தற்கொலை | சற்றுமுன்...




த‌ற்கொலை நகரமாக மா‌றிவரு‌ம் பெ‌ங்களூ‌ர்

April 4th, 2008 பகுப்புகள்: இந்தியா, சமூகம், தற்கொலை, மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இ‌ந்‌தியா‌வி‌ன் ‌சி‌லிகா‌ன் ப‌ள்ள‌த்தா‌க்கு எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் பெ‌ங்களூ‌ருவி‌ல், த‌ற்போது ஆண்டுக்கு சராச‌ரியாக 2,000 பே‌ர் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ள்‌கி‌ன்றன‌ர். மா‌றிவரு‌ம் வா‌‌ழ்‌க்கை‌ச் சூழ‌ல், நகரமயமா‌க்க‌ல் காரணங்களால் பெ‌ங்களூ‌ருவி‌ல் த‌ற்கொலை எ‌ண்‌ணி‌க்கை உய‌ர்‌ந்து வருவதாக த‌‌னியா‌ர் மரு‌த்துவமனை‌ நர‌ம்‌பிய‌ல் ‌நிபுண‌ர் டா‌க்ட‌ர் சு‌தி‌ர் ஹெ‌ப்ப‌ா‌ர் கூறியுள்ளார்.

அதிக தற்கொலை சம்பவங்கள் நிகழும் நகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் பெ‌ங்களூ‌ரு முத‌லிட‌த்‌தி‌ல் உ‌ள்ளது.

பெங்களூரு நகர கு‌ற்ற‌விய‌ல் ‌பி‌ரிவு ‌வி‌கிதா‌ச்சார‌ப்படி கட‌ந்த 2004 முதல் 2008ம் ஆ‌ண்டு வரை 7,840‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டு‌‌ள்ளன‌ர். இவர்கள் அனைவரும் 15 முத‌ல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இ‌தி‌ல் ஆ‌‌ண்க‌‌ளி‌ன் 4,845, பெ‌ண்க‌ள் 2,995 பேர்.

முழுவதும் வாசிக்க: எம்.எஸ்.என்.


4 விவசாயிகள் தற்கொலை

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, தற்கொலை, தொழில், பொருளாதாரம், மரணம், வணிகம், விலைவாசி, விவசாயம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மகாராஷ்டிரம், விதர்பா பகுதியில் கடன்தொல்லை காரணமாக 2 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். மழையால் பயிர்கள் நாசமானதால் கேரள விவசாயி ஒருவரும், ஆந்திர விவசாயி ஒருவரும் தற்கொலை செய்துக் கொண்டனர்.

நந்துரா பிங்லே கிராமத்தைச் சேர்ந்த கோட்டே (30), பாட்குலி கிராமத்தைச் சேர்ந்த தேஷ்முக் (32) ஆகியோர் உள்ளூர் வங்கியில் கடன் பெற்றிருந்தனர். இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கேரளத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாயின. இதில் பாதிக்கப்பட்ட ஆலப்புழை மாவட்ட விவசாயி புஸ்கரன் என்பவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டார். இதே பிரச்னை காரணமாக ஆந்திரத்தின் கிருஷ்ணா மாவட்ட விவசாயி அச்சுதராமையா என்பவரும் தற்கொலை செய்துக் கொண்டார்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. 74 farmers suicides in Vidarbha after Chidambaram's farm loan waiver

2. » 14 farm suicides in three days in Vidarbha

3. The Telegraph - Calcutta (Kolkata) | Nation | Waiver can’t stop Vidarbha suicides


துபாய் விமான நிலையத்தில் இலங்கை பணிப்பெண் தற்கொலை

January 24th, 2008 பகுப்புகள்: அமீரகம், இலங்கை, குவைத், தற்கொலை, பெண்கள், மரணம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

துபாய் விமான நிலையத்தில் இலங்கை பணிப்பெண் தற்கொலை

துபாய் விமான நிலையத்தில் இலங்கை பணிப்பெண் கலா சங்கரபிள்ளை ( வயது 30 ) பெண்கள் ஓய்வறையில் தற்கொலை செய்து கொண்டார்.

குவைத்தில் பணிபுரிந்து வந்த இவர் துபாய் வழியாக செல்லும் போது கொழும்பு விமானத்திற்காக பயணிகள் ஓய்வறையில் இருந்த போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரால் கைவிடப்பட்ட இவருக்கு ஒரு ஆண், மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் குவைத்திற்கு சென்றார்.  குடும்பத்தினர் இவரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த வேலையில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2008/January/theuae_January715.xml&section=theuae&col=


தற்கொலை நகராகும் திருச்செந்தூர்

January 6th, 2008 பகுப்புகள்: தமிழ்நாடு, தற்கொலை | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தற்கொலை நகராகும் திருச்செந்தூர்
    

திருச்செந்தூரில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்கொலை நகரம் என்ற பெயரெடுக்க ஆரம்பித்துள்ளது திருச்செந்தூர்.

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு என்ற பெருமைக்குரிய தலம் திருச்செந்தூர். இந்த புண்ணிய தலத்தில் மன விரக்தியால் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

சமூக மாற்றங்கள், மற்றும் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றால் தனி மனிதன் கடும் பாதிப்புக்குள்ளாகிறான். பிரச்சனைகளை எதிர்த்து போராடும் ஆற்றல் இல்லாதவர்கள் இறுதியில் தங்கள் வாழ்க்கையை மாய்த்து கொள்ள துணிகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த பலரும் இதற்கு தேர்ந்தெடுக்கும் இடம் திருச்செந்தூர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.

கடந்த வருடத்தில் மட்டும் திருச்செந்தூர் சரகத்தில் 94 பேர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்.

பிரச்சனைகளில் சிக்கி மீள முடியாமல் தற்கொலை செய்ய முடிவெடுப்பவர்களில் சிலர் திருச்செந்தூர் வருகின்றனர். தனியார் லாட்ஜ் மற்றும் கடற்கரைக்கு பகுதிக்கு சென்று விஷம் குடித்தோ அல்லது தூக்கில் தொங்கியோ தங்கள் உயிரை மாய்க்கின்றனர்.

இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். விடுதிகளில் தங்கியிருப்போர் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். விடுதிகளில் கவுன்சிலிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

www.thatstamil.com