சமூகம் | சற்றுமுன்...




தென்னாப்பிரிக்க அரசின் கணக்கைத் தணிக்கை செய்யத் தயாராகும் இந்திய தணிக்கையாளர்கள்

August 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, தகவல், தேர்வு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தென்னாப்பிரிக்க அரசின் கணக்கைத் தணிக்கை செய்யத் தயாராகும் இந்திய தணிக்கையாளர்கள்

தென்னாப்பிரிக்க அரசின் கணைக்கை தணிக்கை செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய தணிக்கையாளர்கள் தயாராகியுள்ளனர். இவர்கள் மூன்று வருடம் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிவார்கள்.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.indiaenews.com/business/20080822/140728.htm


கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

August 15th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சாதனை, பெண்கள், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ் விருது பெறுபவருக்கு ரூ. 5ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இந்த விருதினை முதல்- அமைச்சர் கருணாநிதி சுதந்திர தின விழாவின் போது வழங்குவார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.ஜோதி நிர்மலா இந்த ஆண்டுக்கான துணிவு மற்றும் சாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

ஜோதி நிர்மலா பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த காலத்தில் ஆற்றுப் பகுதிகளுக்கு சென்று துணிச்சலுடன் மணல் கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி முழுமையாக மணல் திருட்டை அடியோடு ஒழித்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு அச்சுறுத்தலுக்கு இடையேயும் துணிவோடு செயல்பட்டு மதக்கலவரம், திருட்டு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் சமூக விரோத செயல்களையும் தடுத்து நீதியை நிலைநாட்ட தீரமுடன் போராடிய அவரது மன உறுதியினைப் பாராட்டி இந்த வருடத்திற்கான 2008 கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கர்நாடகாவில் பேருந்து விபத்து: 16 மாணவர்கள் பலி

August 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், குழந்தைகள், சற்றுமுன், மரணம், விபத்து | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கர்நாடகாவில் பேருந்து விபத்து: 16 மாணவர்கள் பலி

பெங்களூர், ஆக. 14: கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து பேருந்து ஒன்று 28 மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த ஆற்றில் கவிழ்ந்தது.

அங்கு கூடியிருந்த மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கியதால் 14 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர். மற்ற மாணவர்கள் இறந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 


7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

August 10th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, கணினி, கல்வி, தகவல், தகவல் தொழில்நுட்பம், தேர்வு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை
10 கல்லூரிகளில் 9-க்கும் குறைவானவர்கள் சேர்ந்துள்ளனர்

முதலிடத்தில் எலக்ட்ரானிக் கம்ïனிகேசன்

தமிழ்நாடு முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்தவற்கு அண்ணாபல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடைபெற்றுவருகிறது. முதல் கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து 2-வது கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது. தினமும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் கவுன்சிலிங்கிற்கு வருவதில்லை.

இதுவரை மாணவர்கள் தேர்வு செய்த இடங்கள் விவரம் வருமாறு:-

எலக்ட்ரானிக் கம்ïனிகேசன் பிரிவில் 18 ஆயிரத்து 474 இடங்களில் 13 ஆயிரத்து 244 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இது 72 சதவீதம் ஆகும். இந்த பிரிவு தான் முதல் இடத்தில் உள்ளது. கம்ப்ïட்டர் சயின்ஸ் பிரிவில் 17,356 இடங்களில் 10,383 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இது 60 சதவீதம். எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பிரிவில் உள்ள 12,029 இடங்களில் 5,885 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது 49 சதவீதம். தகவல் தொழில்நுட்பம் பிரிவில் உள்ள 13,627 இடங்களில் 6,848 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்னன. இது 50 சதவீதம். 8,341 இடங்கள் கொண்ட மெக்கானிக்கல் பிரிவில் 6,099 பேர் தேர்வு செய்துள்ளனர்.

சிவில்

3,320 இடங்கள் உள்ள சிவில் பிரிவில் 2,586 இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். இது 78 சதவீதம். 402 இடங்கள் கொண்ட ஆட்டோமொபைல் பிரிவில் 339 இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். இது 84 சதவீதம். 1406 பேர் கொண்ட ஏரோனாட்டிக்கல் பிரிவை 879 பேர் தேர்ந்து எடுத்து உள்ளனர். இது 62 சதவீதம். பயோடெக்னாலஜி பிரிவில் 1,193 இடங்களில் 658 மாணவர்க்ள தேர்வு செய்துள்ளனர். இது 55 சதவீதம்.

மற்ற பிரிவுகளில் உள்ள 3554 இடங்களில் 2,601 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 81 ஆயிரத்து 373 இடங்களில் 50 ஆயிரத்து 715 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவர்கூட சேராத கல்லூரிகள்

இதுவரை 7 என்ஜினீயரிங் கல்லூரிகளில் எந்த பிரிவிலும் ஒரு மாணவர்கூட சேரவில்லை. அந்த கல்லூரிகள் அனைத்தும் புதிய கல்லூரிகள் என்றும் சென்னை அருகே உள்ள கல்லூரிகள் அல்ல என்றும் தெரிய வந்துள்ளன.

மேலும் 9 மாணவர்களுக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகள் 10 உள்ளன. இவற்றில் சில சென்னையை சுற்றி உள்ளன. மற்றவை மற்ற மாவட்டங்களில் உள்ளன.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில் நல்ல கட்டமைப்பு உள்ள பல புதிய கல்லூரிகள் உள்ளன. அதை அறியாமல் மாணவர்கள் சேர தயங்குகிறார்கள். கட்டமைப்பு வசதி உள்ள புதிய கல்லூரிகளில் சேரலாம். இந்த கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டு நல்ல வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


கிறிஸ்தவ மதத்துக்கு சீனா வழி விட வேண்டும்: போப் வேண்டுகோள்

August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, ஆன்மீகம், சமூகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கிறிஸ்தவ மதத்துக்கு சீனா வழி விட வேண்டும்: போப் வேண்டுகோள்

ரோம், ஆக. 6: கிறிஸ்தவ மதம் சீனாவில் பரவுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டை போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருப்பதால், அங்குள்ள கத்தோலிக்கர்கள் வாடிகனுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என 1951-லேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை மீறுபவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவதும் தண்டிக்கப்படுவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், நிழ்ச்சி ஒன்றில் பேசிய போப்பாண்டவர், ஒரு பெரிய நாடு என்ற முறையில், ஏசு கிறிஸ்துவின் போதனைகள் பரவ சீனா அனுமதிக்க வேண்டும் என்றார். சீனாவுடன் உறவை மேம்படுத்துவது தமது இலக்குகளுள் முக்கியமானது என்றார் போப்பாண்டவர்.


பயங்கரவாதத்தை ஒழித்திட பள்ளிகளில் நீதிநெறி வகுப்புகள்

August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, சமூகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பயங்கரவாதத்தை ஒழித்திட பள்ளிகளில் நீதிநெறி வகுப்புகள்

நாட்டில் தீரிரவாதத்தை ஒழித்திட, பள்ளிகளில் “நீதி நெறி வகுப்புகளை” முறையாக நடத்த வேண்டுமென்று, மதுரை ஆதீனகர்த்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு; நாடு முழுவதும், அப்போது, `பயங்கரவாதம்’ அதிகரித்துள்ளது. திவிரவாதிகளின் தொடர்த் தாக்குதலால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து, தீவிரவாதிகள், தொடர்த் தாக்குதலை நடத்தி வருகிறர்கள். நாடு முழுவதும், பெரும் பதற்றமும், மக்கள் மத்தியில் பீதியும் ஏற்பட்டுல்ளது.

இதுதவிர, தொடர்ந்து உயர்ந்து வரும் `விலைவாசி’ ஏழைகளையும், நடுத்தர மக்களையும் பெருமளவு, பாதித்துள்ளது. அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போய் இருக்கிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சின்ன சின்ன பிரச்சினைகளை கூட பெரிய அளவிலான தகராறுகள் உருவாகும் நிலை தான் இப்போது சமூகத்தில் காணப் பெறுகிறது. இது நாட்டின் அமைதிக்கு நல்லதல்ல. பொதுமக்கள் மத்தியில் ஒரு விதமான அமைதியின்மை காணப்படுகிறது. இது எதிர்கால நலனுக்கு உகந்ததல்ல.

நீண்ட தொலை நோக்கும் பார்வையோடு இது போன்ற சமூக பிரச்சினைகளை களைந்திட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். இப்போது பள்ளிகளில் குழந்தைகளுக்கு தரமான கல்வி கற்றுத் தரப்பெறுகிறது. இதனால் இன்றைய இளைஞர்கள், மாணவிகள் அறிவாளிகளாகவும், புத்திசாலிகளாகவும் உருவாகிறார்கள். ஆனால் அவர்களிடம் பண்பை வளர்க்கும் படிப்பை கற்றுத்தர போதிய வழிமுறைகள் இல்லை. இது சமூகத்தில் உரசல்களை உருவாக்கிட வழி ஏற்படுத்தி தருகிறது.

எனவே பள்ளிக் கல்வியிலிருந்தே குழந்தைகளுக்கு நீதி நெறியை முறையாக போதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக பள்ளிகளில் தனி வகுப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஞிதி நெறி முறைகளை கற்பதற்கு முறையான வழி செய்தால் பண்பான குடிமகன்களை உருவாக்க முடியும். அப்படி உருவாக்கினால் தான் எதிர்கால சமுதாயம் அமைதியாக வாழும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு மதுரை ஆதீனகர்த்தர் கூறியுள்ளார்.
 


குழந்தைகள் நல அகில இந்திய மருத்துவர்கள் மாநாடு

August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சுகாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

குழந்தைகள் நல அகில இந்திய மருத்துவர்கள் மாநாடு

குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாடு மதுரையில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

2008 ம் ஆண்டிற்கான குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாடு வருகிற 8 ம் தேதி தொடங்கி 10 ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொற்று நோய், புதிய சவால்கள், குறைந்த வாய்ப்புகள் மற்றும் டெங்கு, மலேரியா, வயிற்று போக்கு உள்ளி நோய்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. மாநாட்டையொட்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலிகளுக்கான பச்சிளங்குழந்தைகள் உயிர் காக்கும் பயிற்சி 7 ம் தேதி நடக்கிறது.

இந்த மாநாட்டில் இத்துறையில் தலைசிறந்த வல்லுனர்கள் அம்பேத்கார், ரோஹித் அகர்வால், உட்பட ஏராளமானோர் சிறப்புரையாற்றுகின்றனர். 8 ம் தேதி காலை 7 மணிக்கு குடும்ப நலத்துறை செயலாளர் மாநாட்டை துவக்கி வைக்கிறார். இதில் மாவட்ட கலெக்டர் ஜவகர், மருத்துவமனை டீன் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல பிரிவு துறை தலைவர் டாக்டர் வசந்தாகுமாரி மற்றும் மருத்துவர் மகாலிங்கம், ஒருங்கிணைப்பாளர் சண்முக சுந்தரம், அமுதா ராஜேஸ்வரி உள்ளிட்ட மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்
 


சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சற்றுமுன், தகவல், தகவல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

சென்னை, ஆக. 4 : சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சுதந்திர தினத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். கூத்தும், கும்மாளமும், பேட்டி என்ற பெயரில் நடிகர், நடிகைகள் தங்களின் சுயபுராணத்தைக் கூறுவதும் அருவருப்பாக உள்ளது.

வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை முதல் மாலை வரை சுதந்திரத்தின் அருமை, பெருமைகள், தியாகிகளின் வீர வரலாறு, காட்சிகளாக, ஆடல், பாடல்களாக, எழுச்சி உரைகளாக, கதை, கவிதை, பட்டிமன்றங்களாக ஒளிபரப்ப வேண்டும்.

இதைத்தான் மாணவர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம் என, தங்கள் கையெழுத்துடன் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 


கிராமப்புறங்களில் இருந்துதான் சிறந்த தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்

August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், கல்வி, சமூகம், தமிழ்நாடு, தேர்வு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கிராமப்புறங்களில் இருந்துதான் சிறந்த தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்

திண்டுக்கல், ஆக. 4: மிகச் சிறந்த தலைவர்களும், விஞ்ஞானிகளும் கிராமப்புறங்களில் இருந்துதான் உருவாகி இருக்கிறார்கள் என தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் தினமணி நாளிதழ் மற்றும் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற “சிகரத்தை வெல்வோம்’ நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசியதாவது:

கிராமப்புற மாணவர்கள் எதிலும் சளைத்தவர்களோ, பின்தங்கியவர்களோ அல்ல. பல முக்கியத் தலைவர்களும், அறிஞர்களும் கிராமப்புறங்களில் இருந்துதான் உருவாகி உள்ளனர்.

நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கும் சில வாய்ப்புகள் கிராமங்களில் கிடைக்காமல் போவதால், அவர்களுக்கு அது ஒரு பலவீனமாக அமைந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் சிறு நகரங்களில் தினமணி இத்தகைய வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

பிளஸ் 2 தேர்வுகளை எழுதிய மாணவர்களிடம் மட்டும்தான் எத்தனை மதிப்பெண்கள் என்ற கேள்வி எழுப்பப்படும். மாணவர்களின் திறமைக்கும், அறிவுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே அடிப்படையாக இல்லை என்றாலும், தற்போதைய காலக்கட்டத்தில் மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவிகளின் எதிர்கால படிப்பையும், வேலைவாய்ப்பையும் நிர்ணயிப்பதாக அமைந்து விடுகிறது. எனவேதான், மதிப்பெண்களை கூடுதலாகப் பெறுவதற்கு இந்த நிகழ்ச்சி உதவும்.

மாணவ சமுதாயம் மற்ற விஷயங்களில் வேண்டுமானால் குசேலனாக இருக்கலாம். ஆனால், படிப்பில் மட்டும் குபேரனாக இருங்கள். நீங்கள் வெற்றிபெற்று எதிர்காலத்தில் நல்ல நிலைமையை அடைய வேண்டும். அப்படி அடையும்போது, பாரதியாரின் அறிவுரையை மறந்துவிடாமல் தாய்மொழி தமிழையும், தாய்நாட்டையும் வளம்பெறச் செய்யுங்கள். உலகம் முழுவதும் தமிழரின் பெருமையை நிலைநாட்ட முன்வாருங்கள் எனக் கேட்டுக் கொண்டார் கே. வைத்தியநாதன்.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080804141246&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/5/2008&dName=No+Title&Dist=0


இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்

July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சட்டம் - நீதி, சர்ச்சை, பாக்கிஸ்தான் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம்

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா அருகே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 பேர் இன்று நுழைந்தனர். மேலும், அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று மாலை 3.30 மணியளவில் குப்வாரா அருகே அவர்கள் எல்லைக் கோட்டை தாண்டி இந்தியப் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு நௌகான் செக்டரில் உள்ள கண்காணிப்பு முகாமை இந்திய ராணுவத்தினர் காலி செய்ய வேண்டும் என்று கோரினர். மேலும், திடீரென இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 22வது ராஜ்புத் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு வீரர் உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்திய வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இந்த மோதல் சில மணிநேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பகுதிக்குள் 15 பேர் கொண்ட குழுவாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்திருப்பது, அரசியல் மற்றும் ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக் “பார்’: பொதுமக்கள் முற்றுகை

July 27th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சட்டம் - நீதி, சமூகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

24 மணி நேரம் செயல்படும் டாஸ்மாக் “பார்’: பொதுமக்கள் முற்றுகை

சென்னை, ஜூலை 26: சென்னை மேற்கு மாம்பலம் ஜெயராம் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் செயல்படும் மதுபான “பாரை’ பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

“”இங்கு டாஸ்மாக் கடையில் ஒரேயொரு பாருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால், மூன்று மதுபான பார்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதுகுறித்து குமரன் நகர் காவல்நிலையத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று பொதுமக்கள் தெரிவித்தனர். டாஸ்மாக் கடைக்கு அருகில் நர்சரி பள்ளியும் கோயிலும் உள்ளன. மேலும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாடவே அஞ்சுவதாக தெரிவித்தனர்.

சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதலே இங்குள்ள “பாரி’ல் விற்பனை தொடங்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு கூடியுள்ளனர்.

தகவல் அறிந்ததும் 134-வது வார்டு பா.ம.க. கவுன்சிலர் சத்தியமூர்த்தி அங்கு வந்தார். இதைத் தொடர்ந்து பாரிலிருந்து மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சட்டவிரோதமாக நடத்தப்படும் கூடுதல் “பார்’களை மூடவேண்டும் என்று கோரி மதுபான பாட்டில்களுடன் குமரன் நகர் காவல்நிலையத்தில் சத்தியமூர்த்தி மற்றும் பொதுமக்கள் புகார் செய்தனர்.

மதுபானத்தை விற்றதாகக் கூறப்படும் இருவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து குமரன் நகர் போலீஸôர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான “பாரி’ல் சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸôர் விசாரணை நடத்தியது குறித்து சத்தியமூர்த்தி கூறும்போது, “மதுபான “பார்’ உரிமையாளர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. சட்டவிரோதமாக நடத்தப்படும் பார்களுக்கு சீல் வைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
 
 


ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் பெண் பைலட்

July 27th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், பெண்கள், விமானம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் பெண் “பைலட்’

சென்னை, ஜூலை 26: ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் முதல் பெண் “பைலட்’ என்ற பெருமையை கேப்டன் செமலி க்ரோட்டபள்ளி பெறுகிறார்.

சென்னையிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை அவர் இயக்குகிறார். அவருடன் அன்றைய தினம் செல்லும் துணை பைலட் அம்ரித் நம்தாரி, பணிப் பெண்கள் எஸ். பானு, பி. புடியா, எஸ். திவ்யா, பினால் வலண்ட் ஆகிய அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் செமலி க்ரோட்டபள்ளி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் 2004-ம் ஆண்டு சேர்ந்தார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் மொத்தம் 76 பைலட்டுகள் உள்ளனர்; இவர்களில் 6 பேர் பெண்கள்.