விபத்து | சற்றுமுன்...




கர்நாடகாவில் பேருந்து விபத்து: 16 மாணவர்கள் பலி

August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், குழந்தைகள், சற்றுமுன், மரணம், விபத்து | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கர்நாடகாவில் பேருந்து விபத்து: 16 மாணவர்கள் பலி

பெங்களூர், ஆக. 14: கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து பேருந்து ஒன்று 28 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த ஆற்றில் கவிழ்ந்தது.

அங்கு கூடியிருந்த மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியதால் 14 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர். மற்ற மாணவர்கள் இறந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 


துபாய் சாலை விபத்தில் இந்தியர் உள்ளிட்ட ஐந்து பேர் பலி

July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், துபாய், விபத்து | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

 

துபாய் சாலை விபத்தில் இந்தியர் உள்ளிட்ட ஐந்து பேர் பலி

துபாயில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.gulfnews.com/nation/Traffic_and_Transport/10228477.html

 

 


குஜராத்: நர்மதையில் பேருந்து விழுந்து 44 பேர் மரணம்

April 16th, 2008 பகுப்புகள்: *பொது, போக்குவரத்து, விபத்து | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

புதன் காலை குஜராத் மாநில போக்குவரத்து கழக பேருந்தொன்று பொடெல்லி கிராமத்தில் அறுபது அடி ஆழமுள்ள நர்மதா நதியில் விழுந்ததில் பெரும்பாலும் பள்ளி செல்லும் சிறார் உள்ளிட்ட 44 பேர் மரணமடைந்துள்ளனர்.நான்கு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அந்த பேருந்து டார்கோலிலிருந்து பொடெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது காலை 6:30 க்கு ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. பயணித்தவர்களில் பெரும்பான்மையினர் பள்ளி செல்லும் சிறார்களே. மீட்பு பணியை எளிதாக்க சர்தார் சரோவர் அணையிலிருந்து வெளியேறும் நீரை நிறுத்தி வைத்தனர். பேருந்து கால்வாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு விட்டது.

இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு ஒரு இலக்கம் ரூபாய் நட்ட ஈடு அறிவித்துள்ளது.

Bus falls into Narmada canal, 44 killed

Gujarat: Bus carrying kids in mishap; 44 dead


முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அசார் சென்ற கார் பேருந்துடன் விபத்து

April 14th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விபத்து | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

ஞாயிறு காலை மும்பையின் புறநகர் நவிமும்பை பகுதியில் உள்ள பாம்பீச் சாலையில், இதனை தொகுக்கும் பதிவரின் வீட்டருகே, மாநில அரசுபேருந்துடன் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருத்தீனின் மகிழ்வுந்து மோதியதில் சிறுகாயங்களுடன் அவர் தப்பினார்.அவரும் அவரது ஓட்டுநர் அமர்நாத் அல்குபாலும் அடுத்துள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிட்சை/முதலுதவி அளிக்கப்பட்டனர். அசாரின் இரு மகன்களும் பின்ன்னிருக்கையில் பயணம் செய்திருந்தனர்; அவர்களுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. உரான் சென்று கொண்டிருந்த பேருந்தில் சில பயணிகளே இருந்தனர். அவர்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.

அசாரும் அவரது மக்களும் சோலாப்பூரில் கிரிக்கெட் விளையாட தங்கள் ஹோண்டா CR-V வண்டியில் சென்று கொண்டிருந்தனர். வண்டியிலிருந்த காற்றுப்பைகள் உப்பியதால் அசாரும் ஓட்டுநரும் தப்பியதாக காவல்துறையினர் கூறினர்.

Azhar’s car hit by speeding bus


போபால் விஷவாயுக் கசிவு: பாதிக்கப்பட்டவர்கள் தில்லியில் போராட்டம்

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, உடல்நலம், குழந்தைகள், சட்டம் - நீதி, சுகாதாரம், தொழில், பொருளாதாரம், போராட்டம், மரணம், வணிகம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் போபால் நகரில் கடந்த 1984ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், 24 ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று போராடிவருகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் இருந்து தலைநகர் புதுடெல்லிக்கு 800 கி.மீ. பாதயாத்திரை நடத்தி, இவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

ஆனால் அப்போது பிரதமர் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லி வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. AFP: Bhopal tragedy survivors reach Delhi after 37-day protest march

2. Tehelka - India's Independent Weekly News Magazine: “Timeline: The Toxic Trail”

3. Indians Pressure Dow on Bhopal Cleanup - washingtonpost.com


எம்.ஜி.எம் கேளிக்கை பூங்காவில் கணினி ஊழியர் மரணம்

March 25th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, சமூகம், சர்ச்சை, தமிழ்நாடு, பொழுதுபோக்கு, மரணம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

சென்னை அருகே உள்ள எம்.ஜி.எம். டிஸ்ஸிவேர்ல்ட் பொழுது போக்கு பூங்காவில் சாப்ட்வேர் என்ஜீனியர் மரணமடைந்தார். நீச்சல்குளத்தில் தத்தளித்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல எம்.ஜி.எம். நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்.ஜி.எம். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாகவே தனது மகன் பலியாகியுள்ளதாக சுரேஷ்குமாரின் தந்தை திணேஷ்குமார் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் நல்ல உயரம். அந்த நீச்சல்குளத்தில் 4 அடி அளவுக்கே தண்ணீர் இருந்துள்ளது. எனவே நீரில் மூச்சுத் திணறியதாக கூறுவதை நம்ப முடியாது.

மூச்சுத் திணறி எனது மகன் இறந்திருக்க முடியாது. வேறு ஏதோ நடந்திருக்கிறது.

நீச்சல் குளம் முறையாக பராமரிக்கப்படவில்லை. நீச்சல்குளத்தில் எனது மகன் போராடியபோது அவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப எம்.ஜி.எம். நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.

கடந்த ஆண்டு எம்.ஜி.எம். பெரும் சர்ச்சையில் சிக்கியது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது ராட்சத ராட்டினத்தின் ஒரு பகுதி விழுந்து அவர் படுகாயமுற்றார். இன்னும் கூட அவர் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.எம்மில் வேலை பார்த்து வந்த ஸ்ரீலட்சுமி என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்போது சுரேஷ்குமார் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் பரிதாபமாக இறந்துள்ளார்.

முழுவதும் வாசிக்க: தட்ஸ்தமிழ் - Software Engineer dies mysteriously at MGM

முந்தைய சற்றுமுன்:

1. சென்னை தீம் பார்க் விபத்து: 7 பேர் கைது

2. இராட்டினத்திலிருந்து மாணவி விழுந்த வழக்கு: பூங்கா உரிமையாளர் தலைமறைவு.

3. புத்தாண்டு கொண்டாட்டங்கள்: விபத்தும் விபரீதங்களும்


மும்பை தீ விபத்து: 9 பேர் மரணம்

March 18th, 2008 பகுப்புகள்: விபத்து | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

திங்கள் மதியம் மும்பையின் பைகுல்லா தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர்; 63 பேர் காயமடைந்துள்ளனர். 12 தீயணைப்பு வண்டிகளும் ஏழு தண்ணீர் சரக்குந்திகளும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தும் கட்டிடத்தில் தீவிபத்தின்போது வெளியேற வாயில்கள் அமைக்கப் படாததால் இத்தனை உயிர்சேதம் என அதிகாரிகள் கூறினர். ஆனால் நேரில் பார்த்த சாட்சியொருவர் தீயணைப்பு படையினர் அரைமணிநேரம் தாமதமாக வந்ததாகவும் விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து நான்காவது மாடி சாளரங்களிலிருந்து மக்கள் குதித்ததாகவும் கூறினார்.கீழே குதிப்பவர்களை வெறும் கையினால் தாங்கிப் பிடித்தோம் என்றும் கூறினார்.

விபத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

Mumbai blaze claims nine lives


குவாட்டமாலா பஸ் விபத்தில் 54 பேர் பலி

March 3rd, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, மரணம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Guatemala align='left' மத்திய அமெரிக்காவில் உள்ள குவாட்டமாலா நாட்டில், பயணிகள் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் தலைநகரான குவாட்டமாலா சிட்டியில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள குயிலாபா என்ற இடத்தில் இவ்விபத்து நேற்று நடந்துள்ளது. மொத்தம் 40 பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்லக் கூடிய பேருந்தில், 65க்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கால்வாயில் கவிழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முழுவதும் வாசிக்க: எம்.எஸ்.என்.

மேலும் விவரங்களுக்கு: Guatemala bus crash death toll rises to 54 | Reuters


கௌஹாத்தி விபத்து: 20 பேர் பலி

February 24th, 2008 பகுப்புகள்: விபத்து | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

கௌஹாத்தி அருகே பேருந்து ஏரியில் கவிழ்ந்ததில் 20பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 12பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

20 feared killed in Assam mishap, 12 bodies recovered - The Hindu


விமானம் நொறுங்கி விழுந்து 46 பேர் பலி

February 22nd, 2008 பகுப்புகள்: மரணம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

வெனிசுலாவில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 46 பேர் பலியாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெனிசுலாவிலுள்ள காரகஸ் என்ற இடத்திற்கு மெரிடா என்ற இடத்திலிருந்து நேற்று புறப்பட்ட அந்த விமானம் திடீரென காணாமல் போனது.ஆனால் அந்த விமானம் ஆன்டேன் என்ற இடத்தில் கீழே விழுந்ததை பார்த்ததாக அப்பகுதியிலுள்ள உள்ளூர் மக்கள் தெரிவித்தாக வெனிசுலா சிவில் பாதுகாப்பு உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அப்பகுதியிலுள்ள உள்ளூர் மக்கள் தொலைபேசியில் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

விபத்துக்குள்ளான விமானம் கடல் மட்டத்திலிருந்து 4,750 மீட்டர் உயரத்தில் விழுந்துள்ளதாகவும் , எனவே அதில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துகுள்ளான விமானத்தில் பைலட் உள்ளிட்ட விமான ஊழியர்கள் 3 பேரும, பயணிகள் 43 பேரும் இருந்ததாக அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.

நன்றி: தமிழ் யாஹூ

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Americas | 'No survivors' in Venezuela crash

2. Forty-six feared dead as Venezuelan plane goes missing over Andes | World news | guardian.co.uk


46 பேருடன் வெனிஜுலா விமானம் காணவில்லை

February 22nd, 2008 பகுப்புகள்: விபத்து, விமானம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

வெனிஜுலா நாட்டில் ஆண்டிஸ் மலைதொடரில் அமைந்துள்ள மெரிடா நகரிலிருந்து தலைநகர் காரகாஸ் புறப்பட்ட 46 பயணிகள் கொண்ட உள்ளூர் விமானம் வான்வெளி கட்டுப்பாடு நிலையங்களின் பார்வையிலிருந்து மறைந்து காணாமல் போயுள்ளது.அதிகாரிகள் விமானத்தை தேடவும் காப்பாற்றவும் குழுக்களை அனுப்பி உள்ளபோதிலும் எங்கு தேடுகிறார்கள் எனக் கூற முடியவில்லை.விமானம் கீழே விழுந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இது ATR 42-300 ரக விமானமாகும்.

இந்த வருடம் வெனிஜூலாவில் நடக்கும் இரண்டாவது விமான விபத்தாகும் இது. ஜனவரியில் எட்டு இத்தாலியர்களும் ஒரு சுவிஸ் குடியும் அடங்கிய 14பேருடன் கடற்கரையில் விமானமொன்று விழுந்துநொறுங்கியது.

Plane missing in Venezuela, dozens aboard


சாலை விபத்துகளில் தமிழகம்,மகாராட்டிரம் முதலிடம்

February 18th, 2008 பகுப்புகள்: *பொது, போக்குவரத்து, விபத்து | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

தேசிய குற்றங்கள் ஆவண ஆணையம் (NCRB) வழங்கிய புள்ளிவிவரப்படி 2006ஆம் ஆண்டு நிகழ்ந்த 3.94 இலக்க சாலைவிபத்துகளில் இந்த இரு மாநிலங்களிலும் கால்பகுதிக்கும் மேல் (26.4%) நிகழ்ந்திருக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை 1,05,725 ஆகும். இதில் 16,548 பெண்களும் அடக்கம்.

சாலைவிபத்துகளில் இறந்தவர்களின் பட்டியலில் ஆந்திர மாநிலம் (12,661) முன்னிலையில் உள்ளது.

முழு புள்ளிவிவரங்கள் இங்கே....