வரலாற்றுப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படுமா?: விழுப்புரத்தில் மியூசியம் தேவை
விழுப்புரம் மாவட்டத்தில் காணப்படும் பழமை வாய்ந்த வரலாற்று பொக்கிஷங்களை பாதுகாப்பதற்கு மியூசியம் அமைக்க வேண்டும் என வரலாற்று ஆய் வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வரலாற் றுச் சிறப்புமிக்க பல அற்புதங்களை உள்ளடக்கியதாக விளங்கி வருகிறது. மாவட்டத்தின் வடக்கே ராஜாதேசிங்கு ஆண்டுவந்த வரலாற்று புகழ்மிக்க செஞ்சிக்கோட் டையும், வடகிழக்கே ஆரோவில், புதுச்சேரி மாநிலத்தையொட்டிய சுற்றுலா தலங்களையும், தெற்கே நீர் வீழ்ச்சிகளோடு கூடிய கல்வராயன் மலைத் தொடர்ச்சியும் கொண்டுள் ளது. இத்தகைய புகழ்மிக்க பல் வேறு இடங்களை கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பழமை வாய்ந்த பொக்கிஷங்களை வைத்து பாதுகாப்பதற்கும், அதனை பின் வரும் சந்ததியினர்கள் தெரிந்து கொள்வதற்கும் மியூசியம் அமைக் கப்படவில்லை. இதனால் பல வரலாற்று அற்புதங்களை மக்கள் தெரிந்து கொள்ள முடியாத நிலை நீடித்து வருகிறது.
விழுப்புரம் அடுத்த கீழ்வாலை, செத்தவரையில் உள்ள பழங்கால பாறை ஓவியங்கள், திருவக்கரை கல்மரமான அறிவியல் விந்தை, மண்டகப்பட்டு, தளவானுõரில் உள்ள குடைவரைக்கோவில்கள், திருக்கோவிலுõர் அருகே கம்பையில் லிங்கங்கள், ஆரோவில் பகுதியில் முதுமக்கள் தாழிகள் என பல்வேறு இடங்களில் கிடைத்த சாமி சிலைகள், வரலாற்று நிகழ்வுகளை குறித்துள்ள செப்பேடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள் ஆகியன மாவட்டம் முழுவதும் பல் வேறு இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டு வைக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலான இடங்களில் முறையாக பாதுகாக்கப்படாமல் சிதைந்து வருகிறது. பழமையான சிலைகள் விக்கிரவாண்டி அருகே சாலையோரமாகவும், விழுப்புரத்தில் பொதுப்பணித் துறை அலுவலகத்தின் வெளியேயும் போடப்பட்டு சிதைந்து வரு கிறது. சமீபத்தில் சேர்ந்தனுõர் அருகே கிடைத்த கருடாழ்வார், லட்சுமிநரசிம்மர் சிலையும் பாதுகாப்பற்ற நிலையில் திறந்தவெளி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தியாகதுருகம் மலைப் பகுதியில் சிதிலமடைந்து கிடந்த திப்புசுல்தான் காலத்திய பீரங்கியை எஸ்.பி., அமல்ராஜ் நேரில் பார்வையிட்டார். பின்னர் அரசு அனுமதிபெற்று அதனை கொண்டு வந்து விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தின் முகப்பில் வைத்துள்ளார்.
இது போன்ற கண்டுபிடிப்புகள், அரிய பொக்கிஷங்கள் பாதுகாப்பாக வைக்க முடியாமலும், பரவலாக கிடைக்கின்ற இடங்களில் கோவில்களிலும், அதே போல் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் திருவக்கரை கல்மரம் உள் ளிட்ட சில அரிய பொருட்களை காட்சிக்கு வைத்துள்ளனர். இத்தனை சிறப்பம்சம் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க ஒரு மியூசியம் அவசியம் தேவை என வரலாற்று ஆய் வாளர் கள் அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். எனவே வரலாற்று அற்புதங்களை அனைத்து தரப்பினரும் தெரிந்துகொள்ளும் வகையில் விழுப்புரத்தில் புதிதாக மியூசியம் அமைப்பதற்கு தொல்பொருள் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் வரலாற்று ஆராய்ச் சியாளர்களும், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பயன்பெறுவதோடு, பின்வரும் சந்ததியினரும் வரலாற்று பின்னணிகளை தெரிந்துகொள்வதற்கு வழி வகுக்கும்.
www.dinamalar.com