சுகாதாரம் | சற்றுமுன்...




குழந்தைகள் நல அகில இந்திய மருத்துவர்கள் மாநாடு

August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சுகாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

குழந்தைகள் நல அகில இந்திய மருத்துவர்கள் மாநாடு

குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாடு மதுரையில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

2008 ம் ஆண்டிற்கான குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாடு வருகிற 8 ம் தேதி தொடங்கி 10 ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொற்று நோய், புதிய சவால்கள், குறைந்த வாய்ப்புகள் மற்றும் டெங்கு, மலேரியா, வயிற்று போக்கு உள்ளி நோய்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. மாநாட்டையொட்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலிகளுக்கான பச்சிளங்குழந்தைகள் உயிர் காக்கும் பயிற்சி 7 ம் தேதி நடக்கிறது.

இந்த மாநாட்டில் இத்துறையில் தலைசிறந்த வல்லுனர்கள் அம்பேத்கார், ரோஹித் அகர்வால், உட்பட ஏராளமானோர் சிறப்புரையாற்றுகின்றனர். 8 ம் தேதி காலை 7 மணிக்கு குடும்ப நலத்துறை செயலாளர் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதில் மாவட்ட கலெக்டர் ஜவகர், மருத்துவமனை டீன் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவு துறை தலைவர் டாக்டர் வசந்தாகுமாரி மற்றும் மருத்துவர் மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளர் சண்முக சுந்தரம், அமுதா ராஜேஸ்வரி உள்ளிட்ட மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்
 


போபால் விஷவாயுக் கசிவு: பாதிக்கப்பட்டவர்கள் தில்லியில் போராட்டம்

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, உடல்நலம், குழந்தைகள், சட்டம் - நீதி, சுகாதாரம், தொழில், பொருளாதாரம், போராட்டம், மரணம், வணிகம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் போபால் நகரில் கடந்த 1984ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், 24 ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று போராடிவருகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் இருந்து தலைநகர் புதுடெல்லிக்கு 800 கி.மீ. பாதயாத்திரை நடத்தி, இவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

ஆனால் அப்போது பிரதமர் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லி வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. AFP: Bhopal tragedy survivors reach Delhi after 37-day protest march

2. Tehelka - India's Independent Weekly News Magazine: “Timeline: The Toxic Trail”

3. Indians Pressure Dow on Bhopal Cleanup - washingtonpost.com


சிவகங்கை, பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்

March 20th, 2008 பகுப்புகள்: கல்வி, சுகாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சிவகங்கை, பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்

சிவகங்கை, பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மேலும் கூறியிருப்பதாவது : 10 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஸ்கேனிங் வசதி. அரசு மருத்துவமனைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி. காவல்துறை, தீயணைப்பு படை பணிகள் ஒருங்கிணைக்கப்படும். ரூ.221 கோடி செலவில் 227 அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். எய்ட்ஸ் நோயால் பெற்‌றோரை இழந்த குழந்தைகளுக்காக ரூ.5 கோடியில் அரசு சார்ந்த அறக்கட்டளை அமைக்க திட்டம்.


புதுச்சேரி அமைச்சர் வல்சராஜ் பதவி விலக கோரி சட்டசபை முற்றுகை - 500 பேர் கைது!

March 13th, 2008 பகுப்புகள்: அரசியல், அரசியல், இந்தியா, ஊழல், கைது, சட்டமன்றம், சுகாதாரம், போராட்டம் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

demo-against-valsarajjpg.jpg

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி 13-03-2008 காலை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், மாகேயில் கூட்டுறவுத் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கு நிலம் வாங்கியதில் நடந்த ஊழல், முறைகேடுகள் தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் வழக்குப் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர் இ.வல்சராஜை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், ஜனநாயக முன்னேற்றக் கழக அமைப்பாளர் பா.அழகானந்தம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, தமிழர் திராவிடர் கழகத் தலைவர் மு.அ.குப்புசாமி உள்ளிட்ட கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துக் கொண்ட 150 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.


பொது சுகாதாரம்: சென்னை மாநகராட்சி அதிரடி

January 31st, 2008 பகுப்புகள்: உடல்நலம், சட்டம் - நீதி, சுகாதாரம், சுற்றுலா, சென்னை, மருத்துவம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை மாநகராட்சி பொது இடங்களில் துப்ப, மல ஜலம் கழிக்க குப்பை போட தடை வித்தித்துள்ளது.

சாலைகள், நடைபாதைகள், விளையாட்டு மைதானங்கள், நீர்நிலைகள், பாலங்கள் வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் பொதுவில் துப்புபவர்கள், மலஜலம் கழிப்பவர்கள் குப்பை போடுபவர்கலுக்கு ரூ. 50 அபராதமும், குப்பைகளை எரிப்பவர்களுக்கு ரூ. 500ம் சுற்றுப்புறத்தை தூய்மையின்றி வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000மும் அபராதமாய் விதிக்க்கப்படும்.

பொது இடங்களில் துணி துவைப்பதையும், வாகனங்களை கழுவவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Chennai Corporation bans spitting in public places - The Hindu


மாணவர்கள்,பெற்றோர்களுக்கு ஒரு மணிநேர உடற்பயிற்சி அவசியம்

January 28th, 2008 பகுப்புகள்: சமூகம், சுகாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மாணவர்கள்,பெற்றோர்களுக்கு ஒரு மணிநேர உடற்பயிற்சி அவசியம்

நல்ல உணவை சாப்பிட்டு உடலை பெருக்கும் கலையை விட்டு, பெற்றோர்கள்,மாணவர்கள் தினமும் ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள் என்று ஐ.ஜி., சைலேந்திரபாபு அறிவுரை கூறினார்.திண்டுக்கல் எம்.எஸ்.பி., மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, பெற்றோர் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.விழாவை துவக்கி வைத்து ஐ.ஜி., சைலேந்திரபாபு பேசியதாவது:மாணவர்கள் விளையாட்டில் ஆர் வம் காட்ட வேண்டும். விளையாட்டில் ஆர்வம் காட்டினால் படிப்பு பாதிக்கப்படும் என்ற தவறான எண்ணம் உள்ளது. கடந்தாண்டு பிளஸ்2வில் முதல் மார்க் பெற்ற மாணவி, நான் தினமும் கராத்தே உடற்பயிற்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.இதனால் தினமும் மாணவ, மாணவிகளும், பெற் றோரும் ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள். நமது நாட்டில் வகை,வகையான உணவுகளை சாப்பிட்டு, உடலை பெருக்க வைக்கின்றனர்.இதை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதால் தான் ஜப்பானியர்கள் சராசரி வயது 87ஆக உள்ளது.இந்தியர்கள் உடற்பயிற்சி செய்யாததால் சராசரி வயது 67ஆக உள்ளது.ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தடகளபோட்டிகளில் இன்னும் பரிசுகளை பெற முடியவில்லை.நம்மிடம் விளையாட்டில் ஆர்வம் குறைவாக இருப்பது தான் காரணமாகும்.முதல் மார்க் வாங்கியவர்களை விட விளையாட்டில் உள்ளவர்கள் தான் மக்களுக்கு நன்றாக தெரிகின்றனர். கிரிக்கெட்டில் உலகறிய சாதனை படைக்கும் சச்சின் டெண்டுல்கர் பள்ளியில் முதல் மார்க் எடுத்தவர் இல்லை. விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லுõரியில் முதலிடம் கொடுக்கப்படுகிறது. மனிதர்களுக்கு உடல் முக்கியமானது. உடல் நன்றாக இருந்தால் தான் நாம் எதையும் செய்ய முடியும். உடல் பயிற்சி செய்பவர்களுக்கு மனதளவில் நம்பிக்கை பிறக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.பள்ளி தாளாளர் ரத்தினபாண்டியன்,முதன்மை கல்வி அலுவலர் நாச்சியார்,மதுரை அரசு ஆஸ்பத்திரி மயக்கவியல் டாக்டர் ராஜமனோகரன், செங்கல்பட்டு மருத்துவக்கல்லுõரி பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

www.dinamalar.com


தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை

January 20th, 2008 பகுப்புகள்: உடல்நலம், சுகாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இரா.அன்புமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அரிக்கையில் மேற்கு வங்காளத்தில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் பறவை காய்ச்சல் பீதி நிலவுகிறது.

மேற்கு வங்க பாதிப்பு தமிழகத்தில் இல்லை. பறவை காய்ச்சல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம் எனவும். பறவை காய்ச்சல் வராமல் இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு பாதுக்காப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது என்‌றார்.


போலி மருத்துவர்கள் கிளினிக்கை மூடிவிட்டு தப்பியோட்டம்

January 17th, 2008 பகுப்புகள்: சுகாதாரம், மருத்துவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

போலி மருத்துவர்கள் கிளினிக்கை மூடிவிட்டு தப்பியோட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினரால் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வருவதையறிந்த பலர், தாங்கள் நடத்தி வந்த கிளினிக்கை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் நடமாடி வருவதாக காவல் துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு தீவிரமாக போலி மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் நான்குனேரியில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஆங்கில மருத்துவம் செய்து வந்த முதியவர் ஒருவரை போலீஸôர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் போலி மருத்துவர்களை கைது செய்யும் பணியில் போலீஸôர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், எம்.பி.பி.எஸ். படிக்காமல் கிராமங்களில் ஆங்கில மருத்துவம் செய்து வந்த பலர் கிளினிக்கை முடிவிட்டு தப்பியோடி விட்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.

எனினும், போலி மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்படுவர் என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

www.dinamani.com
 


இந்தியாவின் ஐந்து சுகாதார திட்டங்களில்..பெரும் ஊழல்!பகீர்’ தகவல் வெளியிட்டது உலக வங்கி

January 13th, 2008 பகுப்புகள்: அரசியல், சுகாதாரம், மருத்துவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் ஐந்து சுகாதார திட்டங்களில்..பெரும் ஊழல்!பகீர்’ தகவல் வெளியிட்டது உலக வங்கி

உலக வங்கி நிதியுதவியுடன் இந்தியாவில் மேற்கொள்ளப்படும், ஐந்து சுகாதார திட்டங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன.

இந்த அதிர்ச்சித் தகவலை, உலக வங்கியின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் உலக வங்கி நிதியுதவியுடன் மலேரியா நோய் தடுப்பு திட்டம் (ரூ.456 கோடி), ஒரிசா சுகாதார அமைப்புகள் மேம்பாட்டு திட்டம் (ரூ. 328 கோடி), உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு கிடங்கு திட்டம் (ரூ.216 கோடி), இரண்டாவது தேசிய எச்.ஐ.வி.,/ எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம்(ரூ.774.8 கோடி), காசநோய் தடுப்பு திட்டம் (ரூ.499.2 கோடி) என ஐந்து சுகாதார திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டங்கள் 1997ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை அமல்படுத்தப்பட்டன. இதில், நான்கு திட்டங்கள் முடிந்து விட்டன. உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு கிடங்கு திட்டம் இன்னும் அமலில் உள்ளது.

இந்த திட்டங்கள் அமல்படுத்தும் முறை குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. மத்திய அரசின் உதவியுடன், கடந்த ஆண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஐந்து சுகாதார திட்டங்களிலும் பெரும் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளன என்பது தெரிய வந்தது. இது குறித்து உலக வங்கித் தலைவர் ராபர்ட் பி ஜூலிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐந்து சுகாதார திட்டங்களிலும் பெரும் ஊழல்களும், முறைகேடுகளும் நடந்துள்ளது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அரசு உறுதி அளித்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்பு, உலக வங்கி உதவியுடன் குழந்தை சுகாதார திட்டம் மேற்கொள் ளப்பட்டது. இதில் ஊழல் நடந்து இருப்பது தெரிய வந்ததும், திட்டத்துக்கான நிதி உதவி சிறிது காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இரண்டு பார்மா நிறுவனங்களும் உலக வங்கியால் தடை செய்யப்பட்டன. தற்போது, ஐந்து சுகாதார திட்டங்கள் தொடர்பாக அது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வங்கி நடத்திய ஆய்வின் அறிக்கை மூலமும், உலக வங்கி தாக்கல் செய்த ஆவணங்கள் மூலமும் ஊழல்களும், முறைகேடுகளும் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது, தகுந்த சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

http://www.tamilnews.dk/tn1/tn11.asp


அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சங்கம் நாளை உதயம்! நோயாளிகளுக்கு இனிமேலாவது விடிவு பிறக்குமா?

January 10th, 2008 பகுப்புகள்: உடல்நலம், சுகாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சங்கம் நாளை உதயம்! நோயாளிகளுக்கு இனிமேலாவது விடிவு பிறக்குமா?

திருப்பூர் அரசு மருத் துவமனையில் நோயாளி கள் நலச் சங்கம் செயல் பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள தையடுத்து, துவக்க விழா நாளை நடக்கிறது. இதன் மூலம் அடிப்படை வசதி, மருத்துவ வசதி கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை யில் தினமும் மூவாயிரம் நோயாளிகள் சிகிச்சைகளுக் காக வந்து செல்கின்றனர். கோவை மாவட்டத்திற்கு தலைமை அரசு மருத்துவ மனையாக இருந்த போதி லும், இங்கு நோயாளி களுக்கு சிறந்த முறையில் தரமான சிகிச்சை கிடைப்ப தில்லை.

சுகாதார சீர்கேடு அதிகரித் துள்ள நிலையில், கழிப்பிட வசதிகள் இல்லாமல் உள்ளன. தற்போது நாடு முழுவதி லும் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் “நோயாளி கள் நலச் சங்கம்’ திட்டம் துவங்கப்பட்டு வருகிறது.

மக்கள் நலன் கருதி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை மூலமாக அளிக்கப்படும் நிதி யில் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நோயாளிகள் நலச் சங்கம் துவங்கும் தலைமை மருத்துவமனைக ளுக்கு ரூ. ஐந்து லட்சம், அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. ஒன்றரை லட்சம், தாலுகா அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. மூன்று லட்சம் என அரசு நிதியளிக்கிறது. இந்த சங்கத்தில் உள் ளாட்சி உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், அரசு சாரா அமைப்புகள், நன்கொடை யாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இணைந்து மருத்துவமனை மற்றும் நோயாளிகளின் முன்னேற்றத்திற்கு உதவும் அமைப்பாகும்.

அரசு மற்றும் நன்கொடை யாளர்கள் அளிக்கும் நிதியில் மருத்துவமனையில் சிகிச்சை கருவிகள் வாங்குவதற்கும், வளாகத்தை துõய்மையாக வைத்திருக்கவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் உதவும். திருப்பூர் சுகாதார மாவட் டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்தி லும் பல்லடம், சூலுõர் உட் பட வட்டாரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளி லும் நோயாளிகள் நலச் சங்கம் துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திருப்பூரில் அமைந்துள்ளதால், இங்கு நோயாளிகள் நலச் சங்கம் துவங்க கலெக்டர் அனுமதி பெற வேண்டும் என்பதால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது மாவட்ட நிர் வாக அனுமதி பெறப்பட்டு உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் சேர்க் கும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்தது. தற்போது கலெக்டர் அனுமதி யுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில், நாளை (11ம் தேதி) மாலை நடக்கும் விழாவில் நோயாளிகள் நலச் சங்கம் துவக்கி வைக்கப் படுகிறது. இவ்விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் நீரஜ் மித்தல், எம்.பி., சுப்பராயன், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, அரசு மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர். இளமதி, கண்காணிப்பாளர் டாக்டர். நடராஜன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். தற்போது நோயாளிகள் சங்கத்தில் 45 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

www.dinamalar.com


தமிழகத்தில் எய்ட்ஸ் பாதித்தோரில் 45% பெண்கள் ஹெச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு தகவல்

December 31st, 2007 பகுப்புகள்: சுகாதாரம், மருத்துவம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தமிழகத்தில் எய்ட்ஸ் பாதித்தோரில் 45% பெண்கள் ஹெச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு தகவல்

“”தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களையும் எய்ட்ஸ் நோய் பாதிக்கிறது; தமிழகத்தில் எய்ட்ஸ் பாதித்தோரில் 45 சதவீதம் பேர் பெண்கள்,”என்று தமிழ்நாடு ஹெச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் ராமபாண்டியன் கூறினார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், திருச்சி ஹெச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு சார்பில் உலக எய்ட்ஸ் நோய் தின விழா நடந்தது. கூட்டமைப்பு உறுப்பினர் இமாகுலா வரவேற்றார். தமிழ்நாடு ஹெச்.ஐ.வி., உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் ராமபாண்டியன் தலைமை வகித்து பேசியதாவது: இந்தியாவில் 25 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் எய்ட்ஸ் நோயில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இரண்டரை லட்சம் நபருக்கு ஹெச்.வி.ஐ., உள்ளது. எய்ட்ஸ் நோயால் பாதித்த பிற மாநிலங்களை விட தமிழகத்தில் நோய் தாக்கிய 45 சதவீதம் பேர் உயிருடன் வாழ்கின்றனர். குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் நோய் வரும் என்று நினைத்தனர். தற்போது டாக்டர், ஆசிரியர்கள் பல்வேறு துறை சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களையும் ஹெச்.ஐ.வி., தாக்குகிறது. ஆண்களுக்கு தான் அதிகம் வரும் என்ற நிலை மாறி தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களையும் தாக்கியுள்ளது. தமிழகத்தில் எய்ட்ஸ் பாதித்தோரில் 45 சதவீதம் பெண்கள். நோய் தாக்கிய ஆண்கள் விரைவாக இறக்கின்றனர். தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இந்த கூட்டமைப்பு துவக்கப்பட்டு, ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் உள்ளோர் தாங்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து, எய்ட்ஸ் கட்டுபாடு சங்க உதவியுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 26 எய்ட்ஸ் ஆலோசனை மையங்கள் (ஏ.ஆர்.டி.,) மையங்கள் செயல்படுகின்றனர். இதில் 65 ஆயிரம் பேர் இலவசமாக மாத்திரைகள் பெற பதிவு செய்துள்ளனர். தற்போது 25 ஆயிரம் பேர் இலவசமாக மாத்திரை பெற்று வருகின்றனர். எய்ட்ஸ் பாதித்த பலர் பஞ்சாயத்து தலைவர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். திருச்சி மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள் துணை இயக்குநர் துரைராஜ் பேசியதாவது: நாட்டில் ஆயிரம் பேரில் மூன்று பேருக்கு ஹெச்.ஐ.வி., பாசிட்டிவ் உள்ளது. அனைத்து தரப்பினரும் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். இரண்டு சதவீத டாக்டர்களுக்கும் ஹெச்.ஐ.வி., உள்ளது. ஹெச்.ஐ.வி., பாதித்த குழந்தைகளை அரவணைக்க வேண்டும். அவர்களை அனைவரும் ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இந்நோய் உள்ளோர் எதிர்ப்பு சக்திகளை அதிகம் வழங்க கூடிய கடலை, தயிர், முட்டை, வைட்டமின் மாத்திரிகைகளை சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். திருச்சி மருத்துவப்பணிகள் (காசநோய்) துணை இயக்குநர் அப்துல் சமது, மாவட்ட மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் பத்மாவதி, வக்கீல் மார்ட்டின், எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மாவட்ட திட்ட மேலாளர் சண்முகசுந்தரம் உட்பட கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். தமிழ் நன்றி கூறினார்.

www.dinamalar.com
 


எய்ட்ஸ் ஒழிப்பில் தீவிரமாக ஈடுபடுவேன்: மதுரை ஆதீனம்

December 14th, 2007 பகுப்புகள்: சுகாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

எய்ட்ஸ் ஒழிப்பில் தீவிரமாக ஈடுபடுவேன்: மதுரை ஆதீனம்

மதுரை: எய்ட்ஸ் ஒழிப்பு பிரசாரத்துக்காக தொண்டு நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என்று மதுரை ஆதீனம் கூறினார். மதுரை பேஸ் அறக்கட்டளையும், சென்னை எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனமும் இணைந்து ஒரு நாள் கருத்தரங்கை நடத்தின. அறக்கட்டளை திட்ட இயக்குனர் பொன். மனோகரன் வரவேற்றார். மதுரை ஆதீனம் தலைமை வகித்து பேசியதாவது:

ஒருவனுக்கு ஒருத்தி என்று தான் கடவுள் வகுத்து உள் ளார். அந்த கட்டுப் பாட்டை நாம் கடைபிடிக்க வேண்டும். மனக் கட்டுப்பாடு, ஒழுங்கு முறை மனிதனுக்கு அவசியம். இந்தியாவில் எய்ட்சால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது நமது நாட்டு கலாச்சாரத்தை மிகவும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இந்த எண்ணிக்கை அதிகரித்தால் உலகில் உள்ள மற்ற நாடுகள் நம்மிடம் தொடர்பு கொள்ள தயக்கம் காட்டுவார்கள். மது குடிக்காதே, சிகரெட் குடிக்காதே என்று சொல்லலாம். ஆனால் காதலிக்காதே, உடல் உறவு கொள்ளாதே என்று யாரையும் கட்டுப்படுத்த முடியாது. இது ரத்தத்தோடு கலந்த உணர்ச்சி. எனவே விழிப்புணர்வு மூலம் தான் கட்டுப்படுத்த முடி