மொழி | சற்றுமுன்...




ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய மன்றங்கள் தொடங்க வேண்டும்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் வலியுறுத்தல்

July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழ், மொழி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய மன்றங்கள் தொடங்க வேண்டும்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் வலியுறுத்தல்

ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய மன்றங்கள் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.

கோவை இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத்தின் 25-ம் ஆண்டு சிலப்பதிகார வெள்ளி விழாவை சனிக்கிழமை தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியதாவது:

தமிழ் மண்ணில் மூவேந்தர்கள் ஆட்சி செய்ததை விளக்கும் சான்று சிலப்பதிகாரம் மட்டுமே. எத்தனையோ இலக்கியங்கள் இருந்தாலும் சங்க இலக்கியத்துக்கும், பிற்பட்ட காலத்துக்கும் மிகப் பெரிய பாலமாக சிலப்பதிகாரம் அமைந்துள்ளது.

ஆங்கிலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள். ஆனால், இந்தியாவை விட மிக மிக முன்னேறிய ஜப்பானில் யாரும் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. தங்களது மொழி, கலாசாரத்தை காக்கும் அடிப்படை உணர்வு ஜப்பானியரிடம் உள்ளது. தமிழில் பேசினால் தரக்குறைவு, தமிழில் படித்தால் கேவலம் என்ற மாயை நம்மிடம் மட்டும் தான் இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய காவியங்கள், விஷயங்கள் ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை. பகவத்கீதை, பைபிள், திருக்குர்ரான், திருக்குறள், ஏன் காந்தி அடிகளின் சத்தியசோதனை என இவை அனைத்துமே ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எழுத்து பணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால், அது ஆபத்தின் அறிகுறி. மொழியை பணம் என்ற அளவுகோலை வைத்து எடைபோடக் கூடாது. தமிழ் வளர வேண்டும் என்றால், தமிழ் உணர்வு இருக்க வேண்டும். அதற்காக ஆங்கிலம் வேண்டாம் என்றோ, ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை என்றோ அர்த்தமல்ல.

தென்னாப்பிரிக்க தமிழர்கள் தமிழ் நன்றாகப் பேசுவார்கள், ஆனால், எழுதத் தெரியாது. இதனால், தமிழை ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்கின்றனர். இந்த நிலை தமிழகத்துக்கு வந்துவிடக் கூடாது என்று பயமாக இருக்கிறது.

இந்த நிலைமை மாற இலக்கியக் கூட்டங்கள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஊரிலும் நடத்த வேண்டும். இதுஇல்லாமல் போனதற்கு சமயத்தை மறந்ததுதான் காரணம். மதம் என்பது இலக்கியத்தை, தமிழை வளர்க்க முக்கியக் காரணமாக இருந்தது. மதத்தை அடிப்படையாக வைத்து தமிழ் பேசப்பட்டது. தமிழ் இலக்கியங்கள் பேசப்பட்டன. மதம் சார்ந்த இலக்கியமாக இருந்தபோது மொழி காப்பாற்றப்பட்டது.

முன்பெல்லாம் திருவள்ளுவர் கழகம், கம்பன் கழகம், திருப்புகழ் மன்றம், இலக்கியப் பேரவை என்று ஊருக்கு ஊர், ஆலயத்துக்கு ஆலயம் இருந்தன. அங்கெல்லாம் இலக்கிய விவாதங்கள் நடந்தன. அந்த நிலைமை மீண்டும் வர வேண்டும். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்கிறோமோ இல்லையோ, ஊருக்கு ஊர் இலக்கியக் கழகங்கள் தொடங்கி செயல்பட வேண்டும் என்றார் அவர்.
 
 


தாய் மொழியைக் காக்க ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்: குமரி அனந்தன் பேச்சு

July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழ், மொழி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மொழிக்காக ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்: குமரி அனந்தன் பேச்சு

தாய் மொழியைக் காக்க ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று இலக்கியப் பேச்சாளர் குமரி அனந்தன் வலியுறுத்தினார்.

கோவை இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத்தின் சிலப்பதிகார வெள்ளி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் ச.கணபதிராமனுக்கு டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் விருதை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வழங்கினார்.

இவ் விழாவில் இலக்கியப் பேச்சாளர் குமரி அனந்தன் பேசியது:

பாராளுமன்றத்தில் ஒரு காலத்தில் துணைக் கேள்விகள் ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ தான் கேட்க வேண்டும். நான் எம்.பி.யாக இருந்தபோது தமிழில் மீண்டும் மீண்டும் கேள்வியை எழுப்பினேன். அதற்காக பலமுறை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன். சளைக்காமல் தமிழ் மொழிக்காகக் குரல் கொடுத்ததால், மொழி குழு அமைக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் வாதாடும் மொழிகளில் தமிழும் இணைந்தது.

1992-ல் உலகப் பொது மொழியின் அவசியம் குறித்து பாரீஸ் நகரில் உள்ள யுனெஸ்கோ அமைப்புக்கு கடிதம் எழுதினேன். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏதேனும் நாடு உலகப் பொது மொழியை குறித்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று யுனெஸ்கோ எனக்குப் பதில் எழுதியது.

ஐ.நா. சபையில் இத்தீர்மானத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்துக்குக் கடந்த 16 ஆண்டுகளாக ஏராளமான கடிதங்களை அனுப்பி உள்ளேன். இதுநாள் வரை அக் கடிதங்களுக்குப் பதில் கூட வரவில்லை. இந்த நிலையில் தான் தமிழ் இருக்கிறது. மொழிக்காக ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும்.

இளங்கோ அடிகள் இலக்கிய மன்றத் தலைவர் ஜி.கோபாலன்: சிலப்பதிகாரத்தின் முதல் அச்சுப் பதிப்பு 1892-ம் ஆண்டு உ.வே.சாமிநாத அய்யரால் வெளியிடப்பட்டது. இந்நூல் வெளியான எட்டே ஆண்டுகளில் முதன் முதலாக பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செக்கோஸ்லோவியா, ரஷியா, மலையாளம், ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் வெளிவந்தன. அத்தகைய சிறப்பு மிக்க ஒரே காவியம் சிலப்பதிகாரம் தான்.

கம்பன் காவியத்துக்கும், இளங்கோ அடிகளின் காவியத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கம்பனின் ராமகாதையில் கம்பனின் கவிநயமும், கற்பனை வளமும் தான் மேலோங்கி நிற்கும். கம்பன் வரிக்கு வரி நீக்கமற நிறைந்திருப்பான். ஆனால் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் தன்னை மறைத்துக் கொண்டு தனது கதையின் நாயகர்களுக்கு முன்னுரிமை தருவார். இது தான் வித்தியாசம்.

செயலர் நா.நஞ்சுண்டன்: இளங்கோ அடிகள் இலக்கிய மன்றம் பல ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த ரூ.1 லட்சம் நன்கொடையுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ் ஆர்வலர்கள் மூலம் இன்னும் ரூ.10 லட்சம் நன்கொடை கிடைத்தால் இலக்கிய மன்றத்தையும், சிலப்பதிகார விழாவையும் ஒவ்வோர் ஆண்டும் இன்னும் சிறப்பாக நடத்த முடியும் என்றார்.


தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார் கருணாநிதி

June 30th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழ், மொழி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார் கருணாநிதி

 

‘கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை’ மூலம் விருது, பொறிகிழி.

சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு முதல்வர் கருணாநிதி தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தின் அலுவலக திறப்பு விழா சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பாலாறு கட்டிடத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில், முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“”இந்த விழாவில் கலந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 150 ஆண்டுகளுக்கு முன்னர் பரிதிமாற் கலைஞர் கண்ட கனவும், 50 ஆண்டுகளுக்கு முன் நான் கண்ட கனவும் இன்று நிறைவேறிவிட்டது.

அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வகையில் எனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை தமிழ் செம்மொழி ஆய்வு மையத்துக்கு வழங்குகிறேன்.

இதன் மூலம் ‘கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை’ நிறுவப்பட்டு அதன் பெயரில் இந்த ஒரு கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையில் வைக்கப்படும். அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையில் ஆண்டுதோறும் தமிழ் வரலாற்று கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு விருதும் பொறிகிழியும் வழங்கப்படும்”" என்றார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, கவிஞர்கள் வைரமுத்து, கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 


நீதித் துறையில் தமிழ் முழங்க வேண்டும்: மத்திய சட்ட இணை அமைச்சர்

June 24th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தமிழ், மொழி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

“நீதித் துறையில் தமிழ் முழங்க வேண்டும்’: மத்திய சட்ட இணை அமைச்சர்

தஞ்சாவூர், ஜூன் 24: அனைத்துத் தகுதிகளும் பெற்ற தமிழ் மொழி விரைவில் நீதித் துறையில் முழங்க வேண்டும் என்றார் மத்திய சட்டத் துறை இணை அமைச்சர் கே. வேங்கடபதி.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தஞ்சை நீதிமன்றத்தின் 200-வது ஆண்டு விழாவில் அவர் பேசியது:

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த பூம்புகாரில் நீதிக்காகப் போராடி வென்ற கண்ணகி பிறந்தாள். சிலப்பதிகாரம் தோன்றியதும் இங்கேதான். அந்த வகையில் இப்பகுதி பழங்காலம் தொட்டே சிறப்பான நீதிநெறி பரிபாலனத்துக்கு வித்திட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

தமிழக அரசு நீதித் துறைக்கு ரூ. 300 கோடி ஒதுக்கியுள்ளது. அனைத்து நீதிமன்றங்களும் கணினி மயமாக்கப்பட்டு, வழக்குகள் விரைந்து தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்துத் தகுதிகளும் பெற்ற தமிழ் மொழி நீதித் துறையில் முழங்க வேண்டும், அது விரைவில் நிறைவேற வேண்டும் என்றார் அமைச்சர் கே. வேங்கடபதி.
 
 


சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அரசியல், இந்தியா, ஊழல், கலை-இலக்கியம், கிளர்ச்சி, சமூகம், தகவல், தமிழ், போராட்டம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | 6 மறுமொழிகள் » |

சாகித்திய அகாதமியில் புதுச்சேரிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று (08-06-2008) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

சாகித்திய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மகரந்தன, தமிழக அரசின் பிரதிநிதியாக இராம.குருநாதன், பல்கலைக்கழக பிரதிநிதியாக இரா.மோகன் மற்றும் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாக சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராக சிற்பி பாலசுப்ரமணியத்தை மற்ற மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்தனர். மேலே உள்ள நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மேலும் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படியில் புதுச்சேரி மகரந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மூவர் பெயரை ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம் அளித்துள்ளார். ஆனால், இவர் பரிந்துரை செய்த ஒருவரையும் நியமிக்காமல் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய ஒருவரை சிற்பி நியமித்துள்ளார். பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசனையின் அடிப்படையிலோ அவர் தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது புதுச்சேரி இலக்கிய வட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பணத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் தமது உறுப்பினர்களுக்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் போது, பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க இயலும் என்று இந்த தமிழ் அமைப்புகள் கோருகின்றன.

மேலும் புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒன்பது திட்டமங்களை மகரந்தன் அளித்திருந்தார் அதில் அத்தனையும் அதன் ஒருங்கிணைப்பாளர் நிராகரித்துள்ளார். புதுச்சேரியோ அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் எதிலும் நிகழ்ச்சி எதற்கும் இதன் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு ஏன் புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி என்று புதுவையைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுபபினர். சென்ற பத்து ஆண்டுகளாக புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன.

அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும். புதிதாக புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கோரினர்.

புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் திராவிடர்க் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி பூர்வ குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் தேசிய இயக்கம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், சமூக நீதி போராட்டக் குழு இராவணன் பகுத்தறிவு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை உள்ளிட்ட 27 அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் “சாகித்திய அகாதமியின்” நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளாமல் புதுச்சேரியைத் தொடர்ந்துப் புறக்கணிக்குமானால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் தெரிவித்தார்.


மே-11 ஞாயிறன்று விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு

May 10th, 2008 பகுப்புகள்: இணையம், கணினி, தமிழ், பதிவுலகம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு நடத்துவது என கடந்த ஞாயிறு அன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரம் அவசரமாக நடத்திவிட வேண்டும் என்பது போல விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் கோரிக்கையின் பேரில் நாளை காலை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் நடக்க விருக்கிறது.

அரசுக் கல்லூரி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மாதாக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் சற்று தூரம் நடந்தால் அரசுக் கல்லூரி உள்ளது.

காலை 9.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் காலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி வருகை தர உள்ளார்.

சென்னை மற்றும் புதுச்சேரியிலிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இப்பயிற்சியில் சுமார் 100 கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு எழுதுகோல் குறிப்பேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பல்வேறு தமிழ் மென்பொருட்கள் குறுந்தகடு விலை ரூ15/- என வசூலிக்க இருப்பதாக விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் தமது வலைப்பூவில் தெரிவித்துள்ளனர், அதனால் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தம் பொறுப்பில் குறுந்தகடு இலவசமாக வழங்குவது என முடிவு செய்துள்ளது.

நிகழ்ச்சி நிரல் கீழே உள்ளவாறு நடக்க உள்ளது.

வருகை தர உள்ள அனைவர்க்கும் இந்த நிகழ்ச்சிநிரல் பயிற்சி அரங்கத்தில்அளிக்கப்படும்.

தமிழ் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு-2008. விழுப்புரம்

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – விழுப்புரம்
நாள் 11 மே 2008

நிகழ்ச்சி நிரல்

காலை 08.50 - 9.00 பங்கேற்பாளர்கள் பதிவு செய்தல் (15 நிமிடம்)

காலை 09.00 - 9.30 நிகழ்ச்சிகள் தொடங்கி வைத்தல் (30 நிமிடம்) (

காலை 09.30-10.00 : தமிழ் எழுத்துறுக்கள் செயலி நிறுவுவது - க.அருணபாரதி

ஏகலப்பை (15 நிமிடம்)
குறள் (5 நிமிடம்)
இளங்கோ (5 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 10.01-10.30 : தமிழில் தட்டச்சு செய்வது பேராசிரியர் மு.இளங்கோவன்
தமிழ் 99 (15 நிமிடம்)
ஒலியியலில் உள்ள குறைகள் (5நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 10.30-11.30 வலைப்பதிவு அறிமுகம் – திரு. பாலபாரதி & மா.சிவக்குமார்

மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் (5 நிமிடம்)

வலைப்பதிவு தொடக்கம் (BLOGGER) (20 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (15 நிமிடம்)

வலைப்பதிவில்பின்னூட்டமிடுவது (10 நிமிடம்)

மறுமொழி மட்டுறுத்தல் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

காலை 11.30- 11.45 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

பகல் 11.46- 12.15 வலைப்பதிவு தொடக்கம் - விக்கி

(WORD PRESS) (10 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 12.16-12.30 படங்கள் இணைப்பது (10 நிமிடம்) – கோ.சுகுமாரன்

காட்சிப்படம் இணைப்பது (10 நிமிடம்)

ஒலிகளை இணைப்பது (5 நிமிடம்) - வினையூக்கி

கேள்வி பதில் (5 நிமிடம்)

பகல் 12.31- 01-00 திரட்டிகளில் இணைப்பது (20 நிமிடம்) – விக்கி & வெங்கடேஷ்

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 01.00-02.00 உணவு இடைவேளை (60 நிமிடம்)

பகல் 02.01- 2.30 குறுந்தகடில் உள்ள மென்பொருட்கள் அதன் பயன்பாடுகள் –க.அருணபாரதிகேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 02.31- 3.00 தமிழில் இயங்குதளங்கள் - மா. சிவக்குமார்

விண்டோஸ் (10 நிமிடம்)

லினக்ஸ் (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 3.01-3.30 : கணினியில் தமிழ்ப் பயன்பாடு - இரா.சுகுமாரன்

ஒப்பன் ஆபீஸ் தமிழ் (5 நிமிடம்)

எம்.எஸ் ஆபிஸ் தமிழ் (5 நிமிடம்)

தமிழில் மின்னஞ்சல் (5 நிமிடம்)

தமிழில் அரட்டை (5 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பிற்பகல் 3.31- 4.00 இணைய உலவிகள் பயர் பாக்ஸ் – வினையூக்கி

அதியன் இணைப்பு (10 நிமிடம்)

பத்மா இணைப்பு(10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பிற்பகல் 04.01-4.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

மாலை 4.16.- 4.30 தமிழில் இணையதளங்கள் - பேராசிரியர் மு.இளங்கோவன்

விக்கிப்பீடியா (10 நிமிடம்)

மதுரைத்திட்டம் (5 நிமிடம்)

யாழ் நூலகம் (5 நிமிடம்)

பிற தளங்கள் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

மாலை 04.31- 4.45 RSS FEED கூகுல் திரட்டியில் இணைப்பது (8 நிமிடம்) சீனுவாசன் கடலூர்

மாலை 4.46-5.15 கூட்டு வலைப்பதிவுகள் அமைப்பது - தூரிகா வெங்கடேஷ்(10 நிமிடம்)

மாலை 5.15-5.45 சொந்தத் தளத்தில் வலைப்பதிவு

word press எப்படி நிறுவுவது (15 நிமிடம்) விக்கி

மாலை 6.00 நிறைவு விழா மற்றும் சான்றிதழ் அளிப்பு

*************************************************
வலைப்பதிவர்களுக்கான பயனுள்ள தளம்
தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கம் http://tamilblogging.blogspot.com/

வலைப்பதிவு பயிற்சி :
தமிழ் வலைப்பதிவர்கள்: http://www.tamilbloggers.org/ (தமிழ்நாடு-புதுச்சேரி)

பயிற்சி ஒருங்கிணைப்பு
புதுச்சேரிவலைப்பதிவர் சிறகம் http://www.pudhuvaitamilbloggers.org/

நிகழ்ச்சி ஏற்பாடு:
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்

http://vizhuppuramvalaippathivar.blogspot.com/

********************************************
தமிழின் முழு தானியங்கி வலைத்திரட்டி + வலைவாசல் - தமிழ்.கணிமை.காம் - http://tamil.kanimai.com/

தமிழ்வலைப்பதிவர் கூட்டு முயற்சியில் ஒரு செய்தித்தளம் - சற்றுமுன் -

http://satrumun.com/

புதிய வலைப்பதிவு தொடங்குவதற்கு

தமிழ்ப் பதிவுகள் http://tamilblogs.com/new-index.php

வலைப்பதிவு திரட்டிகள்

தமிழ்மணம் http://www.tamilmanam.net/index.html
தேன்கூடு http://www.thenkoodu.com/
தமிழ்வெளி http://www.tamilveli.com/
திரட்டி http://www.thiratti.com/
மாற்று http://www.maatru.net/
கில்லி http://gilli.in/


மறுபடியும் பரிகார பூஜை - சிதம்பரம் தீட்சிதர்கள்

March 6th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், கைது, சட்டம் - நீதி, சமூகம், தமிழ், போராட்டம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் பாடிச் சென்ற பின்னர், கோவிலைக் கழுவி பரிகார பூஜை செய்துள்ளனர் நடராஜர் கோவில் தீட்சிதர்கள். இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பலத்தில் (கோவில் கருவறை) தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்த் திருமறைகளை பாட எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்காத கோவில் தீட்சிதர்கள், தேவாரம் பாட ஓதுவார்களை அடித்து விரட்டினர். தடுக்க வந்த போலீஸாரையும் தாக்கினர்.

இதுதொடர்பாக 11 தீட்சிதர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தேவாரம் உள்ளிட்டவற்றை பாடுவது யார் தடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரித்தது.

இந்த நிலையில் நேற்று விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 25 பேர் தாங்கள் தேவாரம், திருவாசகம் பாடவிருப்பதாக முறைப்படி அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கால்துறையிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களில் ஐந்து பேர் மட்டும் திருச்சிற்றம்பலத்திற்குள் சென