*சற்றுமுன் | சற்றுமுன்...




தமிழ் ஓசை நாளிதழுக்கு அரசு விளம்பரம் ரத்து

July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தமிழ் ஓசை நாளிதழுக்கு அரசு விளம்பரம் ரத்து

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு நாளிதழான தமிழ் ஓசைக்கு பாமக-திமுக உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து அரசு விளம்பரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாமக தலைவர் கோ.க. மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தகவல் : மக்கள் தொலைக்காட்சி


மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, குற்றம், சட்டம் - நீதி, சற்றுமுன், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பெங்களூரை சேர்ந்த சாமியார் சரதானந்தா. இவரது மனைவி சாகேரா. சாகேராவின் சொத்துகளை அடைவதற்காக அவருக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாமியார் சரதானந்தா கொடுத்தார். பின்னர் அவரை வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு நீதிபதிகள் பெஞ்சு முன்பு நடந்தது.

அதில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர், `மிகவும் அரிதான இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்’ என்றார். மற்றொரு நீதிபதி, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இரண்டு தீர்ப்புகளும் முரணாக இருந்ததால் வழக்கை மூன்று நீதிபதிகள் பெஞ்சுக்கு தலைமை நீதிபதி மாற்றினார்.

இதையடுத்து நீதிபதிகள் அகர்வால், சிங்வி, அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, “சொத்துக்காக மனைவியை கொலை செய்த சாமியார் சரதானந்தாவை ஆயுள் காலம் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்” என மூன்று நீதிபதிகளும் ஒன்றாக உத்தரவிட்டனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=427197&disdate=7/23/2008


கட்சியிலிருந்து சோம்நாத் சாட்டர்ஜி நீக்கம்

July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கட்சியிலிருந்து சோம்நாத் சாட்டர்ஜி நீக்கம்
    

 

Somnath Chatterjee

டெல்லி: சபாநாயகர் பதவியிலிருந்து விலகுமாறு கட்சியின் மத்திய குழு பிறப்பித்த உத்தரவை ஏற்க மறுத்த லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்.

சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தொடர்ந்து இடதுசாரிகள் வலியுறுத்தி வந்தன. உச்சகட்டமாக சபாநாயகர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என சோம்நாத் சாட்டர்ஜிக்கு சிபிஎம் மத்திய குழு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் இவையனைத்தையும் நிராகரித்து விட்டார் சோம்நாத் சாட்டர்ஜி. நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

இந் நிலையில் நேற்று நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வெளியே வந்த சோம்நாத்திடம், சிபிஎம் அனுப்பிய நோட்டீஸ் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நான் சிபிஎம் மத்திய குழுவில் உறுப்பினர் இல்லை. எனவே எனக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்ப முடியாது.

ராஜினாமா குறித்து என்னை யாரும் வற்புறுத்த முடியாது. அது சுயமாக எடுக்க வேண்டிய முடிவு என்றார் சோம்நாத் சாட்டர்ஜி.

திடீர் பல்டி:

இதற்கிடையே, தனக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று தான் கூறியதை மறுத்துள்ளார் சோம்நாத்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் பொலிட்பீரோ உறுப்பினர் இல்லை என்று மட்டும்தான் நேற்று என்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தெரிவித்தேன். பொலிட்பீரோவுக்கோ அல்லது மத்திய குழுவுக்கோ எனக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் இல்லை என்று நான் கூறவில்லை.

இன்று நடைபெறும் பொலிட்பீரோ கூட்டம் குறித்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றார் அவர்.

இந் நிலையில் இன்று சோம்நாத் சாட்டர்ஜி விவகாரம் குறித்து கட்சியின் பொலிட்பீரோ கூடி விவாதித்தது. அப்போது சோம்நாத் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

ஆனால், அவர் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வாரா என்று தெரியவில்லை.

http://thatstamil.oneindia.in/news/2008/07/23/india-somnath-slams-cpm-for-its-notice.html

மேலும் செய்திகளுக்கு
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080723062209&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&ndate=7/23/2008&dName=No+Title&Dist=
http://timesofindia.indiatimes.com/Somnath_Chatterjee_expelled_from_CPM/articleshow/3270066.cms


மன்மோகன் அரசு தப்பியது ஆதரவு - 275 எதிர்ப்பு - 256

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அரசியல், இந்தியா, தகவல், தேர்தல், தேர்தல்முடிவு, நாடாளுமன்றம், மத்திய அரசியல், வரலாறு | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

மத்திய அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரி இருந்ததை அறிந்திருப்பீர்கள் இவ்வாக்கெடுப்பில் காங்கரசுக்கு ஆதரவாக 256 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் மின்னனு இயந்திரம் மூலம் பதிவானதை அடுத்து மன்மோகன் அரசு தனது ஆட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தங்களது வாக்குகள் பதிவாக வில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததால் பின்னர் வாக்கு சீட்டு அளித்து வாக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து இப்போது ஆதரவு 275 எனவும் எதிர்ப்பு 256 என அறிவித்து  காங்கிரசு அரசு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.


வாக்கெடுப்பில் அரசு வெற்றி: ஆதரவு- 275 எதிர்ப்பு-256

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வாக்கெடுப்பில் அரசு வெற்றி: ஆதரவு- 275 எதிர்ப்பு-256
    

டெல்லி: மக்களவையில் இன்று பெரும் பரபரப்புக்கு இடையே நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 19 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.


கொத்தடிமையாக நடத்த முயன்றனர்-மன்மோகன்

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கொத்தடிமையாக நடத்த முயன்றனர்-மன்மோகன்
    

 

டெல்லி: இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர் என பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.

மேலும் பாபர் மசூதியை இடித்து, நாட்டில் பெரும் மதக் கலவரத்தை ஏற்படுத்திய அத்வானியை மன்னிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவையில் நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது தனது பதிலை அறிக்கையாகத் தாக்கல் செய்தார் பிரதமர். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அத்வானிக்கெல்லாம் பதில் சொல்லி என் நேரத்தையும் இந்த அவையின் பொன்னான நேரத்தையும் வீணாக்க நான் விரும்பவில்லை.

ஒருவரை குறை சொல்லும் முன் முதலில் அத்வானி தன் தவறுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பாபர் மசூதியை இடித்து, நாட்டில் பெரும் மதக் கலவரத்தை ஏற்படுத்திய அத்வானியை மன்னிக்க முடியுமா.

தனது உரையில் அத்வானி என்னைப் பற்றி மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். என்னை மிக பலவீனமான பிரதமர் என்றார், என் அரசை கவிழ்க்க 3 முறை முயன்றனர்.

அவரை அவரது ஜோதிடர்கள் தவறாக வழி நடத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நாட்டின் நலனுக்காக அவர் முதலில் தனது ஜோதிடரை மாற்றிக் கொள்வது நல்லது.

அணு ஒப்பந்தத்தில் நான் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இடதுசாரிகள் தடை போட்டனர். இது ஏற்கத்தக்கத்தல்ல. அவர்கள் என்னை தங்களது கொத்தடிமை போல நடத்த முயன்றனர்.

இப்போது அவர்கள் யாருடன் (பாஜக) கூட்டணி போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர்.


வாக்கெடுப்பில் அரசு முன்னணி: ஆதரவு- 253 எதிர்ப்பு-232

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், நாடாளுமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

வாக்கெடுப்பில் அரசு முன்னணி: ஆதரவு- 253 எதிர்ப்பு-232
    

 

Manmohan Singh

டெல்லி: மக்களவையில் இன்று பெரும் பரபரப்புக்கு இடையே நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 20 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. மேலும் சுமார் 54 எம்பிக்களின் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்து வருகின்றனர்.

மி்ன்னணு எந்திரம் மூலம் நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் 487 வாக்குகளே பதிவாயின. இதில் அரசுக்கு ஆதரவாக 253 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்தனர். 2 பேர் வாக்களிக்கவில்லை என ஓட்டளித்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் ஓடி வந்து பிரதமருடனும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனும் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

மீதமுள்ள சுமார் 54 எம்பிக்கள் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்து வருகின்றனர். இவர்களது வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகே இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

முன்னதாக பிரதமர் பேசிய பின்னர் வாக்கெடுப்பு நடக்கும் என சபாநாயகர் அறிவித்தார். ஆனால், பிரதமர் தனது பதிலை அறிக்கையாக தாக்கல் செய்துவிட்டார், பேசவில்லை.

இதையடுத்து ஓட்டெடுப்பு தொடங்கியது. நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் ஆம் என்க, எதிர்ப்போர் இல்லை என சபாநாயகர் அறிவிக்க ஆதரிப்போர் ஆம் என்றும், எதிர்ப்போர் இல்லை என்றும் குரல் தந்தனர்.

இதையடுத்து மின்னணு எந்திரத்தில் வாக்களிக்குமாறு எம்பிக்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனால், பாஜக எம்பிக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டபடி இருந்ததால் ஓட்டெடுப்பு தாமதமானது. ஒருவழியாக 7.30 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது.



பாஜக எம்பிக்களுக்கு சமாஜ்வாடி தலா ரூ. 9 கோடி- அத்வானி புகார்

July 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பாஜக எம்பிக்களுக்கு சமாஜ்வாடி தலா ரூ. 9 கோடி- அத்வானி புகார்
    

 

MP with Cash

டெல்லி: காங்கிரஸ் அரசைக் காப்பாற்ற, தங்களை விலைக்கு வாங்க சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் சார்பில் ரூ. 1 கோடி அட்வான்ஸ் பணம் தரப்பட்டதாகவும், தங்களுக்கு தலா ரூ. 3 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டதாகவும் கூறி பணக் கட்டுகளுடன் பாஜக எம்பி்க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் பணக் கட்டுகளை அவையில் மத்தியில் உள்ள டேபிளில் கொட்டிய மத்திய பிரதேசத்தின் மொரீனா மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி அசோக் ஆக்ரால், இந்தப் பணத்தை தனக்கு சமாஜ்வாடி கட்சி தந்ததாக குற்றம் சாட்டினார்.

இரண்டு பைகளில் அவர் இந்தப் பணத்தை எடுத்து வந்தார். தையடுத்து பிற பாஜக எம்பிக்களும் அவையில் மையத்தில் குவிந்து அரசுக்கு எதிராக குரல் தந்தனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை உடனடியாக ஒத்தி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

இது குறித்து பாஜக தலைவர் அத்வானி கூறுகையில் பங்கன்சிங் குலாஸ்தே, அசோக் ஆக்ரால், மகாவீர் பகாரே ஆகிய 3 பாஜக எம்பிக்களுக்கு வாக்களிக்க வர வேண்டாம் என்று கூறி தலா ரூ. 3 கோடிக்கு பேரம் பேசப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக ரூ. 1 கோடி பணம் தரப்பட்டுள்ளது. இதை அவர்கள் என்னிடம் தெரிவித்து, அதை மக்களவையிலேயே காட்டுவதாகக் கூறினர். இதையடுத்து நானும் பணத்தை மக்களவைக்கு கொண்டு வர அனுமதி தந்தேன்.

வாக்களிக்க வராமல் இருந்தால் மேலும் தலா ரூ. 1.5 கோடி தருவதாகக் கூறியுள்ளனர். இதற்கான மொத்த டீல் ரூ. 9 கோடி. கடந்த 3, 4 நாட்களாக இந்தப் பணம் தரப்பட்டது.

இந்த பணம் கைமாறியதை ஒரு தனியார் தொலைக்காட்சி பதிவு செய்துள்ளது. அது எந்த சேனல் என்பதை நான் சொல்ல முடியாது என்றார்.

(அந்த தனியார் சேனல் சிஎன்என்-ஐபிஎன் ஆகும். ஆனால், அந்த வீடியோவை சபாநாயகரிடம் ஒப்படைக்கப் போவதாகவும், அதை ஒளிபரப்பப் போவதில்லை என்றும் அதன் தலைமை ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் தெரிவித்துள்ளார்).

பங்கன்சிங் குலாஸ்தே, அசோக் ஆக்ரால், மகாவீர் பகாரே ஆகியோர் கூறுகையி்ல், எங்களிடம் ஒரு மத்தியஸ்தர் பேசினார். எங்களை அமர் சிங்கின் வீட்டுக்கு போகச் சொன்னார். அங்கு வைத்து அட்வான்ஸ் பணமாக ரூ. 1 கோடி தரப்பட்டது.

மேலும் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேலிடம் தொலைபேசியில் பேச வைத்தார் என்றனர்.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்க தனது சேம்பரில் அனைத்துக் கட்சி கூட்டத்தை சபாநாயகர் கூட்டியுள்ளார்.

அவை 6 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


துபாய் நூலகங்களில் காந்தி நூல்!

July 21st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, *வித்தியாசமானவை, அறிவிப்பு, ஆளுமை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாய் நூலகங்களில் காந்தி நூல்!     

 

Mahatma Gandhi

துபாயிலுள்ள பொது நூலகங்களில் ( http://www.libraries.ae ) மகாத்மா காந்தியடிகள் குறித்த அரபி மொழி நூல் கிடைக்கிறது. 

காந்தியடிகளின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தொகுத்து அரேபிய நாட்டவர் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மகாத்மாவைப் பற்றி அறியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் சிறப்பான முறையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நூலை இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் சிறப்பான முறையில் தயாரித்துள்ளது. இதனை அரபி மொழி தெரிந்தவர்களுக்கு இலவசமாகவும்  வழங்கப்பட்டுகிறது.


பிரதமர் விருந்தில் தயாநிதி, கனிமொழி

July 21st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பிரதமர் விருந்தில் தயாநிதி, கனிமொழி

பிரதமர் அளித்த விருந்தில் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து எம்.பி.க்களும் விருந்து அளித்தார்.

இந்த விருந்தில், பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன் சரண் சிங் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

சமாஜவாதி கட்சியில் இணைந்த அவரை, அக்கட்சியின் பொதுச் செயலர் அமர்சிங் அழைத்து வந்தார்.

இறுதியாக, தனது ஆதரவை உறுதிப்படுத்திய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் சிபு சோரன், கட்சியின் 4 எம்.பி.க்களுடனும் விருந்தில் பங்கேற்றார்.

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த சமாஜவாதி எம்.பி. ராஜ் பப்பர் விருந்தில் பங்கேற்றார்.

இதைத் தவிர, எஸ்.எஸ். பங்காரப்பா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முப்தி முகமது சயீது, அசாம் முதல்வர் தருண் கோகோய், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விருந்தில் பங்கேற்றனர்.
 
 


இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளது என்று பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் கூறினார்.

பாராட்டு விழா

கடந்த 2006-ம் ஆண்டு “வாருங்கள் கிராமம் செல்வோம்” என்ற திட்டத்தை கிராமப்புறங்களில் செயல்படுத்தி சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி டாக்டர் அஷ்ரப்பிற்கு மருத்துவ துறையில் தேசிய அளவில் மிக உயர்ந்த விருதான பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு திருச்சி கிளை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர் குணசேகரன், டாக்டர்கள் ஞானதிலகன், கலைக்கோவன், எஸ்.எம்.ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அஷ்ரப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கிராமங்கள் தத்தெடுப்பு

ஒரு நாள் மருத்துவ முகாம்கள் நடத்துவதால் கிராமப்புற மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் செல்ல வேண்டும். வியாதிக்கான மருந்துகள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். இந்திய மருத்துவ கூட்டமைப்பில் 2500 கிளைகள் உள்ளன. இதன் மூலம் 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளோம்.

கடந்த 60 வருடத்தில் நாம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையே இடைவெளி நீடிக்கிறது. டாக்டர்களின் அணுகுமுறை நோயாளிகளிடம் சிறந்ததாக இருக்க வேண்டும். சாலை விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். நான் அடுத்ததாக சாலை விபத்துக்கள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் கீதாராமனுஜம் நன்றி கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=426581&disdate=7/20/2008&advt=2


நாளை நம்பிக்கை தீர்மானம்: மத்திய அரசுக்கு சிபுசோரன் ஆதரவு-அஜித்சிங் எதிர்த்து ஓட்டு

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

நாளை நம்பிக்கை தீர்மானம்: மத்திய அரசுக்கு சிபுசோரன் ஆதரவு-அஜித்சிங் எதிர்த்து ஓட்டு 

இடது சாரி கட்சி கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் மன்மோகன்சிங் அரசு மெஜாரிட் டியை இழந்து விட்டது.

மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க பாராளுமன்றத்தின் விசேஷ கூட்டம் நாளை கூடுகிறது.

பகல் 11 மணிக்கு முதல் நிகழ்ச்சியாக இடைத்தேர் தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.

அதன் பிறகு மரணம் அடைந்த முன் னாள் எம்.பி.க்கள் ஜி.எம். பனாத்வாலா உள்ளிட்ட 5 பேருக்கு இரங்கல் தெரி விக்கப்படுகிறது. அதை தொடர்ந்து பல்வேறு தக வல் அறிக்கைகள் பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப் படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் முடிந் ததும் பிரதமர் மன்மோகன் சிங் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் ஒரு வரி தீர்மானத்தை சபையில் தாக் கல் செய்கிறார்.

உடனே இதன்மீது விவாதம் தொடங்கும் பாராளுமன் றத்தில் காங்கிரஸ் தவிர மொத்தம்
36 கட்சிகள் உள்ளன. அனைத்து கட்சி தலைவர் களும் தீர்மானத்தின் மீது பேசுவார்கள்.
நாளை மறுநாள் 2-வது நாள் விவாதம் நடை பெறும். அப்போது பெரிய கட்சிகளின்
தலைவர்கள் பேசுவார்கள். கடைசியாக எதிர்க்கட்சி தலைவர் அத்வானி பேசுவார்.

விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மன் மோகன்சிங் பேசுவார். பின்னர் நம்பிக்கை தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெறும். அப்போது அரசு தப்புமா? இல்லையா என்பது தெரிய வரும். ஆட்சியை காப்பாற்ற மத்திய அரசுக்கு 271 எம்.பி.க்கள் தேவை. தற்போதைய நில வரப்படி 261 எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இன்னும் 10 எம்.பி.க்கள் தேவைப்படுகிறார்கள். இதை பெற காங்கிரஸ் போராடுகிறது.

காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த சமாஜ்வாடி கட்சியில் மொத்தம் 39 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 4 பேர் மாயாவதி யோடு கைகோர்த்துள்ளனர். அவர்கள் அரசுக்கு எதி ராக ஓட்டுப் போடுவதாக அறிவித்து விட்டனர்.

இந்த கட்சியில் இருந்து இன்னும் சிலரும் கூட மாயாவதி பக்கம் சாய்வார் கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற் படுத்தி இருக்கிறது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய லோக்தளம் ஆகிய கட்சி களில் மொத்தம் 11 எம்.பி.க் கள் உள்ளனர். இவர்கள் ஒட்டு மொத்த ஆதரவும் கிடைத்து விட்டால் மெஜா ரிட்டியை நிரூபித்து விடலாம் என்று காங்கிரஸ் கருதியது. இதற்கான முயற்சியில் ஈடுபட்டது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் 5 எம்.பி.க்கள் உள்ளனர். இதன் தலைவர் சிபுசோரனுடன், காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்தியது. சிபுசோரன் நேற்று இரவு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். இன்று காலை சோனியாவை சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு போடுவதாக அறிவித்தார். அஜீத்சிங் தலைமையி லான ராஷ்டீரிய லோக் தளத்தில் 3 எம்.பி.க்கள் உள்ளனர். அவர் இன்று திடீர் என்று உத்திரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியை சந்தித்து பேசினார்.

பின்னர் மத்திய அரசுக்கு எதிராக ஓட்டு போடுவோம் என்று அவர் அறிவித்தார். இது மத்திய அரசுக்கு புதிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தேவேகவுடா கட்சியில் 3 எம்.பி.க்கள் உள்ளனர். அவருடன் காங்கிரஸ் பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியது. ஆனாலும்,
அவர் காங்கிரசின் பக்கம் சாய வில்லை. அவர் மத்திய அர சுக்கு எதிராக ஓட்டு போடப்
போட திட்டமிட்டு இருப்ப தாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரே எம்.பி.யை கொண்ட மஜிலீஸ் இதே துல் முஸ்லி மன் கட்சி காங்கிரசுக்கு ஆதர வாக ஓட்டு போடுவதாக அறிவித்து உள்ளது. எதிர் அணியில் உள்ள அகாலி தளம் மற்றும் சிவ சேனா கட்சியில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்கலாம், அல் லது ஓட்டெடுப்பை புறக் கணிக்கலாம். என்று காங்கி ரஸ் நம்புகிறது. அது மத்திய அரசுக்கு சாதகமாக அமையும் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதற்கான சாத்தி யம் குறைவாகவ