கைது | சற்றுமுன்...




சென்னை : உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, குற்றம், கைது, கொலை, சட்டம் - நீதி, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

சென்னை வடபழனி அருகே உள்ள புதூர் மற்றும் ஒட்டகபாளையத்தில் பொதுமக்கள் இரவில் விடிய விடிய உருட்டு கட்டைகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர்.

சைக்கோ மனிதன் பீதியால், அவர்கள் உருட்டு கட்டைகளுடன் வலம் வருவதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாகவும் போலீஸôர் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வடபழனி, கே.கே.நகர் பகுதிகளில் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகள், குப்பை பொறுக்கும் நபர்கள் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தல், தீ வைத்து எரித்தல் என சுமார் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் வடபழனி மற்றும் கே.கே.நகர், அசோக் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதூர் மற்றும் ஒட்டகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இரவு நேரங்களில் உருட்டு கட்டைகளுடன் வலம் வருகின்றனர். அவ்வழியே செல்பவர்களும் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

காவலாளி வேடத்தில்…: காவலாளிகள் குறி வைத்து கொல்லப்பட்டு வருவதால், போலீஸôரே நேராக அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாக மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரி சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸôர் காவலாளிகளாக இரவு ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குப்பை பொறுக்கும் நபர்களாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போலவும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகப் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

அசோக்நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த நேபாள இளைஞர்கள் 3 பேரை பிடித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.


காடுவெட்டி குரு அதிகாலையில் கைது

July 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், குற்றம், கைது, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

காடுவெட்டி குரு அதிகாலையில் கைது

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்துக்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் சென்று குருவை கைது செய்தனர்.
காடுவெட்டியைச் சேர்ந்த குரு வன்னியர் சங்க மாநிலத் தலைவராக உள்ளார். கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, அதிமுக பாசறையைத் தொடங்கவுள்ளதாகக் கூறிய காடுவெட்டியைச் சேர்ந்த ஜெ. குணசேகரன் (33) என்பவரை குருவின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில், குரு உள்பட 4 பேர் மீது மீன்சுருட்டி போலீஸôர் மே 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
குரு கைது செய்யப்பட்டதையொட்டி வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.


போலி பாஸ்போர்ட்: இருவர் கைது

March 28th, 2008 பகுப்புகள்: குற்றம், கைது, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

போலி பாஸ்போர்ட்: இருவர் கைது

பாஸ்போர்ட்டில் ஆள் மாறாட்டம், புகைப்பட மாற்றம் செய்து மலேசியாவில் இருந்து சென்னை வந்த இருவரை விமான நிலைய போலீ சார் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் பாந்தையன். இவரது மகன் சந்திரசேகர் (29). மலேசியாவில் பணிபுரிந்து வந்த இவர், பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தை மாற்றி போலி யாக பாஸ்போர்ட் தயாரித்தார். சிவகங்கையைச் சேர்ந்தவர் சிலையப்பன். இவரது மகன் பாண்டிச்செல்வம்(30). இவரும் மலேசியாவில் இருந்து திரும்பு வதற்காக அடுத்தவர் பாஸ் போர்ட்டில் ஆள் மாறாட்டம் செய்து போலியாக பாஸ் போர்ட் தயாரித்தார். இந்த போலி பாஸ்போர்டு களை பயன்படுத்தி இருவரும் நேற்று காலை கோலாலம் பூரில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தனர். சோதனையில் இருவரும் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது தெரிய வந்ததால், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக் கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்தூர் அருகே தடை செய்யப் பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் கைது

March 27th, 2008 பகுப்புகள்: கைது, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்தூர் அருகே தடை செய்யப் பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் கைது

தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினைச் சேர்ந்த தலைவர் உள்பட 10 பேர் இன்று மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

புதன்கிழமை இரவு, இந்தூர் அருகே உள்ள பிதம்பூரில் வைத்து இந்த பத்து பேரும் கைது செய்யப்பட்டனர். சிறப்புப் பாதுகாப்பு படை நடத்திய சோதனையில் இவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080327021951&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=


டெல்லி துணை கமிஷனர் ராஜ்பீர் சிங் சுட்டுக்கொலை

March 25th, 2008 பகுப்புகள்: கைது, கொலை, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ராஜ்பீரைக் தாம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ள விஜய் பரத்வாஜ், தன்னிடம் பணம் கேட்டு ராஜ்பீர் மிரட்டி வந்ததாகவும், பணம் தர மறுத்தால் கொன்றுவிடுவதாக கூறி வந்ததால், அவரை தாம் சுட்டுக்கொன்றதாகவும் கூறினார்.

டெல்லி போலீஸ் துணைக் கமிஷனர் ராஜ்பீர் சிங், குர்கானில் ரியல் எஸ்டேட் தொழில் புரிந்துவரும் ஒருவரால் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக குர்கான் போலீஸ் கமிஷ்னர் மொகீந்தர் லால் இன்று கூறுகையில், ராஜ்பீர் சிங்கை சுட்டுக்கொன்ற விஜய் பரத்வாஜ் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், மெரவுலி - குர்கான் சாலையிலுள்ள தனது அலுவலகத்தில் தனியாக இருந்தபோது ராஜ்பீர் சுட்டுக்கொல்லப்பட்டதாவும் தெரிவித்தார்.

கடந்த 1982-ல் சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற ராஜ்பீர் சிங் தனது ‘என்கவுன்டர்’ திறமையால் படிப்படியாக பதவி உயர்வு பெற்றவர். இவர், இதுவரை 50-க்கும் மேற்பட்ட என்கவுன்டர்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: யாஹு

மேலும் விவரங்களுக்கு:

1. Encounter specialist killed | Controversial past

2. NDTV.com: Who was ACP Rajbir Singh?

3. Bhardwaj used Rajbir's gun to kill him: Cops - India - The Times of India


முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கடிதம்

March 20th, 2008 பகுப்புகள்: அரசியல், கைது, சமூகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கடிதம்

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா ஒரு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

சென்னையில் ஸ்பென்சர் பிளாசாவில் ஒரு கடை உரிமையாளருக்கும், உள்ளூரைச் சேர்ந்த டீ வியாபாரி ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காஷ்மீரைச் சேர்ந்த கடைக்காரர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இப்பிரச்சினையில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலையிட்டு, கைதான காஷ்மீரைச் சேர்ந்த அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.


பாஸ்போர்ட்டில் ஆள்மாறாட்டம்: நைஜீரிய பெண் கைது

March 20th, 2008 பகுப்புகள்: குற்றம், கைது, சட்டம் - நீதி, பெண்கள் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பாஸ்போர்ட்டில் ஆள்மாறாட்டம்: நைஜீரிய பெண் கைது

சென்னை: பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்றி மோசடி செய்ததற்காக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா அடி டூ. தற்போது தென்னாப்ரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க்கில் வசித்து வருகிறார். இந்தியா வந்த அவர், நேற்று காலை மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர், சென்னையில் இருந்து டொராண்டோ செல்வதற்காக சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு புறப்பாடு முனையத்திற்கு சென்றார். அங்கு அவரிடம் குடியுரிமைச் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், கிறிஸ்டினாவின் பாஸ்போர்ட்டில் புகைப்படத்தை மாற்றி மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


புதுச்சேரி அமைச்சர் வல்சராஜ் பதவி விலக கோரி சட்டசபை முற்றுகை - 500 பேர் கைது!

March 13th, 2008 பகுப்புகள்: அரசியல், அரசியல், இந்தியா, ஊழல், கைது, சட்டமன்றம், சுகாதாரம், போராட்டம் | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

demo-against-valsarajjpg.jpg

புதுச்சேரியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி 13-03-2008 காலை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம், மாகேயில் கூட்டுறவுத் தகவல் தொழில் நுட்ப மையத்திற்கு நிலம் வாங்கியதில் நடந்த ஊழல், முறைகேடுகள் தொடர்பாக புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நலவழித் துறை அமைச்சர் இ.வல்சராஜ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் வழக்குப் புலன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர் இ.வல்சராஜை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், ஜனநாயக முன்னேற்றக் கழக அமைப்பாளர் பா.அழகானந்தம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, தமிழர் திராவிடர் கழகத் தலைவர் மு.அ.குப்புசாமி உள்ளிட்ட கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துக் கொண்ட 150 பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.


சி.ஐ.ஏ.வின் சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளைத் தடுக்கும் சட்டம் அமலுக்கு வருவதை அதிபர் புஷ் தடுத்துள்ளார்

March 9th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், உலகம், கைது, சட்டம் - நீதி, தீவிரவாதம், போராட்டம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமெரிக்காவின் மத்திய உளவுத் துறையான சி.ஐ.ஏ. பயன்படுத்திவரும் கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய விசாரணை முறைகளைத் தடைசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை தனது வெட்டு வாக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுதிவிட்டதை அதிபர் புஷ் உறுதிசெய்துள்ளார்.

சி.ஐ.ஏ.வின் இந்த விசாரணை முறைகளால்தான் அமெரிக்கா மீது மறுபடியும் மறுபடியும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடப்பது தடுக்கப்படிருக்கிறது, இந்த சட்டம் தெரிவிக்கும் மாற்றங்கள் அமலுக்கு வந்தால் அது அமெரிக்க மக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கலாம் என்று அதிபர் புஷ் கூறியுள்ளார்.

விசாரிக்கப்படும் நபருக்குக்கு தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறுவது போன்ற உணர்வைத் தரும் வாட்டர்போர்டிங் என்ற விசாரணை உத்திக்கும் இந்த சட்ட மசோதா தடை விதித்திருக்கக் கூடும். இந்த விசாரணை உத்தியை சித்ரவதை என்று கூறி மனித உரிமை குழுக்கள் கண்டித்திருந்தனர்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Bush’s Veto of Bill on C.I.A. Tactics Affirms His Legacy - New York Times: “President Bush shut down a Congressional effort to limit harsh interrogation techniques, cementing a legacy of fighting for strong executive powers.”

2. The Associated Press: Bush Explains Veto of Waterboarding Bill

3. A tortuous dilemma for McCain


மறுபடியும் பரிகார பூஜை - சிதம்பரம் தீட்சிதர்கள்

March 6th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், கைது, சட்டம் - நீதி, சமூகம், தமிழ், போராட்டம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் பாடிச் சென்ற பின்னர், கோவிலைக் கழுவி பரிகார பூஜை செய்துள்ளனர் நடராஜர் கோவில் தீட்சிதர்கள். இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பலத்தில் (கோவில் கருவறை) தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்த் திருமறைகளை பாட எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்காத கோவில் தீட்சிதர்கள், தேவாரம் பாட ஓதுவார்களை அடித்து விரட்டினர். தடுக்க வந்த போலீஸாரையும் தாக்கினர்.

இதுதொடர்பாக 11 தீட்சிதர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தேவாரம் உள்ளிட்டவற்றை பாடுவது யார் தடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரித்தது.

இந்த நிலையில் நேற்று விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 25 பேர் தாங்கள் தேவாரம், திருவாசகம் பாடவிருப்பதாக முறைப்படி அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கால்துறையிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களில் ஐந்து பேர் மட்டும் திருச்சிற்றம்பலத்திற்குள் சென்று பாடலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளே சென்ற 25 பேரும் திருச்சிற்றம்பலத்திற்குள் செல்ல முயன்றனர்.

ஆனால் அனுமதிக்கப்பட்ட ஸ்டாலின், எழுமலை, ரவி, முருகன், சண்முகம் ஆகியோர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஐந்து பேரும் சட்டைகளை கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.

அவர்களுடன் மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார், டி.எஸ்.பி. செந்தில்வேலன் உள்ளிட்டோரும் சட்டைகளைக் கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.

உள்ளே சென்ற 5 பேரும், தேவாரத்திலிருந்து ஒரு பாடலையும், திருவாசகத்திலிருந்து ஒரு பாடலையும் மொத்தம் 20 நிமிடங்கள் பாடினர். அதன் பின்னர் அவர்களுக்கு தீபாரதானை காட்டி, மாலை அணிவித்து, பட்டாடை அணிவித்து தீட்சிதர்கள் மரியாதை செய்தனர்.

ஆனால் அதன் பிறகுதான் குழப்பம் நடந்துள்ளது. மாலை, மரியாதையுடன் வரவேற்று ஓதுவார்களை அனுப்பி வைத்த தீட்சிதர்கள், அதன் பிறகு திருச்சிற்றம்பலத்தை கழுவி, பரிகார பூஜை நடத்தி தீட்டுக் கழித்துள்ளனராம்.

இதுகுறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் என்பவர் கூறுகையில், ஓதுவார்களும் சிவனடியார்களும் தேவாரம் பாடி விட்டு போன பின்னர் திருச்சிற்றம்பலத்தை நன்றாக குழு, தீட்டுக் கழித்து, பரிகார பூஜை செய்துள்ளனர் தீட்சிதர்கள். இது தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் பெரும் இழுக்கு விளைவிக்கும் செயலாகும். இந்த செயலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முழுவதும் வாசிக்க: தட்ஸ்தமிழ்

தொடர்புள்ள செய்தி: Regional News Headlines in Tamil - Yahoo!: “சிதம்பரம் கோவிலில் தேவாரம் : கருணாநிதிக்கு பாராட்டு விழா”


உரிமம் இல்லாத கஜினி? - முருகதாஸ் மீது நடவடிக்க எடுத்த காவல்துறையினர் சஸ்பென்ட்

March 2nd, 2008 பகுப்புகள்: கைது, சட்டம் - நீதி, திரையுலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 3 மறுமொழிகள் » |

தீனா, ரமணா, கஜினி ஆகிய படங்களை இயக்கியவர் முருகதாஸ். சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ஸ்டாலின் என்ற மிகப் பெரும் ஹிட் படத்தைக் கொடுத்தவர். தற்போது கஜினியை இந்தியில் அமீர்கான், ஆசினை வைத்து ரீமேக் செய்து வருகிறார்.

இந்நிலையில் கஜினி பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சேலம் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அதில், “அடுத்த படத்திற்காக முருகதாஸிடம் முன்பணம் கொடுத்திருந்தேன். ஆனால் அவர் இழுத்தடித்து வந்தார். இதனால் முன்பணத்தைத் திருப்பிக் கேட்டேன். அவர் ஆள் வைத்து மிரட்டுகிறார். மேலும் கஜினி படத்தை இந்தியில் எனக்குத் தெரியாமல் எடுக்கிறார். அதற்கான உரிமையைத் தொகையையும் தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார் சந்திரசேகர்.

நேற்று பிற்பகலில் எழுத்தாளர் சுஜாதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்குச் சென்றிருந்தார் முருகதாஸ். அப்போது அங்கு வந்த சேலம் காவல்துறையினர் முருகதாஸை விசாரணைக்கு வாருங்கள் என்று கூறி அழைத்து சென்றனர்.

உடனடியாக முருகதாஸை மீட்க நடவடிக்கைகளில் இயக்குநர்கள் சங்கம் இறங்கியது. இந்த விவாகரத்தைக் கையில் எடுத்துள்ள தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை வலியுறுத்தி போராட்டத்தில் குதிப்பது என முடிவு செய்தது.

இந் நிலையில், சேலம் சரக டிஐஜி செண்பகராமன் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையின் இறுதியில், முருகதாஸிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் இடைநீக்கம் ஆகியுள்ளார்.

நன்றி: தட்ஸ்தமிழ்

ஆங்கிலத்தில்: Ghajini director arrested? - Sify.com


தீவிரவாதத் தொடர்பு: மென்பொருள் பொறியாளர் கைது

February 22nd, 2008 பகுப்புகள்: கைது, தகவல் தொழில்நுட்பம், தீவிரவாதம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

பெங்களூருவில் தீவிரவாத அமைப்பான சிமியுடன்(SIMI) தொடர்பு வைத்திருந்ததாக முன்னாள் மென்பொருள் பொறியாளர் கைதுசெய்யப்பட்டார். ஹூப்ளி பகுதியில் இயங்கும் சிமியின் கிளை ஒன்றோடு தொடர்பு வைத்திருந்ததாக மொகமத் யாஹா கமுகுட்டி என்பவர் கைது செய்யப்பட்டார்.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக் பட்டம் பெற்றவர் குட்டி. இவருக்கு சொந்த ஊர் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள முக்கம் எனும் இடமாகும்.

போலீசார் இவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜி.ஈ மென்பொருள் நிறுவனத்தில் குட்டி முன்பு வேலைபார்த்து வந்தார். தற்போது வேலையில் இல்லை.

Arrested techie grilled over terror links - DNA India