*வித்தியாசமானவை | சற்றுமுன்...




அழிவின் விளிம்பில் மயில்கள்!

July 25th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *வித்தியாசமானவை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அழிவின் விளிம்பில் மயில்கள்!     

 

Peacock

சாதாரணமாக தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த பல மிருகங்கள் மற்றும் பறவையினங்கள், மனிதனின் மாமிச இச்சையால் அரிய விலங்கினங்களாகிப் போன கதை இன்னும் தொடர்ந்து வருகிறது.

இந்திய தேசியப் பறவையான மயில்கள் காடுகளில் உல்லாசமாக வாழ்ந்து வந்தன. தற்பொழுது காடுகள் அழிந்து வருவதாலும், சில சமுக விரோதிகளின் கூடாரமாக மாறி வேட்டையாடப்படுவதாலும், மயில்கள் காட்டை விட்டு மக்கள் வசிக்கும் இடங்களின் அருகே நடமாடி வருகின்றன.

ஆனால் விரைவிலேயே அரிய வகை பறவையினப் பட்டியில் மயிலினமும் சேரப்போகிறது.

முன்பெல்லாம், தாம்பரத்தைத் தாண்டினால், முடிச்சூர், படப்பைப் பகுதிகளில் மற்ற சாதாரணப் பறவைகளாப் போலவே மயில்கள், வான்கோழிகளைப் பார்க்கலாம். ஆனால் இப்போது நாள் முழுக்கத் தேடினாலும் அங்கெல்லாம் ஒரு மயிலைக் கூட காணமுடியாது. சுற்றிச்சுற்றி வேட்டையாடித் தீர்த்துவிட்டார்கள்.

அட, விராலி மலைப் பகுதியில் கூட எங்கோ ஓரிரண்டு மயில்களைத்தான் பார்க்க முடிகிறது. 

இப்போது முதுகுளத்தூர் பகுதியில் உள்ள மயில்களுக்கும் ஆபத்துந வந்துவிட்டது. முதுகுளத்தூர் பகுதியில் இறைச்சிக்காக மயில்கள் வேட்டையாடப்படுவதால் மயில் இனமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வயல்வெளி, கண்மாய், குளம் இவற்றில் உலாவும் மயில்கள் தோகையை விரித்து ஆடுவதால் அதன் அழகை இப்பகுதி மக்கள் ரசித்து வருகின்றனர்.

ஆனால் சிலர் இறைச்சிக்காக தொடர்ந்து மயில்களை வேட்டையாடி வருவதை வனத்துறையினர் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை.

பறவைகள், விலங்கினங்களைக் காக்க தேசிய அளவில் செயல்பட்டு வரும் புளு கிராஸ் அமைப்பினர் இதுபோன்ற செயலகளை தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இல்லையேல் விரைவிலேயே, உயிரியல் பூங்காக்களில் பார்க்கப்படும் பறவையின்களில் ஒன்றாக மாறிவிடும் மயினமும்!


தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய கலெக்டர்

July 24th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, *வித்தியாசமானவை, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய கலெக்டர்

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக் கவசம் (ஹெல்மட்) அவசியம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் எஸ்.ஜே.சிரு போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டினார்கள்.

தலைக்கவசம் அணிந்த கலெக்டர்

தேனி போக்குவரத்து போலீஸ் பிரிவு சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கு நேற்று நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு ஊர்வலம் தேனி பங்களா மேட்டில் தொடங்கியது. தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் தேனி மாவட்ட கலெக்டர் எஸ்.ஜே.சிரு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், ஊர்க்காவல்படை தளபதி என்.ஏ.அஜய்கார்த்திக் ராஜா ஆகியோர் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டினார்கள். அவர்களைத் தொடர்ந்து ஏராளமான போலீசார் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பங்களா மேட்டில் புறப்பட்ட ஊர்வலம் மதுரை சாலை, நேருசிலை, பெரிய குளம் சாலை வழியாக அம்பி வெங்கிடசாமிநாயுடு மண்டபம் வந்தடைந்தது.

கருத்தரங்கு

அங்கு போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜன், தேனி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன், ஆய்வாளர் பிரபா கரன், ஊர்க்காவல் படை பிரிவு தளபதி பிச்சை, துணை தளபதி முத்து கிருஷ்ணன், தேனி தாசில்தார் வடிவேல், தேனி கிராம நிர்வாக அலுவலர் வனகாமு, அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியன் ஆகியோர் பேசினார்கள்.

உயிரிழப்பு

கூட்டத்தில் கலெக்டர் எஸ்.ஜே.சிரு பேசும் போது,” இரண்டு சக்கர வாகனங்கள் மூலம் தான் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது. விபத்தில் தலையில் காயம் ஏற்படுவதால் தான் உயிர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் தான் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் ஓட்டுவது, வாக னம் ஓட்டிக் கொண்டிருக்கும் போது செல்போனில் பேசுவது போன்ற வைகள் அவசியம் தவிர்க்க வேண்டும். விபத்துக்களே நடக்காமல் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பேசும் போது, “விபத்து மரணம் என்பது கோரமானது. விபத்து நம்மால் ஏற்படுவது. நாள் ஒரு முறை செல்போனில் பேசிக்கொண்டே மோட்டார் சைக்கிளை ஓட்டினேன். விபத்து ஏற்பட்டது. நான் ஹெல்மெட் அணிந்திருந்ததால் காயமின்றி தப்பினேன். ஒரு விபத்தினால் ஒரு குடும்பம் பாதிக்கப்பட வேண்டுமா? என நினைத்தால் போதும் மற்றவர்களுக்கு நாம் எமனாக இருக்க கூடாது ” என்றார்.

முடிவில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் செய்து இருந்தார்.


துபாய் நூலகங்களில் காந்தி நூல்!

July 21st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, *வித்தியாசமானவை, அறிவிப்பு, ஆளுமை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாய் நூலகங்களில் காந்தி நூல்!     

 

Mahatma Gandhi

துபாயிலுள்ள பொது நூலகங்களில் ( http://www.libraries.ae ) மகாத்மா காந்தியடிகள் குறித்த அரபி மொழி நூல் கிடைக்கிறது. 

காந்தியடிகளின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து அரேபிய நாட்டவர் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மாவைப் பற்றி அறியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் சிறப்பான முறையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நூலை இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் சிறப்பான முறையில் தயாரித்துள்ளது. இதனை அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இலவசமாகவும்  வழங்கப்பட்டுகிறது.


அமெரிக்கா செல்ல நரேந்திரமோடிக்கு தடை விதிக்க வேண்டும்; அமெரிக்க மந்திரியிடம் இந்திய சங்கம் கோரிக்கை

July 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *வித்தியாசமானவை, அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அமெரிக்கா செல்ல நரேந்திரமோடிக்கு தடை விதிக்க வேண்டும்; அமெரிக்க மந்திரியிடம் இந்திய சங்கம் கோரிக்கை

அமெரிக்காவில் நுழைய நரேந்திர மோடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க மந்திரியிடம் இந்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் நியுஜெர்சி நகரில் ஆகஸ்டு மாதம் உலக குஜராத்தியர் மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்காவில் உள்ள குஜ ராத்தியர் சங்கம் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத் திருந்தது. இதையடுத்து அவர் அமெரிக்க மாநாட்டில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

இந்நிலையில் நியுயார்க்கை சேர்ந்த இந்திய- அமெரிக்க சங்கத்தினர் பாது காப்பு மந்திரி காண்டலிசா ரைசிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், “நரேந்திர மோடி குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதி ராக செயல்பட்டு வருகிறார். அவருக்கு அமெரிக்கா வர விசா வழங்க கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு குஜ ராத்தியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அச்சங் கத்தின் தலைவர் சுனில் நாயக் கூறும்போது, “நரேந் திர மோசடி மாநில மக்க ளால் முறைப்படி முதல்வ ராக தேர்ந் தெடுக்கப்பட்டுள் ளார். குஜராத்தியர் என்ற முறையில்தான் அவரை மாநாட்டுக்கு அழைத்துள் ளோம். அவருக்கு அமெரிக்க விசா கொடுக்க கூடாது என்று வலியுறுத்துவது சரி யானதல்ல” என்றார்.

இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஆசிய-அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாநாட்டில் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருந்தார். ஆனால் அப் போது இந்திய அமெரிக்க சங்கத்தினர் மோடிக்கு விசா வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவருக்கு அந்த ஆண்டு அமெரிக்க விசா மறுக்கப் பட்டது.


சார்கோசியை தொடரும் உருசிய அதிபர் புடின்

April 17th, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை, ஆளுமை, தகவல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

உலகத் தலைவர்களின் திருமணங்கள் இன்று ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. உருசிய அதிபர் விளாடிமிர் புடின் தன்னைவிட பாதி வயதுள்ள ஜிம்நாஸ்டிக் பெண்ணை மணக்க விருக்கிறார். 54 வயதாகும் புடின் 24 வயதுள்ள ஜிம்னாஸ்டிக்கும் உருசிய நாடாளுமன்ற உறுப்பினருமான அலினா கபேவாவை திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய நாளிதழ் தி டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ளது. தனது அதிபர் பதவியிலிருந்து விலகியபின்னர் ஜுன் மத்தியில் திருமணம் நடக்கவிருப்பதாக அச்செய்தி கூறுகிறது. தனது 50 வயது மனைவி லுட்மிலாவிடமிருந்து மணமுறிவு பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிடினும் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன் பிரிந்ததாக தெரிகிறது.

Putin set to marry 24-yr old gymnast


கைத்தறி துணிகளை பயன்படுத்துங்கள் இளைஞர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

March 20th, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை, அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கைத்தறி துணிகளை பயன்படுத்துங்கள் இளைஞர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை: “”கைத்தறி துணிகளைப் பயன்படுத்தி, இளைஞர்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்,” என, அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். எழும்பூர் கோஆப்டெக்ஸ் வளாகத்தில் நடந்த தேசிய கைத்தறி கண்காட்சியைத் துவக்கி வைத்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: தொடர்ந்து 53வது ஆண்டாக இந்த கண்காட்சி நடக்கிறது. கடந்தாண்டு தமிழகத்தில் 105 கோடி ரூபாய்க்கு கைத்தறி துணிகள் விற்பனையாகின. நடப்பாண்டு விற்பனை இலக்கான 125 கோடி ரூபாயில், 120 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. நெசவாளர்களுக்கான காப்பீடு 200 ரூபாய் வீதம் நான்கு கோடி ரூபாயை அரசே செலுத்தி வருகிறது. முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாகவும், இறந்தவர்கள் வாரிசுகளுக்கு 350 ரூபாயில் இருந்து 550 ரூபாயாகவும் வழங்கப்படுகிறது. 2004ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை தள்ளுபடி மானியம் 208 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி துணிகளைப் பயன்படுத்தி சிறப்பான நிலை, எழுச்சியை இளைஞர்கள் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஸ்டாலின் பேசினார். கோஆப்டெக்ஸ் இயக்குனர் நிர்மலா வரவேற்றார். கைத்தறித் த�%A


இரத்த தானத்துக்கு வரி விலக்கு

February 22nd, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை, உலகம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

போலந்தில் இரத்ததானம் வழங்குபவர்களுக்கு லிட்டருக்கு 30லாட்டிகள்(போலந்தின் கரன்சி) வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

Taxmen demand blood  - DNA India


16வயதில் ஏழு பிள்ளைகள் பெற்றவர்

February 22nd, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

அர்ஜெண்டினாவில் பமீலா எனும் 16 வயது பெண்ணுக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். தனது 14 வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்த பமீலா 15வயதில் மீண்டும் கருத்தரித்து ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றார்.

தற்போதும், 16 வயதில், ஒரே பிரசவத்தில் அவருக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
ஏற்கனவே அரசு உதவியுடன் வாழ்ந்துவரும் அவர்களுக்கு அரசு மீண்டும் உதவவேண்டும் என பமீலாவின் தாய் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Mother of 7 at age 16 - DNA India


கேரளாவில் மீண்டும் அதிசயம் : இரவில் கொட்டியது மீன் மழை

February 15th, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை, அறிவியல், இயற்கை, வானியல் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

கேரளாவில், ‘சிவப்பு மழை’யின் பரபரப்பு ஓய்ந்த நிலையில், ‘மீன் மழை’ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிச்சூர் அருகே உள்ள கந்தனசேரி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. சிலர் வேலை முடிந்து தாமதமாக இரவில் மழையில் நனைந்தபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, தங்கள் மீது மீன் விழுவதை பார்த்து அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். இத்தகவல் கிராமத்தில் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டது. மழையில் விழுந்த மீன்களை, ஒரு வாளி தண்ணீரில் சிலர் போட்டு வைத்தனர். அப்பகுதியில் உள்ள குளம், வாய்க்கால் போன்றவற்றில் கிடைக்கும் வகையை சேர்ந்த சிறு மீன்கள் என்பது மறுநாள் பகலில் உறுதிப்படுத்தப்பட்டது.

இது குறித்து கேட்ட போது, கொச்சி அறிவியல் பல்கலைக்கழகத்தின் மீன்வள அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் ராஜன் கூறியதாவது: கிராம மக்கள் சொல்வது உண்மைதான். அறிவியல் பூர்வமாக இது சாத்தியமானது தான். மழை மேகங்கள் உருவாகும் போது, நீர் வாழ் உயிரினங்கள் வானுக்கு உறிஞ்சப்படும்.

மழை மேகங்களில், ஈரத்தன்மை இருக்கும் வரை, நீரில் எப்படி அந்த உயிரினங்கள் வாழ்கின்றனவோ, அதேபோல உயிர் வாழ முடியும். மழை மேகம், கலைந்து மழை விழும் போது, அந்த மீன்களும் கீழே விழ வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ராஜன் கூறினார். சமீபத்தில் கேரளாவில் பெய்த, ‘சிவப்பு மழை’க்கும் அறிவியல் பூர்வமாக காரணம் சொல்லப்பட்டது. நீர் பாசிகளில் இருக்கும் சில ரசாயனங்கள் தான் இதற்கு காரணம் என்பது தெரியவந்தது.

நன்றி: நிதர்சனம்

தொடர்புடைய பதிவு: மீன் மழை - இட்லி வடை


சீனாவின் முதல் விண்வெளி நடை உடனடி ஒலிபரப்பிற்கு ஏற்பாடு

January 29th, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை, தகவல், தொழில்நுட்பம், வானியல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

இந்த வருடம் சீனா நடத்த விருக்கும் சென்சூ VII விண்வெளித்திட்டத்தின் கீழ் வானவெளியில் அவர்களின் வீரர்கள் நடப்பதை உடனடி ஒலிபரப்புச் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி சாங்காய் விண்வெளிபயண நுட்ப அகாடமியின் தலைவர் யுவாங் ஜீ பேசுகையில் தங்களது சென்சூ திட்ட விண்கலத்தில் உடனடி ஒலிபரப்ப வசதிகள் இருக்கிறது, இருப்பினும் இதுபற்றி முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

கடந்த மனிதகட்டுப்பாட்டில் சென்ற விண்பயணங்களைவிட இம்முறை விண்வெளியில் நடப்பதைத் தவிர பிற இயந்திரவியக்கல் முறைகளையும் விண்வெளிவீரர்கள் பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது.

China to broadcast 1st live spacewalk


செய்தித் தாள் விற்கும் அமைச்சர் மகன்

January 28th, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை, அரசியல், சமூகம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

பிகாரின் முந்நாள் அமைச்சர் மோகன்லால் குப்தாவின் மகன் உதே பிரகாஷ் குப்தா என்பவர் தினம் காலையில் சைக்கிளில் சென்று செய்தித் தாள் விற்பனை செய்பவராக இருக்கிறார்.

அவரது தந்தை 1960களின் இறுதியில் பிகார்ல் கர்பூரி தாக்குர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்ததாகவும் தன் அதிகாரத்தை தவறாக அவர் பயன்படுத்த முன்வராததால் தனக்கு வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்றும் உதே தெரிவித்துள்ளார்.
உதே எந்திரங்களை பழுதுபார்க்கும் படிப்பையும் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ex-minister’s son sells newspapers for a living  -DNA India


கற்பனையை தோற்கடிக்கும் உண்மை

January 25th, 2008 பகுப்புகள்: *வித்தியாசமானவை | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | ஒரு மறுமொழி » |

ட்ரன் தி க்ஹாம் எனும் வியட்நாம் பெண்ணின் தாய் 1967ல் ஹாங் காங் சென்றிருந்தார். அப்போது அவர் தைவான் நாட்டைச் சார்ந்தவரை காதலித்து கர்ப்பமானார். குடும்ப சூழல் காரணமாய் அவர் வியட்நாமுக்கே திரும்பும் நிலை ஆனது. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களிலேயேஅவர் இறந்து போனார். ட்ரன்னுக்கென அவர் விட்டுச் சென்றது ஒரு தங்க மோதிரமும் அவளின் தந்தையின் புகைப்படமும். தன் குழந்தை பிறந்திருப்பது தந்தைக்கு தெரிந்திருக்கவில்லை.

40 வருடங்கள் கழித்து தன் தந்தையைத் தேடி ட்ரன் தைவான் வந்தார். அங்கே ஒரு வயதானவரிடம் வேலை பார்த்தார். ஏழு மாதங்களுக்குப் பின் தன் முதலாளிதான் தன் தந்தை என்பதை அறிந்து கொண்டார்.

மகளும் தந்தையும் மனம் மகிழ கண்ணீருடன் ஒன்று சேர்ந்தனர். முற்றும்.

Woman searching for dad discovers it’s her boss - DNA India