பெண்கள் | சற்றுமுன்...




கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

August 15th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சாதனை, பெண்கள், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ் விருது பெறுபவருக்கு ரூ. 5ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இந்த விருதினை முதல்- அமைச்சர் கருணாநிதி சுதந்திர தின விழாவின் போது வழங்குவார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.ஜோதி நிர்மலா இந்த ஆண்டுக்கான துணிவு மற்றும் சாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

ஜோதி நிர்மலா பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த காலத்தில் ஆற்றுப் பகுதிகளுக்கு சென்று துணிச்சலுடன் மணல் கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி முழுமையாக மணல் திருட்டை அடியோடு ஒழித்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு அச்சுறுத்தலுக்கு இடையேயும் துணிவோடு செயல்பட்டு மதக்கலவரம், திருட்டு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் சமூக விரோத செயல்களையும் தடுத்து நீதியை நிலைநாட்ட தீரமுடன் போராடிய அவரது மன உறுதியினைப் பாராட்டி இந்த வருடத்திற்கான 2008 கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் பெண் பைலட்

July 27th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், பெண்கள், விமானம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் பெண் “பைலட்’

சென்னை, ஜூலை 26: ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் முதல் பெண் “பைலட்’ என்ற பெருமையை கேப்டன் செமலி க்ரோட்டபள்ளி பெறுகிறார்.

சென்னையிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை அவர் இயக்குகிறார். அவருடன் அன்றைய தினம் செல்லும் துணை பைலட் அம்ரித் நம்தாரி, பணிப் பெண்கள் எஸ். பானு, பி. புடியா, எஸ். திவ்யா, பினால் வலண்ட் ஆகிய அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் செமலி க்ரோட்டபள்ளி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் 2004-ம் ஆண்டு சேர்ந்தார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் மொத்தம் 76 பைலட்டுகள் உள்ளனர்; இவர்களில் 6 பேர் பெண்கள்.


கிளன் மெக்ராத் மனைவி மரணம்

June 22nd, 2008 பகுப்புகள்: உடல்நலம், கிரிக்கெட், பெண்கள், மரணம் | தொகுப்பாளர்: சற்றுமுன் - வினையூக்கி | மறுமொழிகள் இல்லை » |

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 42. அவர் மார்பக புற்றுநோயினாலும் எலும்பு புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டு சிலகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்று இருந்த மெக்ராத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மெக்ராத் தம்பதியினர் மெக்ராத் பவுண்டேசன் என்ற அமைப்பை மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படும் பெண்களுக்காக நடத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மெக்ராத் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மெக்ராத் பவுண்டேசன் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்


அமெரிக்காவில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 மாணவிகள் ஒரே நேரத்தில் கருத்தரித்தது எப்படி?

June 20th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, உலகம், குழந்தைகள், சமூகம், பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமெரிக்காவின் மஸச்சுஸெட்ஸ் மாநிலத்தில் ஒரே பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 17 பதின்ம வயது மாணவிகள் ஒரே நேரத்தில் ஏன் கர்பிணியானார்கள் என்று அந்த மாநில அதிகாரிகள் புலன் விசாரணை செய்கிறார்கள்.

இந்த எண்ணிக்கை, கடந்த வருடத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். அத்துடன் இவர்களில் பலர் பல தடவைகள் கர்ப்பத்தை உறுதி செய்வதற்கான சோதனைகளைச் செய்துகொண்டதுடன், தாம் கர்ப்பம் தரிக்கவில்லை என்று அறிந்தவுடன் அதனால் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், இவர்கள் அனைவரும் தாம் ஒரே நேரத்தில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது என்று ஒரு உடன்படிக்கையை செய்துகொண்டிருக்கலாம் என்று சில அதிகாரிகள் நம்புகிறார்கள்.

அத்தோடு, இந்தக் குழந்தைகளுக்கான தகப்பன்மார் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் புலன்விசாரணை செய்கிறார்கள்.

அவர்களில் சிலருக்கு இருபது வயதுக்கும் குறைவு என்று நம்பப்படுவதுடன், சிறுமிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும்.

மேலும் விவரங்களுக்கு:

1. Pregnancy Boom at Gloucester High - TIME

2. Teens had pact to get pregnant, report says - The Boston Globe

3. Teen Pregnancy Pact: Celeb Culture Cited, Psychologist Says It Has Role In Mindset; Teen Mom Advises Other Teens Not To Get Pregnant - CBS News


திருப்பதி-திருமலை கோவிலில் கூட்ட நெரிசலில் நடிகை ஸ்ரேயாவுக்கு இடைஞ்சல் தந்தவருக்கு பதிலடி

April 8th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், ஆளுமை, சமூகம், பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

நடிகை ஸ்ரேயா, உகாதி தினத்தை முன்னிட்டு திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பினார். அதிகாலை 2.30 மணிக்கு ஏழுமலையான் கோயிலுக்கு வந்த ஸ்ரேயா, சுப்ரபாத சேவா தரிசனம் செய்தார். பின்னர் 3.45 மணிக்கு கோயிலில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது ஒருவர் ஷ்ரேயாவை சுற்றிவளைத்து திடீரென கட்டியணைக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரேயா, அந்த ஆசாமியை ஓங்கி அறைந்தார். அதிர்ச்சி அடைந்த ஆசாமி, உடனடியாக அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் ஸ்ரேயா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அறை வாங்கிய நபர், அருகில் உள்ள மடத்தில் வேலை பார்த்துவரும் துப்புரவு தொழிலாளி ஹரி என விசாரணையில் தெரியவந்தது.

“பொது இடங்களில் பெண்களுக்கு நிகழும் இது போன்ற சங்கடங்களை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்ற ஸ்ரேயா, ஹரி மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை.

மேலும் விவரங்களுக்கு:

1. Actress Shreya molested at Tirupati - Movies - Broadband - Indiatimes.com

2. Tamil star Shreya slaps man for 'misbehaviour'

3. NDTV.com: Actress allegedly molested in temple


மக்கள் தொலைக்காட்சிக்கு விருது

April 7th, 2008 பகுப்புகள்: உடல்நலம், ஊடகம், சமூகம், தொலைக்காட்சி, பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 3 மறுமொழிகள் » |

பெண் குழந்தைகளை நேசிக்க ஊக்கப்படுத்தும் சிறந்த ஊடக முயற்சிகளுக்கு ஐ.நா.மக்கள் தொகை நிதியமைப்பு (யூ.என்.எஃப்.பி.ஏ.) சார்பில் ‘லாட்லி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2007-ம் ஆண்டில் ‘மண்ணைக் காக்க பெண்ணைக் காப்போம்’ என்ற சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக மக்கள் தொலைக்காட்சிக்கு இந்த விருது அண்மையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, கடந்த ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சுமார் 3650 தடவை ஒளிபரப்பப்பட்டது. வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் மக்களுக்குத் தேவையான, அவர்களை நல்வழிப்படுத்துகிற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறோம்.

  • புகைப்பழக்கம்.
  • குடிப்பழக்கம்,
  • வரதட்சிணை
  • போன்ற தீய வழக்கங்களுக்கு எதிரான மற்றும்
  • தூய்மைக்கு ஆதரவான

சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் மக்கள் தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ள இந்த விருது, எங்கள் பணி மேலும் சிறக்க உதவும் என மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தன

நன்றி: தினமணி


முட்டை தின்றால் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கலாம்

April 5th, 2008 பகுப்புகள்: உடல்நலம், பெண்கள், மருத்துவம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

உணவில் முட்டை உண்பதை அதிகரித்தால் அதிலுள்ள கோலைன் (choline) என்ற வேதிப்பொருளால் மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூற்றினை 24% வரை குறைக்க முடியும் என ஆய்வொன்று கூறுகிறது. வட கரோலினா பல்கலை.யில் ஸ்டீவன்  செய்சல் (Steven H Zeisel, MD, PhD, University of North Carolina) தலைமையில் நிகழ்த்தப்பெற்ற இந்த கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் மார்பக புற்றுநோயின் வரவினை குறைப்பதற்கும் முட்டை உண்பதற்கும் இடையேயான இணைப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோலைன் என்ற வேதிப்பொருள் செல்கள் இயல்பாக செயல்பட உதவுவதாக செய்சல் கூறினார். இந்த செயல்பாடு அனைத்து வயது,பாலின மக்களுக்கும் பொதுவானதாக இருப்பினும் பெண்களுக்கு, அதுவும் குழந்தை பெறக்கூடிய வயதுள்ளவர்களுக்கு, மிகவும் முக்கியமானதாக உள்ளது என்றும் அவர் கூறினார். ஒரு முட்டையில் 125.5 மி.கிராம் கோலைன் உள்ளது,இது ஒருநாளுக்கு ஒருவருக்கு தேவைப்படும் அளவில் கால்பங்காகும்.முட்டையின் மஞ்சள்கருவில் கிடைக்கிறது. கோலை கிடைக்கும் மற்ற உணவுப் பொருட்கள்: ஈரல், கோதுமை கருப்பகுதி, காலிபிளவர் பூ. கோலைன் பிறப்பு குறைகளை தவிர்ப்பதுடன் நினைவாற்றலை வளர்க்கவும் இதயநோய்களை தடுக்கவும் பயனாகிறது.

Eating eggs reduces breast cancer risk


கோவிலில் கும்பிட்ட விதவைக்கு செருப்பு மாலை: ஜார்கண்ட்

April 4th, 2008 பகுப்புகள்: இந்தியா, பெண்கள் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

ஜார்கண்ட் மாநிலத்தில் தான்பாத் மாவட்டத்தில் விதவையொருவர் கிராமத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி காளி கோவிலில் கும்பிட்டதால் கிராமமக்கள் அவருக்கு செருப்புமாலை அணிவித்து முகத்தில் கரி பூசினர். கலாவதி தேவி என்ற அவரின் கணவர் இறந்ததிற்கு அவரது துரதிருட்டமே காரணம் என கருதிய கிராமம் அவர் கோவிலுக்குள் சென்றால் அவரது ‘கெட்ட’ பண்பு அந்தக் கோவிலுக்குச் செல்லும் மற்ற சுமங்கலிப் பெண்களுக்கும் வந்துவிடும் என்ற மூடநம்பிக்கையினால் அவரை கோவிலுக்குள் செல்லக்கூடாது என தடுத்திருந்தனர். சென்ற செவ்வாயன்று இத்தடையை மீறி கலாவதி கோவில்லுச் சென்றார். இதனையடுத்தே கிராம மக்கள் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து கரி அப்பினர்.

தன்மீது இழைக்கப்பட்ட வன்முறையை யடுத்து அவர் ஆறு ஆண்கள் மற்றும் 30 பெண்களை அடையாளப்படுத்தி குற்றம் பதிவு செய்திருக்கிறார். இந்த வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்று கிராமமக்கள் காவல்நிலையம் முன்னர் தர்ணா நடத்தினர்.

Widow garlanded with shoes for praying in temple


ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் நீதிபதி

March 28th, 2008 பகுப்புகள்: சட்டம் - நீதி, துபாய், பெண்கள் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் நீதிபதி

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் நீதிபதியாக கோலோடு அகமது ஜ×வான் அல் டகேரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் அபுதாபி நீதிமன்றத்தின் அடிப்படை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரை ஜனாதிபதி ஷேக் கலீபா பின் சயேத் அல் நக்யான் நியமித்தார். அரபு நாடுகளில் முதன்முதலாக பெண்நீதிபதியை நியமித்த நாடு பகரைன் தான். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு உள்ளது.

சவுதி அரேபியா போல இல்லாமல், இங்கு பெண்கள் தன்னந்தனியாக கார் ஓட்டி செல்லலாம். அவர்கள் மந்திரி பதவி உள்பட பல உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.
 

http://www.dailythanthi.com/article.asp?NewsID=402798&disdate=3/28/2008


சிங்கப்பூரில் இந்திய பெண்ணுக்கு கொடுமை

March 26th, 2008 பகுப்புகள்: சமூகம், பெண்கள் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

சிங்கப்பூரில் இந்திய பெண்ணுக்கு கொடுமை

வெளிநாட்டு வேலையா? உஷாரய்யா உஷாரு

புதுடில்லி :வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு, சிங்கப்பூர் சென்ற, பஞ்சாப் பெண், ஆறு ஆண்டுகளாக கொடுமைக்கு உள்ளானார். விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத ஏஜென்ட் கும்பலிடம் இருந்து அப்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தை சேர்ந்த பெண் வீர்பால் கவுர்(26). இவரது தந்தை மோகிந்தர் சிங், மோகா மாவட்டத்தில் செயல் படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜென்சியிடம், ஒரு லட்ச ரூபாய் கொடுத் தார். 10ம் வகுப்பு வரை படித்துள்ள தனது பெண் வீர்பாலுக்கு, சிங்கப்பூரில், தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தரும்படி கேட்டுக் கொண்டார். வீர்பாலை, சிங்கப்பூர் அழைத்து சென்றார் ஏஜென்ட். அங்கு, அவருக்கு வேலை வாங்கி தரவில்லை. தனது பாதுகாப்பில் ஒருவாரம் வைத்திருந்தார். பின்னர், சிங்கப்பூரில் உள்ள ஏஜென்டிடம், வீர்பால் ஒப்படைக்கப்பட்டார். இதன் பிறகு, விபசார தொழிலில் ஈடுபடும்படி, வீர்பால் வற்புறுத்தப்பட்டார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, அடி, உதை கிடைத்தது.

சிங்கப்பூரில் உள்ள, ஒரு இந்து குடும்பத்தின் வீட்டில், பணியாளராக வீர்பால் நியமிக்கப்பட்டார். சம்பளம் இல்லாமல் மூன்று ஆண்டுகள், வீர்பால் அங்கு பணியாற்றினார். 2005ம் ஆண்டு, தன்னை இந்தியாவுக்கு அனுப்பி விடும்படி வீர்பால் வற்புறுத்தினார்.

இந்திய ஏஜென்ட் யோசனையின்படி, வீர்பால் மீது, அக்குடும்பத்தினர் திருட்டுப் புகார் கூறினர். இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் கோர்ட்டில், மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. இதில், வீர்பால் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுவரை, ஒரு சிறிய வீட்டில், வீர்பால் தங்கி இருந்தார்.லுõதியானா மாவட் டத்தை சேர்ந்த சரப்ஜித் கவுர் (25), என்ற பெண்ணும், ஏஜென்ட் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டார். சிங்கப்பூர் மற்றும் உக்ரைன் நாட்டில், அவர் 30 மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டார்; பல முறை கற்பழிக்கப்பட்டார். இந்த விவகாரம், முன்னாள் மத்திய அமைச்சர் பல்வந்த் சிங் கவனத்துக்கு சென்றது. அவரது முயற்சியால், சரப்ஜித் கவுர் மீட்கப்பட்டார்.இதன்பிறகே, வீர்பால், சிங்கப்பூரில் ஆறு ஆண்டுகளாக கொடுமைக்கு உள்ளாகி வருவது தெரிய வந்தது. அவரையும் மீட்க, பல்வந்த் சிங் முயற்சி எடுத்தார். கோர்ட்டில் விடுவிக்கப்பட்டதால், சிங்கப்பூரில் உள்ள இந்திய துõதரகத்தின் உதவியுடன், வீர்பால், சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

http://www.dinamalar.com/2008MAR26/events_ind3.asp


ஒரிஸா சபாநாயகருக்கு எதிராக பாலியல் புகார்

March 26th, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, சட்டம் - நீதி, பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

சட்டசபையில் உதவி காவலராக பணிபுரியும் காயத்ரி பாண்டா , சபாநாயகர் மகேஸ்வர் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.நள்ளிரவு நேரத்தில் தமது வீட்டிற்கு காரை அனுப்பி , அவரை தனியாக சந்திக்குமாறு அழைப்பு விடுப்பதாகவும், தம்மிடம் ஆபாசமான செய்கை காண்பிப்பதாகவும் பாண்டா குற்றம் சாட்டியுள்ளார்.

உதவி காவலர் காயத்ரி பாண்டா என்பவர் சபாநாயகர் மகேஸ்வருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பாண்டாவின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மகேஸ்வர், அவர் சரிவர பணியாற்றாததால் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் , அதன் காரணமாகவே தம்மீது அவர் இந்த குற்றச்சாட்டை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான விசாரணைக்கும் தாம் தயார் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே இவ்விவகாரம் ஒரிஸா சட்டசபையிலும் எதிரொலித்தது.எதிர்கட்சிகள் இப்பிரச்சனையை கிளப்பி அமளியில் ஈடுபட்டதால் , அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

நன்றி: யாஹூ

மேலும் விவரங்களுக்கு:

1. NDTV.com: Orissa Speaker accused of sexual harassment

2. Zee News - Orissa Speaker accused of misbehaviour


சவுதி அரெபியாவில் பெண்களுக்கென பிரத்யேக முதல் ஹோட்டல்

March 20th, 2008 பகுப்புகள்: சவூதி, பெண்கள் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சவுதி அரெபியாவில் பெண்களுக்கென பிரத்யேக முதல் ஹோட்டல்

சவுதி அரெபியா தலைநகர் ரியாத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாக முதல் ஹோட்டல் லுத்தான் ஹோட்டல் & ஸ்பா செவ்வாய்க்கிழமை இளவரசர்  சுல்தான் பின் சல்மானால் திறந்து வைக்கப்பட்டது.  பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்களது திறனை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த ஹோட்டல் சவுதி அரேபிய அரசுடன் இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் சவுதியின் பிற பகுதிகளிலும் விரிவு படுத்தப்பட இருப்பதாக இளவரசர் சுல்தான் தெரிவித்தார்.

http://www.khaleejtimes.com/darticlen.asp?xfile=data/middleeast/2008/March/middleeast_March309.xml&section=middleeast&col=