திரையுலகம் | சற்றுமுன்...




தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள்: சூர்யா

July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், கல்வி, திரையுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள்: சூர்யா

தான் நடத்தி வரும் அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள் அமைக்கப்படும் என நடிகர் சூர்யா தெரிவித்தார்.

நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த 28 ஆண்டுகளாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெறும் மாணவ மாணவியருக்குப் பரிசுத் தொகை வழங்கி வருகிறார். இதன் 29-ம் ஆண்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவியருக்கு ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கி சிவகுமார் பேசியதாவது:

1979-ம் ஆண்டு தொடங்கிய சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் இயன்றவரை கல்விக்காக உதவிகளைச் செய்து வருகிறேன். தற்போது சூர்யா அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிப்புக்காக எவ்வளவு சிரமங்களை அனுபவிப்பார்கள் என்பதை உணர்ந்தவன். கல்விக்காக செய்யும் உதவியால்தான் எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது. வருங்காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களின் வாழ்வில் கல்வி விளக்கேற்ற முயற்சிப்போம் என்றார்.

விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:

கடந்த 29 ஆண்டுகளாக என் தந்தை செய்து வரும் சேவையைப் பார்த்துதான் “அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கல்வி உதவிக்காக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகளுக்காகத் தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் அகரம் அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளிகளில் நூலகம், கிராமப்புற பள்ளிகள் உள்ள ஊர்களில் பள்ளிகளின் வளர்ச்சிக்காக “கல்வி உதவிக்குழு’ போன்றவற்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றார்.
 
 


பருத்தி வீரன் படத்துக்கு 6 பிலிம்பேர் விருதுகள்

July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், திரையுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பருத்தி வீரன் படத்துக்கு 6 பிலிம்பேர் விருதுகள்

அமீர் இயக்கிய “பருத்தி வீரன்’ படத்துக்கு 6 பிலிம்பேர் விருதுகள் கிடைத்துள்ளன. நடிகர் சிவகுமார், நடிகை ஜெயப்ரதா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

2007-ம் ஆண்டின் சிறந்த தென்னிந்தியத் திரைப்படங்களுக்கான பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த 55-வது விருது விழாவில் “பருத்தி வீரன்’ சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

படத்தின் இயக்குநர் அமீர் (சிறந்த இயக்குநர்), படத்தில் நடித்த கார்த்தி (சிறந்த நடிகர்), ப்ரியாமணி (சிறந்த நடிகை), சரவணன் (சிறந்த குணசித்திர நடிகர்), சுஜாதா (சிறந்த குணசித்திர நடிகை) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் “பருத்தி வீரன்’ படத்துக்கு 6 விருதுகள் கிடைத்தன.

“சிவாஜி’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் -சிறந்த இசையமைப்பாளர் விருதையும், கே.வி.ஆனந்த் -சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பெற்றனர். “உன்னாலே உன்னாலே’ படத்துக்காக பாடலாசிரியர் பா.விஜய், “அழகிய தமிழ்மகன்’ படத்துக்காக நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித், “மொழி’ படத்துக்காக பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், “கிரீடம்’ படத்துக்காக பின்னணிப் பாடகி சாதனா சர்கம் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
 
 


திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம.நாராயணன் வெற்றி

July 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், திரையுலகம், தேர்தல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம.நாராயணன் வெற்றி

 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராம.நாராயணன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
 


கணவருடன், ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதம் தாய்லாந்து ஓட்டலில் பரபரப்பு சம்பவம்

June 28th, 2008 பகுப்புகள்: தகவல், திரையுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

கணவருடன், ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதம் தாய்லாந்து ஓட்டலில் பரபரப்பு சம்பவம்

தாய்லாந்து ஓட்டலில் கணவர் அபிஷேக் பச்சனுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நட்சத்திர ஜோடி

முன்னாள் உலக அழகியும், முன்னணி இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராயும், அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பின் கணவன்- மனைவி இருவரும் விழாக்களில் தம்பதி சமேதராய் ஆஜராகி வருகின்றனர். சினிமா விருது விழாவாக இருந்தாலும் சரி… பத்திரிகையாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் சரி… இருவரும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த நட்சத்திர ஜோடி சமீபத்தில் ஒரு பொது இடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

திரைப்பட விழா

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் அண்மையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மாமனார் அமிதாப்பச்சன் ஆகியோருடன் சென்றிருந்தார்.

ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார்கள். அங்கிருந்து இருவரும் ஜோடியாக திரைப்பட விழாவுக்கு புறப்பட்டனர். நடிகர் குணால் கபூரும் உடன் இருந்தார்.

கணவருடன் வாக்குவாதம்

அப்போது ஐஸ்வர்யா ராய் உரத்த குரலில் பலமாக பேச ஆரம்பித்தார். உடனே பக்கத்தில் இருந்த அபிஷேக் பச்சன் மனைவியிடம் மெதுவாக பேசு… என்று நாசூக்காக கூறினார். ஆனால் ஐஸ்வர்யா ராய் அதை கண்டுகொள்ளவில்லை. அவர் தொடர்ந்து உரத்த குரலில் பேசிக் கொண்டு இருந்தார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நடிகர் குணால் கபூர் அங்கிருந்து நைசாக நழுவி வேறு இடத்துக்கு சென்று விட்டார்.

உடனே மனைவி ஐஸ்வர்யா ராயை ஓட்டல் வராந்தாவில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அபிஷேக் பச்சன் அழைத்துச் சென்றார். அங்கு அவரை அமர வைத்து, பொறுமையாக பேசினார். ஆனால் ஐஸ்வர்யா ராய் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், கணவருடன் உரத்த குரலில் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்.

அறைக்கு அழைத்துச் சென்றனர்

ஓட்டலில் வருவோர், போவோர் எல்லாம் இதை வேடிக்கை பார்த்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அபிஷேக் பச்சன் தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவர், தனது மெய்க்காப்பாளரை அழைத்து மனைவி ஐஸ்வர்யா ராயை அவரது அறைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

உடனே ஐஸ்வர்யா ராயை அவர்கள் அழைத்துச் சென்று விட்டனர்.

 

 


தசாவதாரம் ஜூன் 12 வெளியாகும்

May 30th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தின் ரிலீஸை தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன ஜூன் 6ம் தேதிக்குப் பதில் ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டார்.

திரைப்படத்தை ஜூன் 6ம் தேதி வெளியாகுவதாக இருந்தது. ஆனால் திடீரென இரு புதிய வழக்குகள் படத்துக்கு எதிராக தொடரப்பட்டன. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதால், படத்திற்கு தடங்கல் நீங்கியதாக அனைவரும் நினைத்தனர். இந்திப் பதிப்பில் இன்னும் 2 ரீல்களுக்கு டப்பிங் பணிகள் பாக்கி உள்ளனவாம். அதேபோல ஆப்டிகல் வேலை மற்றும் கிராபிக்ஸ் வேலைகளும் இன்னும் முழுமை அடையவில்லை. அவை பிரசாத் லேபில் படு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழில் ஜூன் 12ம் தேதி படம் ரிலீஸாகும். ஆனால் இந்தி டப்பிங் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. குறிப்பிட்ட நாளுக்குள் அது முடியுமா என்பதும் தெரியவில்லை.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போட வேண்டியுள்ளது. அதற்கு சில நாட்கள் பிடிக்கும். மேலும் மும்பையில் உள்ள ஆட்லேப்ஸ் கிளையில் சில பணிகள் நடந்து வருகின்றன. அதனால்தான் இந்த தாமதம். ஜூன் மத்திக்குள் படம் எப்படியும் வெளியாகி விடும் என்றார்.

நன்றி: தட்ஸ்தமிழ் - Once again Dasavatharam postponed!!

முந்தைய சற்றுமுன்:

1. கமல் நடிக்கும் தசாவதாரம் படத்தை எதிர்த்து மீண்டும் வழக்கு

2. கமல் ஹாசன் நீதிமன்றத்தில் ….

3. கமல்ஹாசன் மீது இயக்குநர் சரண் புகார்

4. தசாவதாரம் எப்போது? - கமல் பேட்டி


தசாவதாரம்: தடை கோரி வழக்கு

May 10th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, திரைப்படம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 2 மறுமொழிகள் » |

பிரபல தமிழ் நடிகர் கமலஹாசன் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘தசாவதாரம்’ என்கிற தமிழ் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்கும்படி, உலகளாவிய ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சங்கம் என்கிற அமைப்பை சேர்ந்த கோவிந்த ராமானுஜதாசா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

திரைப்படத்தின் விளம்பரங்களில் காட்டப்படும் காட்சிகள், வைஷ்ணவர்கள் பெரிதும் மதித்துப் போற்றும் ராமானுஜரையும் பெருமாளையும் இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், அவர் தமது மனுவில் கூறியிருக்கிறார். அவரது மனுவை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

கோவிந்த ராமானுஜதாசா அவர்களின் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்கள், தமது திரைப்படத்தில் ராமானுஜரையோ, இந்துமதத்தையோ இழிவுபடுத்தும் காட்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று கூறினார்.

தமது திரைப்படத்தை அதன் முழுமையான வடிவத்தில் பார்த்தால் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாது என்றும் கூறிய அவர், இந்து மதம் உட்பட எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தமக்கோ தமது திரைப்படத்திற்கோ இல்லை என்றும் கூறினார்.

நன்றி: பிபிசி


படப்பிடிப்பு குழுவினரின் அஞ்சல் வழி உண்ணாவிரதம்

April 7th, 2008 பகுப்புகள்: திரையுலகம், போராட்டம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!தமிழ் திரையுலகமே ஒன்றுகூடி சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருக்கையில் பெரம்பலூரில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள் ஒரு திரைப்பட குழுவினர்.

இந்த உண்ணாவிரதத்தின் விபரத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறார்களாம். மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் நாயகனாக நடிக்கும் தமிழ் தேசம் படத்தின் படப்பிடிப்பு பெரம்பலூரில் நடந்து வருகிறது. அச்சச்சோ, மலரினும் மெல்லிய, மாணவன் நினைத்தால் படங்களில் நடித்த வர்ஷினி என்ற ஆதிரா கதாநாயகியாக நடிக்கிறார்.

படப்பிடிப்பு நடந்த பொறியியல் கல்லூரி வாசலிலேயே ஒரு பந்தலை போட்டு யூனிட்டோடு உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள். படத்தின் இயக்குனர் தமிழ்செல்வா உள்ளிட்ட அத்தனை பேரும் கன்னடர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி உண்ணாவிரத பந்தலை பரபரப்பாக்கினார்கள். விஷயத்தை கேள்விப்பட்ட ஜெயா டி.வி, ராஜ் டி.வி, ஏ.எம்.என் கன்னல் நிருபர்கள் அங்கே கூடவும் சென்னை போலவே அங்கேயும் உண்ணாவிரதம் களைகட்டியதாம்.

நன்றி: தமிழ்சினிமா

ஆங்கிலத்தில்: IndiaGlitz - Thamizh Desam Unit’s Hunger Strike - Tamil Movie News


மராட்டிய இரஜினியை பார்த்து அமிதாப் கற்றுக்கொள்ள வேண்டும்: சிவசேனா

April 5th, 2008 பகுப்புகள்: அரசியல், திரையுலகம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

மராட்டியர்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவளிக்காத அமிதாப் பச்சன் மராட்டியரான இரஜினிகாந்த் தனக்கு வாழ்வளித்த  தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்காக அவர்களுடன் சேர்ந்து போராடியதைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது. சிவசேனாவின் முரசோலியான சாம்னா ” நிறைய நடிகர்கள் மும்பையில் வாழ்ந்துகொண்டு பணமும் புகழும் பெறுகிறார்கள்; ஆனால் மரட்டியர் பெருமையை காக்கவும் அவர்களது பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நேரத்தில் பின்வாங்கி விடுகிறார்கள் ” எனக் கூறியுள்ளது. அமிதாப் பச்சன் பாடம் படிக்க வேண்டும் எனக்கூறிய அந்த இதழ் இரஜினி உண்மையான மராட்டிய பண்பாட்டை பின்பற்றும் அரிதான மனிதர், தாம் வசிக்கும் மாநிலத்திற்காக போராடுபவர் என புகழ்மாலை சூட்டியுள்ளது.

Take a cue from Rajnikanth, Sena tells Big B

Learn from Rajnikanth, Sena tells Bachchan

Follow Rajini’s footstep, Shiv Sena tells Big B


இந்தியாவில் பாகிஸ்தானிய திரைப்படம் “குதா கே லியே” இன்று வெளியீடு

April 4th, 2008 பகுப்புகள்: *பொது, திரைப்படம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இல்லாதிருந்த குறையை நீக்குமாறு பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட திரைப்படம் “குதா கே லியே ” ( கடவுளுக்காக) இந்திய திரையரங்குகளில் இன்று திரையிடப்படுகிறது. பாகிஸ்தானின் இயக்குநர் சையூப் மன்சூரின் முதல் படமான இது அங்கு வசூலில் முன்னணி வகித்திருந்தது. சான் மற்றும் இமாம் அலி நடித்திருக்கும் இந்தப்படத்தில் இந்திய நடிகர் நசிருத்தீன் சா ஒரு மதகுருவாக கௌரபணியாற்றியிருக்கிறார். மத மிதவாதி ஒருவன் எவ்வாறு தனது மதத்திற்குள்ளும் வெளியிலும் புறம்தள்ளப்படுகிறான் என்பதை சித்தரிக்கும் படம் இது.

Pak. film ‘Khuda Ke Liye’ released in India


ஓகனேக்கல்: சென்னையிலும் பெங்களூருவிலும் திரைக்கலைஞர்கள் உண்ணாவிரதம்

April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், திரையுலகம், நதிநீர் பிரச்சினை, போராட்டம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

ஓகனேக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்த்து நிகழும் வன்முறைகளை கண்டித்து தமிழக திரையுலகினர் இன்று சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாநோன்பு இருக்கின்றனர். ரஜினி,கமல் தங்கள் வெளிப்புற படமெடுப்பு ஊர்களிலிருந்து திரும்பிவந்து இன்று கலந்து கொண்டனர். கருப்புத் தொப்பி அணிந்து வித்தியாசமாக வந்த ரஜினி மேடையில் ஏறியவுடன் அங்கு கூடியிருந்தவர்களை தலைக்கு மேல் கையை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டார்.

பின்னர் தொப்பியைக் கழற்றிவிட்டு கூட்டத்தை நோக்கி கையை அசைத்தார். அவரை சரத்குமார், ராம.நாராயணன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றனர்.சரத்குமாருக்கும், மனோரமாவுக்கும் இடையில் அமர்ந்தபடி உண்ணாவிரதத்தில் பங்கேற்றார் ரஜினிகாந்த்.

பகல் 2.30 மணிக்கு நடிகர் கமல்ஹாசனும் உண்ணாவிரத மேடைக்கு வருகை தந்தார். அவரை ரஜினி, சரத்குமார், ராமநாராயணன் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மர்மயோகி படப் பிடிப்பு தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்த கமல், உண்ணாவிரதத்தில் பங்கேற்பற்காக அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓகேனக்கல் விவகாரத்தில், தமிழ் திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போட்டியாக கன்னட நடிகர்களும் பெங்களூரில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஆனால், அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், சரோஜாதேவி ஆகிய கன்னட திரையுலக ஜாம்பவான்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

பெங்களூர் டவுன் ஹாலில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த தர்ணாவில் நடிகர்கள் உபேந்திரா, புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், ரவிச்சந்திரன், திரில்லர் மஞ்சு, ஸ்ரீநாத், ஜக்கேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நடிகைகள் ரம்யா, அனு பிரபாகர், தாரா, ஜெயமாலா ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய சுட்டிகள்:

கருப்புத் தொப்பியுடன் ரஜினி: கமலும் பங்கேற்பு

ஓகனேக்கல் நமது மரபுரிமை-வைரமுத்து

என் சோறு தமிழகத்தில்தான்-அர்ஜூன்

திரையுலகின் உண்ணாவிரதத்திற்கு தமிழக சட்டசபையில் வாழ்த்து

கன்னட நடிகர்கள் தர்ணா-சரோஜா தேவி, அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன் பங்கேற்கவில்லை

‘குத்து’ ரம்யா பெங்களூரில் உண்ணாவிரதம்!

Hogenakkal: Kannada stars hold protest


கமலஹாசன் இயக்கி நடிக்கும் மர்மயோகி

April 4th, 2008 பகுப்புகள்: திரைப்படம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 4 மறுமொழிகள் » |

சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘மர்மயோகி’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது.

பிரபல ஹாலிவுட் பட நிறுவனமான வால்ட் டிஸ்னியும் பாலிவுட் நிறுவனமான பரத்பாலா புரொடக்ஷன்ஸும் இணைந்து இந்த பிரமாண்ட படத்தைத் தயாரிக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் அஸின், ஹேமமாலினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

நன்றி: தினமணி


‘சிந்தால்’ சோப் விளம்பரத்தில் ஹ்ரிதிக் ரோசன்

March 21st, 2008 பகுப்புகள்: திரையுலகம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

நன்றி: 'Over-worked' Hrithik skips ad launch

மேலும் விவரங்களுக்கு:

1. 20% topline growth targeted in Cinthol brands

2. Cinthol relaunched, Hrithik brand ambassador