் வருந்துவதாகவும் அழுகையினூடே அவர் நீதிபதியிடம் கூறினார். என்னுடைய இரு சிறுவர்களைப் பிரிந்திருக்க விரும்பவில்லை, ஆகையால் என்மீது கருணை காட்டுங்கள் என முறையிட்டார். கராசு தனது ஆறுமாத சிறைதண்டனையை அறிவித்ததும் தனது கணவரும் ஒலிம்பிக் ஓட்டக்காரருமான தாம்சனின் தோள்களில் சாய்ந்து கலங்கினார்.பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது என்னுடைய தவறுகளிலிருந்து மக்கள் பாடம் படித்துக் கொள்ளவேண்டும் எனக் கூறினார்.

Olympian Marion Jones given six months in prison


துபாய் மாரத்தான் 2008

January 11th, 2008 பகுப்புகள்: தடகளம், துபாய், விளையாட்டு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாய் மாரத்தான் 2008

துபாயில் அமீரக பிரதம அமைச்சரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் ஆதரவில் துபாய் மாரத்தான் 2008 எதிர்வரும் வெள்ளியன்று ( 18 ஜனவரி 2008 ) அன்று நடைபெற உள்ளது.

இம்மாரத்தான் போட்டியில் 42 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன. 4 கிலோமீட்டர் சேரிட்டி ( charity ) ஓட்டமும் நடைபெற உள்ளது.

இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது. ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி போட்டிக்கான ஆதரவை வழங்கியுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு :  www.dubaimarathon.org


மரியன் ஜோன்ஸ் ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார்

October 6th, 2007 பகுப்புகள்: ஆளுமை, தடகளம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

புகழ்பெற்ற அமெரிக்க ஒலிம்பிக் வீராங்கனை மரியன் ஜோன்ஸ் ஊக்க மருந்து பயன்படுத்தியதையும், அதை விசாரணையாளர்களிடமிருந்து மறைத்ததையும் இன்று நியூ யார்க் நீதிமன்றம் ஒன்றில் ஒப்புக்கொண்டார். இதனால் 2000ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இவர் வாங்கிய ஐந்து பதக்கங்களும் பறிக்கப்படலாம்.

தன் செயலுக்கு பின்னர் செய்தியாளர்களுடன் பேசுககயில் கண்ணீருடன் வருத்தம் தெரிவித்தார் ஜோன்ஸ்.

மரியன் ஜோன்ஸ் விக்கிபீடியா பக்கம்

Jones pleads guilty in steroid case Reuters