சென்னையை அடுத்த மீஞ்சூரில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் வரும் ஜனவரி மாதம் மத்தியில் முடிக்கப்பெற்று அந்த நிலையத்தில் இருந்து குடிநீரை வழங்க இயலும் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
அந்நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டத்தில் 69 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையத்திலிருந்து மாதவரம் மற்றும் செங்குன்றம் வரை குடிநீரை கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
மாதவரம் நீரேற்று நிலையம் வரை குழாய் பதிக்கும் பணிகளில் மொத்தம் 23 ஆயிரத்து 257 மீட்டர் நீளத்தில் தற்போது 18 ஆயிரத்து 622 மீட்டர் நீளத்திற்கு, ஆயிரம் மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்கள் பதிக்க ப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது எண்பது சதவீத பணிகள் முடிவடைந்திருப்பதாகக் கூறினார்.
மாதவரம் நீரேற்று நிலையத்தில் இருந்து செங்குன்றம் வரை குழாய் பதிக்கும் பணிகளில் தற்போது 85 சதவீதம் அளவிற்கு நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.


உலகின் பிறநாட்டு விளையாட்டுவீரர்களுக்கு கோடிகளில் பணம் வழங்கும் இந்தியாவில் உலக அரங்கில் கேரம் விளையாட்டில் விருதுகளை சத்தமின்றி கொணர்ந்து சேர்க்கும் இளவழகியின் சாதனைகளை ‘கண்டு’கொள்ள நேரமெங்கே ? தானி ஓட்டுநரின் 24 வயது மகளான இவருக்கு தனது சாதனைகளை ஊடகங்கள் கவனிக்கவில்லையே என இருக்கும் மனவருத்தம் சொல்லில் வடிக்க முடியுமா ?