ஊழல் | சற்றுமுன்...




சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அரசியல், இந்தியா, ஊழல், கலை-இலக்கியம், கிளர்ச்சி, சமூகம், தகவல், தமிழ், போராட்டம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | 6 மறுமொழிகள் » |

சாகித்திய அகாதமியில் புதுச்சேரிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று (08-06-2008) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

சாகித்திய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மகரந்தன, தமிழக அரசின் பிரதிநிதியாக இராம.குருநாதன், பல்கலைக்கழக பிரதிநிதியாக இரா.மோகன் மற்றும் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாக சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராக சிற்பி பாலசுப்ரமணியத்தை மற்ற மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்தனர். மேலே உள்ள நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மேலும் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படியில் புதுச்சேரி மகரந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மூவர் பெயரை ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம் அளித்துள்ளார். ஆனால், இவர் பரிந்துரை செய்த ஒருவரையும் நியமிக்காமல் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய ஒருவரை சிற்பி நியமித்துள்ளார். பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசனையின் அடிப்படையிலோ அவர் தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது புதுச்சேரி இலக்கிய வட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பணத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் தமது உறுப்பினர்களுக்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் போது, பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க இயலும் என்று இந்த தமிழ் அமைப்புகள் கோருகின்றன.

மேலும் புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒன்பது திட்டமங்களை மகரந்தன் அளித்திருந்தார் அதில் அத்தனையும் அதன் ஒருங்கிணைப்பாளர் நிராகரித்துள்ளார். புதுச்சேரியோ அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் எதிலும் நிகழ்ச்சி எதற்கும் இதன் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு ஏன் புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி என்று புதுவையைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுபபினர். சென்ற பத்து ஆண்டுகளாக புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன.

அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும். புதிதாக புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கோரினர்.

புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் திராவிடர்க் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி பூர்வ குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் தேசிய இயக்கம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், சமூக நீதி போராட்டக் குழு இராவணன் பகுத்தறிவு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை உள்ளிட்ட 27 அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் “சாகித்திய அகாதமியின்” நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளாமல் புதுச்சேரியைத் தொடர்ந்துப் புறக்கணிக்குமானால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் தெரிவித்தார்.


உறவினருக்கு பரிந்துரை: அமைச்சர் பூங்கோதை ராஜினாமா

May 14th, 2008 பகுப்புகள்: ஊழல், சட்டம் - நீதி, தமிழக அரசியல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றுவதற்காக ஏடிஜிபியிடம் பரிந்துரை செய்த விவகாரத்தில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

DMK Minister - Resignation for Corruption: Phone tapping by Subramania Swamyதமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் துணை இன்ஜினியர் ஜவஹர் என்பவர் சமீபத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் அமைச்சர் பூங்கோதையின் உறவினர் ஆவார். ஜவஹரை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, தமிழக ஏடிஜிபி உபாத்யாயாவை அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடியை, ஜனதா தளம் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆதாரத்துடன் வெளியிட்டார். இதுகுறித்து கவர்னரிடமும் அவர் புகார் செய்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் பேரவையில் இன்று எழுப்பிய பிரச்சனைக்கு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போதைய விஞ்ஞான யுகத்தில் ஒருவர் பேசுவதை மற்றொருவர் பதிவு செய்வது எளிதானது. எனினும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியுடன் பேசியதாக செய்தி வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அமைச்சர் என்பது வேதனையை தருகிறது.

இதற்கு பொறுப்பேற்று தனது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் பூங்கோதை அனுப்பி வைத்துள்ளார். உறவினரை காப்பாற்ற முயற்சிக்கும் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று. தனது தவற்றை உணர்ந்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து வேறொரு விசாரணைக் குழு தேவையா? அல்லது தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்கும் குழுவே போதுமா? என்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படுகிறது.

லஞ்சம் வாங்குவோருக்கு ஆதரவாக செயல்படுவது குற்றம் ஆகும். நிச்சயம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

நன்றி: எம்.எஸ்.என் & யாஹு

மேலும் விவரங்களுக்கு: Tamil Nadu minister quits after expose - National News – News – MSN India - News


புதுச்சேரி அமைச்சர் வல்சராஜ் பதவி விலக கோரி சட்டசபை முற்றுகை - 500 பேர் கைது!

March 13th, 2008 பகுப்புகள்: அரசியல், அரசியல், இந்தியா, ஊழல், கைது, சட்டமன்றம், சுகாதாரம், போராட்டம் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

demo-against-valsarajjpg.jpg

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி 13-03-2008 காலை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், மாகேயில் கூட்டுறவுத் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கு நிலம் வாங்கியதில் நடந்த ஊழல், முறைகேடுகள் தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் வழக்குப் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர் இ.வல்சராஜை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், ஜனநாயக முன்னேற்றக் கழக அமைப்பாளர் பா.அழகானந்தம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, தமிழர் திராவிடர் கழகத் தலைவர் மு.அ.குப்புசாமி உள்ளிட்ட கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துக் கொண்ட 150 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.


ஜார்ஜ் பெர்ணான்டஸை சிபிஐ விசாரிக்கும்

February 28th, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, ஊழல், சட்டம் - நீதி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

பாரக் ஏவுகணை வாங்கியது தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதை சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக கடற்படை முன்னாள் தலைமை தளபதி சுஷில் குமாரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. இவர்கள் இருவர் பெயரும் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கருத்தை நிராகரித்துவிட்டு இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து பாரக் ஏவுகணையை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது ஜார்ஜ் பெர்ணான்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அப்போது இந்த ஏவுகணை வாங்கப்பட்டது.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு: NDTV.com: CBI to summon George Fernandes in Barak missile case


உலக செய்திகள் - பெப். 27

February 28th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், ஆசியா, உலகம், ஊழல், குற்றம், குழந்தைகள், சட்டம் - நீதி, சமூகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

1. Israel Kills 18 Palestinians in Gaza | World news | - காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்ககளினால் பதினெட்டு பாலஸ்தீனியர்கள் மரணமடைந்தார்கள். ஹமாஸ் ஏவுகணையினால் இஸ்ரேலியர் ஒருவர் இறந்ததற்கு பதிலடியாக இந்த வான்வழி முற்றுகை ஆரம்பித்துள்ளது. (மேலும்)

2. Pecos DA criticized in youth jail sex scandal seeking re-election | Dallas Morning News: டெக்சாஸ் மாகாண சிறையில் சிறார்களை வன்கொடுமைக்கு உள்ளாகியதாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறு நடப்பதாக எழுந்த கோரிக்கைகளை சிறை நிர்வாகம் நிராகரித்தது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

3. The Associated Press: Ashcroft to Testify on Monitor Contracts: தன்னுடைய நிறுவனத்துக்கு கிடைத்திருக்கும் 52 மில்லியன் டாலர் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் முன் வாக்குமூலம் கொடுக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜான் ஆஷ்க்ராஃப்ட் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஏலத்திற்கே செல்லாத இந்த ஒப்பந்தம், நியூ ஜெர்சி மாகாணத்தின் தலைமை வழக்கறிஞர் கிறிஸ்டோபர் கிறிஸ்ட்யினால் (Christopher Christie) ஜான் ஆஷ்க்ராப்டிற்கு கிடைத்துள்ளது. ஆஷ்க்ராஃப்டின் கீழ் கிறிஸ்டி பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்:

நன்றி: Democracy Now! | Headlines for February 27, 2008


ஊழல் செய்த மருதமுத்து, கூட்டாளிகள் பதவியில் நீடிக்கக் கூடாது * பல்கலை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்

February 16th, 2008 பகுப்புகள்: ஊழல், கல்வி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஊழல் செய்த மருதமுத்து, கூட்டாளிகள் பதவியில் நீடிக்கக் கூடாது * பல்கலை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்

 

மதுரை: மதுரை காமராஜர் பல்கலையில் ஊழல் செய்த துணைவேந்தர் மருதமுத்து, அவருக்கு துணைபோன பேராசிரியர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என மதுரை காமராஜர் பல்கலை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் உமாபதி, செயலர் செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த 2005ல் துணைவேந்தராக பொறுப்பேற்ற மருதமுத்து தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு முறைகேடுகள், புரியத் துவங்கினார். இப்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பல்கலை வளாகத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். துணைவேந்தர் மருதமுத்து, அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்களையும் கட்டாயம் விசாரிக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் அவர்களுடைய வங்கிக் கணக்குகள், வாங்கிக் குவித்த அசையா சொத்துக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

http://www.dinamalar.com/2008FEB16/general_tn8.asp


பிரான்ஸ் வங்கியில் பெரும் மோசடி

January 24th, 2008 பகுப்புகள்: ஊழல், ஐரோப்பா, பங்குச்சந்தை, பொருளாதாரம், வணிகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

பிரான்சின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான, சொசைட்டி ஜெனரால்,அதன் வர்த்தகர் ஒருவர் செய்த ஒரு பெரும் மோசடியின் விளைவாக ஏழு பில்லியன் டாலர்களுக்கும் மேலான அளவு தனக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறது.

இந்த வங்கி இந்த வர்த்தகரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது மேலும் அவரது பல நிர்வாகிகளை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது. சுமார் முப்பது வயதுக்கு மேல் இருக்கும் இவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை.

இந்த நபர் தனியாளாக செயல்பட்டார் என்றும் மிகவும் அசாதராணமான நுட்பமான வழிகளைக் கையாண்டு தனது தடங்களை மறைத்தார் என்றும் வங்கியின் தலைவரான டேனியல் பூட்டன் கூறினார். சொசைட்டி ஜெனராலின் பங்குகளில் வர்த்தம் பிரெஞ்சு பங்குச்சந்தையில் இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. மத்திய வங்கி ஒரு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Société Générale's Fraud: What Now?: “After a rogue trader cost the French bank $7.1 billion, many are left to wonder about the lucrative but risky equity-derivatives business”

2. Société Générale | Socked, not gently | Economist.com

3. The biggest rogue traders in history | Business | guardian.co.uk


உம்மன் சாண்டிக்கு நஷ்ட ஈடு 1,10,000 ரூபாய்

December 29th, 2007 பகுப்புகள்: அரசியல், இந்தியா, ஊழல், தீர்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Imagesகேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ தினசரியான ‘தேசாபிமானி’ இதழில் பதிப்பாளரான கட்சியின் செயலர் பினராயி விஜயன், அச்சிடுபவரான பி.கருணாகரன் மற்றும் தேசாபிமானியின் முன்னாள் ஆசிரியரான முதல்வர் அச்சுதானந்தன் ஆகியோர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

உம்மன் சாண்டி அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த நேரம். தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு வரிவிலக்கு அளித்ததன்மூலம் கேரள அரசுக்கு 51.8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், இந்த வரிவிலக்கு அளித்ததில் உம்மன்சாண்டிக்கு ஒரு பெரிய தொகை கைமாறி இருப்பதாகவும் 2001 டிசம்பர் 30 ஆம் தேதி கோழிப் பண்ணை உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டி இருப்பதாக ‘தேசாபிமானி’ தினசரியில் வெளியிட்ட செய்திதான் பிரச்சினைக்குக் காரணம்.

மான நஷ்ட வழக்குத் தொடர்ந்து விட்டார் உம்மன் சாண்டி. அதற்குப் பிறகு உம்மன் சாண்டியே முதல்வராகி, இப்போது அச்சுதானந்தன் முதல்வராகிவிட்டார்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு: Chandy wins defamation case - Newindpress.com


சீனாவில் ஊழல் பற்றி புகார் செய்வதற்கான இணையத் தளம்

December 19th, 2007 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், ஊழல், சட்டம் - நீதி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

சீனாவில் நிலவும் பரந்துபட்ட ஊழல் குறித்து அந்த இணையத் தளம் தாங்க முடியாத அளவுக்கு ஏராளமான புகார்கள் வந்து குவிந்ததால் அது செயலிழந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் நிலவும் ஊழல் குறித்து இணையத் தளம் மூலமாக பொதுமக்கள் புகார் செய்வதற்கு வசதியாக, நேற்று செவ்வாய்க்கிழமை துவங்கப்பட்ட இணையத் தளம் சில மணிநேரங்களிலேயே செயலிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இணையத் தளம் தற்போது மீண்டும் செயல்படத்துவங்கியுள்ளது. ஊழல் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை திரட்டுவதற்காகவே இந்த இணையத் தளம் துவங்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு குறிப்பிட்ட புகார் குறித்தும் புலனாய்வு செய்வதற்காக அல்ல.

இந்த இணையத் தளத்தின் பயன் குறித்து, பலர் சந்தேகத்தை வெளியிட்டிருக்கின்றனர். அதேசமயம், இந்த இணையத் தளத்திற்கு பயனீட்டாளர்கள் மத்தியில் காணப்பட்ட வரவேற்பு என்பது, ஊழல் குறித்து பொதுமக்கள் மத்தியில் காணப்படும் வெறுப்பை காட்டுவதாக, சீனாவின் சின்சுவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Anti-graft Web site swamped in China - International Herald Tribune

2. Chinese website crashes after it invites readers to report corruption - On Deadline - USATODAY.com


கனடாவின் முன்னாள் பிரதம மந்திரி ‘தவறிழைத்ததாக’ ஒப்புதல்

December 18th, 2007 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், ஊழல், சட்டம் - நீதி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஆயுத-பேர குழுக்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டதாக கனடாவின் முன்னாள் பிரதம மந்திரி பிரையன் முல்ரோனி (Brian Mulroney) அந்நாட்டின் பாராளுமன்ற குழு முன் ஒ