*சிறப்புச்செய்தி | சற்றுமுன்...




மன்மோகன் அரசு தப்பியது ஆதரவு - 275 எதிர்ப்பு - 256

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அரசியல், இந்தியா, தகவல், தேர்தல், தேர்தல்முடிவு, நாடாளுமன்றம், மத்திய அரசியல், வரலாறு | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

மத்திய அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரி இருந்ததை அறிந்திருப்பீர்கள் இவ்வாக்கெடுப்பில் காங்கரசுக்கு ஆதரவாக 256 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் மின்னனு இயந்திரம் மூலம் பதிவானதை அடுத்து மன்மோகன் அரசு தனது ஆட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தங்களது வாக்குகள் பதிவாக வில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததால் பின்னர் வாக்கு சீட்டு அளித்து வாக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து இப்போது ஆதரவு 275 எனவும் எதிர்ப்பு 256 என அறிவித்து  காங்கிரசு அரசு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.


வாக்கெடுப்பில் அரசு முன்னணி: ஆதரவு- 253 எதிர்ப்பு-232

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், நாடாளுமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வாக்கெடுப்பில் அரசு முன்னணி: ஆதரவு- 253 எதிர்ப்பு-232
    

 

Manmohan Singh

டெல்லி: மக்களவையில் இன்று பெரும் பரபரப்புக்கு இடையே நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 20 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. மேலும் சுமார் 54 எம்பிக்களின் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்து வருகின்றனர்.

மி்ன்னணு எந்திரம் மூலம் நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் 487 வாக்குகளே பதிவாயின. இதில் அரசுக்கு ஆதரவாக 253 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்தனர். 2 பேர் வாக்களிக்கவில்லை என ஓட்டளித்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் ஓடி வந்து பிரதமருடனும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனும் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

மீதமுள்ள சுமார் 54 எம்பிக்கள் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்து வருகின்றனர். இவர்களது வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகே இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

முன்னதாக பிரதமர் பேசிய பின்னர் வாக்கெடுப்பு நடக்கும் என சபாநாயகர் அறிவித்தார். ஆனால், பிரதமர் தனது பதிலை அறிக்கையாக தாக்கல் செய்துவிட்டார், பேசவில்லை.

இதையடுத்து ஓட்டெடுப்பு தொடங்கியது. நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் ஆம் என்க, எதிர்ப்போர் இல்லை என சபாநாயகர் அறிவிக்க ஆதரிப்போர் ஆம் என்றும், எதிர்ப்போர் இல்லை என்றும் குரல் தந்தனர்.

இதையடுத்து மின்னணு எந்திரத்தில் வாக்களிக்குமாறு எம்பிக்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனால், பாஜக எம்பிக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டபடி இருந்ததால் ஓட்டெடுப்பு தாமதமானது. ஒருவழியாக 7.30 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது.



பதவி போனால் விலாசமும் போய்விடும்: அமைச்சர்களுக்கு விஜயகாந்த் பதில்

July 21st, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பதவி போனால் விலாசமும் போய்விடும்: அமைச்சர்களுக்கு விஜயகாந்த் பதில்

பதவி போனால் விலாசமும் போய்விடும் என்று தமிழக அமைச்சர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கச்சத்தீவு பிரச்னையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம் என்று தி.மு.க. உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார்.

ஆனால் அதேநேரத்தில் மீனவர்களுக்காக ராமேஸ்வரத்தில் தேமுதிக நடத்திய போராட்டம் குறித்து அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்துள்ளனர்.

எனது விலாசத்தைத் தேட முயற்சிப்பதாகவும், பைத்தியக்காரன் என்றும், உடை அணியாத நாடகம் நடத்துவதாகவும் வசைபாடியுள்ளனர்.

கச்சத்தீவு ஒப்பந்தம் 1974-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு, நமக்கு வழங்கப்பட்ட உரிமைகள் நெருக்கடி காலத்தில் பறிக்கப்பட்டன. ஆனால், அன்று முதல் இன்று வரை கடந்த 34 ஆண்டுகளில் மீனவர்களுக்காக முதல்வர் கருணாநிதி என்ன செய்தார் என்று மக்கள் கேட்கமாட்டார்களா? மீனவர்கள் வடித்த கண்ணீர் கருணாநிதிக்குத் தெரியவில்லையா?

கருணாநிதியின் ரிமோட் கண்ட்ரோலில்தான் மத்திய அரசு இயங்குவதாக அமைச்சரே பேசியிருக்கிறார். அப்படியானால் அதை இயக்கி கச்சத்தீவை மீட்டிருக்கலாம் அல்லவா? அதை விடுத்து கடலோர மாவட்டங்களில் தி.மு.க. உண்ணாவிரதம் இருப்பது மக்களை ஏமாற்றும் நாடகம் அல்லவா?

நான் ராமேஸ்வரத்தில் என்ன பேசினேன் என்பது பெருவாரியான பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்ட பிறகும் திரித்துப் பேசுகிறார்கள். நல்ல மனம் படைத்தவர்கள் நான் பேசியதை நல் உணர்வோடு ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஏழை மக்கள் மீது பைத்தியம்: “பைத்தியக்காரன்’ என்று என்னை சொல்கிறார்கள். பைத்தியக்காரர்களில் பலவகை உண்டு. சிலருக்கு பண பைத்தியம், சிலருக்கு பதவி பைத்தியம், இன்னும் சிலருக்கு செங்கோல் பைத்தியம், ஆனால் எனக்கோ ஏழை மக்கள் மீது பைத்தியம். ஆகவே என்னை அவ்வாறு அழைத்ததில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.

விலாசம் தேடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை: “”மீனவர்கள் பொழிந்த கண்ணீர் எந்த அளவிற்கு என்னை வேதனைப்படுத்தியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று ஒருபக்கம் முதல்வர் கருணாநிதி அங்கலாய்க்கிறார்.

மறுபக்கம் கடலுக்குச் செல்லமாட்டோம் என்று உண்ணாவிரதம் இருக்கும் ஏழை மீனவர்கள் நிலை கண்டு நான் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதை விலாசம் தேடும் முயற்சி என்று கொச்சைப்படுத்துகின்றனர்.

விலாசம் தேடவேண்டிய அவல நிலையில் நாட்டு மக்கள் என்னை வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் பலருக்கு விலாசம் தேடித்தரும் நிலையிலேயே என்னை மக்கள் வைத்துள்ளனர்.

ஆனால் பதவி போனால் பலர் விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள் என்பது மட்டும் உறுதி” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
 


இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளது என்று பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் கூறினார்.

பாராட்டு விழா

கடந்த 2006-ம் ஆண்டு “வாருங்கள் கிராமம் செல்வோம்” என்ற திட்டத்தை கிராமப்புறங்களில் செயல்படுத்தி சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி டாக்டர் அஷ்ரப்பிற்கு மருத்துவ துறையில் தேசிய அளவில் மிக உயர்ந்த விருதான பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு திருச்சி கிளை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர் குணசேகரன், டாக்டர்கள் ஞானதிலகன், கலைக்கோவன், எஸ்.எம்.ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அஷ்ரப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கிராமங்கள் தத்தெடுப்பு

ஒரு நாள் மருத்துவ முகாம்கள் நடத்துவதால் கிராமப்புற மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் செல்ல வேண்டும். வியாதிக்கான மருந்துகள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். இந்திய மருத்துவ கூட்டமைப்பில் 2500 கிளைகள் உள்ளன. இதன் மூலம் 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளோம்.

கடந்த 60 வருடத்தில் நாம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையே இடைவெளி நீடிக்கிறது. டாக்டர்களின் அணுகுமுறை நோயாளிகளிடம் சிறந்ததாக இருக்க வேண்டும். சாலை விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். நான் அடுத்ததாக சாலை விபத்துக்கள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் கீதாராமனுஜம் நன்றி கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=426581&disdate=7/20/2008&advt=2


சென்னை : உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, குற்றம், கைது, கொலை, சட்டம் - நீதி, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

சென்னை வடபழனி அருகே உள்ள புதூர் மற்றும் ஒட்டகபாளையத்தில் பொதுமக்கள் இரவில் விடிய விடிய உருட்டு கட்டைகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர்.

சைக்கோ மனிதன் பீதியால், அவர்கள் உருட்டு கட்டைகளுடன் வலம் வருவதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாகவும் போலீஸôர் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வடபழனி, கே.கே.நகர் பகுதிகளில் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகள், குப்பை பொறுக்கும் நபர்கள் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தல், தீ வைத்து எரித்தல் என சுமார் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் வடபழனி மற்றும் கே.கே.நகர், அசோக் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதூர் மற்றும் ஒட்டகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இரவு நேரங்களில் உருட்டு கட்டைகளுடன் வலம் வருகின்றனர். அவ்வழியே செல்பவர்களும் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

காவலாளி வேடத்தில்…: காவலாளிகள் குறி வைத்து கொல்லப்பட்டு வருவதால், போலீஸôரே நேராக அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாக மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரி சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸôர் காவலாளிகளாக இரவு ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குப்பை பொறுக்கும் நபர்களாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போலவும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகப் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

அசோக்நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த நேபாள இளைஞர்கள் 3 பேரை பிடித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.


வீட்டுமனைக்காக அவதிப்படும் காமராஜரின் தங்கை மகள்

July 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வீட்டுமனைக்காக அவதிப்படும் காமராஜரின் தங்கை மகள்
    

 

விருதுநகர்: வீட்டுமனை பட்டா கோரி பல முறை மனு கொடுத்தும் கிடைக்காமல் கண்ணீர் மல்க தவித்து வருகிறார் பெருந்தலைவர்  காமராஜரின் தங்கை மகள்.

தேசம் போற்றும் உன்னத தலைவர்களில் முக்கியமானவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில் பொற்கால ஆட்சி செய்தவர். தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை தந்த அரசியல் மகான். எளிமையான அவரது வாழ்க்கை இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணம். ஆனால் அப்படி யாரும் இல்ைல என்பது வேறு விஷயம்.

அவரது தங்கை நாகம்மாள். இவரது மகள் கமலாதேவி. தற்போது விருதுநகரில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

காமராஜர் நினைவு இல்லத்தை ஒட்டி தனியாக குடியிருந்து வருகிறார் கமலாதேவி. இவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சத்திர ரெட்டியாபட்டி ஹவுசிங் போர்டில் ஒரு குடியிருப்பும், உதவித் தொகையாக ரூ.2 லட்சமும் வழங்கினார். அந்த குடியிருப்புக்கு ஆண்டுக்கு ரூ.248 வரியாக கமலாதேவி செலுத்தி வருகிறார்.

வீட்டைக் கொடுத்த புண்ணியவான்கள் அதற்குரிய பட்டாவைத் தரவில்லை. பட்டா கோரி பல முறை அரசு உயரதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார் கமலா தேவி. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கண்ணீருடன் கூறுகிறார் கமலா.

பட்டாவைக் கொடுத்து கமலாதேவியின் கவலையைத் துடைப்பார்களா உரியவர்கள்?


90வது பிறந்த நாளைக் கொண்டாடினார் நெல்சன் மண்டேலா

July 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அரசியல், அறிவிப்பு, ஆளுமை, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

90வது பிறந்த நாளைக் கொண்டாடினார் நெல்சன் மண்டேலா
    

 

டர்பன்: தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நேற்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடினர். அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இனப் பிரச்னையை எதிர்த்து போராடியதற்காக 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா. கடந்த 1990ல் விடுதலையானார். 1994ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தென் ஆப்ரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்தான் முதல் கருப்பர் இனஅதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

1999ம் ஆண்டு பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து, ஆப்ரிக்காவின் அவலநிலையாக இருக்கும் ஏழ்மை, கல்லாமை, எய்ட்ஸ் நோய்க்கு எதிராக போராடி வருகிறார் மண்டேலா.

உலக மக்களை ஈர்த்த தலைவரான மண்டேலா நேற்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார். கேப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான கியூனுவில் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அவருக்கு ஏராளமாக மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது மண்டேலா கூறுகையில், “ஓய்வு பெற்ற இந்த மனிதனுக்காக மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனால் நெல்சன் மண்டேலா அறக்கட்டளை, நெல்சன் மண்டேலா குழந்தைகள் நிதி மற்றும் மண்டேலா-ரோட்ஸ் அறக்கட்டளைகள் மூலம் எனது பணி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்பதை மக்கள் நினைவு கூரவேண்டும்” என்று கூறினார்.


சென்னை : இடிக்கப்படுகிறது கலைவாணர் அரங்கம்

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, அறிவிப்பு, சட்டமன்றம், தமிழக அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இடிக்கப்படுகிறது கலைவாணர் அரங்கம்

1954-ல் சட்டப் பேரவைக் கூட்ட அரங்கமாக சில காலம் செயல்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கலைவாணர் அரங்கம் 2 மாதங்களில் இடிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு உள்பட பல முக்கியத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த அரங்கமாக அது விளங்கி வருகிறது. சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ளது கலைவாணர் அரங்கம். பல்வேறு அரசு மற்றும் தனியார் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கமாக இருந்து வருகிறது.

தற்போது, புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட உள்ளதால் கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது.

1954 முதல்…1954-ல் சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் அரங்கமாக செயல்பட்டு வந்தது. பின்னர், 1957 - ம் ஆண்டு அந்த அரங்கத்துக்கு “பாலர் அரங்கம்’ என்று நேரு பெயர் சூட்டினார். குழந்தைகளின் கலை - இலக்கிய நிகழ்ச்சிகள் அந்த அரங்கத்தில் நடைபெற்றன.

குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களும், நல்ல தரமான ஆங்கிலப் படங்களும் திரையிடப்பட்டன. குழந்தைகளோடு, அப்பகுதியில் உள்ள பொது மக்களும் அரையணா, ஓரணா கொடுத்து திரைப்படங்களைக் கண்டு ரசித்தனர்.

கால ஓட்டத்தில்…காலம் செல்லச் செல்ல மக்களின் ரசனை மாற ஆரம்பித்தது. இதனால், பாலர் அரங்கத்தில் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. அதை வர்த்தக ரீதியிலான அரங்கமாக மாற்ற அரசு முடிவு செய்தது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், குறைந்த கட்டணத்தில் நாள் கணக்கு அடிப்படையில் அரங்கத்தை வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டது.

1974 ஜனவரி 29-ம் தேதி அரங்கத்தின் பெயரை “கலைவாணர் அரங்கம்’ என்று மாற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதி அதைத் திறந்து வைத்தார்.

அதற்கான கல்வெட்டு அரங்க மேடையின் இரு புறங்களிலும் இப்போதும் காட்சி அளிக்கிறது.

செப்டம்பர் வரை மட்டுமே…

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அருகே உள்ள காலியிடத்தில் 3 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புதிய அரங்கம் கட்டப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளித்த நிகழ்ச்சிகளை முடிக்க வசதியாக செப்டம்பர் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று கலைவாணர் அரங்க நிர்வாகிகள் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அரசும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளதால், 2 மாதங்களில் கலைவாணர் அரங்கக் கட்டடம் இடிக்கப்படும். “கலைவாணர் அரங்கம்’ வரலாற்றில் முக்கிய நினைவுச் சின்னம் என்கின்றனர் அப்பகுதியில் வசிக்கும் மூத்த குடிமக்கள்.
 
 


அலட்சியத்தால் வீழ்ச்சி அடைந்துவரும் தமிழக கதர் வாரியம்!

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அறிவிப்பு, சமூகம், சுற்றுச்சூழல், தொழில், பொருளாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அலட்சியத்தால் வீழ்ச்சி அடைந்துவரும் தமிழக கதர் வாரியம்!

அதிகாரிகளின் அலட்சியத்தால் தமிழக கதர் வாரியம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த கதரின் பெருமையை நாடு உணர்ந்திட அமைக்கப்பட்ட வாரியத்தின் வீழ்ச்சியைக் கண்டு நாட்டுப் பற்றாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடு, 1960 - ம் ஆண்டு தமிழ்நாடு கதர் வாரியம் தொடங்கப்பட்டது.

தேன், சோப்பு உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை தரத்துடன் தயாரித்து விநியோகித்து வருகிறது. ஆனால், நலிந்துவரும் இந் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் இப்போது மெதுவாக மூடப்பட்டு வருகின்றன.

“”கைமுறை காகிதங்கள் தயாரிக்கும் 20 யூனிட்டுகளில் தற்சமயம் இரண்டு யூனிட்டுகள் மட்டுமே செயல்படுகின்றன. மூடிய யூனிட்டுகளை உயர் நீதிமன்றம் திறக்க உத்தரவு பிறப்பித்தும் இதுவரை திறக்கவில்லை.

19 சோப்பு யூனிட்டுகளில் இரண்டைத் தவிர மீதி யூனிட்டுகளில் வேலை செய்பவர்களுக்கு மாதத்தில் 7 அல்லது 10 நாள்கள் மட்டுமே வேலை உள்ளது. இதனால் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தினக்கூலிகள் போல் சம்பளம் கொடுக்கிறார்கள். சோப்பு உற்பத்தியாளர்களை நிரந்தரம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் வழக்கை 23 ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.சந்திரசேகரன்.

பெயரளவுக்கு மட்டுமே… வணிகம் அல்லாத அலுவலகப் பணிகள் செய்யும் ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு கொடுக்கிறது. ஆனால் துறையின் முன்னேற்றத்துக்கும் வருமானத்துக்கும் காரணமான உற்பத்தியாளர்களையும், தொழிலாளர்களையும் உற்பத்தி செய்த பொருள்களை விற்றால்தான் சம்பளம் என வாரியம் அறிவித்தது.

“”கதர் நூல் நூற்பு ஆலைகளும் பெயரளவில் செயல்பட்டு வருகின்றன. மூத்த கதர் நெசவாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குகிறது. மேலும் அவர்கள் மாதம் ரூ.5 ஆயிரத்துக்கு தேன், சோப்பு முதலிய மற்ற பொருள்களை விற்றால்தான் அந்த ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

இதனால் பலர் இத்தொழிலை கைவிட்டு விட்டனர். ஆனால் கதர் வாரியமானது வெளியிலிருந்து கதர் துணிகளை வாங்கி கதரின் முத்திரை வைத்து விற்கிறது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கே கதர் வாரியத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்” என்றார் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.எல்.ஸ்ரீதர்.

பல கதர் நூற்பு ஆலைகள் மூடப்பட்டுவிட்டதால் கதர் வாரியம் வெளியிலிருந்து கதர் துணிகளை வாங்கி கதரின் முத்திரை வைத்து விற்கப்படுகிறது. அதே போன்று கதர் வாரியத்தின் மற்ற பொருள்கள் தனியாரிடம் கொடுத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“”கதருக்கு என தனித்துறை இருந்தும் தொழிலாளர்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை. லட்சக்கணக்கில் இருந்த தொழிலாளர்கள் இன்று ஆயிரக்கணக்காகக் குறைந்து விட்டனர். அதிகாரிகளின் முறையற்ற நிர்வாகம்தான் இதற்கு காரணம்”" என்றார் சந்திரசேகரன்.

என்ன செய்யலாம்…? அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளை நீக்க வேண்டும். கதர் துறையை முன்னேற்றும் நோக்குடன் செயல்படும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் கிராம மக்கள் மத்தியில் மறுமலர்ச்சி ஏற்படும். கதர் வாரியமும் அதன் வீழ்ச்சியில் இருந்து மீளும்.

மருத்துவமனைகளில் சோப்பு, ஃபினாயில் போன்ற பொருள்கள் தனியாரிடமே வாங்கப்படுகின்றன. கதர் வாரியத்தின் உற்பத்திப் பொருள்களை அரசுத் துறைகள் அனைத்தும் வாங்கிவிட்டாலே வாரியம் வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிடும் என்று தொழிலாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். ஏற்றுக் கொள்ளுமா அரசு?


பூடானின் முதல் பிரதமர் நாளை இந்தியா வருகை

July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அறிவிப்பு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பூடானின் முதல் பிரதமர் நாளை இந்தியா வருகை

பூடான் நாட்டின் முதல் பிரதமர் ஜிக்மி ஒய் தின்லே நான்கு நாள்கள் பயணமாக திங்கள்கிழமை தில்லி வருகிறார்.

கடந்த ஏப்ரலில் பதவியேற்ற அவர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருகிறார். அவருடன் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 42 பேர் அடங்கிய உயர்நிலைக் குழுவும் வருகிறது.

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை ஜிக்மி சந்தித்துப் பேசுகிறார்.

பூடான் பிரதமரின் இந்திய பயணத்தின்போது மின்சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.