கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் ரிலீஸை தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன ஜூன் 6ம் தேதிக்குப் பதில் ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டார்.
திரைப்படத்தை ஜூன் 6ம் தேதி வெளியாகுவதாக இருந்தது. ஆனால் திடீரென இரு புதிய வழக்குகள் படத்துக்கு எதிராக தொடரப்பட்டன. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதால், படத்திற்கு தடங்கல் நீங்கியதாக அனைவரும் நினைத்தனர். இந்திப் பதிப்பில் இன்னும் 2 ரீல்களுக்கு டப்பிங் பணிகள் பாக்கி உள்ளனவாம். அதேபோல ஆப்டிகல் வேலை மற்றும் கிராபிக்ஸ் வேலைகளும் இன்னும் முழுமை அடையவில்லை. அவை பிரசாத் லேபில் படு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழில் ஜூன் 12ம் தேதி படம் ரிலீஸாகும். ஆனால் இந்தி டப்பிங் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. குறிப்பிட்ட நாளுக்குள் அது முடியுமா என்பதும் தெரியவில்லை.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போட வேண்டியுள்ளது. அதற்கு சில நாட்கள் பிடிக்கும். மேலும் மும்பையில் உள்ள ஆட்லேப்ஸ் கிளையில் சில பணிகள் நடந்து வருகின்றன. அதனால்தான் இந்த தாமதம். ஜூன் மத்திக்குள் படம் எப்படியும் வெளியாகி விடும் என்றார்.
நன்றி: தட்ஸ்தமிழ் - Once again Dasavatharam postponed!!
முந்தைய சற்றுமுன்:
1. கமல் நடிக்கும் தசாவதாரம் படத்தை எதிர்த்து மீண்டும் வழக்கு
2. கமல் ஹாசன் நீதிமன்றத்தில் ….
