டென்னிஸ் | சற்றுமுன்...




ஜஸ்டின் ஹெனின் ஓய்வு

May 14th, 2008 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

பெண்கள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலில் இருக்கும் ஜஸ்டின் ஹெனின் முதல்தர டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓர்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.

World No. 1 Henin quits pro tennis - Fox Sports


டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா 3-0 என ஜப்பானை வென்று உலக சுற்றுக்குள் நுழைந்தது

April 12th, 2008 பகுப்புகள்: டென்னிஸ், விளையாட்டு | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

தங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பகையை மறந்து மகேஷ் பூபதியும் லியாண்டர் பேயசும் இரட்டையர் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதோஷி இவாபுச்சி மற்றும் டகௌ சுசுகி ஜோடியை 7-6(2), 3-6,6-3,6-4 என்ற செட்கணக்கில் வென்று இந்தியா அடுத்த உலக சுற்று விளையாட்டிற்கு தகுதிபெற வைத்துள்ளனர்.

வெள்ளியன்று ரோகன் போபன்னாவும் பிரகாஷ் அமிர்தராஜும் தங்கள் விளையாட்டுக்களை வென்றதால் இந்தியா 3-0 என்ற நிலையில் இருக்கிறது. நாளைய போட்டிகள் நடக்குமுன்னரே ஐந்து போட்டிகள் கொண்ட டென்னிஸ் பந்தயத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

India beat Japan 3-0, reach World Group Playoff


துபாய் ஓபெனில் ஃபெடெரெர் அதிர்ச்சி தோல்வி

March 4th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | தொகுப்பாளர்: ராதா ஸ்ரீராம் | மறுமொழிகள் இல்லை » |

துபாய் ஓபென் முதல் சுற்றில் ராஜெர் ஃபெடெரெர் ஸ்காட்லாண்ட் நாட்டை சேர்ந்த ஆண்டி மர்ரேயிடம் (6-7), (6-3),(6-4) என்ற செட்டுக்களில் தோல்வியுற்றார். மூன்றரை வருடங்களுக்கு பின் இம்முறைதான் ஃபெடெரெர் முதல் சுற்றிலேயே வெளியேறி உள்ளார்.

http://msn.foxsports.com/tennis/story/7851536/Murray-ousts-Federer-in-first-round-of-Dubai

http://www.bloomberg.com/apps/news?pid=20601079&sid=aAkO7KermgXU&refer=home


பயஸ் தலைமையில் விளையாடமாட்டோம்: டேவிஸ் கோப்பை வீரர்கள் போர்க்கொடி

February 25th, 2008 பகுப்புகள்: டென்னிஸ், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மகேஷ் பூபதி, பிரகாஷ் அமிர்தராஜ், ரோஹன் போபண்ணா, கரண் ரஸ்தோகி ஆகியோரைக் கொண்ட இந்திய டேவிஸ் கோப்பை குழு, சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் அணியுடன் விளையாடி, வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

அடுத்த சுற்று வரும் ஏப்ரலில் நடைபெற உளளது. இந்தியக் குழுவிற்கு, விளையாடாத கேப்டனாக லியாண்டர் பயஸ் இருந்தார்.

இதற்கிடையே வீரர்கள் அனைவரும் கூட்டாக பயஸின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்து இந்திய சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘பயஸின் தலைமையில் நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஆதலால் எதிர்வரும் போட்டிகளில் அவரது தலைமையில் விளையாட விரும்பவில்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.

கடிதம் வந்ததை உறுதி செய்த அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் பொதுச் செயலர் அனில் கண்ணா, அவர்களது முறையீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும் கூறியுள்ளதாவது:

பயஸ் குறித்து, டேவிஸ் கோப்பை வீரர்கள் எழுதிய கடிதம் 3 தினங்களுக்கு முன்பு இந்திய சங்கத்துக்கு வந்துள்ளது. அவர்களது முறையீடு குறித்து தேர்வுக்குழுவும், செயற்குழுவும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்திய டென்னிஸின் நலம் கருதி அக்குழுவினர் நல்ல முடிவு மேற்கொள்வார்கள் என நம்புகிறேன். எதுவானாலும் ஏப்ரலில் நடைபெற உள்ள அடுத்த சுற்றுக்கு முன்பு தெரியவரும் என்றார் அவர்.

டேவிஸ் கோப்பை போட்டியின்போது பயஸ் பொதுஇடத்தில் திட்டியதால் வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது பிரகாஷ் அமிர்தராஜ் உடல்தகுதி குறித்து பயஸ் வெளியிட்ட கருத்து, வீரர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸின் சமீபகால வரலாற்றில், அணியின் விளையாடாத கேப்டன், இம்மாதிரி பகிரங்கமாக அணி வீரர்களின் அதிருப்திக்குள்ளாவது இதுவே முதல்முறையாகும்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu : Sport / Tennis : Teammates up in arms against Paes

2. The Hindu News Update Service: “Krishnans refuse to react to tennis players’ revolt”

3. NDTV.com: Paes wants Olympic medal with Mahesh Bhupathi


கத்தார் ஓபன்: குடா பகுதியில் ஆடிய முதல் இஸ்ரேலிய பெண்மணி பேயர்

February 19th, 2008 பகுப்புகள்: டென்னிஸ், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!தோகாவில் நடைபெறும் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவும் இஸ்ரேலிய வீராங்கனை ஷாஹர் பேயரும் கலந்து கொள்கிறனர்.

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக பங்கேற்கும் சானியா மிர்சா, பெலாரசின் ஒல்கா கோவட்சோவாவை எதிர்கொள்கிறார். தரவரிசையில் சானியா 29வது இடத்திலும் ஒல்கா 48வது இடத்திலும் உள்ளனர்.

இன்று தொடங்கி வரும் வரும் 24ம் தேதி வரை கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர், தோகாவில் நடைபெறுகிறது.

இத்தொடரில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் இவானோவிச், அதே நாட்டின் ஜான்கோவிச், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமிழ் எம்.எஸ்.என்

மேலும் விவரங்களுக்கு:

1. Peer becomes 1st Israeli to play in Gulf Arab region, advances in Qatar Open - International Herald Tribune

2. Peer wins history-making match at Qatar tourney - USATODAY.com

3. Gulf Times: Israeli star Peer relishing her Qatar experience - Sport


டென்னிஸ் : மோனிகா செலஸ் ஓய்வு

February 19th, 2008 பகுப்புகள்: டென்னிஸ், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 9 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான மோனிகா செலஸ் தனது ஓய்வை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2003-ல் இருந்து ஐந்து ஆண்டுகளாக இவர் விளையாடவில்லை.

யூகோஸ்லோவியாவில் பிறந்த செலஸ், 1990-ல் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்சில் முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். உலக மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியில் 1991-ல் முதலிடம் வகித்த அவர், 1993 வரை இரண்டு வருடங்களாக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

1994-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற செலஸுக்கு, 2003-ல் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸே அவர் விளையாடிய கடைசி போட்டியாகும்.

நன்றி: தமிழ் யாஹூ

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Entertainment | Monica Seles to star in US dance show

2. Robertson: Remember Seles for great play | Chron.com - Houston Chronicle: “Seles never the same after stabbing incident”

3. Seles finally gives up on reviving former glories - Sify.com


பெங்களூர் ஓப்பன்: சானியா விலகல்

February 4th, 2008 பகுப்புகள்: ஆளுமை, டென்னிஸ், பெண்கள் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

உலக தரவரிசையில் 29ஆம் இடத்தில் இருக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை பெங்களூர் ஓப்பன் போட்டிகளில் ஆடப்போவதில்லை என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

போட்டிகளின்போது அவர் அணியும் ஆடை இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானதாயிருக்கிறது என எழுந்த சர்ச்சையே இதற்கு காரணம். இந்த சர்ச்சையினால் விளையாட்டில் கவனம் செலுத்த இயலவில்லை என தெரிவித்த சானியா ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிகளுக்கு முன்பே டென்னிஸ் விளையாடுவதை நிறுத்த திட்டமிட்டிருந்தார் எனத் தெரிகிறது.

Sania drops a bombshell, pulls out of Bangalore Open -The Hindu


யோக்கவிச் ஆஸ்திரேலிய ஓப்பன் சேம்பியன்

January 27th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

நோவக் யோக்கவிச் ஆஸ்திரேலிய ஓப்பன் ஆண்கள் இறுதிப் போட்டியில் சோங்காவை 4-6, 6-4, 6-3, 7-6(2) எனும் கணக்கில் வென்று சேம்பியன் பட்டத்தை பெற்றார்.

மிக்சட் டபுள்ஸ் பிரிவில் சானியா - பூபதி மோசமாக ஆடி சேம்பியன் வாய்ப்பை தவறவிட்டனர்.


ஷரப்போவா ஆஸ்திரேலிய ஓப்பன் சேம்பியன்

January 26th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | 2 மறுமொழிகள் » |

மரிய ஷரப்போவா ஆஸ்திரேலிய ஒப்பன் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இவனொவிக்கை 7-5 6-3 எனும் செட் கணக்கில் வென்றார்.


ஃபெடெரர் தோல்வி

January 25th, 2008 பகுப்புகள்: டென்னிஸ் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

மெல்பர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி விளையாட்டில் உலகின் முதன்மை டென்னிஸ் வீரர் ராஜர் ஃபெடெரர் செர்பியாவின் நொவாக் யோகவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

7-5 6-3 76 என தொடர் செட்களில் நிறைவுற்ற விளையாட்டில் தொடர்ந்து ஃபெடெரர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் பங்குபெற்று வருவது (இதுவரை 10) முறிக்கப்பட்டது. 2004ம் ஆண்டுக்குப் பின் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் தொடர் செட்களில் ஃபெடரர் தோற்றது இம்முறையே.

இருபாலருக்கும் ஆன பிரிவில் இந்தியாவின் பூபதி-சானியா கூட்டணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

Federer crashes out of Australian Open - DNA INDIA

Bhupathi-Sania in mixed doubles final DNA India


தேசியக் கொடியை அவமதித்ததாக சானியா மீது வழக்கு

January 4th, 2008 பகுப்புகள்: சர்ச்சை, டென்னிஸ், நீதிமன்றம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

சானியா மிர்சாவின் தற்போதைய ஆஸ்திரேலிய பயணத்தின்போது தேசியக் கொடியை அவமதித்ததாக மத்தியபிரதேச வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஹாப்மேன் கோப்பை விளையாட்டுகளின்போது தேசியகொடியின் மீது கால் படுமாறு விளையாட்டொன்றை பார்த்துக் கொண்டிருக்கும் படமொன்று வெளியானது. பந்தயம் பார்க்கும் ஆர்வத்தில் நாட்டின் கொடிக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார், ஆகவே அவருக்கு தண்டனை வழங்கவேண்டும் என மனுவில் கூறியுள்ளார். ராஜ்குமார் துபே என்ற அந்த வழக்கறிஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் இவ்வாறு அவமதிப்பு செய்யப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற தவறியதற்காக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 7 அன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Sania Mirza accused of insulting tricolour


உருசிய டென்னிஸ் வீராங்கனை வீட்டில் துணிகர திருட்டு

December 20th, 2007 பகுப்புகள்: ஐரோப்பா, குற்றம், டென்னிஸ் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

பிரபல உருசிய டென்னிஸ் வீராங்கனை அன்னா ஷெக்வடாசேவ் வீட்டில் கொள்ளையர்கள் அத்துமீறி  நுழைந்து அவரை கட்டிப் போட்டு பல இலக்கம் பெறுமான பொருட்களையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். செவ்வாய் அதிகாலை மாஸ்கோவில் உள்ள அவரது வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்தபோது அவரது தந்தையார் சமால், தாயார் மற்றும் 9 வயது சகோதரன் இருந்துள்ளனர். துப்பாக்கியை வைத்து மிரட்டி பணம் பறித்ததுடன் அவர்களை கட்டிப் போட்டுவிட்டு சென்றனர் என்று ஷெக்வடாசேவ் கூறினார்.

இது பற்றிய தட்ஸ்தமிழ் செய்தி….