ஆன்மீகம் | சற்றுமுன்...




கிறிஸ்தவ மதத்துக்கு சீனா வழி விட வேண்டும்: போப் வேண்டுகோள்

August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, ஆன்மீகம், சமூகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கிறிஸ்தவ மதத்துக்கு சீனா வழி விட வேண்டும்: போப் வேண்டுகோள்

ரோம், ஆக. 6: கிறிஸ்தவ மதம் சீனாவில் பரவுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டை போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருப்பதால், அங்குள்ள கத்தோலிக்கர்கள் வாடிகனுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என 1951-லேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை மீறுபவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவதும் தண்டிக்கப்படுவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நிழ்ச்சி ஒன்றில் பேசிய போப்பாண்டவர், ஒரு பெரிய நாடு என்ற முறையில், ஏசு கிறிஸ்துவின் போதனைகள் பரவ சீனா அனுமதிக்க வேண்டும் என்றார். சீனாவுடன் உறவை மேம்படுத்துவது தமது இலக்குகளுள் முக்கியமானது என்றார் போப்பாண்டவர்.


ஐயப்பன் கோயில் ஊழியர்கள் உள்ளாடை அணிய இனி தடையில்லை

May 25th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சமூகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் ஊழியர்கள், உள்ளாடை அணிவதற்கு இருந்து வந்த தடை, மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த ஆலயத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அவர்கள் செலுத்தும் காணிக்கைகள் அதற்கென உள்ள தனி அறையில் கொட்டப்பட்டு கணக்கிடப்படும். காணிக்கைகளைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டு வந்த திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள், காணிக்கைகளை உள்ளாடைக்குள் மறைத்து எடுத்துச் செல்வதாகக் கூறி, அந்த ஊழியர்கள் பணிக்கு வரும்போது, உள்ளாடை அணிய தேவஸ்வம் போர்டு தடை விதித்தது. பாரம்பரியமான வேட்டி மட்டுமே அணிய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, மாநில மனித உரிமை ஆணையத்திடம் ஊழியர்கள் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் உள்ளாடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மனித உரிமை ஆணையம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம், சுமார் 250 ஊழியர்களுக்கு உள்ளாட்டை அணிவதற்கான உரிமை கிடைத்திருக்கிறது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | South Asia | Kerala temple underwear ruling

2. The Telegraph - Calcutta (Kolkata) | Nation | Inner nirvana at temple

3. Shrine workers may keep their underwear on | Oddly Enough | Reuters


தசாவதாரம்: தடை கோரி வழக்கு

May 10th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, திரைப்படம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 2 மறுமொழிகள் » |

பிரபல தமிழ் நடிகர் கமலஹாசன் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘தசாவதாரம்’ என்கிற தமிழ் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்கும்படி, உலகளாவிய ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சங்கம் என்கிற அமைப்பை சேர்ந்த கோவிந்த ராமானுஜதாசா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

திரைப்படத்தின் விளம்பரங்களில் காட்டப்படும் காட்சிகள், வைஷ்ணவர்கள் பெரிதும் மதித்துப் போற்றும் ராமானுஜரையும் பெருமாளையும் இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், அவர் தமது மனுவில் கூறியிருக்கிறார். அவரது மனுவை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

கோவிந்த ராமானுஜதாசா அவர்களின் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்கள், தமது திரைப்படத்தில் ராமானுஜரையோ, இந்துமதத்தையோ இழிவுபடுத்தும் காட்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று கூறினார்.

தமது திரைப்படத்தை அதன் முழுமையான வடிவத்தில் பார்த்தால் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாது என்றும் கூறிய அவர், இந்து மதம் உட்பட எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தமக்கோ தமது திரைப்படத்திற்கோ இல்லை என்றும் கூறினார்.

நன்றி: பிபிசி


சிறிலங்காவில் அமைதி ஏற்பட உதவ விரும்புகிறேன்:ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

April 18th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், ஆளுமை, ஈழம் - இலங்கை | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

Peace and reconcilation conference osloசிறிலங்கா யுத்தபூமியில் அமைதி நிலவிட தாம் உறுதுணையாக இருக்க விரும்புவதாக ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார். இருதரப்பினரின் நம்பிக்கையையும் பெற்றிருப்பதாகக் கூறும் குரு தமக்கு யாரும் அழைப்பு அனுப்ப வேண்டியதில்லை என்று கூறினார். வீடு பற்றி எரியும்போது யாராவது அழைப்பிற்கு காத்திருப்பார்களா என்று நார்வேயிலிருந்து IANSக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கள் ஆஸ்லோவில் கடந்த வாரம் அவரது வாழும் கலை சார்பில் நடந்த அமைதி மாநாட்டின் முடிவுறையில் கூறினார்.

இந்த அமைதி மாநாட்டில் சிறிலங்கா அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், புத்த பிக்குகள்,தமிழகத்திலிருந்து மதிமுக தலைவர் வைகோ, நார்வேயின் சிறிலங்கா சிறப்பு தூதர் யொன் ஹான்சென் பௌர் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநாடு சூடாக இருந்தபோதும் ஒருவரும் வெளிநடப்பு செய்யவில்லை, அனைவருக்கும் அமைதிக்கான தீர்வு காண்பதில் முனைப்பு இருந்தது என்கிறார் ரவிசங்கர்.

அரசியல் தலைவர்களால் தீர்வு காணமுடியாத பிரச்சினைக்கு ஆன்மீகத் தலைவரால் முடியுமா என்ற கேள்விக்கு வல்லரசுகளால் மனிதர்களின் இதயங்களையும் மனதையும் இணைக்க முடியாது; மகாத்மா காந்தி தனது ஆன்மீக பலத்தால் சுதந்திர போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். கொசொவோ,அயர்லாந்து,பாகு இங்கெல்லாம் அமைதி திரும்பியிருக்கும்போது சிறிலங்கா பிரச்சினையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணுதல் முடியாத செயலல்ல எனக் கூறினார்.

I want to bring peace to Sri Lanka: Sri Sri Ravi Shankar


ஹஜ் : 2008 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து !

April 18th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், இந்தியா, சட்டம் - நீதி, சவூதி, நாடாளுமன்றம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

வரும் 2008ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர். ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம்விளக்கினார்.

இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் ‘பச்சை’ வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் வெள்ளை’ வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி ‘அசிசியா’ பகுதி என்றும் குறிப்பிடப்படும். இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும்.

கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது சௌதிக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், சார்தூதர் டாக்டர்.அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.வரும் 2008ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர். ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம்விளக்கினார்.

இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் ‘பச்சை’ வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் வெள்ளை’ வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி ‘அசிசியா’ பகுதி என்றும் குறிப்பிடப்படும். இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும்.

கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது சௌதிக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், சார்தூதர் டாக்டர்.அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.


அறிவியல் செய்திகள்

April 17th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், இந்தியா, உடல்நலம், குழந்தைகள், சமூகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இரட்டை முகங்களுடன் இந்தியாவில் பிறந்த குழந்தை:
BBC

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | South Asia | 'Miracle baby' is feted in India

2. ‘கெட்ட பழக்க’ங்களும் அல்செய்மரும்: அதிகமாக மது அருந்துபவர்களுக்கும் புகை பிடிப்பவர்களுக்கும் அல்செய்மர் நோய் ஏழு வருடம் சீக்கிரமாகவே வந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

நாள்தோறும் இரு கோப்பைக்கு மேல் மது உட்கொண்டு அதிகமாக குடிப்பவர்களும், தினந்தோறும் இருபது வெண்சுருட்டு (சிகரெட்) பிடிப்பவர்களும், தவிர்க்கக்கூடிய அபாயமான காரணிகளைக் கொண்டிருப்பவர்கள் என்று ஆய்வு முடிவு அறிவித்திருக்கின்றது.

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Health | 'Bad habits' link to Alzheimer's

3. உயிர்ச்சத்து (விடமின்) மாத்திரை உட்கொண்டால் ஆயுள் குறையலாம்: சிற்சில உயிர்ச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதால் வாழ்நாள் குறைந்து சீக்கிரமே மரணம் வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இயற்கையாக உணவின் மூலமாக வராத விட்டமின் ஏ மற்றும் ஈ மாத்திரைகளினால் பலன் எதுவும் இல்லை என்பதுடன், இறப்பையும் வேகப்படுத்துகின்றன என்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | Health | Vitamins 'may shorten your life'


திருப்பதி-திருமலை கோவிலில் கூட்ட நெரிசலில் நடிகை ஸ்ரேயாவுக்கு இடைஞ்சல் தந்தவருக்கு பதிலடி

April 8th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், ஆளுமை, சமூகம், பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

நடிகை ஸ்ரேயா, உகாதி தினத்தை முன்னிட்டு திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பினார். அதிகாலை 2.30 மணிக்கு ஏழுமலையான் கோயிலுக்கு வந்த ஸ்ரேயா, சுப்ரபாத சேவா தரிசனம் செய்தார். பின்னர் 3.45 மணிக்கு கோயிலில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது ஒருவர் ஷ்ரேயாவை சுற்றிவளைத்து திடீரென கட்டியணைக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரேயா, அந்த ஆசாமியை ஓங்கி அறைந்தார். அதிர்ச்சி அடைந்த ஆசாமி, உடனடியாக அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் ஸ்ரேயா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அறை வாங்கிய நபர், அருகில் உள்ள மடத்தில் வேலை பார்த்துவரும் துப்புரவு தொழிலாளி ஹரி என விசாரணையில் தெரியவந்தது.

“பொது இடங்களில் பெண்களுக்கு நிகழும் இது போன்ற சங்கடங்களை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்ற ஸ்ரேயா, ஹரி மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை.

மேலும் விவரங்களுக்கு:

1. Actress Shreya molested at Tirupati - Movies - Broadband - Indiatimes.com

2. Tamil star Shreya slaps man for 'misbehaviour'

3. NDTV.com: Actress allegedly molested in temple


திருச்செந்தூர் கோயில் உண்டியலில் ரூ.29 லட்சம் வசூல்

March 26th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், பொருளாதாரம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!திருச்செந்தூர் சுப்பிரமணியம் சுவாமி கோயில் உண்டியலில் ஒரு மாதத்தில் ரூ.29 லட்சம் வசூலாகியுள்ளது. இது தவிர அன்னதான உண்டியலில் ரூ.42,646 வசூலானது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை தங்கம், வெள்ளி, பணமாக செலுத்துவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் உண்டியல் பணம் எண்ணப்படும்.

கடைசியாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதையடுத்து கோயில் ஆணையர் பாஸ்கரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர் பள்ளி மாணவர்கள் இன்று மீண்டும் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், 603 கிராம் தங்கமும், 3,949 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது. பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தட்ஸ்தமிழ் - Thiruchendhur temple hundi collection Rs.29 lakh

முந்தைய சற்றுமுன்: பழனி கோயிலில் 21 நாளில் ரூ. 44 லட்சம் உண்டியல் வசூல்


மதபோதகர்: ‘ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சிப் பாட்டுப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த பெண் சாத்தான்’

March 16th, 2008 பகுப்புகள்: ஆசியா, ஆன்மீகம், இசை, சமூகம், தொலைக்காட்சி, பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் ஒரு தொலைக்காட்சி பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் மூன்று பேர் கொண்ட இறுதிச் சுற்றுக்கு முதல்முறையாகத் தெரிவான பெண்ணொருவரை நேயர்கள் வாக்களித்து போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளனர். போட்டியில் இறுதிச் சுற்றுவரை வந்ததே தனக்குப் பெரிய கௌரவம் என்று கூறிய லிமா சஹார் என்ற அந்தப் பாடகி, தனக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஆனால் இந்தப் ஆப்கன் ஸ்டார் என்ற இந்தப் போட்டியில் பங்கேற்றதற்காக பழமைவாதிகள் அவரை விமர்சித்துள்ளனர். மௌலவி அப்துல் ரயூஃப் என்ற ஒரு மதபோதகர், அப்பாடகியை ஆப்கானிஸ்தானின் சாத்தான் என்று குறிப்பிட்டதோடு, சக ஆப்கானியர்களுக்கு அவர் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Woman vies to be top star at Afghani American Idol

2. Stop the music: conservative critics condemn woman Idol finalist - World

3. The Associated Press: Afghan Woman Voted Off 'Idol' Show


மறுபடியும் பரிகார பூஜை - சிதம்பரம் தீட்சிதர்கள்

March 6th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், கைது, சட்டம் - நீதி, சமூகம், தமிழ், போராட்டம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் பாடிச் சென்ற பின்னர், கோவிலைக் கழுவி பரிகார பூஜை செய்துள்ளனர் நடராஜர் கோவில் தீட்சிதர்கள். இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பலத்தில் (கோவில் கருவறை) தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்த் திருமறைகளை பாட எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்காத கோவில் தீட்சிதர்கள், தேவாரம் பாட ஓதுவார்களை அடித்து விரட்டினர். தடுக்க வந்த போலீஸாரையும் தாக்கினர்.

இதுதொடர்பாக 11 தீட்சிதர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தேவாரம் உள்ளிட்டவற்றை பாடுவது யார் தடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரித்தது.

இந்த நிலையில் நேற்று விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 25 பேர் தாங்கள் தேவாரம், திருவாசகம் பாடவிருப்பதாக முறைப்படி அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கால்துறையிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களில் ஐந்து பேர் மட்டும் திருச்சிற்றம்பலத்திற்குள் சென்று பாடலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளே சென்ற 25 பேரும் திருச்சிற்றம்பலத்திற்குள் செல்ல முயன்றனர்.

ஆனால் அனுமதிக்கப்பட்ட ஸ்டாலின், எழுமலை, ரவி, முருகன், சண்முகம் ஆகியோர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஐந்து பேரும் சட்டைகளை கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.

அவர்களுடன் மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார், டி.எஸ்.பி. செந்தில்வேலன் உள்ளிட்டோரும் சட்டைகளைக் கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.

உள்ளே சென்ற 5 பேரும், தேவாரத்திலிருந்து ஒரு பாடலையும், திருவாசகத்திலிருந்து ஒரு பாடலையும் மொத்தம் 20 நிமிடங்கள் பாடினர். அதன் பின்னர் அவர்களுக்கு தீபாரதானை காட்டி, மாலை அணிவித்து, பட்டாடை அணிவித்து தீட்சிதர்கள் மரியாதை செய்தனர்.

ஆனால் அதன் பிறகுதான் குழப்பம் நடந்துள்ளது. மாலை, மரியாதையுடன் வரவேற்று ஓதுவார்களை அனுப்பி வைத்த தீட்சிதர்கள், அதன் பிறகு திருச்சிற்றம்பலத்தை கழுவி, பரிகார பூஜை நடத்தி தீட்டுக் கழித்துள்ளனராம்.

இதுகுறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் என்பவர் கூறுகையில், ஓதுவார்களும் சிவனடியார்களும் தேவாரம் பாடி விட்டு போன பின்னர் திருச்சிற்றம்பலத்தை நன்றாக குழு, தீட்டுக் கழித்து, பரிகார பூஜை செய்துள்ளனர் தீட்சிதர்கள். இது தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் பெரும் இழுக்கு விளைவிக்கும் செயலாகும். இந்த செயலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முழுவதும் வாசிக்க: தட்ஸ்தமிழ்

தொடர்புள்ள செய்தி: Regional News Headlines in Tamil - Yahoo!: “சிதம்பரம் கோவிலில் தேவாரம் : கருணாநிதிக்கு பாராட்டு விழா”


தீக்ஷிதர்களுக்கு அரசு எச்சரிக்கை

March 4th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், கிளர்ச்சி, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் திருவாசகம் பாட முற்படுவோரை தடுத்தால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை 10 தீக்சிதர்களும், போராட்டம் செய்தவர்கள் 34பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Govt. warns action against Dikshitars of Chidambaram temple - The Hindu


சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம்: அரசாணை பிறப்பிப்பு

March 2nd, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, சமூகம், தீர்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைச் செயலர் கோ.சந்தானம் பிப்.29-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார்.

திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகசாமி கடந்த 8-5-2005-ல் தமிழில் தேவாரம் பாடச் சென்றபோது அவர் தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். பின்னர் தீட்சிதர்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை இணை ஆணையர் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார். பின்னர் சிவனடியார் ஆறுமுகசாமி அறநிலையத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார்.

அதன்மீது விசாரணை முடிவுற்று திருச்சிற்றம்பல மேடையில் நின்று பூஜை காலங்களை தவிர பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடலாம் என 30-4-2007ல் இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி தீர்ப்பு அளித்தார். அத்தீர்ப்பை எதிர்த்து பாட அனுமதியளிக்கக் கூடாது என ஆலய பொதுதீட்சிதர்கள் அறநிலையத்துறைச் செயலரிடம் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில் விசாரணை முடிவுற்று அறநிலையத்துறைச் செயலர் சந்தானம் பிப்.29-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார்.

‘தீட்சிதர்கள் நடத்தும் காலபூஜையின் அங்கமாகவே தேவாரம் பாடப்பட வேண்டும். பூஜை முடிந்தவுடன் திருச்சிற்றம்பல மேடையில் நின்று பக்தர்கள் தமிழில் தேவாரம் பாடி வழிபடலாம். அவ்வாறு பாடக்கூடாது எனக் கூறுவது பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும். மேலும் சிற்றம்பலமேடையில் நின்று வழிபடுவர்களிடம் தீட்சிதர்கள் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது’ என அந்த அரசாணையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு: The Hindu News Update Service: “Tension inside Chidambaram temple”