ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூட்டம் நிறைந்த சந்தைப்ப்பகுதியில் தொடர்ந்து குறைந்தபட்சம் ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
May 13th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, குண்டுவெடிப்பு, சுற்றுலா, தீவிரவாதம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |
ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூட்டம் நிறைந்த சந்தைப்ப்பகுதியில் தொடர்ந்து குறைந்தபட்சம் ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.
April 12th, 2008 பகுப்புகள்: ஆப்கானிஸ்தான், தீவிரவாதம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |
சனியன்று தாலிபன் தீவிரவாதிகள் என கருதப்படுபவர்களால் கட்டுமானப் பணிக்காக சென்றிருந்த இந்திய எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தின் (Border Roads Organisation) ஊழியர்கள் தாக்கப்பட்டதில் இரு பொறியாளர்கள் இறந்தனர்; ஐவர் காயமடைந்தனர்.
இன்று காலை 9 மணியளவில் நிம்ரோZ மாகானத்தில் மினார் பகுதியில் இவர்கள் மீது தற்கொலைப்படையினரின் வண்டி மோதியதில் சி கோவிந்தசாமி மற்றும், எம் பி சிங் என்ற இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பிஸ்ராம் ஓரான்,விக்ரம் சிங், முகமது நசீன் கான், அனில்குமார் தம்பி, மாயாராம் ஆகியோர் காயமடைந்தவர்கள் என வெளியுறவுத் துறையின் தொடர்பாளர் நவ்தேஜ் சர்மா கூறினார். காயமடைந்தவர்கள் மருத்துவ முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்; காயமடைந்தவர்கலையும் இரந்தவர்களின் உடல்களையும் உடனே திரும்பக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
சுமார் 400 BRO ஊழியர்கள் சரஞ்சிற்கும் டெலாராமிற்குமிடையேயான 218 கிமீ சாலை அமைப்புப்பணிகளில் இந்தியாவின் உதவிதிட்டங்களின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள். தாலிபான் ஆப்கனின் புனரமைப்பு திட்டங்களுக்கு இந்தியா அளித்து வரும் உதவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. திசம்பர் 2005இலேயே இந்திய ஓட்டுநர் குட்டியை பிடித்துவைத்துக் கொண்டு இந்தியர்கள் வெளியேற கெடு விதித்துக் கொன்றனர்.அதன் பிறகு மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளனர். இந்தியா இப்பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பிற்காக 300 பேர் அடங்கிய ITBP படையினரை அனுப்பியுள்ளது. கடந்த ஜனவரியில் அவர்கள் மீதும் தற்கொலைப்படை தாக்கி இரு படைவீரர்கள் இறந்தனர்.
இந்திய வெளியுறவுத்துறையின் சர்மா இந்த வன்முறைகளை கடுமையாக கண்டிப்பதுடன் ஆப்கன் மக்களின் நல்வாழ்விற்கும் புனரமைப்பிற்கும் துணையாக இருக்க இந்தியாவின் பிடிப்பை இந்நிகழ்வுகள் தளர்த்தாது என்று கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் இரங்கல்களை தெரிவித்துக் கொண்டு அவர்களுக்கு காப்பீடு மற்றும் உதவிப்பணம் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கூறினார்.
March 11th, 2008 பகுப்புகள்: தீவிரவாதம், பாக்கிஸ்தான் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் இன்று காலை 9:30 மணிக்கு டெம்பிள் தெருவில் அமைந்துள்ள அந்நாட்டு குற்ற ஆய்வு நிறுவனமான பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் தலையகத்தினுள் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட சரக்குந்து ஒன்று அத்துமீறி நுழைந்து வெடித்ததில் 19 பேர் பலியானார்கள்.வெடிப்பின் பாதிப்பில் அந்த ஏழு மாடிக்கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளது.
அதேநேரம் மாடல்டௌன் பகுதியில் ஒரு சரக்குந்துவில் வெடிபொருட்களுடன் இரு தற்கொலைபடையினர் ஒரு வீட்டிற்குள் புகுந்து வெடித்துச் சிதறியதில் அவர்களும் அவ்வீட்டின் காவற்காரரின் இரு குழந்தைகளும் இறந்தனர். இவ்வீட்டின் அருகே புட்டோவின் கணவர் சர்தாரியின் வீடும் லாகூர் நகர நாசிம் அமீர் முகமது வீடும் உள்ளது. ஒரு விளம்பர நிறுவனத்திற்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. எதனால் இந்த வீட்டை தாக்கினார்கள் என்பது புரியவில்லை.
March 9th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், உலகம், கைது, சட்டம் - நீதி, தீவிரவாதம், போராட்டம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |
அமெரிக்காவின் மத்திய உளவுத் துறையான சி.ஐ.ஏ. பயன்படுத்திவரும் கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளைத் தடைசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை தனது வெட்டு வாக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுதிவிட்டதை அதிபர் புஷ் உறுதிசெய்துள்ளார்.
சி.ஐ.ஏ.வின் இந்த விசாரணை முறைகளால்தான் அமெரிக்கா மீது மறுபடியும் மறுபடியும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடப்பது தடுக்கப்படிருக்கிறது, இந்த சட்டம் தெரிவிக்கும் மாற்றங்கள் அமலுக்கு வந்தால் அது அமெரிக்க மக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கலாம் என்று அதிபர் புஷ் கூறியுள்ளார்.
விசாரிக்கப்படும் நபருக்குக்கு தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறுவது போன்ற உணர்வைத் தரும் வாட்டர்போர்டிங் என்ற விசாரணை உத்திக்கும் இந்த சட்ட மசோதா தடை விதித்திருக்கக் கூடும். இந்த விசாரணை உத்தியை சித்ரவதை என்று கூறி மனித உரிமை குழுக்கள் கண்டித்திருந்தனர்.
நன்றி: பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
1. Bush’s Veto of Bill on C.I.A. Tactics Affirms His Legacy - New York Times: “President Bush shut down a Congressional effort to limit harsh interrogation techniques, cementing a legacy of fighting for strong executive powers.”
2. The Associated Press: Bush Explains Veto of Waterboarding Bill
March 3rd, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், ஆசியா, இராணுவம், உலகம், கிளர்ச்சி, சட்டம் - நீதி, தீவிரவாதம், தேர்தல், தேர்தல்முடிவு, போராட்டம், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |
1. BBC NEWS | South Asia | S Lanka finds boat migrants dead: இலங்கையின் திருகோணமலை அருகே திசை தவறிய படகில், உணவு மற்றும் தண்ணீர் இல்லாதபடியால் இருபது பேர் மரணமடைந்துள்ளார்கள். பர்மாவிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் அகதிகளாய் கிளம்பி வாய்ப்புகளைத் தேடி தாய்லாந்து மற்றும் மலேஷியாவை நோக்கி செல்ல ஆரம்பத்த படகில் இருந்தவர்களில் 71 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
2. Chavez warns of war with Colombia - Yahoo! News: கொலம்பியா நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகே வெனிசுவேலா இராணுவமும் ஈக்வடார் நாட்டின் படைகளும் அணிவகுத்திருக்கின்றன. அமெரிக்காவின் ஆணைக்குட்பட்டு ஈகுவடருக்குள் அத்துமீறி நுழைந்து ஈக்வடரின் போராளியை (Revolutionary Armed Forces of Colombia - FARC) கொலம்பியா கொன்றதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3. Emergency Order Empties Armenian Capital’s Streets - New York Times: அர்மீனியாவில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனமானது. இதன் விளைவாக நடந்த போராட்டங்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். ருஷியாவின் முன்னாள் அங்கத்தினரான் ஜார்ஜியா போன்ற நாடுகளிலும் இது போன்ற போராட்டங்கள் ஆட்சி மாற்றத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது.
January 16th, 2008 பகுப்புகள்: இராணுவம், தீவிரவாதம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |
18 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொண்ட இஸ்ரேலியப் படை
பாலஸ்தீனத்தின் கஸா பகுதியில் 18 பாலஸ்தீனர்களை இஸ்ரேலியப் படை சுட்டுக் கொண்டது. மேகத்திய அமைதிக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிராக இஸ்ரேலின் நடவடிக்கை அமைந்துள்ளதாக பாலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரே நாளில் அதிகமான பாலஸ்தீனர்கள் இப்பொழுது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
January 16th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை, குண்டுவெடிப்பு, குழந்தைகள், சமூகம், தீவிரவாதம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |
இலங்கை : பஸ்ஸில் குண்டுவெடிப்பு - 20 பேர் பலி
இலங்கை புத்தள நகரில் பஸ்ஸில் குண்டுவெடித்து 20 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பலர் குழந்தைகள்.
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. எனினும் இக்குண்டு பேருந்தில் இருந்ததா அல்லது சாலையோரம் பதிக்கப்பட்டிருந்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை.
January 14th, 2008 பகுப்புகள்: அரசியல், கலவரம், குற்றம், கொலை, சட்டம் - நீதி, சாதனை, சென்னை, தமிழ்நாடு, தீவிரவாதம், போராட்டம், மரணம், விழா | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |
குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டு வாசலில் நின்று வரவேற்றார்.
மோடியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் புகைப்படம் எடுக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கப்படவில்லை. மதியம் ஒரு மணிக்கு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றார்.வீட்டு வாசலில் நின்றிருந்த ஜெயலலிதா மோடியை வரவேற்றார். பொன்னாடை அணிவித்தார்.
போயஸ்கார்டனுக்குள் மோடி வந்து ஜெ., பொன்னாடை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மட்டும் புகைப்படனிபுனர்கள் அனுமதிக்கப்பட்டனர். வரவேற்புக்கு பிறகு மோடிக்கு மதிய உணவு விருந்து பரிமாறப்பட்டது. விருந்துக்கு பின் 3 மணிக்கு தாஜ் கோரமண்டலுக்கு சென்று ஓய்வெடுத்து மீண்டும் மாலை 5 மணிக்கு சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்துக்கு செல்ல உள்ளார். மாலை 6.30 மணிக்கு மவுண்ட் ரோட்டில் உள்ள காமராஜர் அரங்கில் துக்ளக் இதழின் விழாவில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் பாசிஷ எதிர்ப்பு முன்னனியினர் நரேந்திரமோடி கலந்துக்கொள்ள இருக்கும் காமராஜர் அரங்கை முற்றுகையிட அனைத்து முயற்ச்சிகளையும் எடுத்து வருகிறது இதனால் அப்பகுதியில் ஏராளமான காவல்த்துறையினர் பாதுக்காப்பு பனியில் ஈடுப்பட்டுள்ளனர்.
பாசிஷ எதிர்ப்பு முன்னனியின் நிர்வாகிகளின் ஒருவரான எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் கமராஜர் அரங்கை முற்றுக்கையிடும் போராட்டம் தடையை மீறி நடைப்பெரும் என தெரிவித்தார்.
January 12th, 2008 பகுப்புகள்: இந்தியா, இராணுவம், இலங்கை, ஈழம் - இலங்கை, தீவிரவாதம், தொலைக்காட்சி, மத்திய அரசியல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் நடத்திவரும் தாகுதல்களுக்கு இந்தியாவின் ஆதரவு இருப்பதாகவும் எந்த நாடும் தங்கள் அரசியல்சட்டத்திற்குட்பட்டு தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி டெவில்ஸ் அட்வகேட் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கரண் தாப்பருக்கு அளித்த நேர்முகத்தில் கூறியுள்ளார்.
கடந்த சிலகாலமாக சிறிலங்கா இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெறும் சண்டைகள் அதிகமாயுள்ளன.எங்களைப் பொறுத்தவரை தீவிரவாதிகள் விதயத்தில் சூன்ய சகிப்புத்தன்மை ( Zero tolerence) கடைபிடிக்கிறோம்.ஆகையால் எந்த நாடும் தங்கள் நாட்டு தீவிரவாதிகள் மீது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கும் நடவடிக்களைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை என்று கூறினார்.
இலங்கை அரசின் போர்நிறுத்த உடன்பாட்டை இரத்துசெய்ததைக் குறித்த கேள்விக்கு அதன் தாக்கத்தைக் குறித்து ஆராய வேண்டும் என்றார். அதேநேரம் சிறிலங்கா அரசு அந்நாட்டின் அரசியலமைப்பிற்குட்பட்டு சிறுபான்மை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும் என இந்தியா விரும்புவதாக கூறினார்.
இந்த நேர்முகத்தில் அவர் கூறிய மற்ற விவரங்களைக் காண… ….ரிடிஃப் தளம்
December 28th, 2007 பகுப்புகள்: தலைவர்கள் மறைவு, தீவிரவாதம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |
| பெனாசிர் கொலை: அல்-கொய்தா பொறுப்பேற்பு |

இஸ்லாமாபாத்: அல் கொய்தா அமைப்பை அழிக்க பெனாசிர் பூட்டோ முயன்றதால், நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என அல் கொய்தா அமைப்பு கூறியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ நேற்று ராவல்பிண்டி அருகே அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அந்த இருவரும் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பெனாசிருக்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் இருந்ததால் யார் அவரைக் கொன்று என்பது தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் அல் கொய்தா அமைப்பு பெனாசிர் படுகொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.
இத்தாலியில் உள்ள ஒரு செய்தி நிறுவனத்தை இன்று தொடர்பு கொண்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அல் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பெனாசிர் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பெனாசிர் பூட்டோ அமெரிக்காவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மேலும் எங்களது அமைப்பையும் ஒழித்துக் கட்ட அவர் தீவிரமாக இருந்து வந்தார்.
இதனால்தான் அவரைக் கொல்ல நேரிட்டு விட்டது. அல் கொய்தா அமைப்பின் 2வது நிலை தலைவரான அல்ஜவாஹிரிதான் பெனாசிர் பூட்டோவைக் கொல்லும் முடிவை எடுத்தார். இதையடுத்து திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அல் யாசின் கூறியுள்ளார்.
தான் எங்கிருந்து பேசுகிறேன் என்பதை அல் யாசின் தெரிவிக்கவில்லை என்று இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எப்.பி.ஐ:
இதற்கிடையே பெனாசிரைக் கொல்ல அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடனும், அந்த அமைப்பின் நம்பர் டூ ஆன அய்மான் அல் ஜவாஹிரியும் கடந்த அக்டோபரிலேயே திட்டம் தீட்டியதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இன்று உடல் அடக்கம்:
இதற்கிடையே, பெனாசிரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான சிந்து மாகாணம், லர்ஹானாவில் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அங்கு அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.
பாகிஸதானில் இன்று 2வது நாளாக பெரும்பாலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடருகின்றன. பல ஊர்களில் கலவரம் வெடித்துள்ளது.
![]()
December 23rd, 2007 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, தீவிரவாதம், தீவிரவாதம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | ஒரு மறுமொழி » |
குஜராத்தின் முதல்வர் நரேந்திரமோடிக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மத்திய அரசின் உளவு அமைப்பு மோடியின் பாதுகாப்பினை பலப்படுத்த பரிந்துரை செய்துள்ளது.
குஜராத்தில் இரண்டு கட்டமாக பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டும் முதல்வராக மோடியே ஆட்சியை கைப்பற்றுவார் என கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், அவரது உயிருக்கு லஷ்கர் இதொய்பா தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைப்படையினால் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
December 10th, 2007 பகுப்புகள்: தீவிரவாதம், தேர்தல் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |
சுப்ரதீப் சக்ரபர்த்தி எடுத்துள்ள Encountered On Saffron Agenda, என்ற ஆவண திரைப்படத்தில் சோரபுதீனைக் கொன்ற DIG வன்சாரா மேலும் 22 பேரை போலி காவல் கைகலப்பில் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ளது. அனைவருமே குஜராத் முதல்வர் மோடியை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகளாக அறியப்படுகின்றனர்.
இதுகுறித்து சக்கரவர்த்தி கூறுகையில், குஜராத் போலீஸார், லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாதிகள் என்ற பெயரில் கொன்றவர்கள் அனைவருமே அப்பாவிகள். மோடியைக் கொல்ல முயன்றதாக கூறி இவர்களை குஜராத் போலீஸார் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதை கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த வாக்குமூலங்கள், அவர்களின் வக்கீல்கள், தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளேன் என்றார்.
இந்த ஆவணப்படம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து குஜராத் அரசும், காவல்துறையும் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
கீழ்கண்ட செய்திகளின் அடிப்படையில்…..
CNNIBN
தட்ஸ்தமிழ்.கொம்