கல்வி | சற்றுமுன்...




7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

August 10th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, கணினி, கல்வி, தகவல், தகவல் தொழில்நுட்பம், தேர்வு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை
10 கல்லூரிகளில் 9-க்கும் குறைவானவர்கள் சேர்ந்துள்ளனர்

முதலிடத்தில் எலக்ட்ரானிக் கம்ïனிகேசன்

தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்தவற்கு அண்ணாபல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடைபெற்றுவருகிறது. முதல் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து 2-வது கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது. தினமும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் கவுன்சிலிங்கிற்கு வருவதில்லை.

இதுவரை மாணவர்கள் தேர்வு செய்த இடங்கள் விவரம் வருமாறு:-

எலக்ட்ரானிக் கம்ïனிகேசன் பிரிவில் 18 ஆயிரத்து 474 இடங்களில் 13 ஆயிரத்து 244 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இது 72 சதவீதம் ஆகும். இந்த பிரிவு தான் முதல் இடத்தில் உள்ளது. கம்ப்ïட்டர் சயின்ஸ் பிரிவில் 17,356 இடங்களில் 10,383 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இது 60 சதவீதம். எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பிரிவில் உள்ள 12,029 இடங்களில் 5,885 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது 49 சதவீதம். தகவல் தொழில்நுட்பம் பிரிவில் உள்ள 13,627 இடங்களில் 6,848 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்னன. இது 50 சதவீதம். 8,341 இடங்கள் கொண்ட மெக்கானிக்கல் பிரிவில் 6,099 பேர் தேர்வு செய்துள்ளனர்.

சிவில்

3,320 இடங்கள் உள்ள சிவில் பிரிவில் 2,586 இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். இது 78 சதவீதம். 402 இடங்கள் கொண்ட ஆட்டோமொபைல் பிரிவில் 339 இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். இது 84 சதவீதம். 1406 பேர் கொண்ட ஏரோனாட்டிக்கல் பிரிவை 879 பேர் தேர்ந்து எடுத்து உள்ளனர். இது 62 சதவீதம். பயோடெக்னாலஜி பிரிவில் 1,193 இடங்களில் 658 மாணவர்க்ள தேர்வு செய்துள்ளனர். இது 55 சதவீதம்.

மற்ற பிரிவுகளில் உள்ள 3554 இடங்களில் 2,601 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 81 ஆயிரத்து 373 இடங்களில் 50 ஆயிரத்து 715 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவர்கூட சேராத கல்லூரிகள்

இதுவரை 7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் எந்த பிரிவிலும் ஒரு மாணவர்கூட சேரவில்லை. அந்த கல்லூரிகள் அனைத்தும் புதிய கல்லூரிகள் என்றும் சென்னை அருகே உள்ள கல்லூரிகள் அல்ல என்றும் தெரிய வந்துள்ளன.

மேலும் 9 மாணவர்களுக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகள் 10 உள்ளன. இவற்றில் சில சென்னையை சுற்றி உள்ளன. மற்றவை மற்ற மாவட்டங்களில் உள்ளன.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில் நல்ல கட்டமைப்பு உள்ள பல புதிய கல்லூரிகள் உள்ளன. அதை அறியாமல் மாணவர்கள் சேர தயங்குகிறார்கள். கட்டமைப்பு வசதி உள்ள புதிய கல்லூரிகளில் சேரலாம். இந்த கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டு நல்ல வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


கிராமப்புறங்களில் இருந்துதான் சிறந்த தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்

August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், கல்வி, சமூகம், தமிழ்நாடு, தேர்வு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கிராமப்புறங்களில் இருந்துதான் சிறந்த தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்

திண்டுக்கல், ஆக. 4: மிகச் சிறந்த தலைவர்களும், விஞ்ஞானிகளும் கிராமப்புறங்களில் இருந்துதான் உருவாகி இருக்கிறார்கள் என தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் தினமணி நாளிதழ் மற்றும் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற “சிகரத்தை வெல்வோம்’ நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசியதாவது:

கிராமப்புற மாணவர்கள் எதிலும் சளைத்தவர்களோ, பின்தங்கியவர்களோ அல்ல. பல முக்கியத் தலைவர்களும், அறிஞர்களும் கிராமப்புறங்களில் இருந்துதான் உருவாகி உள்ளனர்.

நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கும் சில வாய்ப்புகள் கிராமங்களில் கிடைக்காமல் போவதால், அவர்களுக்கு அது ஒரு பலவீனமாக அமைந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் சிறு நகரங்களில் தினமணி இத்தகைய வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

பிளஸ் 2 தேர்வுகளை எழுதிய மாணவர்களிடம் மட்டும்தான் எத்தனை மதிப்பெண்கள் என்ற கேள்வி எழுப்பப்படும். மாணவர்களின் திறமைக்கும், அறிவுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே அடிப்படையாக இல்லை என்றாலும், தற்போதைய காலக்கட்டத்தில் மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவிகளின் எதிர்கால படிப்பையும், வேலைவாய்ப்பையும் நிர்ணயிப்பதாக அமைந்து விடுகிறது. எனவேதான், மதிப்பெண்களை கூடுதலாகப் பெறுவதற்கு இந்த நிகழ்ச்சி உதவும்.

மாணவ சமுதாயம் மற்ற விஷயங்களில் வேண்டுமானால் குசேலனாக இருக்கலாம். ஆனால், படிப்பில் மட்டும் குபேரனாக இருங்கள். நீங்கள் வெற்றிபெற்று எதிர்காலத்தில் நல்ல நிலைமையை அடைய வேண்டும். அப்படி அடையும்போது, பாரதியாரின் அறிவுரையை மறந்துவிடாமல் தாய்மொழி தமிழையும், தாய்நாட்டையும் வளம்பெறச் செய்யுங்கள். உலகம் முழுவதும் தமிழரின் பெருமையை நிலைநாட்ட முன்வாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார் கே. வைத்தியநாதன்.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080804141246&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/5/2008&dName=No+Title&Dist=0


தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள்: சூர்யா

July 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், கல்வி, திரையுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள்: சூர்யா

தான் நடத்தி வரும் அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்கள் அமைக்கப்படும் என நடிகர் சூர்யா தெரிவித்தார்.

நடிகர் சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த 28 ஆண்டுகளாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெறும் மாணவ மாணவியருக்குப் பரிசுத் தொகை வழங்கி வருகிறார். இதன் 29-ம் ஆண்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவியருக்கு ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கி சிவகுமார் பேசியதாவது:

1979-ம் ஆண்டு தொடங்கிய சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் இயன்றவரை கல்விக்காக உதவிகளைச் செய்து வருகிறேன். தற்போது சூர்யா அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிப்புக்காக எவ்வளவு சிரமங்களை அனுபவிப்பார்கள் என்பதை உணர்ந்தவன். கல்விக்காக செய்யும் உதவியால்தான் எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது. வருங்காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களின் வாழ்வில் கல்வி விளக்கேற்ற முயற்சிப்போம் என்றார்.

விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:

கடந்த 29 ஆண்டுகளாக என் தந்தை செய்து வரும் சேவையைப் பார்த்துதான் “அகரம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கல்வி உதவிக்காக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகளுக்காகத் தமிழகம் முழுவதும் இலவச டியூசன் சென்டர்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் அகரம் அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளிகளில் நூலகம், கிராமப்புற பள்ளிகள் உள்ள ஊர்களில் பள்ளிகளின் வளர்ச்சிக்காக “கல்வி உதவிக்குழு’ போன்றவற்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றார்.
 
 


இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலை. பாராட்டு

June 24th, 2008 பகுப்புகள்: கல்வி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலை. பாராட்டு

 உலகின் சிறந்த மாணவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர் என்று இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

மேலும் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்களை சேர்க்க விரும்புவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் கிறிஸ் பேட்டென் கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் அலுவாலியா போன்றவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது அங்கு 257 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.

ஆனால் இந்தியர்களை விட சீன மாணவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் அங்கு படிக்கின்றனர். சீன மாணவர்களில் மூன்றில் ஒருபங்குதான் இந்திய மாணவர்கள் அங்கு படிக்கின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் எங்கள் பல்கலைக்கழகத்தில் அதிகமாக சேர வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனெனில் உலகின் சிறந்த மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என்றார் வேந்தர் கிறிஸ் பேட்டென்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்களில் 25 சதவீதம் பேர் எம்.பி.ஏ. படிக்கின்றனர். ஆனால் சமூக அறிவியல் மற்றும் மானிடவியல் படிக்க மாணவர்கள் அதிகமாக முன்வர வேண்டும் என்றார் அவர்.

இந்திய மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், அவர்கள் இங்கு பெறும் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) சீன மாணவர்களை விட அதிகமானது. ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் உள்பட 54 விதமான ஸ்காலர்ஷிப்களை இந்தியா மாணவர்கள் கடந்த ஆண்டு வென்றுள்ளனர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறிக்கை கூறுகிறது.

இங்கு ஓராண்டு எம்.பி.ஏ. படிக்க ரூ.40 லட்சம் செலவாகிறது.
 
 


மேல்நிலைப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவு

April 16th, 2008 பகுப்புகள்: இடஒதுக்கீடு, கல்வி, சட்டம் - நீதி, சமூகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!தமிழ்நாட்டில் இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ்-1 வகுப்பு, அதாவது பதினோராம் வகுப்பில் மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தர விட்டுள்ளது.

69 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு உயர் கல்வி நிலையங்களில் தற்போது நடைமுறையில் உள்ளது போன்று, 11 வது வகுப்பிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசின் நிலையாகும். இவ்வாறு பள்ளிகளில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லாததால், குறிப்பாக தலித் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அரச அதிகாரிகள் கூறுகிறார்கள்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு: TN orders schools to implement 69% resevation in plus one admission: “பிளஸ்1 சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிகளுக்கு அரசு உத்தரவு”


பாடப் புத்தகங்களில் தாழ்த்தப்பட்டோரை இழிவாகக் கூறும் சொல் இடம் பெற்றுள்ளது

April 14th, 2008 பகுப்புகள்: இந்தியா, கல்வி, குழந்தைகள், சட்டம் - நீதி, சமூகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

தாழ்த்தப்பட்டவர்களைக் குஜராத்தில் தெட் (DHED) எனக் கூறுவது தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும். அந்த இழி சொல்லைப் பயன்படுத்தினால் ஆறுமாதச் சிறைத் தண்டனை விதிக்கலாம் எனச் சட்டம் உள்ளது. அப்படிப் பட்ட சொல் பாடநூல்களில் 8 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கொடுமை குஜராத் மாநிலத்தில் நடைபெறுகிறது.

காலையில் நடைபெறும் வணக்க நிகழ்ச்சிகளில் படிப்பதற்காகத் தொடக்க நிலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாட நூல்களில்தான் இது உள்ளது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் முதல்வராக இருந்த ஜி.என். சவுத்ரி என்பவர் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இதில்தான் இந்த இழி சொல் இடம் பெற்றுள்ளது. இந்தப் புத்தகத்தின் 289 ஆம் பக்கத்தில் உள்ள கதையில் இச்சொற்கள் இடம் பெற்றுள்ளன.

எதிர்ப்பு கிளம்பியதால் இப்புத்தகங்களைத் திரும்பப் பெற ஆணையிடப்பட்டது. பெற்ற புத்தகங்கள் மீண்டும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அவற்றைப் பார்த்தால் 289 ஆம் பக்கம் கிழிக்கப்பட்டிருக்கிறது. சூத்திரன் என்ற சொல் இடம் பெறுவதாக இருந்ததாம். அதற்குப் பதில் எப்படியோ தெட் என்னும் சொல் இடம் பெற்றுவிட்டதாம். இதற்குக் காரணமானவர்கள் மீது இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

நன்றி: விடுதலை

மேலும் விவரங்களுக்கு:

1. Casteist slurs on Dalits in textbook - Ahmedabad - Cities - The Times of India

2. Casteist slur: Chaudhari transferred - Ahmedabad - Cities - The Times of India


ஒரு வரி செய்திகள் - விடுதலை

April 14th, 2008 பகுப்புகள்: *பொது, கலை-இலக்கியம், கல்வி, சட்டம் - நீதி, சென்னை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

  • சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பதிப்போவியங்கள் தொடர்பாக நிரந்தர காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. (மேலும்: The Hindu : Front Page : Facelift for heritage buildings in Chennai)
  • மக்கள் வீடுகளுக்கே சென்று நீதி வழங்குவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் ஏழாயிரம் கிராம நீதிமன்றங்களை ஏற்படுத்த உள்ளது என மத்திய அமைச்சர் வேங்கடபதி கூறியுள்ளார். (முந்தைய செய்தி: The Hindu : Union Minister of State for Law and Justice K. Venkatapathy: Centre planning ‘gram nyayalayas’ (village courts))
  • நாடு முழுவதும் உள்ள கிராம பள்ளிகளில் மேல் நிலைப் படிப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு பாரத ஸ்டேட் வங்கி தலா ரூ. 1001 ரொக்கப் பரிசு வழங்கும் என அவ்வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். (மேலும்: The Hindu : ‘The State Bank of India Talent Awards’: SBT awards for toppers)

முழுவதும் வாசிக்க: விடுதலை


ஒரு வரிச் செய்திகள் - ஐ.ஐ.எம். & ஜக்மோகன் டால்மியா

March 27th, 2008 பகுப்புகள்: கல்வி, கிரிக்கெட், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

பெங்களூருவில் உள்ள இந்திய நிர்வாகக் கழகம் (IIM) 2008-09 ஆம் ஆண்டுக்கான கட்டணத்தை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தியுள்ளது. (விவரங்களுக்கு: Top B-schools to join IIMs’ fee-hike trek - Education - Services)

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தில் பணத்தில் முறைகேடு செய்ததாக கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா கைதாகி, விடுதலை செய்யப்பட்டார். (விவரங்களுக்கு: BBC NEWS | South Asia | Indian cricket chief in the dock: Dalmiya embezzled Rs 2.90 cr)

மேலும்: விடுதலை


‘வெளிநாடுகளுக்குச் செல்லாதீர்கள்’: அமைச்சர் டி.ஆர்.பாலு அறிவுரை

March 25th, 2008 பகுப்புகள்: கல்வி, சமூகம், தொழிலாளர்கள், தொழில், பொருளாதாரம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதில் இந்தியாவிலேயே பஞ்சாப், கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய மாணவர்களிடம் குறிப்பாக, நகர்ப்புற மாணவர்களை விட கிராமப்புற மாணவர்களிடம் ஆங்கிலம் பேசும் திறன் குறைவாக உள்ளது. எனவே, பிறருடன் ஆங்கிலத்தில் தொடர்பு கொண்டு பேசும் திறன், குழுவாக இணைந்து செயல்படும் திறன் மற்றும் தலைமையேற்கும் பண்பு ஆகியவற்றை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி பயின்ற மாணவர்கள் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு வேலைதேடிச் செல்ல வேண்டாம் என்று அமைச்சர் டி.ஆர்.பாலு அறிவுரை கூறினார். இந்தியாவிலேயே நிறைய வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் தங்கவேலு பொறியியல் கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழாவில் டி.ஆர்.பாலு பேசியது:

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு, இளம் பொறியாளர்கள் வேலை தேடிச் செல்வதால், ரூ.800 கோடி அளவுக்கு இந்தியாவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இந்திய இளைஞர்களின் அறிவும், திறமையும் வெளிநாடுகளுக்கு விலை போய்விடுவதால் வளர்ந்த நாடுகள் பலன் அடைகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வேலைதேடிச் செல்லாமல், அமெரிக்கா, பிரிட்டன் போன்று இந்தியாவை மாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும்.

பிரிட்டன், பிரான்ஸ், கனடா, நார்வே ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட, இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாக உள்ளது. சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகியும், நாம் 100 சதவீத கல்வியறிவு வழங்கத் தவறி விட்டோம். இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்திய போது, கல்விக்கு 1.2 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, 3.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. திட்டக் கமிஷனின் அறிக்கைப்படி, 2012-ல் கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், 10-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.112 கோடி ஒதுக்கிய தமிழக அரசு 11 ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் இரு மடங்காக உயர்த்தி ரூ.242 கோடி ஒதுக்கியுள்ளது.

வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்துக்கு மின்சாரம், துறைமுகம், விமான நிலையம், கிராமப்புற குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க பொறியாளர்களின் தேவை அவசியம். எனவே, இந்தியாவிலேயே வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்றார் டி.ஆர். பாலு. நிகழ்ச்சியில், 560 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் டி.ஆர்.பாலு.

கல்லூரிகளின் தலைவர் கே.வி.தங்கபாலு, பொன்னியம்மன் கல்வி அறக்கட்டளை தாளாளர் ஜெயந்தி தங்கபாலு, மற்றொரு தலைவர் கார்த்திக் தங்கபாலு, எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, முதல்வர்கள் கே.அப்ரானந்தம், கே.ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமணி


சிவகங்கை, பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்

March 20th, 2008 பகுப்புகள்: கல்வி, சுகாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சிவகங்கை, பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்

சிவகங்கை, பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மேலும் கூறியிருப்பதாவது : 10 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஸ்கேனிங் வசதி. அரசு மருத்துவமனைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி. காவல்துறை, தீயணைப்பு படை பணிகள் ஒருங்கிணைக்கப்படும். ரூ.221 கோடி செலவில் 227 அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். எய்ட்ஸ் நோயால் பெற்‌றோரை இழந்த குழந்தைகளுக்காக ரூ.5 கோடியில் அரசு சார்ந்த அறக்கட்டளை அமைக்க திட்டம்.


மாணவியிடம் ஆசிரியர் விஷமம் - பள்ளியை சூறையாடிய பெற்றோர்கள்

March 20th, 2008 பகுப்புகள்: கலவரம், கல்வி, கிளர்ச்சி, சமூகம், சர்ச்சை, போராட்டம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை ஆதம்பாக்கத்தில் 8வது வகுப்பு மாணவிக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரின் செயலால் கொதிப்படைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதம்பாக்கத்தில் மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு ஆங்கிலம் மற்றும் யோகா ஆசிரியராக மரிய ஜோசப் மைக்கேல் என்பவர் பணியாற்றுகிறார். இவர் 8வது வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் கடந்த 3 மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். அவரிடம் சிக்கி அந்த பெரும் அவதிப்பட்டு வந்தார். இதை வெளியே சொல்லக் கூடாது, வெளியே சொன்னால் இறுதித் தேர்வில் பெயில் ஆக்கி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார் மைக்கேல்.

இந்த நிலையில் இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த மாணவி தனது தாயார் மும்தாஜிடம் ஆசிரியரின் செயலைக் கூறவே அவர் அதிர்ச்சி அடைந்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜிடம் புகார் கூறினார். ஆனால் தலைமை ஆசிரியர் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து கொதிப்படைந்த மும்தாஜ், தவ்ஹீத் ஜமாத் அமைப்பிடம் கூறவே அந்த அமைப்பினரும், பொதுமக்களும்……….

http://thatstamil.oneindia.in/news/2008/03/20/tn-parents-go-on-rampage-as-teacher-molest-girl.html


லண்டனில் சர்தாரி முடித்த பட்டப்படிப்பு : எங்கு தேடியும் கல்லூரியை காணோம்

March 19th, 2008 பகுப்புகள்: அரசியல், கல்வி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | 2 மறுமொழிகள் » |

லண்டனில் சர்தாரி முடித்த பட்டப்படிப்பு : எங்கு தேடியும் கல்லுõரியை காணோம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தேர்தலில், போட்டியிட குறைந்த பட்சம் இளநிலை பட்டப் படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண் டும். அந்நாட்டு, பிரதமராகப் போகும் சர்தாரி, லண்டனில் உள்ள “பெடின்டன்’ வர்த்தகவியல் கல்லுõரியில், பி.எட்., பட்டம் பெற்றிருப்பதாக கூறியுள்ளார். ஆனால், அப்படி ஒரு கல்வி நிறுவனமே இல்லை என்பது தான் சுவாரஸ்யம்.

பாகிஸ்தானில், 2002ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்ட போது, போட்டியிடுவதற்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியாக, இளநிலை பட்டப்படிப்பை நிர்ணயித்து, அதிபர் முஷாரப், புதிய சட்டம் கொண்டு வந்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், மறைந்த பெனசிர் புட்டோவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, பிரிட்டனுக்கு சென்றார் ஆசிப் அலி சர்தாரி. 1970ம் ஆண்டுகளில், “லண்டன் ஸ்கூல் ஆப் பிசினஸ் ஸ்டடீஸ்’ என்ற கல்லுõரியில் இளநிலை பட்டப்படிப்பு பாடப்பிரிவில் சேர்ந்தார். ஆனால், அந்த படிப்பை முழுமை செய்யவில்லை என்று கூறப் படுகிறது. தனது சுயசரிதை புத்தகத்தில், “லண்டன் பெனிட்டன் ஸ்கூல்’ என்ற வர்த்தகவியல் கல்லுõரியில் படித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், லண்டனில் இந்த பெயரில் கல்வி நிறுவனம் ஒன்று, இருந்ததாகவோ, இருப்பதாகவோ ஆதாரம் இல்லை.

http://www.dinamalar.com/2008MAR20/world2.asp