போராட்டம் | சற்றுமுன்...




டீசல் பற்றாகுறை: பலபாடசாலைகள் மூடல்

July 2nd, 2008 பகுப்புகள்: தமிழ்நாடு, போக்குவரத்து, போராட்டம், விலைவாசி | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை மற்றும் அதன் சுற்றுபுற நகர்களில் இயங்கிவரும் பிரமாண்ட பொறியியல், மருத்துவ கல்லூரிகள், டீசல் பற்றாக்குறை காரணமாக மாணவர்களைக் கூட்டிவர பேருந்துகளை இயக்க முடியாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறிப்பாக புறநகர்களில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளுமே உள்ளூர் மாணவர்களை நம்பி செயல்படுபவைஅல்ல. இக்கல்லூரிகளில் 30 சத விகித மாணவர்கள் மட்டுமே ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலோர் கல்லூரிகள் இயக்கும் வாகனங்களிலும், வெகு சிலர் மட்டும் இரு சக்கர வாகனங் களிலும் கல்லூரிக்குச் சென்று வருகின்றனர்.
டீசல் சப்ளை சீராகும் வரை இனி பேருந்துகளை நிறுத்தி வைக்கலாம், கல்லூரிகளையும் மூடி வைக்கலாம் என நிர்வாகங்கள் முடிவெடுத்து அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிகள் மூடப்படுவதாக நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
எஸ்ஆர்எம் போன்ற பெரிய கல்லூரிகள் மட்டும் தங்கள் கல்லூரி பேருந்துகளுக்கென்று தனியாக வளாகத்துக்குள்ளேயே பங்க் வைத்துள்ளன. அதாவது மொத்தமாக டீசல் வாங்கி இருப்பு வைத்துள்ளன. ஒரு வேளை இன்னும் சில தினங்கள் இதே நிலை நீடித்தால் அனைத்துக் கல்லூரிகளுமே மூடப்பட்டாலும் வியப்பில்லை.


பெட்ரோல் தட்டுப்பாடு நள்ளிரவுக்குள் சீராகும் - தலைமைச் செயலாளர்

July 1st, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, சென்னை, தமிழ்நாடு, போக்குவரத்து, போராட்டம் | தொகுப்பாளர்: ✪சிந்தாநதி | மறுமொழிகள் இல்லை » |

தமிழ்கத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு காரணமாக இன்று காலை முதல் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்துகள் உட்பட வாகனங்களும் இயங்க இயலாத கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 3000க்கு மேற்பட்ட தனியார் பேருந்துகளும் 20 சதவீத அரசுப் பேருந்துகளும் நிறுத்தப் பட்டு விட்டன.

நிலைமை சீராகும்… திரிபாதி நம்பிக்கை

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இன்று நள்ளிரவு முதல் அகில இந்திய அளவில் லாரிகள் ஸ்டிரைக் ஆரம்பமாகிறது.  இதற்கு முன்னதாக  பெட்ரோல் தட்டுப் பாடு காரணமாக இன்றே இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிலைமை சீராகாத பட்சம் நாளை தமிழ்கத்தில் எந்த வாகனமும் சாலையில் காணப்படாது.
இதற்கிடையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக தலைமை செயலாளர் திரிபாதி தமிழகத்தில் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு இன்று நள்ளிவுக்குள் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்று  தெரிவித்துள்ளார்.


சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அரசியல், இந்தியா, ஊழல், கலை-இலக்கியம், கிளர்ச்சி, சமூகம், தகவல், தமிழ், போராட்டம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | 6 மறுமொழிகள் » |

சாகித்திய அகாதமியில் புதுச்சேரிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று (08-06-2008) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

சாகித்திய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மகரந்தன, தமிழக அரசின் பிரதிநிதியாக இராம.குருநாதன், பல்கலைக்கழக பிரதிநிதியாக இரா.மோகன் மற்றும் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாக சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராக சிற்பி பாலசுப்ரமணியத்தை மற்ற மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்தனர். மேலே உள்ள நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மேலும் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படியில் புதுச்சேரி மகரந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மூவர் பெயரை ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம் அளித்துள்ளார். ஆனால், இவர் பரிந்துரை செய்த ஒருவரையும் நியமிக்காமல் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய ஒருவரை சிற்பி நியமித்துள்ளார். பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசனையின் அடிப்படையிலோ அவர் தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது புதுச்சேரி இலக்கிய வட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பணத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் தமது உறுப்பினர்களுக்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் போது, பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க இயலும் என்று இந்த தமிழ் அமைப்புகள் கோருகின்றன.

மேலும் புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒன்பது திட்டமங்களை மகரந்தன் அளித்திருந்தார் அதில் அத்தனையும் அதன் ஒருங்கிணைப்பாளர் நிராகரித்துள்ளார். புதுச்சேரியோ அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் எதிலும் நிகழ்ச்சி எதற்கும் இதன் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு ஏன் புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி என்று புதுவையைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுபபினர். சென்ற பத்து ஆண்டுகளாக புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன.

அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும். புதிதாக புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கோரினர்.

புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் திராவிடர்க் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி பூர்வ குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் தேசிய இயக்கம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், சமூக நீதி போராட்டக் குழு இராவணன் பகுத்தறிவு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை உள்ளிட்ட 27 அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் “சாகித்திய அகாதமியின்” நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளாமல் புதுச்சேரியைத் தொடர்ந்துப் புறக்கணிக்குமானால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் தெரிவித்தார்.


படப்பிடிப்பு குழுவினரின் அஞ்சல் வழி உண்ணாவிரதம்

April 7th, 2008 பகுப்புகள்: திரையுலகம், போராட்டம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!தமிழ் திரையுலகமே ஒன்றுகூடி சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருக்கையில் பெரம்பலூரில் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள் ஒரு திரைப்பட குழுவினர்.

இந்த உண்ணாவிரதத்தின் விபரத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறார்களாம். மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் நாயகனாக நடிக்கும் தமிழ் தேசம் படத்தின் படப்பிடிப்பு பெரம்பலூரில் நடந்து வருகிறது. அச்சச்சோ, மலரினும் மெல்லிய, மாணவன் நினைத்தால் படங்களில் நடித்த வர்ஷினி என்ற ஆதிரா கதாநாயகியாக நடிக்கிறார்.

படப்பிடிப்பு நடந்த பொறியியல் கல்லூரி வாசலிலேயே ஒரு பந்தலை போட்டு யூனிட்டோடு உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள். படத்தின் இயக்குனர் தமிழ்செல்வா உள்ளிட்ட அத்தனை பேரும் கன்னடர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி உண்ணாவிரத பந்தலை பரபரப்பாக்கினார்கள். விஷயத்தை கேள்விப்பட்ட ஜெயா டி.வி, ராஜ் டி.வி, ஏ.எம்.என் கன்னல் நிருபர்கள் அங்கே கூடவும் சென்னை போலவே அங்கேயும் உண்ணாவிரதம் களைகட்டியதாம்.

நன்றி: தமிழ்சினிமா

ஆங்கிலத்தில்: IndiaGlitz - Thamizh Desam Unit’s Hunger Strike - Tamil Movie News


ஓகனேக்கல்: சென்னையிலும் பெங்களூருவிலும் திரைக்கலைஞர்கள் உண்ணாவிரதம்

April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், திரையுலகம், நதிநீர் பிரச்சினை, போராட்டம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

ஓகனேக்கல் குடிநீர் திட்டத்தை எதிர்த்து நிகழும் வன்முறைகளை கண்டித்து தமிழக திரையுலகினர் இன்று சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாநோன்பு இருக்கின்றனர். ரஜினி,கமல் தங்கள் வெளிப்புற படமெடுப்பு ஊர்களிலிருந்து திரும்பிவந்து இன்று கலந்து கொண்டனர். கருப்புத் தொப்பி அணிந்து வித்தியாசமாக வந்த ரஜினி மேடையில் ஏறியவுடன் அங்கு கூடியிருந்தவர்களை தலைக்கு மேல் கையை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டார்.

பின்னர் தொப்பியைக் கழற்றிவிட்டு கூட்டத்தை நோக்கி கையை அசைத்தார். அவரை சரத்குமார், ராம.நாராயணன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றனர்.சரத்குமாருக்கும், மனோரமாவுக்கும் இடையில் அமர்ந்தபடி உண்ணாவிரதத்தில் பங்கேற்றார் ரஜினிகாந்த்.

பகல் 2.30 மணிக்கு நடிகர் கமல்ஹாசனும் உண்ணாவிரத மேடைக்கு வருகை தந்தார். அவரை ரஜினி, சரத்குமார், ராமநாராயணன் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மர்மயோகி படப் பிடிப்பு தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்த கமல், உண்ணாவிரதத்தில் பங்கேற்பற்காக அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓகேனக்கல் விவகாரத்தில், தமிழ் திரையுலகினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போட்டியாக கன்னட நடிகர்களும் பெங்களூரில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஆனால், அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன், சரோஜாதேவி ஆகிய கன்னட திரையுலக ஜாம்பவான்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

பெங்களூர் டவுன் ஹாலில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த தர்ணாவில் நடிகர்கள் உபேந்திரா, புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், ரவிச்சந்திரன், திரில்லர் மஞ்சு, ஸ்ரீநாத், ஜக்கேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நடிகைகள் ரம்யா, அனு பிரபாகர், தாரா, ஜெயமாலா ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய சுட்டிகள்:

கருப்புத் தொப்பியுடன் ரஜினி: கமலும் பங்கேற்பு

ஓகனேக்கல் நமது மரபுரிமை-வைரமுத்து

என் சோறு தமிழகத்தில்தான்-அர்ஜூன்

திரையுலகின் உண்ணாவிரதத்திற்கு தமிழக சட்டசபையில் வாழ்த்து

கன்னட நடிகர்கள் தர்ணா-சரோஜா தேவி, அம்பரீஷ், விஷ்ணுவர்த்தன் பங்கேற்கவில்லை

‘குத்து’ ரம்யா பெங்களூரில் உண்ணாவிரதம்!

Hogenakkal: Kannada stars hold protest


அப்பாவிகளை கொல்வதில்லை-அல்கொய்தா

April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், உலகம், சட்டம் - நீதி, சமூகம், தீவிரவாதம், போராட்டம், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அப்பாவிகளை கொல்வது எங்கள் இயக்கத்தின் வழக்கம் அல்ல என்று அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனின் வலதுகரமான அய்மன் அல்ஜவாஹிரி கூறியுள்ளார்.

அல்ஜவாஹிரி பேசியுள்ள புதிய ஆடியோவை அல்ஜசீரா டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், எகிப்தில் அல்காய்தா மற்றும் அதன் ஆதரவு படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது அப்பாவிகள் பலியானது உண்மை. ஆனால் வேண்டுமென்றே இந்த உயிர்களை பறிக்கவில்லை. பலியான அப்பாவி மக்களை ‘மனிதக் கேடயமாக’ எதிரிகள் பயன்படுத்தியதால் நடந்த விளைவு.

அல்ஜீரியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐ.நா. சபைக்கு சொந்தமான கட்டடத்தை தாக்கியபோது அருகிலிருந்த மருத்துவமனை இடிந்து 60 பேர் பலியானார்கள். ஐ.நா. சபை இஸ்லாமிய மதத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரி. அதனால் தாக்கினோம்.

பின்லேடனுக்கு ஒரு குறையும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார். கவலை வேண்டாம். முழு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் எல்லோரையும் போல் ஒருநாள் இறக்கப் போகிறவர்தானே என்று பேசியுள்ளார் அல்ஜவாஹிரி.

நன்றி: தட்ஸ்தமிழ்

மேலும் விவரங்களுக்கு:

1. FOXNews.com - Al Qaeda's Zawahiri: Militant Organization Doesn't Kill Innocents; Threatens Egypt - International News | News of the World | Middle East News | Europe News

2. Al-Qaeda's No. 2 Defends Attacks - TIME

3. News | Africa - Reuters.com: “Al Qaeda charges are ‘totally false’-UN chief”


போபால் விஷவாயுக் கசிவு: பாதிக்கப்பட்டவர்கள் தில்லியில் போராட்டம்

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, உடல்நலம், குழந்தைகள், சட்டம் - நீதி, சுகாதாரம், தொழில், பொருளாதாரம், போராட்டம், மரணம், வணிகம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் போபால் நகரில் கடந்த 1984ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், 24 ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று போராடிவருகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் இருந்து தலைநகர் புதுடெல்லிக்கு 800 கி.மீ. பாதயாத்திரை நடத்தி, இவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

ஆனால் அப்போது பிரதமர் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லி வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. AFP: Bhopal tragedy survivors reach Delhi after 37-day protest march

2. Tehelka - India's Independent Weekly News Magazine: “Timeline: The Toxic Trail”

3. Indians Pressure Dow on Bhopal Cleanup - washingtonpost.com


வெளிநாட்டு ஊடகங்கள் மீது சீனா கண்டனம்

March 24th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், ஊடகம், சட்டம் - நீதி, போராட்டம், மரணம், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

திபெத் கலகங்களின்போது 130 பேர் கொல்லப்பட்டார்கள் என நாடு கடந்து வாழும் திபெத் அரசாங்கத்தினர் கூறுகின்றனர்.

திபெத்தில் அண்மைக் காலமாக நிலவும் அமைதியின்மை குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வழங்கிய விதத்தை சீனாவின் அரசு ஊடகம் கண்டித்துள்ளது. சட்டம், ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட சீன அரசாங்கம் செய்த முயற்சிகளை இராணுவ அடக்குமுறை என்று வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் தவறாக அர்த்தப்படுத்தியுள்ளனர் என்று அது கூறியுள்ளது.

இதனிடையே, சீன அரசுக்கும், நாடுகடந்து வாழும் திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் வேண்டும் என்று மேலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. திபெத் தொடர்பில் நிலைக்கக்கூடிய ஒரு கொள்கை சீனாவுக்குத் தேவை என்று அமெரிக்க அரசுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார். பிரஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோசியும் சீன அதிபரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது இதேபோன்ற கருத்தை முவைத்திருக்கிறார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Foreigners in Tibet: Western media reports not conform with facts - English - Xinhua

2. Behind the Scenes: Unrest tests China PR machine - CNN.com

3. CCTV International: “Documentary: Accusation of the victims of 3.14 Lhasa riots”

4. Tibet unrest raises concerns on China Olympics


மாணவியிடம் ஆசிரியர் விஷமம் - பள்ளியை சூறையாடிய பெற்றோர்கள்

March 20th, 2008 பகுப்புகள்: கலவரம், கல்வி, கிளர்ச்சி, சமூகம், சர்ச்சை, போராட்டம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை ஆதம்பாக்கத்தில் 8வது வகுப்பு மாணவிக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரின் செயலால் கொதிப்படைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதம்பாக்கத்தில் மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு ஆங்கிலம் மற்றும் யோகா ஆசிரியராக மரிய ஜோசப் மைக்கேல் என்பவர் பணியாற்றுகிறார். இவர் 8வது வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் கடந்த 3 மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். அவரிடம் சிக்கி அந்த பெரும் அவதிப்பட்டு வந்தார். இதை வெளியே சொல்லக் கூடாது, வெளியே சொன்னால் இறுதித் தேர்வில் பெயில் ஆக்கி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார் மைக்கேல்.

இந்த நிலையில் இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த மாணவி தனது தாயார் மும்தாஜிடம் ஆசிரியரின் செயலைக் கூறவே அவர் அதிர்ச்சி அடைந்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜிடம் புகார் கூறினார். ஆனால் தலைமை ஆசிரியர் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து கொதிப்படைந்த மும்தாஜ், தவ்ஹீத் ஜமாத் அமைப்பிடம் கூறவே அந்த அமைப்பினரும், பொதுமக்களும்……….

http://thatstamil.oneindia.in/news/2008/03/20/tn-parents-go-on-rampage-as-teacher-molest-girl.html


திபெத் கலகங்களில் ‘எண்பது பேர் பலி’

March 17th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், கிளர்ச்சி, சட்டம் - நீதி, போராட்டம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை அடக்கும் நடவடிக்கைகளை சீன அதிகாரிகள் மேலும் விரிவுபடுத்தியுள்ளனர். தலைநகர் லாசாவில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. சீன அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கலகத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருவதாகக் கூறப்படுகின்றது. திபெத்திய எல்லையைச் சுற்றி சோதைனைச் சாவடிகள் போடப்பட்டு திபெத்தியர் இருக்கும் பகுதிக்குள் ஆட்கள் போவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தென் மேற்குச் சீனப் பிரதேசமான சிச் சுவான் பகுதியில் வன்முறை வெடித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு உள்ளே நுழைந்த திபெத்தியர்கள், தீவைத்து, அரச கட்டடங்களைத் தாக்கியுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. அண்டையிலுள்ள நேபாளத்திலிருக்கும் பி.பி.சி. செய்தியாளர், திபெத்துக்கு வெளிநாட்டவர்களைக் கூட்டிச்செல்லும் ஆட்களிடம் இனி ஒரு மாதத்துக்கு லாசாப் பக்கம் அவர்கள் போக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

இதே சமயம் திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா அவர்கள், திபெத்தில் சீன அரசினால் ஒரு கலாச்சரா இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று கூறி, இது குறித்து சர்வதேச விசாரணை ஒன்றை நடத்தும்படி கேட்டுள்ளார். லாசாவில் வெள்ளிக்கிழமை நடந்த கலகத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தனக்குச் செய்திகள் கிடைத்திருக்கிறது என்றார் அவர். நாட்டை விட்டு வெளியேறி வட-இந்தியாவில் வாழும் அவரது அரசினர், திபெத்தில் 80 பேர் வரை கொல்லப்பட்டிருப்பது உறுதி என்கின்றனர்.

திங்கட்கிழமை நள்ளிரவுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் சரணடைந்து விட வேண்டும் எனச் சீன அதிகாரிகள் போட்டுள்ள காலக்கெடு குறித்து தனக்குப் பலத்த கவலைகள் எழுந்துள்ளது என்று கூறிய தலாய் லாமா அவர்கள், எதுவுமே செய்ய முடியாத ஒரு கையறு நிலையில் தான் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | As