பொழுதுபோக்கு | சற்றுமுன்...




தசாவதாரம்: தடை கோரி வழக்கு

May 10th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, திரைப்படம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 2 மறுமொழிகள் » |

பிரபல தமிழ் நடிகர் கமலஹாசன் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘தசாவதாரம்’ என்கிற தமிழ் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்கும்படி, உலகளாவிய ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சங்கம் என்கிற அமைப்பை சேர்ந்த கோவிந்த ராமானுஜதாசா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

திரைப்படத்தின் விளம்பரங்களில் காட்டப்படும் காட்சிகள், வைஷ்ணவர்கள் பெரிதும் மதித்துப் போற்றும் ராமானுஜரையும் பெருமாளையும் இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், அவர் தமது மனுவில் கூறியிருக்கிறார். அவரது மனுவை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

கோவிந்த ராமானுஜதாசா அவர்களின் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்கள், தமது திரைப்படத்தில் ராமானுஜரையோ, இந்துமதத்தையோ இழிவுபடுத்தும் காட்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று கூறினார்.

தமது திரைப்படத்தை அதன் முழுமையான வடிவத்தில் பார்த்தால் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாது என்றும் கூறிய அவர், இந்து மதம் உட்பட எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தமக்கோ தமது திரைப்படத்திற்கோ இல்லை என்றும் கூறினார்.

நன்றி: பிபிசி


உலக அழகி 2008 க்கு கேரள பெண் தேர்வு

April 6th, 2008 பகுப்புகள்: தகவல், பொழுதுபோக்கு, விருது | தொகுப்பாளர்: மணியன் | 5 மறுமொழிகள் » |

Miss World 2008சனி இரவு நடந்த பண்டலூன் பெமீனா உலக அழகி 2008 போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 20 வயது பார்வதி ஓமனக்குட்டன் பட்டம் சூட்டப்பட்டார்.மும்பையைச் சேர்ந்த 22 வயதுள்ள சிம்ரன் கௌர் இரண்டாவதாக (முதல் ரன்னர் அப்)வந்து பிரபஞ்ச அழகி 2008 போட்டிக்கு இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மூன்றாவது இடத்தில் 20 வயதுள்ள கோவாவைச் சேர்ந்த ஹர்ஷிதா சக்ஸ்சேனா தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Kerala girl wins Miss World crown


கணினி விளையாட்டுகளினால் குழந்தைகளுக்கு ஆபத்து

March 27th, 2008 பகுப்புகள்: கணினி, குழந்தைகள், சமூகம், தகவல் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்த மதிப்பீட்டை தயாரித்த மனோதத்துவ நிபுணர் தான்யா பைரன் அவர்களின் கருத்துப்படி, குழந்தைகளைத் தனியாக கம்ப்யூட்டரில் விளையாடவிடுவது என்பது கண்காணிப்பு மேற்பார்வை இல்லாமல் அவர்களை தனியே வீட்டுக்கு வெளியில் விளையாட விடுவதைப் போன்றதே என்று குறிப்பிட்டுள்ளது.

கணினியில் குழந்தைகள் விளையாட்டுகளினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பீட்டின்படி, புதிய தொழில்நுட்பங்கள் வியக்கத்தக்க வாய்ப்புகளை குழந்தைகளுக்கு வழங்கினாலும், டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகள் எதிர்நோக்கக்கூடிய ஆபத்துகள் பற்றியும் பெற்றோர் அறிந்துவைத்துக்கொள்ளுதல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி விளையாட்டுகள் தரப்படுத்தப்பட வேண்டும், சீரமைக்கப்பட வேண்டும், அவை விளம்பரம் படுத்தப்படுவது குறித்து விதிமுறைகள் இருக்க வேண்டும் என்றும் கணினி இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்ப்பு பற்றி அறிவூட்ட பிரச்சார இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Byron Report targets Google, YouTube in internet safety shake-up - Times Online

2. Computer games to get cigarette-style health warnings - Times Online

3. BBC NEWS | Technology | Video games ratings face overhaul


எம்.ஜி.எம் கேளிக்கை பூங்காவில் கணினி ஊழியர் மரணம்

March 25th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சமூகம், சர்ச்சை, தமிழ்நாடு, பொழுதுபோக்கு, மரணம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

சென்னை அருகே உள்ள எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் பொழுது போக்கு பூங்காவில் சாப்ட்வேர் என்ஜீனியர் மரணமடைந்தார். நீச்சல்குளத்தில் தத்தளித்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல எம்.ஜி.எம். நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்.ஜி.எம். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாகவே தனது மகன் பலியாகியுள்ளதாக சுரேஷ்குமாரின் தந்தை திணேஷ்குமார் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் நல்ல உயரம். அந்த நீச்சல்குளத்தில் 4 அடி அளவுக்கே தண்ணீர் இருந்துள்ளது. எனவே நீரில் மூச்சுத் திணறியதாக கூறுவதை நம்ப முடியாது.

மூச்சுத் திணறி எனது மகன் இறந்திருக்க முடியாது. வேறு ஏதோ நடந்திருக்கிறது.

நீச்சல் குளம் முறையாக பராமரிக்கப்படவில்லை. நீச்சல்குளத்தில் எனது மகன் போராடியபோது அவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப எம்.ஜி.எம். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.

கடந்த ஆண்டு எம்.ஜி.எம். பெரும் சர்ச்சையில் சிக்கியது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது ராட்சத ராட்டினத்தின் ஒரு பகுதி விழுந்து அவர் படுகாயமுற்றார். இன்னும் கூட அவர் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.எம்மில் வேலை பார்த்து வந்த ஸ்ரீலட்சுமி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்போது சுரேஷ்குமார் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் பரிதாபமாக இறந்துள்ளார்.

முழுவதும் வாசிக்க: தட்ஸ்தமிழ் - Software Engineer dies mysteriously at MGM

முந்தைய சற்றுமுன்:

1. சென்னை தீம் பார்க் விபத்து: 7 பேர் கைது

2. இராட்டினத்திலிருந்து மாணவி விழுந்த வழக்கு: பூங்கா உரிமையாளர் தலைமறைவு.

3. புத்தாண்டு கொண்டாட்டங்கள்: விபத்தும் விபரீதங்களும்


தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இணையதளத்தில் ஒளிபரப்பு

March 24th, 2008 பகுப்புகள்: இணையம், கணினி, தொலைக்காட்சி, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் இணைய தளத்தில் இலவசமாக ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திவரும் www.bigflicks.com என்ற இணைய தளத்தின் வழியாக உலகம் முழுவதுமுள்ள தமிழ் நேயர் கள் ராஜ் தொலைக்காட்சி, டிஜிட்டல் பிளஸ், ராஜ் மியூசிக்ஸ் ஆகிய மூன்று அலை வரிசைகளையும் இனி பார்க்கலாம்.

இது குறித்து பிக்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் முதன்மை அதிகாரி கமல்கியான் சந்தானி கூறுகையில், இனி உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் இலவசமாக செய்திகள், உலக நடப்புகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் இணைய தளத்தில் பார்த்து மகிழலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மட்டு மல் லாது, வெளிநாடுகளிலும் இனி ராஜ் குழும அலைவரிசைகளை இலவசமாக இணையதளத்தில் பார்க்கலாம் என ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி: விடுதலை


‘சிந்தால்’ சோப் விளம்பரத்தில் ஹ்ரிதிக் ரோசன்

March 21st, 2008 பகுப்புகள்: திரையுலகம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

நன்றி: 'Over-worked' Hrithik skips ad launch

மேலும் விவரங்களுக்கு:

1. 20% topline growth targeted in Cinthol brands

2. Cinthol relaunched, Hrithik brand ambassador


அல் அய்னில் விமான சாகச நிகழ்ச்சி

January 26th, 2008 பகுப்புகள்: அமீரகம், பொழுதுபோக்கு, விமானம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அல் அய்னில் விமான சாகச நிகழ்ச்சி

 

 ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி பகுதிக்குட்பட்ட பசுமை நகரம் என அழைக்கப்படும் அல் அய்னில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

http://www.gulfnews.com/nation/Leisure/10184958.html


ஓமன் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலித்த மஸ்கட் திருவிழா

January 25th, 2008 பகுப்புகள்: ஓமன், பொழுதுபோக்கு, விழா | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

ஓமன் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலித்த மஸ்கட் திருவிழா

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஒன்பதாவது ஆண்டாக 26 நாட்கள் நடைபெற்ற மஸ்கட் திருவிழா ஓமன் நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.

http://www.gulfnews.com/news/gulf/oman/10183959.html


ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா

January 19th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், பொழுதுபோக்கு, விளையாட்டு | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆடி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 330 ரன்களை எடுத்தது. டிராவிட் அதிகபட்சமாக 93 ரன்களை எடுத்தார். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 212 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா . தரப்பில் சைமண்ட்ஸ் அதிகபட்சமாக 66 ரன்களை எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லட்சுமண் அதிகபட்சமாக 79ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி, ஆஸி., அணிக்கு 413 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 413 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸி., அணி 340 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. இந்திய வெற்றிக்கு உதவியது.


துபாயில் விசுவின் மக்கள் அரங்கம்

January 17th, 2008 பகுப்புகள்: கலை-இலக்கியம், சமூகம், துபாய், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாயில் விசுவின் மக்கள் அரங்கம்

துபாயில் ஜெயா டிவியில் ஒலிபரப்பாகி வரும் விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சி அல் நாஸர் லெசர் லேண்டில் வெள்ளிக்கிழமை ( 18 ஜனவரி 2008 ) நடைபெற உள்ளது.

பரத நாட்டிய நிகழ்ச்சி

துபாய் தமிழ்க்குடும்பத்தின் சார்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 18 ஜனவரி 2008 ) மாலை இந்தியப் பள்ளி ஷேக் ரஷீத் அரங்கில் நடைபெற உள்ளது.

பிரபல நாடக நடிகர் ஆர்.எஸ். மனோகரின் உறவினர் மீரா ஸ்ரீகாந்த் இந்நிகழ்ச்சியை வழங்குகிறார்.

தொகுப்பில் உதவி :

http://www.dinamalarbiz.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=239&Country_name=Gulf&cat=new


ரயில்வே : தொடரும் கேரள ஆதிக்கம்-தமிழகம் விடுபடுமா?

January 16th, 2008 பகுப்புகள்: இரயில், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தொடரும் கேரள ஆதிக்கம்-தமிழகம் விடுபடுமா?
    

Train track

சேலம்: கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு போராடிப் பெற்ற சேலம் ரயில்வே கோட்டம், பாலக்காட்டின் பிடியில் இருந்து முழுமையாக மீளாத பரிதாபத்தில் உள்ளது.

சேலம் ரயில் கோட்டம் உருவாகிவிட்டாலும் இந்த வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் `எமர்ஜென்சி கோட்டாவின்’ (இ.க்யூ) கீழ் டிக்கெட்களைப் பெற கேரளத்தின் பாலக்காடு கோட்ட அதிகாரிகளைத் தான் நாட வேண்டிய நிலை நிலவுகிறது.

பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழக ரயில்வே பகுதிகளைப் பிரித்து சேலம் கோட்டம் உருவாக்க திட்டமிட்டவுடன் கேரள அரசியல்வாதிகள் வானுக்கும் தரைக்குமாக குதித்தனர்.

தென்னக ரயில்வேயில் உள்ள மலையாள அதிகாரிகளின் துணையோடு இத் திட்டத்தை முடக்க தீவிரமாக முயன்றனர். இவர்களுக்கு டெல்லியில் உள்ள ரயில்வே உயர் அதிகாரிகள் சிலரும் (இவர்களும் மலையாளிகளே) உடந்தையாக இருந்தனர்.

ஆனால், ஒரு வழியாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ரயில்வே இணையமைச்சர் வேலுவின் பிடிவாதத்தால் அமைச்சர் லாலுவுக்கு நிர்பந்தம் தரப்பட்டு கோட்டம் பிரிக்கப்பட்டது.

ஆனாலும் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளை பாலக்காட்டிடம் தமிழகம் இழந்தது.

இப்போது சேலம் கோட்டம் உருவாகி இரு மாதங்கள் ஓடிவிட்டாலும் பாலக்காட்டின் ஆதிக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

குறிப்பாக சேலம் வழியாகச் செல்லும் ரயில்களில் `எமர்ஜென்சி கோட்டாவை’ பாலக்காடு தனது ஆதிக்கத்தில் தொடர்ந்து வைத்துக் கொண்டுள்ளது. மிக அவசரமான காரியங்களுக்காக ரயில்வேயில் முன்பதிவு செய்ய உதவுவது தான் ‘இ.க்யூ’ எனப்படும் ‘எமர்ஜென்சி கோட்டா’.

இந்த கோட்டாவின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் டிக்கெட் வாங்குவது குதிரைக் கொம்பாகிவுள்ளது. இந்த கோட்டாவின் கீழ் வரும் டிக்கெட்டுகளை பாலக்காடு கோட்ட அதிகாரிகளே லவட்டிக் கொண்டு வருகின்றனர்.

இதனால் தமிழகம் வழியாக செல்லும் 23 ரயில்களில் இ.க்யூ கோட்டாவால் கேரளத்தைச் சேர்ந்தவர்களே பலனடைந்து வருகின்றனர்.

இந்த கோட்டாவின் கீழ் பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல தமிழக எம்.பி, எம்எல்ஏக்கள் கூட டிக்கெட் பெற முடியவில்லையாம். அந்த அளவுக்கு கேரளம் அதிகாரிகள் ஆதிக்க தாண்டவம் ஆடி வருகிறது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் எம்பி கார்வேந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில்,

கோவை, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மூன்று முக்கிய நகரங்களை உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் இ.க்யூ வசதி பெற இன்னும் பாலக்காட்டையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் 22 ரயில்களுக்கு மட்டுமே இ.க்யூ வசதி உள்ளது. ராஜ்கோட் எக்ஸ்பிரஸ், கோவை குர்லா எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூர்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், ஜனசதாப்தி, கொங்கு எக்ஸ்பிரஸ், கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட ரயில்களுக்கு மட்டுமே சேலத்தில் இ.கியூ. வசதி பெற முடிகிறது.

ஆனால், சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ், டெல்லி-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆழப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ், மங்களூர்-சென்னை மெயில், திருச்சி-எர்ணாகுளம் டீ கார்டன் எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-சென்னை மெயில், திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆழப்புழா-பொக்காரோ ஸ்டீல் சிட்டி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-மைசூர் ஐலேண்டு எக்ஸ்பிரஸ்,

எர்ணாகுளம்-பெங்களூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-கோர்பா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-இந்தூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-கெளஹாத்தி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-மும்பை எக்ஸ்பிரஸ், கொச்சுவழி-பெங்களூரு எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய 23 ரயில்களுக்கு சேலம் கோட்டத்தில் முன்பதிவு இ.க்யூ வசதி இல்லை.

இந்த ரயில்களுக்கு இ.க்யூ மூலம் முன்பதிவு செய்ய பாலக்காடு தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது என்று கூறியுள்ளார் கார்வேந்தன்.

கேரளத்தின் ஆதிக்கத்தில் இருந்து தமிழகம் என்று விடுபடுமோ?

www.thatstamil.com


கேபிள் டி.வி.யில் புதிய படங்கள் ஒளிபரப்பு

January 10th, 2008 பகுப்புகள்: திரைப்படம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கேபிள் டி.வி.யில் புதிய படங்கள் ஒளிபரப்பு

நிலக்கோட்டை கேபிள் டிவியில் தற்போது புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. நிலக்கோட்டை அணைப் பட்டி ரோட்டில் கடந்த ஒரு ஆண்டாக புதிய கேபிள் டிவி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்து 7 மற்றும் 8 வது வார்டுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுக்கப்பட் டுள்ளது. துவக்கத்தில் சன், ராஜ்,ஜெயா சேனல்களை ஒளிபரப்பி வந்தனர்.கடந்த மூன்று மாதங்களாக புதிய திரைப்படங்களையும் கேபிளில் ஒளிபரப்பி வருகின்றனர். கடந்த வாரம் அஜீத் நடித்த பில்லா ஒளிபரப்பப்பட்டது. வேல், கல்லுõரி, பொல்லாதவன் உள்ளிட்ட சமீபத்தில் திரையிடப்பட்ட படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட ரசிகர்கள் கேபிள் டிவி ஆபரேட் டர்களிடம் திரையிடக்கூடாது என முறையிட்டும் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. இது குறித்து போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.

www.dinamalar.com