தமிழ்நாடு | சற்றுமுன்...




கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.

July 8th, 2008 பகுப்புகள்: அரசியல், சென்னை, தகவல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

சென்னையை அடுத்த மீஞ்சூரில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும்  திட்டப் பணிகள் வரும் ஜனவரி மாதம் மத்தியில் முடிக்கப்பெற்று அந்த நிலையத்தில் இருந்து குடிநீரை வழங்க இயலும் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அந்நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்டத்தில் 69 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையத்திலிருந்து மாதவரம் மற்றும் செங்குன்றம் வரை குடிநீரை கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
மாதவரம் நீரேற்று நிலையம் வரை குழாய் பதிக்கும் பணிகளில் மொத்தம் 23 ஆயிரத்து 257 மீட்டர் நீளத்தில் தற்போது 18 ஆயிரத்து 622 மீட்டர் நீளத்திற்கு, ஆயிரம் மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்கள் பதிக்க ப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது எண்பது சதவீத பணிகள் முடிவடைந்திருப்பதாகக் கூறினார்.
மாதவரம் நீரேற்று நிலையத்தில் இருந்து செங்குன்றம் வரை குழாய் பதிக்கும் பணிகளில் தற்போது 85 சதவீதம் அளவிற்கு நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.


லஞ்சத்தின் பிடியில் காவல்துறை!

July 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அறிவிப்பு, சர்ச்சை, தமிழ்நாடு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

லஞ்சத்தின் பிடியில் காவல்துறை!

ஸ்காட்லாந்து போலீஸýக்கு இணையாகப் பேசப்படும் தமிழக காவல் துறையினர் சமீப காலமாக லஞ்சம் வாங்க முயன்றதாக கைதாகி வரும் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.

சாலை விதிகளை மீறி செல்லும் நபர்களை மடக்கும் போக்குவரத்து துறையின் அமலாக்கப் பிரிவு போலீஸôர் ஒரு கட்டத்தில் அந்த நபரிடம் வழக்கு பதிவு செய்வதா? அல்லது பணம் தந்துவிட்டு போகிறாயா? என்று பேரம் பேசுகின்றனர்.

தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் பாக்கெட்டில் இருக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிடும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது.

கடந்த மே மாதம் கிண்டி போக்குவரத்து விசாரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம் கேட்டதாக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸôரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார்.

மாமூல் கேட்டதாக.. செல்போன் கடை உரிமையாளர் பஷீர் அகமதுவிடம் ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியதாக சிபிசிஐடி விடியோ தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் அடைக்காமல் இருக்க… குண்டர் சட்டத்தில் அடைக்காமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட குமரன் நகர் இன்ஸ்பெக்டர் பாலாஜியும், தலைமைக் காவலர் பால் துரையும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

மூன்று மாதத்தில் 4 போலீஸôர் கைது: கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையில் சுமார் 9 லஞ்ச வழக்குகளில் காவல் துறை உள்பட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த 9 பேர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக் காவலர் அடங்குவர்.

ஓராண்டு தண்டனை பெற்ற போலீஸôர்: லஞ்சம் வாங்கியதான வழக்கில் கைதான துரைப்பாக்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ், தலைமைக் காவலர் சம்மனசு நாதன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஓராண்டு தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் கடந்த மே 28-ல் விதித்துள்ளது.

எங்கே புகார் செய்யலாம்: அரசு துறைகளைச் சேர்ந்தவர்கள் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி:

டி.எஸ்.பி., ஊழல் தடுப்பு பிரிவு, சென்னை-2, எண் 18, முதல் கேனல் தெரு, காந்தி நகர், சென்னை-20. தொலைபேசி எண்: 044- 2445 5089.
 
 


டீசல் பற்றாகுறை: பலபாடசாலைகள் மூடல்

July 2nd, 2008 பகுப்புகள்: தமிழ்நாடு, போக்குவரத்து, போராட்டம், விலைவாசி | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை மற்றும் அதன் சுற்றுபுற நகர்களில் இயங்கிவரும் பிரமாண்ட பொறியியல், மருத்துவ கல்லூரிகள், டீசல் பற்றாக்குறை காரணமாக மாணவர்களைக் கூட்டிவர பேருந்துகளை இயக்க முடியாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறிப்பாக புறநகர்களில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளுமே உள்ளூர் மாணவர்களை நம்பி செயல்படுபவைஅல்ல. இக்கல்லூரிகளில் 30 சத விகித மாணவர்கள் மட்டுமே ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலோர் கல்லூரிகள் இயக்கும் வாகனங்களிலும், வெகு சிலர் மட்டும் இரு சக்கர வாகனங் களிலும் கல்லூரிக்குச் சென்று வருகின்றனர்.
டீசல் சப்ளை சீராகும் வரை இனி பேருந்துகளை நிறுத்தி வைக்கலாம், கல்லூரிகளையும் மூடி வைக்கலாம் என நிர்வாகங்கள் முடிவெடுத்து அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிகள் மூடப்படுவதாக நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
எஸ்ஆர்எம் போன்ற பெரிய கல்லூரிகள் மட்டும் தங்கள் கல்லூரி பேருந்துகளுக்கென்று தனியாக வளாகத்துக்குள்ளேயே பங்க் வைத்துள்ளன. அதாவது மொத்தமாக டீசல் வாங்கி இருப்பு வைத்துள்ளன. ஒரு வேளை இன்னும் சில தினங்கள் இதே நிலை நீடித்தால் அனைத்துக் கல்லூரிகளுமே மூடப்பட்டாலும் வியப்பில்லை.


பெட்ரோல் தட்டுப்பாடு நள்ளிரவுக்குள் சீராகும் - தலைமைச் செயலாளர்

July 1st, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, சென்னை, தமிழ்நாடு, போக்குவரத்து, போராட்டம் | தொகுப்பாளர்: ✪சிந்தாநதி | மறுமொழிகள் இல்லை » |

தமிழ்கத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு காரணமாக இன்று காலை முதல் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்துகள் உட்பட வாகனங்களும் இயங்க இயலாத கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 3000க்கு மேற்பட்ட தனியார் பேருந்துகளும் 20 சதவீத அரசுப் பேருந்துகளும் நிறுத்தப் பட்டு விட்டன.

நிலைமை சீராகும்… திரிபாதி நம்பிக்கை

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இன்று நள்ளிரவு முதல் அகில இந்திய அளவில் லாரிகள் ஸ்டிரைக் ஆரம்பமாகிறது.  இதற்கு முன்னதாக  பெட்ரோல் தட்டுப் பாடு காரணமாக இன்றே இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிலைமை சீராகாத பட்சம் நாளை தமிழ்கத்தில் எந்த வாகனமும் சாலையில் காணப்படாது.
இதற்கிடையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக தலைமை செயலாளர் திரிபாதி தமிழகத்தில் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு இன்று நள்ளிவுக்குள் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்று  தெரிவித்துள்ளார்.


டீசல் பற்றாக்குறை:நகரின் பல பெட்ரோல் பங்க்கள் மூடல்

July 1st, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, சென்னை | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

தமிழகம் முழுவதும் டீசல் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பங்குகள் மூடப்பட்டன. இதனால் லாரிகள், வேன்கள் உள்ளிட்ட டீசல் வாகனங்கள் டீசல் கிடைக்காமல் ஸ்தம்பித்துப் போயுள்ளன.

சமீபத்திய பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 90 சதவீத பங்குகளில் சாதாரண பெட்ரோல், டீசல் வி ற்பனை அறவே நின்று போய் விட்டது. அதற்கு மாறாக பிரீமியம், பவர் பெட்ரோல், டீசல்தான் விற்கப்பட்டு வருகிறது.

ஆனால் சாதாரண பெட்ரோல், டீசலைத்தான் பவர், பிரிமீயம் என்ற பெயரில் விற்று ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டீசல் விநியோகம் பெரும் பா திப்பை சந்தித்துள்ளது. டீசல் விநியோகம் போதிய அளவில் இல்லாததால், பல பங்குகளில் டீசல் ஸ்டாக் இல்லை என்ற போர்டு தொங்க விடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் இன்று நிலைமை மேலும் மோசமடைந்தது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பங்குகளில் டீசல் இல்லாத காரண த்தாலும், பவர், பிரிமீயம் பெட்ரோலுக்கும் பஞ்சம் ஏற்பட்டதாலும் பங்குகளை மூடத்தொடங்கியுள்ளன. சென்னை நகரில் பல பங்குகளை மூடி விட்டனர்.

திறந்திருக்கும் ஒன்றிரண்டு பங்குகள் முன்பு நூற்றுக்கணக்கான வாகனங்கள் குவிந்துள்ளன. அவற்றை ஒழுங்கு படுத்தி வரிசையில் வர வைத்து டீசல் வழங்கி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இதே நிலைதான். இதன் காரணமாக வேன்கள், லாரிகள், பள்ளிப் பேருந்துகள், ஷேர் ஆட்டடீக்கள் உள்ளிட்ட டீசலால் இயங்கும் வாகனங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. பல பகுதிகளில் கொந்தளிப்பும் காணப்படுகிறது. இதனால் பங்குகள் முன்பு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.


தமிழகம் குஜராத்தாக மாறும்: கனிமொழி எச்சரிக்கை

June 16th, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தமிழகம் குஜராத்தாக மாறும்: கனிமொழி எச்சரிக்கை

மதவாத சக்திகளை ஆதரிக்கும் ஜெயலலிதாவை வளரவிட்டால், குஜராத்தைப் போல் தமிழகமும் வன்முறைக் களமாக மாறும் அபாயம் உள்ளது என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

கடலூர் திமுக மகளிரணி மாநில மாநாட்டில் பெரியாரின் படத்தை திறந்துவைத்து அவர் பேசியது:

பொதுநலத்துக்காக எதிரிகளைக் கொல்வது கூட நியாயம் என்று பகவத்கீதைக்கு திலகர் உரை எழுதினார். மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே தனது செயலுக்கு இதே வரியைச் சொல்லித்தான் நியாயம் கற்பித்தார்.

மதவெறி கொலைவெறியைத்தான் தூண்டும் என்பதை குஜராத்தில் கண்டோம். பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என எத்தனைப் பேர்களை அவர்கள் கொன்றார்கள் என்றும் பார்த்தோம்.

இந்த கொலைகாரர்களை மோடி பாராட்டியதை ஒரு பத்திரிகை வெளியிட்டிருந்தது. அப்படிப்பட்ட மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து விருந்தும் அளிக்கிறார் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா.

அவரது ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சாலைப் பணியாளர்களுக்கும் எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த இரண்டும் ஒரே வன்முறைதான். இவர்களை வளரவிட்டால் தமிழ்நாடு குஜராத்தாக மாறும் அபாயம் உள்ளது.

சேது திட்டத்தை சேது”ராம்’ திட்டம் என்று பெயர் மாற்றினாலும் பரவாயில்லை நிறைவேற்றுங்கள் என்று கருணாநிதி கூறினார். அதற்கு புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நண்பர் கருணாநிதியின் நாத்திகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமன் யார்? என்ற கேள்வியை கருணாநிதி எப்போதும் கேட்பார். அவர் மட்டுமல்ல; அவரது வாரிசுகள், வாரிசுகள் என்றால் குடும்பத்தினர் மட்டுமல்ல, தமிழ்க் குடும்பத்தின் ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியைக் கேட்பார்கள்.

சமூகத்துக்குப் பயன்படும் என்றால் நான் விபூதிகூட பூசுவேன் என்று பெரியார் கூறினார். அந்தவகையில்தான் ராமனின் பெயர்தானே வைத்துவிட்டுப் போங்கள் என்று கருணாநிதி கூறினார்.

எனவே, தெரியாமல் பேசி வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று அந்த நண்பருக்கு பாசத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.

வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்ற நிலை மாறி, வட நாட்டவர்கள் தமிழகத்திடம் ஆலோசனை கேட்கும் காலம் வந்துள்ளது. அதற்குக் காரணம் திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும்தான்.

சேதுசமுத்திரத் திட்டத்தை பொருளாதாரம், சுற்றுச்சூழல் என காரணங்களை கூறி எதிர்த்தார்கள். அவர்களுக்கு உரிய பதில் அளித்துவிட்டோம். மாற்று வழி இருக்கிறதா என்று கேட்டார்கள். அதற்கும் வழியில்லை என்று தெரிவித்துவிட்டோம்.

தற்போது அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் அறிவுப்பூர்வமானது அல்ல! சேதுசமுத்திரத் திட்டம் நமக்கெல்லாம் மாற்றத்தைக் கொண்டுவரும் திட்டம். நமது சுயமரியாதையை கேள்விக்குறியாக்கும் ஒன்றாக இந்தத் திட்டத்தின் எதிர்ப்பு மாறியுள்ளது. இதை விட்டுவிட்டோம் என்றால், நாம் இத்தனை ஆண்டுகள் போராடிப் பெற்றதெல்லாம் இழந்ததாகி விடும். இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பகுத்தறிவு தீபம் ஏந்தி முதல்வர் கருணாநிதி பின்னால் அணி வகுப்போம். நமது உரிமையை யாருக்காகவும் விட்டுத் தரமாட்டோம் என்றார் கனிமொழி.
 
 


ஜூன் 11-ம் தேதி நூற்றாண்டு விழா காணும் எழும்பூர் ரயில் நிலையம்

May 30th, 2008 பகுப்புகள்: *பொது, சென்னை, தகவல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஜூன் 11-ம் தேதி நூற்றாண்டு விழா காணும் எழும்பூர் ரயில் நிலையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் 11-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, புகழ்பெற்ற மரபுச் சின்னங்களில் முதன்மையானதாக ஏழும்பூர் ரயில் நிலையம் இன்றளவும் திகழ்கிறது.

கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் 11-ல் தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையம் தமிழகத்தின் நுழைவாயிலாக விளங்குகிறது.

நூற்றாண்டு விழாவையொட்டி, புதுப்பொலிவு பெறும் வகையில் ரூ. 11 கோடியில் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் மான்சிங் புதன்கிழமை கூறியதாவது:
எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே இதுவரை ரூ. 3 கோடியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவின் மூலம் மேலும் ரூ. 4 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதுதவிர வளர்ச்சிப் பணிகளுக்காக கூடுதலாக ரூ. 4 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. பிளாட்பாரங்கள் விரிவாக்கம், பயணிகளுக்கான இருக்கை வசதி, நடைமேம்பாலங்கள், கழிவறைகளைப் புதுப்பிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெறுகின்றன.

இதுதவிர கண்ணாடி -அப்ட், ஓளிரும் விளக்குகள், பொது ஆறிவிப்பு வசதி, பயணிகளின் உடைமைகளைச் சோதிக்க கன்வேயர் ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

வரும் ஜூன் 11-ம் தேதி எழும்பூர் ரயில்நிலைய வளாகத்தில் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதில் ரயில்வே இணை ஆமைச்சர் இர். வேலு மற்றும் மாநில ஆமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் மான்சிங்.

அஞ்சல் தலை வெளியீடு:நூற்றாண்டு விழாவையொட்டி எழும்பூர் ரயில் நிலையத்தின் முகப்புத் தோற்றத்தை வண்ணப் படமாக அச்சிடப்பட்ட அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் ஊறை வெளியிடப்பட உள்ளது.


உறவினருக்கு பரிந்துரை: அமைச்சர் பூங்கோதை ராஜினாமா

May 14th, 2008 பகுப்புகள்: ஊழல், சட்டம் - நீதி, தமிழக அரசியல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றுவதற்காக ஏடிஜிபியிடம் பரிந்துரை செய்த விவகாரத்தில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

DMK Minister - Resignation for Corruption: Phone tapping by Subramania Swamyதமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் துணை இன்ஜினியர் ஜவஹர் என்பவர் சமீபத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் அமைச்சர் பூங்கோதையின் உறவினர் ஆவார். ஜவஹரை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, தமிழக ஏடிஜிபி உபாத்யாயாவை அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடியை, ஜனதா தளம் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆதாரத்துடன் வெளியிட்டார். இதுகுறித்து கவர்னரிடமும் அவர் புகார் செய்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் பேரவையில் இன்று எழுப்பிய பிரச்சனைக்கு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போதைய விஞ்ஞான யுகத்தில் ஒருவர் பேசுவதை மற்றொருவர் பதிவு செய்வது எளிதானது. எனினும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியுடன் பேசியதாக செய்தி வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அமைச்சர் என்பது வேதனையை தருகிறது.

இதற்கு பொறுப்பேற்று தனது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் பூங்கோதை அனுப்பி வைத்துள்ளார். உறவினரை காப்பாற்ற முயற்சிக்கும் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று. தனது தவற்றை உணர்ந்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து வேறொரு விசாரணைக் குழு தேவையா? அல்லது தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்கும் குழுவே போதுமா? என்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படுகிறது.

லஞ்சம் வாங்குவோருக்கு ஆதரவாக செயல்படுவது குற்றம் ஆகும். நிச்சயம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

நன்றி: எம்.எஸ்.என் & யாஹு

மேலும் விவரங்களுக்கு: Tamil Nadu minister quits after expose - National News – News – MSN India - News


சென்னை கபாலி கோவிலில் திருட்டு

April 17th, 2008 பகுப்புகள்: குற்றம், சென்னை | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை மயிலையில் அமைந்துள்ள கபாலீச்வரர் கோவிலில் உண்டியல் ஒன்று உடைக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் களவாடப்பட்டுள்ளன.

வியாழன் அதிகாலை வந்த கோவில் ஊழியர்கள் கோவிலைத் திறந்தபோது இதனைக் கண்டு புகார் பதிந்தனர்.

உண்டியல் அதன் இடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு கோவிலின் ஒரு மூலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது. மூன்று பாதுகாவல் ஊழியர்கள் கோவிலுக்குள் இருந்தும் CCTV காமிராக்கள் கண்காணித்தும் இத்திருட்டு நடந்துள்ளது அதிகாரிகளுக்கு வியப்பாக உள்ளது.

Theft in Chennai’s Kapaleeswarar temple


ஒரு வரி செய்திகள் - விடுதலை

April 14th, 2008 பகுப்புகள்: *பொது, கலை-இலக்கியம், கல்வி, சட்டம் - நீதி, சென்னை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

  • சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பதிப்போவியங்கள் தொடர்பாக நிரந்தர காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. (மேலும்: The Hindu : Front Page : Facelift for heritage buildings in Chennai)
  • மக்கள் வீடுகளுக்கே சென்று நீதி வழங்குவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் ஏழாயிரம் கிராம நீதிமன்றங்களை ஏற்படுத்த உள்ளது என மத்திய அமைச்சர் வேங்கடபதி கூறியுள்ளார். (முந்தைய செய்தி: The Hindu : Union Minister of State for Law and Justice K. Venkatapathy: Centre planning ‘gram nyayalayas’ (village courts))
  • நாடு முழுவதும் உள்ள கிராம பள்ளிகளில் மேல் நிலைப் படிப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு பாரத ஸ்டேட் வங்கி தலா ரூ. 1001 ரொக்கப் பரிசு வழங்கும் என அவ்வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். (மேலும்: The Hindu : ‘The State Bank of India Talent Awards’: SBT awards for toppers)

முழுவதும் வாசிக்க: விடுதலை


எம்.ஜி.எம் கேளிக்கை பூங்காவில் கணினி ஊழியர் மரணம்

March 25th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சமூகம், சர்ச்சை, தமிழ்நாடு, பொழுதுபோக்கு, மரணம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

சென்னை அருகே உள்ள எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் பொழுது போக்கு பூங்காவில் சாப்ட்வேர் என்ஜீனியர் மரணமடைந்தார். நீச்சல்குளத்தில் தத்தளித்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல எம்.ஜி.எம். நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்.ஜி.எம். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாகவே தனது மகன் பலியாகியுள்ளதாக சுரேஷ்குமாரின் தந்தை திணேஷ்குமார் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் நல்ல உயரம். அந்த நீச்சல்குளத்தில் 4 அடி அளவுக்கே தண்ணீர் இருந்துள்ளது. எனவே நீரில் மூச்சுத் திணறியதாக கூறுவதை நம்ப முடியாது.

மூச்சுத் திணறி எனது மகன் இறந்திருக்க முடியாது. வேறு ஏதோ நடந்திருக்கிறது.

நீச்சல் குளம் முறையாக பராமரிக்கப்படவில்லை. நீச்சல்குளத்தில் எனது மகன் போராடியபோது அவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப எம்.ஜி.எம். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.

கடந்த ஆண்டு எம்.ஜி.எம். பெரும் சர்ச்சையில் சிக்கியது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது ராட்சத ராட்டினத்தின் ஒரு பகுதி விழுந்து அவர் படுகாயமுற்றார். இன்னும் கூட அவர் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.எம்மில் வேலை பார்த்து வந்த ஸ்ரீலட்சுமி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்போது சுரேஷ்குமார் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் பரிதாபமாக இறந்துள்ளார்.

முழுவதும் வாசிக்க: தட்ஸ்தமிழ் - Software Engineer dies mysteriously at MGM

முந்தைய சற்றுமுன்:

1. சென்னை தீம் பார்க் விபத்து: 7 பேர் கைது

2. இராட்டினத்திலிருந்து மாணவி விழுந்த வழக்கு: பூங்கா உரிமையாளர் தலைமறைவு.

3. புத்தாண்டு கொண்டாட்டங்கள்: விபத்தும் விபரீதங்களும்


தர்மபுரி: மீண்டும் துப்பாக்கி கொள்ளை

March 24th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, தமிழ்நாடு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

பென்னாகரத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஞாயிற்றுக் கிழமை இரவு துப்பாக்கி கொள்ளை அடிக்கப்பட்டது. இச்சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள அரசு கருவூலத்தில் நடராஜன் என்ற போலீஸ்காரர் நேற்றிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சாப்பிடுவதற்கு செல்வதற்கு முன் கருவூல அலுவலகத்தில் தனது துப்பாக்கியை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது துப்பாக்கி திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கருவூலத்தின் கதவை உடைத்து மர்மநபர்கள் துப்பாக்கியை திருடிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். எனினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கடந்த மாதம் அதியமான கோட்டை காவல் நிலையத்தில் இருந்து 6 துப்பாக்கிகள் திருடு போயின. இதுதொடர்பாக காவல்துறையினர் 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

நன்றி: எம்.எஸ்.என்.