தகவல் | சற்றுமுன்...




7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

August 10th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, கணினி, கல்வி, தகவல், தகவல் தொழில்நுட்பம், தேர்வு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை
10 கல்லூரிகளில் 9-க்கும் குறைவானவர்கள் சேர்ந்துள்ளனர்

முதலிடத்தில் எலக்ட்ரானிக் கம்ïனிகேசன்

தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்தவற்கு அண்ணாபல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடைபெற்றுவருகிறது. முதல் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து 2-வது கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது. தினமும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் கவுன்சிலிங்கிற்கு வருவதில்லை.

இதுவரை மாணவர்கள் தேர்வு செய்த இடங்கள் விவரம் வருமாறு:-

எலக்ட்ரானிக் கம்ïனிகேசன் பிரிவில் 18 ஆயிரத்து 474 இடங்களில் 13 ஆயிரத்து 244 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இது 72 சதவீதம் ஆகும். இந்த பிரிவு தான் முதல் இடத்தில் உள்ளது. கம்ப்ïட்டர் சயின்ஸ் பிரிவில் 17,356 இடங்களில் 10,383 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இது 60 சதவீதம். எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பிரிவில் உள்ள 12,029 இடங்களில் 5,885 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது 49 சதவீதம். தகவல் தொழில்நுட்பம் பிரிவில் உள்ள 13,627 இடங்களில் 6,848 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்னன. இது 50 சதவீதம். 8,341 இடங்கள் கொண்ட மெக்கானிக்கல் பிரிவில் 6,099 பேர் தேர்வு செய்துள்ளனர்.

சிவில்

3,320 இடங்கள் உள்ள சிவில் பிரிவில் 2,586 இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். இது 78 சதவீதம். 402 இடங்கள் கொண்ட ஆட்டோமொபைல் பிரிவில் 339 இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். இது 84 சதவீதம். 1406 பேர் கொண்ட ஏரோனாட்டிக்கல் பிரிவை 879 பேர் தேர்ந்து எடுத்து உள்ளனர். இது 62 சதவீதம். பயோடெக்னாலஜி பிரிவில் 1,193 இடங்களில் 658 மாணவர்க்ள தேர்வு செய்துள்ளனர். இது 55 சதவீதம்.

மற்ற பிரிவுகளில் உள்ள 3554 இடங்களில் 2,601 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 81 ஆயிரத்து 373 இடங்களில் 50 ஆயிரத்து 715 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவர்கூட சேராத கல்லூரிகள்

இதுவரை 7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் எந்த பிரிவிலும் ஒரு மாணவர்கூட சேரவில்லை. அந்த கல்லூரிகள் அனைத்தும் புதிய கல்லூரிகள் என்றும் சென்னை அருகே உள்ள கல்லூரிகள் அல்ல என்றும் தெரிய வந்துள்ளன.

மேலும் 9 மாணவர்களுக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகள் 10 உள்ளன. இவற்றில் சில சென்னையை சுற்றி உள்ளன. மற்றவை மற்ற மாவட்டங்களில் உள்ளன.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில் நல்ல கட்டமைப்பு உள்ள பல புதிய கல்லூரிகள் உள்ளன. அதை அறியாமல் மாணவர்கள் சேர தயங்குகிறார்கள். கட்டமைப்பு வசதி உள்ள புதிய கல்லூரிகளில் சேரலாம். இந்த கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டு நல்ல வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சற்றுமுன், தகவல், தகவல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

சென்னை, ஆக. 4 : சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சுதந்திர தினத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். கூத்தும், கும்மாளமும், பேட்டி என்ற பெயரில் நடிகர், நடிகைகள் தங்களின் சுயபுராணத்தைக் கூறுவதும் அருவருப்பாக உள்ளது.

வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை முதல் மாலை வரை சுதந்திரத்தின் அருமை, பெருமைகள், தியாகிகளின் வீர வரலாறு, காட்சிகளாக, ஆடல், பாடல்களாக, எழுச்சி உரைகளாக, கதை, கவிதை, பட்டிமன்றங்களாக ஒளிபரப்ப வேண்டும்.

இதைத்தான் மாணவர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம் என, தங்கள் கையெழுத்துடன் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 


அஞ்சலக சேவை ஒரு குடும்பமாக செயல்படவேண்டும்: தகவல் தொடர்பு இணை அமைச்சர்

April 9th, 2008 பகுப்புகள்: தகவல், தகவல் தொழில்நுட்பம், வணிகம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

புதிதாக பதவியேற்றிருக்கும் தகவல் மற்றும் தொலைதொடர்பு இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மின்னஞ்சல்கள் தனித்தன்மையின்றி விளங்குகின்ற மற்றும் தனியார் அஞ்சல்தூதர் சேவைகள் கைக்கு எட்டாத விலையில் இயங்குகின்ற வேளையில் அரசு அஞ்சல்துறை மக்களிடம் ஒரு தனித்தன்மையுடன் ஒன்றிணைந்து சேவை வழங்க தாம் முயலப்போவதாக கூறினார். தன்னுடைய தந்தை, மாதவ்ராவ் சிந்தியா, தொடர்வண்டி அமைச்சகத்தில் கொண்டுவந்த மாறுதல்களைப்போல தானும் அஞ்சல்துறையை நடத்தவிருப்பதாகக் கூறினார். குவாலியர் அரச பரம்பரையச் சேர்ந்த சிந்தியா தனது பதவியேற்பிற்குப் பின் நடத்திய ஊடக சந்திப்பில் அஞ்சல்துறை தற்போது 1250 கோடி நட்டத்தில் இயங்கி வருகிறது, மக்கள் தொடர்பிற்கும் பணபட்டுவாடா தேவைகளுக்கும் ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறது என்று கூறினார். செஞ்சுரியன் வங்கியின் துணையுடன் அந்நிய செலாவணி மாற்றிற்கும் வகை செய்கிறது.நாட்டிலுள்ள 1,55,000 அஞ்சலகங்கள் மூலம், மற்ற வங்கிகளுடன் இணைந்து, கிராமப்புறங்களில் வீட்டு கடன்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.

இந்திய தகவல் தொழிற்நுட்பதுறை பற்றி கூறும்போது உலகின் மென்பொருள் நிரலாளர்களாகவும் திரைமறைவு பணியாளர்களாகவும் இருப்பதிலிருந்து அறிவுசார் உரிம வாய்ப்புள்ள மென்பொருள் பொருளாக்கத்திற்கு முன்னேறவேண்டும் என்றார். மேலும் வன்பொருள் உற்பத்தியிலும் அதிக விலையுள்ள தளத்திற்கு செல்ல வேண்டும் என்றார்.

Postal services should be run like a family: Scindia


உலக அழகி 2008 க்கு கேரள பெண் தேர்வு

April 6th, 2008 பகுப்புகள்: தகவல், பொழுதுபோக்கு, விருது | தொகுப்பாளர்: மணியன் | 5 மறுமொழிகள் » |

Miss World 2008சனி இரவு நடந்த பண்டலூன் பெமீனா உலக அழகி 2008 போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 20 வயது பார்வதி ஓமனக்குட்டன் பட்டம் சூட்டப்பட்டார்.மும்பையைச் சேர்ந்த 22 வயதுள்ள சிம்ரன் கௌர் இரண்டாவதாக (முதல் ரன்னர் அப்)வந்து பிரபஞ்ச அழகி 2008 போட்டிக்கு இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மூன்றாவது இடத்தில் 20 வயதுள்ள கோவாவைச் சேர்ந்த ஹர்ஷிதா சக்ஸ்சேனா தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Kerala girl wins Miss World crown


கலாம் குறித்த டாகுமெண்டரி வெளியிடப்பட்டது

January 25th, 2008 பகுப்புகள்: *பொது, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கலாம் குறித்த டாகுமெண்டரி வெளியிடப்பட்டது

 

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறித்த டாகுமெண்டரி சென்னையில் வெளியிடப்பட்டது. கோவையைச் சேர்ந்த தனபால் இதனை எழுதி இயக்கியுள்ளார்.

http://www.hindu.com/2008/01/25/stories/2008012550520200.htm


“தந்தி மணியார்டர்’ சேவை நிறுத்தம்: கிராம மக்கள் தவிப்பு

January 23rd, 2008 பகுப்புகள்: *பொது, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

“தந்தி மணியார்டர்’ சேவை நிறுத்தம்: கிராம மக்கள் தவிப்பு 

“தந்தி மணியார்டர்’ சேவை நிறுத்தப்பட்டதால், பணம் அனுப்பவும், பெறவும் வழியின்றி கிராமப்புற மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமை தபால் அலுவலகம், துணை தபால் அலுவலகங்களில் தந்தி அனுப்பும் வசதியை தபால் துறையினர் செய்திருந்தனர். உறவினர்களுக்கு அவசர செய்தி தெரிவிக்க விரும்புவோருக்கு இந்த வசதி, பயனுள்ளதாக இருந்தது. அந்த சேவையை விரிவுப்படுத்தும் நோக்கில் தபால் துறையினர், தந்தி மணியார்டர் வசதி ஏற்படுத்தினர்.வழக்கமாக மணியார்டர் அனுப்பினால், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகே பணம் சென்றடையும். தந்தி மணியார்டர் மூலம் அனுப்பினால், ஒரே நாளில் பணம் கிடைத்துவிடும். முதல் நாள் தாமதம் ஆனாலும், மறுநாள் கண்டிப்பாக பட்டுவாடா செய்யப்படும். இந்த வசதியால், ஏராளமான பேர் பயன் பெற்றனர்.மொபைல் போன் ஏற்படுத்திய புரட்சியால், அவசர செய்தியை தந்தி மூலம் உறவினருக்கு தெரியப்படுத்தும் பழக்கம் குறைந்தது. அதனால் இரு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு தந்தி சேவையை தனியாரிடம் ஒப்படைத்தது. தந்தி சேவை அளிக்கும் தனியார், மணியார்டர் சேவையை செய்வதில்லை.தற்போது மாவட்ட தபால் அலுவலகங்களில் மட்டும் இன்ஸ்டண்ட் மணியார்டர் சேவை நடைமுறையில் உள்ளது. கிராமப்புறங்களில் இந்த வசதி கிடையாது. பணம் அனுப்புவோரும், பணம் பெறுவோரும், மாவட்ட தலைநகரில் இருந்தால் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. “ஏ.டி.எம்., டெலிபோன், மொபைல்போன் வளர்ச்சியே தபால் அலுவலகங்களில் டெலிகிராம் மணியார்டர் சேவை நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம்’ என்று அலுவலர்கள் கூறுகின்றனர்.அவசர செலவுக்கு பணம் அனுப்பவும், பெறவும் முடியாமல், கிராமப்புறத்தினர் சிரமப்படுகின்றனர்.

www.dinamalar.com 


தர்மபுரியில் வாழ்வாதார உதவி

January 23rd, 2008 பகுப்புகள்: *பொது, தகவல், தொழில், பொருளாதாரம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

தர்மபுரி நகர தமுமுகவினர் சார்பில் 19.01.2008 அன்று மாலை 7மணியளவில் நகரத் தலைவர் பாஷா தலைமையில் நகர செயற்குழு நடைபெற்றது. அப்பொழுது 7 பேருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயற்திரங்களும், 15 நபர்களுக்கு பணஉதவியும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் கலந்தர், மாவட்ட செயலாளர் இர்பான் பாஷா, மாவட்ட பொருளாளர் ஷகின்ஷா, மாவட்ட துணைச் செயலாளர் கே. தென்றல் அகியோர் உள்பட இதில் ஏராளமான தமுமுகவினர் கலந்துக்கொண்டனர் .


10 நாட்களில் 5,500 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம்

January 1st, 2008 பகுப்புகள்: தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

10 நாட்களில் 5,500 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம்

மதுரை அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் கேட்டு 10 நாட்களில் சுமார் 5500 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

பாஸ்போர்ட் அலுவலகம்

மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் புதிய பஸ்போர்ட் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. இந்த அலுவலகம் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் செயல்பட தொடங்கியது. அங்கு 4 விடுமுறை நாட்கள் தவிர, நேற்று வரை 10 நாட்களில் புதிய பாஸ்போர்ட் பெற 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தட்கல் முறையில் சுமார் 1500 பேர் விண்ணப்பித்து உள்ளார்கள்.

இவர்களில் 1300 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. தட்கல் முறையில் விண்ணப்பம் செய்பவர்களை தவிர மற்ற விண்ணப்பதாரர்கள் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என்பது குறித்த போலீசாரின் அறிக்கையை பெற்றவுடன் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

அடிப்படை வசதிகள்

மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைந்துள்ளதால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் புதிய பாஸ்போர்ட் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே போன்று பழைய பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்க வருவோரின் கூட்டமும் அலை மோதுகிறது.

மதுரை அலுவலகத்தில் பாஸ்போர்ட் கோருபவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதை அறியாத பொது மக்கள் ஏராளமானோர் அதிகாலை முதலே பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்து விடுகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களும் அதிகாலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இதனால் அங்கு கூட்டம் அலை மோதுகிறது. மேலும் வெளியில் நீண்ட நேரமாக நிற்கும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

www.dailythanthi.com


ஆப்கானில் அபின் விளைச்சல் அதிகரிப்பு: இந்தியாவில் கண்காணிப்பு தீவிரம்

December 23rd, 2007 பகுப்புகள்: கடத்தல், தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஆப்கானில் அபின் விளைச்சல் அதிகரிப்பு: இந்தியாவில் கண்காணிப்பு தீவிரம்

ஆப்கானிஸ்தானில் அபின் செடி விளைச்சல் இந்த ஆண்டு அமோகமாக உள்ளது. இது இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

போரால் சீரழிந்த ஆப்கானிஸ்தானில், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை தயாரிக்க தேவைப்படும் அபின் செடி விளைவிக்கப்படுகிறது. இதன் மூலமே அந்நாட்டுக்கு ஏராளமான வருவாய் கிடைத்து வருகிறது. இங்கிருந்து பல நாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் அபின் செடி வளர்ப்பில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். அபின் செடியில் விளையும் காய் பகுதியில் இருந்து ஓபியம் என்று அழைக்கப்படும் அபின் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் 8 ஆயிரத்து 200 டன் ஓபியம் தயாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என ஐ.நா., ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சத்து 93 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அபின் செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. போதை பொருட்களுக்கான உலக சந்தையில் இந்த ஆண்டுக்கான தேவையில் 94 சதவீதத்தை ஆப்கானிஸ்தானே அளிக்க உள்ளது என்பது ஐ.நா.,வின் கணிப்பு. இதனால், இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் உஷார் அடைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் கள்ள நோட்டுகள் இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றனவா என்பதில் தான் இதுநாள் வரை கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி கமாண்டன்ட் ஒருவரே ஊடுருவல்காரர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு போதை பொருள் கடத்தலுக்கு உதவி செய்து இருப்பது தெரிய வந்த பிறகு, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீரர் சிறையில் அடைக்கப்பட்டார். போதை பொருள் கடத்தலை தடுப்பதிலும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் கவனம் தீவிரமானது.

எல்லைப் பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் ஏ.கே.மித்ரா கூறியதாவது: எங்கள் வீரர் ஒருவரே போதை பொருள் கடத்தலுக்கு துணை போனார் என்பது அதிர்ச்சி தரும் விஷயம். எனவே போதை பொருள் கடத்தல் தடுப்பு பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் தான் போதை பொருள் கடத்தல் அதிகம் காணப்படுகிறது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 101 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளோம். இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம். போதை பொருள் கடத்தலுக்கு பெண்களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். பெண்கள் தங்கள் ஆடைப் பகுதிகளில் சிறு சிறு பொட்டலங்களாக போதை பொருட்களை மறைத்து வைத்து எடுத்து வருகின்றனர். சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் உள்ள முள்வேலியின் அந்தப்புறம் இருந்து இந்திய பகுதியை நோக்கி அவர்கள் அந்த பொட்டலங்களை துõக்கி எறிகின்றனர். இங்குள்ளவர்கள் அவற்றை கைப்பற்றி கொள்கின்றனர். இப்படி தான் போதை பொருள் கடத்தல் நடந்து வருகிறது. எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமப் பகுதிகளில் பெண்களை பரிசோதிக்க மாநில அரசு மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இருந்து பெண் போலீசாரை நாங்கள் கேட்டுள்ளோம். இவ்வாறு மித்ரா கூறினார்.

எல்லைப் பாதுகாப்பு படையின் எச்சரிக்கையை போதைப்பொருள் தடுப்பு அமைப்பு பெரிதுப்படுத்தவில்லை. இந்த அமைப்பை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் விளையும் அபின் செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் போதை பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் தான் கிராக்கி அதிகம். இந்தியாவில் அவ்வளவாக இல்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 350 கிலோ மட்டுமே ஆப்கானிஸ்தானை சேர்ந்தது. இது ஒரு கிலோ ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விலை கொண்டது. இது விலை அதிகம் என்ற காரணத்தினாலும், உள்ளூரில் இதைவிட மலிவு விலையில் போதை பொருட்கள் கிடைக்கின்றன என்ற காரணத்தினாலும் தான் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்படும் போதை பொருட்களுக்கு இந்தியாவில் கிராக்கி இல்லை. எனினும், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சப்ளை செய்ய தான் குறைந்த அளவுக்கு கடத்தி கொண்டு வரப்படுகிறது. எனினும், எல்லைப் பாதுகாப்பு படை உஷார்படுத்தியதில் இருந்து, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நாங்கள் பேசியுள்ளோம். போதை பொருள் கடத்தலை தடுக்க அவர்களின் உதவியையும் நாடியுள்ளோம். இவ்வாறு அந்த உயர் அதிகாரி கூறினார்.

ஐ.நா., அமைப்பில் போதைப்பொருட்கள் மற்றும் குற்றம் என்ற பிரிவில் தெற்கு ஆசிய பகுதியின் பிரதிநிதியாக உள்ள கேரி லுõயிஸ் கூறியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் சீனாவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். சிறிய அளவுகளில் தான் போதை பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்வது எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதை போல உள்ளது. தெற்கு ஆசியாவில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு கொரியர் சர்வீஸ் மூலம் பார்சல்களில் போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன. போதை பொருட்களை தயாரிக்கும் சட்டவிரோத ஆய்வுகூடங்கள் இந்திய எல்லைப்பகுதிகளில் ஏராளமாக தோன்ற தொடங்கியுள்ளன. இவ்வாறு கேரி லுõயிஸ் கூறினார்.

அபின் செடியும் ஆப்கானிஸ்தானும் : ஆப்கானிஸ்தானில் அபின் செடி விளைச்சல் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ஹெக்டேரில் இருந்து ஒரு லட்சத்து 93 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது 17 சதவீத வளர்ச்சி

* ஓபியம் உற்பத்தி 6 ஆயிரத்து 100 டன் என்ற அளவில் இருந்து 8 ஆயிரத்து 200 டன் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஹெராயின் விலை ( ஒரு கிராம்)

* ஆப்கானிஸ்தானில் நுõறு ரூபாய்

* பாகிஸ்தான் மற்றும் ஈரானில் ரூ.140

* துருக்கியில் ரூ.240

* அல்பேனியாவில் ரூ.480

* ஸ்லோவேனியா அல்லது

ஸ்லோவாக்கியாவில் ரூ.720

* ஜெர்மனியில் ரூ.880

* பிரிட்டனில் ரூ.1200

* ரஷ்யாவில் ரூ.1,320

ஹெராயின் தயாரிப்பது எப்படி? : அபின் செடியில் விளையும் விதையை முதல் நாள் இரவு கத்தியால் கீறிவிடுவார்கள். அதில் இருந்து பால் வடிந்து விதையின் மேற்பகுதியில் படிய தொடங்கும். மறுநாள் காலை விதையின் மேற்பகுதியில் படிந்து இருக்கும் பாலை சுரண்டி எடுப்பர். பின்னர் அதை ஆய்வுகூடங்களுக்கு எடுத்து சென்று, ரசாயன பொருட்களை சேர்த்து மார்பைன் என்ற போதை பொருளை உருவாக்குவர். அதை மேலும் மேம்படுத்தி தயாரிப்பது தான் ஹெராயின் என்று அழைக்கப்படுகிறது.

www.dinamalar.com


முதன்முறையாக மதுரையில் “ஹால்மார்க்’ மையம்

December 19th, 2007 பகுப்புகள்: தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

முதன்முறையாக மதுரையில் “ஹால்மார்க்’ மையம்

தென்மாவட்டங்களில் முதன்முறையாக மதுரையில் ஹால்மார்க் மையம் துவங்கப்பட்டுள்ளது.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு(பி.ஐ.எஸ்.) நிறுவனம் செயல்படுகிறது. தரமான தங்கம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நகைகளில் பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரையிடப்பட்டு வருகிறது. இதற்காக இந்நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்று இந்தியா முழுவதும் 70 தனியார் கோல்டு ஹால் மார்க்கிங் மையங்கள் செயல்படுகின்றன. மதுரையில் முதன்முறையாக சி.ஜி.ஆர். ஹால்மார்க் மையம் துவங்கப்பட்டுள்ளது. இதுவரை மதுரை நகை கடை உரிமையாளர்கள் ஹால்மார்க் முத்திரை பெற கோவை போன்ற நகரங்களுக்கு சென்று வந்தனர். இதனால் நகைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. மீனாட்சி கோயில் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட இம்மையத்தில் நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை பெறும் வசதி உள்ளது.

இம்மைய நிர்வாக இயக்குநர் ஜேம்ஸ் ஜோஸ் கூறியதாவது : 22 கேரட் நகையில் 91.6 சதவீதம் தங்கம் இருந்தால் ஹால்மார்க் முத்திரையிட தகுதியாக கருதப்படும். அதேபோல் 18 கேரட்டிற்கு 75.60 சதவீதம், 24 கேரட்டிற்கு 100 சதவீதம் தங்கம் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் அரை கிராம் தங்கத்தில் 3 மணி நேரம் ஆய்வு செய்வோம். பின்னர் பி.ஐ.எஸ்., சின்னம், எவ்வளவு தங்கம் உள்ளது என்ற விபரம், எங்கள் மைய பெயர், விற்கும் கடை பெயர், எப்போது தயாரிக்கப்பட்டது ஆகிய விபரங்களை நகைகளில் பொறித்து கொடுப்போம். கிராமிற்கு ரூ.1.50 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரத்தில் முத்திரையிட்டு நகையை திரும்ப பெறலாம். மையம் முறையாக நடக்கிறதா என 3 மாதத்திற்கு ஒருமுறை பி.ஐ.எஸ்., நிறுவனத்திலிருந்து அதிகாரிகள் ஆய்வு செய்வர். திருப்தியில்லாத பட்சத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு ஜேம்ஸ் ஜோஸ் கூறினார்.
 


இணையத்தில் திமுக இளைஞரணி மாநாடு

December 14th, 2007 பகுப்புகள்: *வித்தியாசமானவை, அரசியல், இணையம், தகவல், தகவல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | 4 மறுமொழிகள் » |

DMK_meet.JPGநெல்லையில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாட்டு நிகழ்வுகள் இணையத்தில் நேரடி ஒளிபரப்பப் படவிருக்கின்றன.

http://www.dmkyouthwing.in/ எனும் தளத்தில் இதைக் காணலாம்.


கேரளாவில் சுனாமி கண்காட்சி

December 12th, 2007 பகுப்புகள்: தகவல் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

சுனாமியின் விளைவுகளைக் குறித்த தகவல்கள், தற்காப்புத் தகவல்களைத் தரும் வகையிலும் சுனாமியில் மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்தவர்களை நினைவு கூறும் வகையிலும் இந்த கண்காட்சி இயங்கவுள்ளது.

 Tsunami museum opened - The Hindu