வேலைவாய்ப்பு | சற்றுமுன்...




ரயில்வே பணிக்கு மதராஸா மாணவர்கள்!

July 7th, 2008 பகுப்புகள்: இரயில், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

மதரசா பட்டப் படிப்பு முடித்த இஸ்லாமிய மாண வர்கள் ரயில்வே துறை வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியு டையவர்கள் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித் துள்ளார்.

இஸ்லாமிய இளைஞர் கள் “மதரசா’ என்ற அரபிமொழி பட்டப் படிப்பை பாரம்பரியமாக கற்று வருகின்றனர். தற்போது இந்தப் பட்டம் பெற்றவர்கள் ரயில்வே துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கான அரசு துறை சார்பான அனைத்து பணிகளும் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் நேற்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் இன மக்களின் ஓட்டுவங்கியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இழக்காமல் பாதுகாக்கும் வண்ணம் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இதன்படி கடந்த ஆண்டு ராஜேந்தர் சர்ச்சார் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு சிறுபான்மையினர்கள் அரசு சார்பான துறைகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்தது. மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில் லாலு பிரசாத் யாதவும், ரயில்வே துறை களில் முஸ்லிம்கள் அதிகளவில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவோம் என அறிவித்து இருந்தார்.

அதன்படி தற்போது மத்திய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கையால் வேலை பெறுவோரின் எண்ணிக்கை 5 சதவீதம் கணிசமாக உயரும் வாய்ப் புள்ளது.


பெட்ரோல் நிலையங்களை மூடுகிறது ரிலையன்ஸ்

March 25th, 2008 பகுப்புகள்: தொழில், பொருளாதாரம், வணிகம், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தி வரும் 1,400 பெட்ரோல் நிலையங்களை ஏப்ரல் இறுதியில் மூடிவிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனால் 55 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், ரிலையன்ஸை விட குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பதால் போட்டியை சமாளிக்க முடியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சுற்றறிக்கை அனைத்து ரிலையன்ஸ் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu Business Line : Reliance Ind to shut down 900 fuel retail outlets

2. Petrol pumps closure to benefit RIL: Experts- Oil & Gas - Energy - News By Industry - News - The Economic Times

3. The Telegraph - Calcutta (Kolkata) | Business | Oil retail rules under strain


IIM-A மாணவருக்கு ரூ1.44கோடி சம்பளம்

March 13th, 2008 பகுப்புகள்: கல்வி, வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

IIM அகமதாபாத்தைச் சார்ந்த மாணவர் ஒருவருக்கு வருடத்திற்கு ரூ1.44 கோடி சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. இது கடந்த வாரத்தில் IIM கல்கத்தாவில் வழங்கப்பட்ட ரூ1.36கோடி சாதனையை முறியடித்துள்ளது.

 IIM-A grad gets Rs1.44 cr job offer, sets new record - DNA India.


அரசின் தவறுகளை சுட்டிக்காட்டினால் என் மீது கோபப்படுவதா?: ராமதாஸ் கேள்வி

February 12th, 2008 பகுப்புகள்: தமிழக அரசியல், தொழிலாளர்கள், பொருளாதாரம், போராட்டம், விவசாயம், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ரயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் போடுகிறார்கள். எல்லா முடிவுகளையும் ரயில்வே போர்டு எடுக்கிறது. அது போல வேளாண் துறைக்கும் மத்திய மாநில அரசுகள் தனியாக பட்ஜெட் போட வேண்டும். 10 ஆண்டுகளாக நான் இந்தக் கருத்தை கூறி வருகிறேன்.

வேளாண் பட்டதாரிகள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. இதனைத் தொடங்கி வைத்து ராமதாஸ் பேசியது:

கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண் பட்டதாரிகள் பலர் வேலை கிடைக்காமல் வறுமையில் வாடுகின்றனர். ஒரு காலத்தில் மருத்துவப் படிப்புக்குப் பிறகு வேளாண் படிப்புக்குத்தான் அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது அத்தகைய நிலை இல்லை. தொழில்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வேளாண்மைத் துறைக்கு கொடுக்கவில்லை. ஆயிரம் ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் வருகிறது என்கிறார்கள். படித்து வேலை இல்லாத இவர்களுக்கு 100 ஏக்கர் கொடுக்கலாமே.

வேளாண் துறையை மேம்படுத்த வேண்டுமானால் அதுபற்றித் தெரிந்த 5 பேர் குழுவை முதலில் நியமிக்க வேண்டும். நான் இந்தத் துறை அமைச்சர் பற்றி எதுவும் சொல்லவில்லை. விவரமான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.

மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. அதில் பார்வர்டு பிளாக் கட்சியும் அங்கம் வகிக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை யாரும் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் நான் இங்கே ஏதாவது சொன்னால், ஆட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டிப் பேசினால் வேறுமாதிரி பேசுகிறார்கள். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. நான் வெளிப்படையாகப் பேசக்கூடியவன்.

தவறுகளை சுட்டிக்காட்டினால் என்மீது கோபப்படுகிறார்கள். குறைகளைப் பற்றி சொல்லாமல் நான் என்ன செய்வது? என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நன்றி: தினமணி


டாடா கன்சல்டன்சியிலிருந்து 500பேர் வெளியே(ற்)றல்

February 5th, 2008 பகுப்புகள்: தகவல் தொழில்நுட்பம், தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசசிலிருந்து தங்கள் செயற்பாடு சரியான தகுதியை அடையாததால் 500 பேர் விலகல் கடிதம் கொடுத்துள்ளனர். அந்நிறுவனத்தின் ஊடக தொடர்பாளர் தங்கள் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இவர்களால் ஈடுகொடுக்க முடியாததால் தங்கள் செயற்திறனுக்கேற்ற மாற்று வேலைகளுக்கு முயலுமாறு இந்த 500 பேர் அறிவுறுத்தப்பட்டிருந்தனர் எனக் கூறினார். ஏப்ரலிலிருந்து மார்ச் வரையான நிதியாண்டில் பணியிலிருந்து விலகியவர்களின் எண்ணிக்கை 500 என்றும் இவ்வாறு நிகழ்வது அதிசயமல்ல என்றும் அவர் கூறினார். கடந்தவருடமும் இதேபோன்ற எண்ணிக்கையில் பணிவிலக்கம் இருந்தது என்றார்.

இது பற்றிய The Economic Times செய்தி:


புகைப்படங்களும் செய்தியும்

February 2nd, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, இடஒதுக்கீடு, இந்தியா, கருத்துப்படம், கலை-இலக்கியம், கிரிக்கெட், குற்றம், கைது, சட்டம் - நீதி, சமூகம், சென்னை, தமிழ்நாடு, தொழிலாளர்கள், பொருளாதாரம், போராட்டம், மரணம், வணிகம், விளையாட்டு, வேலைநிறுத்தம், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அனைத்துப் புகைப்படங்களும் செய்திகளும்: தினமலர்

1. கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா நினைவு தினம்:

Host unlimited photos at slide.com for FREE!

2. அரசு உதவித்தொகை வழங்குவதில் உள்ள விதிமுறைகளை நீக்கக் கோரி போராட்டம்:

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: The Hindu News :: Withdraw marks as criteria for SC-ST scholarships: CPI(M) | TN to maintain status quo on scholarship

3. நவீன பேருந்து நிறுத்த நிழற்குடை:

Host unlimited photos at slide.com for FREE!

4. தோழி சசிகலா - அதிமுக

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: VIPs galore in TN Assembly

5. கொச்சியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: Fourth DC international book fair from February 1 to 11- ET Cetera - News By Industry - News - The Economic Times

6. ஆடி - இந்தியா

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: Audi to spend 20 mln euros in India, assemble A4s: Reuters Business | Audi targets to sell 3,000 cars in India by 2010: - Automobiles-Auto-News By Industry-News-The Economic Times | Financial Express: Audi to spruce up dealership network

7. டில்லியில் குளிர்

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: North and north-east shiver, two die of cold in UP - Politics/Nation-News-The Economic Times | Delhi weathers another chilly morning -Delhi-Cities-The Times of India

8. டில்லி தமிழ் சங்கத்தின் இசை விழா - வடக்கு வாசல்

Host unlimited photos at slide.com for FREE!

9. ஹூண்டாய் கார் தொழிற்சாலை

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: Workers of Hyundai Motor arrested for trying to stage demo - Automobiles-Auto-News By Industry-News-The Economic Times | Hyundai plans to invest $US1b in India - Breaking News - Business

10. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இருபது-20 விளையாட்டு

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: BBC SPORT | Cricket | Australia crush lamentable India

11 .காதலர் தின ரோஜாக்கள் - ஏற்றுமதி

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: Rs 60 cr worth roses for export this Valentine's day

12. சமாஜ்வாதி கட்சி எம்பி அதிக் அகமது கைது

Host unlimited photos at slide.com for FREE!

தொடர்புள்ள செய்திகள்: UP don Atiq held in Delhi - Hindustan Times | Murder-accused MP Ateeq Ahmad held - India - The Times of India


ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பு : சென்னையில் நேர்முக தேர்வு

January 23rd, 2008 பகுப்புகள்: ஓமன், சென்னை, தேர்வு, வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பு : சென்னையில் நேர்முக தேர்வு

ஓமன் நாட்டில் மருத்துவர் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு சென்னையில் நடக்கிறது.

இதுகுறித்து அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தலைவர் பிந்து மாதவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஓமன் நாட்டில் உள்ள முன்னணி மருத்துவ மையத்தில் பணியாற்ற எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர்கள், டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் படித்த மகப்பேறு மருத்துவர்கள், சி.எஸ்.ஏ., டிப்ளமோ தேர்ச்சி பெற்ற மருத்துவ ஆய்வக பணியாளர்கள், மூன்றரை ஆண்டு டிப்ளமோ பெற்ற செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நிறைவான சம்பளம் வேலையளிப்போரால் நிர்ணயிக்கப்படும்.இந்த பணிகளுக்கு விருப்பமும், தகுதியும் பெற்ற பெண் மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் அதன் நகல்களுடன் வரும் 28ம் தேதியன்று காலை 9 மணிக்கு சென்னை அடையாறு, முத்துலட்சுமி சாலை, எண்: 48 என்ற முகவரியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 24464268, 24464269 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.dinamalar.com


கர்நாடகாவில் இரயில்வே வேலையெடுப்பு சர்ச்சையில் !

January 9th, 2008 பகுப்புகள்: அரசியல், கிளர்ச்சி, போராட்டம், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

இரயில்வேயின் 4700 கடைநிலை ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்களை அனுமதிக்கக் கூடாது என உள்ளூர் கன்னட கட்சிகள் நடத்திவரும் போராட்டம் பிற மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. கர்நாடகா ரக்சனா வேதிகே (கேஆர்வி) போராட்டக்காரர்களுடன் இந்து மதசார்பு நிலையங்களும் அரசியல் தலைவர்களும் இந்த எதிர்ப்பில் சேர்ந்து கொண்டுள்ளனர்.  இந்த போராட்டம் முக்கியமாக இரயில்வே அமைச்சரின் பிகார் மாநிலத்தவர்களுக்கு எதிராக ஜனவரி மூன்றிலிருந்து நடைபெறுகிறது.

கேஆர்வி கட்சியினர் யஷ்வந்தபுரத்தில் உள்ள தேர்வுமையத்தில் உள்ளேநுழைந்து தேர்வு எழுதிக்கொண்டிருந்தவர்களை பயமுறுத்தி வெளியேற்றினர்.

சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள இம்மாநிலத்தில் பிஜேபியும் காங்கிரசும் இப்பிரச்சினையை இப்போது கையிலெடுத்துள்ளன. சித்திரதுர்காவில் சித்திரதுர்கா ப்ருகன் மடத்தின் ஸ்ரீ முருகராஜேந்திர சுவாமியும் போராட்டத்தில் குதித்து சித்திரதுர்கா தொடர்வண்டி நிலையத்தில் இரயில் ரோகோ போராட்டம் நடத்தினார்.

Railway recruitment row in Karnataka


இணையதள மையங்களில் கண்காணிப்பு கேமிரா & பிற துண்டு செய்திகள்

December 28th, 2007 பகுப்புகள்: தொழிலாளர்கள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

  • தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக 48 லட்சம் பேர் காத்திருப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
  • கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தாத இணையதள மையங்களின்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
  • அடுத்த ஓராண்டுக்குள் 28 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்குச் சேர்க்க பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனமான எச்.பி.எல். திட்டமிட்டுள்ளது.
  • (The Telegraph - Calcutta (Kolkata) | Business | Haldia Petrochemicals (HPL) holds out job hope)

  • கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதால் இந்தியாவிடம் தங்கள் கரன்சி நோட்டுகளை அச்சடித்து தருமாறு 3 அண்டை நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.
  • (India set to mint money for neighbors - ET Cetera - News By Industry - News - The Economic Times)

  • அரசு மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரே டைரக்டரியை அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டி.ராய்) பரிந்துரைத்துள்ளது.
  • (TRAI plans to ring in integrated directory for fixed line, mobiles - Telecom - News By Industry - News - The Economic Times)

மேலும்: ஒரு வரிச் செய்திகள் :: விடுதலை


முதுநிலை பட்டதாரிகளுக்காக மதுரையில் புதிய வேலை வாய்ப்பு அலுவலகம்

December 27th, 2007 பகுப்புகள்: வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

முதுநிலை பட்டதாரிகளுக்காக மதுரையில் புதிய வேலை வாய்ப்பு அலுவலகம்
    

தற்போது சென்னையில் உள்ளதைப் போன்ற முதுநிலை பட்டப் படிப்புகளைப் பதிவு செய்யும் வேலை வாய்ப்பு அலுவலகத்தைப் போல, தென் மாவட்ட மக்களின் வசதிக்காக மதுரையில் விரைவில் ஒன்று தொடங்கப்டும் என தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் முதுநிலை பட்டப் படிப்புகளை முடிக்கும் மாணவ, மாணவியர் அவற்றைப் பதிவு செய்ய வேண்டுமானால் சென்னைக்குத்தான் வர வேண்டிய நிலை உள்ளது. சென்னையில் மட்டுமே முதுநிலை பட்டப்படிப்புகளைப் பதிவு செய்யும் வேலை வாய்ப்பகம் உள்ளது.

இதனால் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் சென்னையில் உள்ள முதுநிலை பட்டப் படிப்புக்கான வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் கூட்டம் அலை மோதுவதால் ஒரே நாளில் பதிவு செய்து திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்க தென் மாவட்ட மாணவ, மாணவியரின் வசதிக்காக மதுரையில் முதுநிலை பட்டப்படிப்புக்கான வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கிட்டத்தட்ட 48 லட்சம் பேர் பதிவு செய்து வைத்து வேலைக்காக காத்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேர் புதிதாக பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆள் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. புதுப்பிப்புப் பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த காலத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களின் நலனுக்காக சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது. இதன் பலனாக 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலன் அடைந்தனர்.

தற்போது சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெரும் கூட்டம் சேருவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க கிண்டியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

மேலும், தென் மாவட்ட மாணவ, மாணவியரின் வசதிக்காக மதுரையில் புதிதாக ஒரு வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்கப்படும். இதனால் முதுநிலைப் பட்டதாரிகள் சென்னைக்கு பதிவு செய்வதற்காக வருவதைத் தவிர்க்க முடியும் என்றார் அன்பரசன்.

www.thatstamil.com


விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு

December 18th, 2007 பகுப்புகள்: இராணுவம், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் இந்திய விமானப் படைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

திருமணமாகாத இளைஞர்கள் (1.1.87 முதல் 31.3.91 வரை) பிறந்தவர்கள் மட்டும் ஆவடி இந்திய விமானப்படை தளத்தில் நடைபெறும் நேரடி ஆள் சேர்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: கமாண்டிங் ஆபீஸர், 8, ஏர்மென் செலக்ஷன் சென்டர், ஏர்ஃபோர்ஸ், தாம்பரம், சென்னை-46. தொலைபேசி: 22791853, 22395553

www.dinamani.com


ஜன. 6-ல் புதுக்கோட்டையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு

December 15th, 2007 பகுப்புகள்: இராணுவம், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஜன. 6-ல் புதுக்கோட்டையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு

புதுக்கோட்டையில் ஜன. 6-ம் தேதி முதல் 8-ம் தேதிவரை பல்வேறு பதவிகளுக்கு ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பிரஜேந்திர நவ்நீத் வெளியிட்ட அறிக்கை:

ஜன. 6-ம் தேதி முதல் 8-ம் தேதிவரை சோல்ஜர் கிளார்க், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டெண்ட், சோல்ஜர் டெக்னிக்கல் பதவிகளுக்காக ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கலாம்.

சோல்ஜர் கிளார்க்-ஸ்டோர்