நீதிமன்றம் | சற்றுமுன்...




இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது: தீர்ப்பாய ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை

August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, சட்டம் - நீதி, தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது: தீர்ப்பாய ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை

புதுதில்லி, ஆக. 6: “சிமி’ எனப்படும் இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடையை நீக்கி சிறப்புத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2001-ம் ஆண்டில் இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த பிப்ரவரி 7-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தில்லியில் உள்ள சிறப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை நீதிபதி கீதா மித்தல் விசாரித்தார்.

சிமி இயக்கத்தின் மீது தடையை நீட்டிப்பதற்கு புதிய ஆதாரம் ஏதுமில்லை என்று அவர் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு கூறினார்.

இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது. சிறப்புத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது.

3 வாரங்களில் பதில் அளிக்குமாறு சிமி இயக்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
 


மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, குற்றம், சட்டம் - நீதி, சற்றுமுன், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பெங்களூரை சேர்ந்த சாமியார் சரதானந்தா. இவரது மனைவி சாகேரா. சாகேராவின் சொத்துகளை அடைவதற்காக அவருக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாமியார் சரதானந்தா கொடுத்தார். பின்னர் அவரை வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு நீதிபதிகள் பெஞ்சு முன்பு நடந்தது.

அதில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர், `மிகவும் அரிதான இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்’ என்றார். மற்றொரு நீதிபதி, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இரண்டு தீர்ப்புகளும் முரணாக இருந்ததால் வழக்கை மூன்று நீதிபதிகள் பெஞ்சுக்கு தலைமை நீதிபதி மாற்றினார்.

இதையடுத்து நீதிபதிகள் அகர்வால், சிங்வி, அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, “சொத்துக்காக மனைவியை கொலை செய்த சாமியார் சரதானந்தாவை ஆயுள் காலம் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்” என மூன்று நீதிபதிகளும் ஒன்றாக உத்தரவிட்டனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=427197&disdate=7/23/2008


த. கிருட்டினன் கொலை வழக்கு: அழகிரி நிரபராதி

May 8th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, குற்றம், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | ஒரு மறுமொழி » |

முன்னாள் அமைச்சர் த. கிருட்டினன் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து தகுந்த ஆதாரங்களில்லாததால் மு.க. அழகிரியும் மேலும் 12பேரும் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Karunanidhi’s son acquitted in murder case - IBNLive


உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்

April 10th, 2008 பகுப்புகள்: இடஒதுக்கீடு, தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியது. ஐந்து பேர்கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது; இந்த ஒதுக்கீட்டில் வசதிபடைத்தோர், கிரீமி லேயர், விலக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது. இவ்வாறு விலக்கபடவில்லையெனில் இடஒதுக்கீட்டின் பலன்கள் வேண்டுபவர்களுக்கு சென்றடையாது எனக் கருத்து தெரிவித்துள்ளது. நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மக்களுக்கு இந்த ஒதுக்கீடு விலக்கப் படவேண்டும் எனவும் கூறியுள்ளது.

தனியார் கல்விநிறுவங்களில் இந்த ஒதுக்கீடுபற்றி எதுவும் கூறவில்லை. தன்னிடம் எழுப்பப்படாத கேள்வியை உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.

SC upholds OBC quota in educational institutes

உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு செல்லும் - சுப்ரீம் கோர்ட்


‘நீதித்துறையில் இடஒதுக்கீடு வந்தால்தான் சமூக நீதி கிடைக்கும்’ - அன்புமணி

March 30th, 2008 பகுப்புகள்: அரசியல், இடஒதுக்கீடு, சட்டம் - நீதி, சமூகம், நீதிமன்றம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

தலித் மக்களின் குரல் கூட்டமைப்பு சார்பில் மருத்துவ துறையில் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி ஆணையிட்ட மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அன்புமணிக்கு பாராட்டு விழா சென்னையில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடந்தது.

விழாவில் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் மலைஜாதியினர் கமிஷன் தலைவர் பூட்டாசிங் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணிக்கு சமூகநீதி விருது மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு விருது ஆகியவற்றை வழங்கினார். விழாவில் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி பேசியதாவது:-

அகில இந்திய அளவில் மருத்துவத்துறையில் 1200 மாணவர்களுக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்கி உள்ளது. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகை அல்ல, உரிமை ஆகும். எனக்கு என் பெற்றோர் சமூக நீதி பாலை ஊட்டி வளர்த்தார்கள். அவர்கள்தான் சமூக நீதிக்கு பாடுபட வேண்டும் என்று காலம் காலமாக கூறினார்கள். மந்திரி பதவி ஏற்றபோதும் அதைத்தான் கூறினார்கள்.

இரண்டு சமுதாயமும் ஒற்றுமையாக இணையவேண்டும். நம்மை 40 ஆண்டாக தமிழகத்தில் பிரித்து ஆண்டார்கள். இனிவரும் காலத்தில் அது நடக்காது. இது காலத்தின் கட்டாயம். இது வரை மற்றவர்களிடம் கேட்டோம். நாம் இணைந்தால் மற்றவர்களுக்கு கொடுக்கும் நிலையில் இருப்போம். அது நிச்சயம் வரும்.

இந்தியாவின் முதன்மை மருத்துவ கழகத்தில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பிரித்தாளப்படுவதை, அந்த மாணவர்களே என்னிடம் கூறியபோது அதைக் கேட்டு எனக்குள் ஆத்திரம் ஏற்பட்டது. உத்திர பிரதேசத்தில் மாயாவதி வென்றதைப்போல, தமிழகத்தில் நாம் இணைந்தால் வெற்றி பெறமுடியும். நிச்சயம் அது நடக்கும்.

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வரவேண்டும். நிச்சயம் அது வரும். நீதித்துறையில் இடஒதுக்கீடு வரவேண்டும். இது மிக முக்கியமான ஒன்று ஆகும். அது வராவிட்டால் சமூகநீதியும், நியாயமான நீதியும் நமக்கு கிடைக்காது. அதற்கு நாம் இணைந்து பாடுபடவேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் தாம்பரத்தில் உள்ள சித்தமருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பண்டிதர் அயோத்திதாசர் சிலை திறக்கப்படும். மருத்துவதுறையில் இடஒதுக்கீட்டை கொண்டுவர எவ்வளவோ சிரமப்பட்டேன். 2 ஆண்டுகளாக அதிகாரிகளை அழைத்து சண்டைபோட்டு, எந்த பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அந்த சமயத்தில் கூட பலர் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள்.

விழாவில்

  • கேரம் உலக சாம்பியன் இளவழகி,
  • பளுதூக்கும் வீரர் அன்பு

ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

  • இ.பொன்னுசாமி எம்.பி.,
  • விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,
  • ஜெயக்குமார் எம்.எல்.ஏ.,
  • டி.யசோதா எம்.எல்.ஏ.,
  • பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி,
  • அருந்ததி பேரவை வலசை ரவிச்சந்திரன்,
  • தெற்கு ரெயில்வே எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் அ.ஞானசேகரன்,
  • ஏ.கே.மூர்த்தி எம்.பி.,

உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக அனைவரையும் கூட்டமைப்பின் காப்பாளர் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி வி.செல்வராஜ் வரவேற்றார்.

நன்றி: தினத்தந்தி


பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை

March 27th, 2008 பகுப்புகள்: ஊடகம், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, தொலைக்காட்சி, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை அவதூறு வழக்காக சேதுராமன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி  மற்றும் வெளியீட்டாளர் இலட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிட்டது.

தகவல் : மக்கள் தொலைக்காட்சி 


தா.கிருட்டிணன் கொலை வழக்கு: சித்துõர் கோர்ட்டில் சாட்சி “பல்டி’

March 13th, 2008 பகுப்புகள்: அரசியல், சட்டம் - நீதி, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

 தா.கிருட்டிணன் கொலை வழக்கு: சித்துõர் கோர்ட்டில் சாட்சி “பல்டி’

ஆந்திரா மாநிலம், சித்துõர் நீதிமன்றத்தில் நடந்துவரும் தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணையில், சாட்சிகள் பல்டி அடித்தனர். தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி, மதுரை துணைமேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஆந்திரா மாநிலம் சித்துõர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்துவருகிறது. நேற்று நீதிபதி துர்காபிரசாத் முன்னிலையில், சாட்சி விசாரணை துவங்கியது. அழகிரி உள்ளிட்ட 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். முதல் நாள் விசாரணைக்கு கிருட்டிணன் தம்பி மகன் நெடுஞ்செழியன், கிருட்டிணன் கார் டிரைவர் மதியரசன், கிருட்டிணன் தம்பி ராமையா, அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. நேற்று நெடுஞ்செழியன், மதியரசன் ஆகியோர் மட்டுமே ஆஜராகி, சாட்சியம் அளித்தனர். ராமையா, பத்மாவதி ஆகியோர் உடல்நலக் குறைவு காரணமாக ஆஜராகவில்லை. நீதிபதியிடம் நெடுஞ்செழியன் மற்றும் மதியரசன் ஆகியோர் கூறும்போது, “”சம்பவம் நடந்த அன்று காலை 6.30 மணிக்கு ரோட்டில் பயங்கர சத்தம் கேட்டது. ரத்த வெள்ளத்தில் கிருட்டிணன் கிடந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம். அங்கு டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து போலீஸில் புகார் செய்தோம். எங்களிடம் போலீஸார் விசாரிக்கவில்லை. வாக்குமூலமும் வாங்கவில்லை. கிருட்டிணனுக்கு எதிரிகள் யாரும் இல்லை,” என்றனர். வழக்கின் 14வது சாட்சியான முத்துராமலிங்கம், கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நேற்று நீதிபதி துர்காபிரசாத்திடம் கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் முக்கிய ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. சித்துõரில் சிறப்பு நீதிபதி தலைமையில் மொழி பெயர்க்க வேண்டும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த தி.மு.க., வக்கீல் ஜின்னா, மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளன. சரியாக மொழி பெயர்ப்பவரை வைத்து, மீண்டும் மொழி பெயர்க்க வேண்டும். இந்த வழக்கை வேறு ஏதாவது மாநிலத்தில் நடத்த வேண்டும். இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அவரது மனுவை, நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து சாட்சி விசாரணை நடந்தது. விசாரணையை ஒட்டி, நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாட்சி முத்துராமலிங்கம், “மொழி பெயர்ப்பு குறித்து ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக’ தெரிவித்தார். சாட்சி விசாரணையின்போது, தமிழில் கூறிய தகவல்களை நீதிமன்ற ஊழியர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நீதிபதியிடம் தெரிவித்தார்.


உச்சநீதிமன்றம்: பேராசிரியர் சபர்வால் கொலைவழக்கு நாக்பூரிற்கு மாற்றப்பட்டது

March 12th, 2008 பகுப்புகள்: கொலை, தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

உஜ்ஜைன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஹர்பஜன்சிங் சபர்வால் கொலைவழக்கு மத்தியபிரதேச உஜ்ஜைன் நீதிமன்றத்திலிருந்து மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாக்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் பணியாற்றிய அரசு வக்கீலையும் மாற்றிட அர்ஜித் பசயாத் தலமையிலமைந்த உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

நேரில் கண்ட காவல்துறை சாட்சிகளே சாட்சியத்தை மாற்றிக் கொண்டதால், பிஜேபியின் மாணவரணியான ABVP தலைவர்களால் கல்லூரி தேர்தல் இரத்தானதையொட்டி தாக்கப்பட்டு இறந்த சபர்வாலின் வழக்கு “மற்றுமொரு பெஸ்ட் பேக்கரி ” வழக்காகிவிடக் கூடாது என நீதிமன்றம் கருதியது. தவிர காவலர்களே சாட்சி மாறும்போது ஏதெனும் துறைசார்ந்த விசாரணை நடத்தப் பட்டதா எனவும் நீதிபதிகள் வினவினர்.

Prof Sabharwal murder case trial shifted to Nagpur


BPO பெண் மரணத்திற்கு நிறுவன நிர்வாகியே பொறுப்பு: உச்சநீதிமன்றம்

February 21st, 2008 பகுப்புகள்: குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, நீதிமன்றம், பெண்கள் | தொகுப்பாளர்: மணியன் | 4 மறுமொழிகள் » |

2005இல் பெங்களூருவில் நடந்த BPO ஊழியரின் பாலியல்வன்முறை மற்றும் மரணத்திற்கு அந்த சமயம் அவர் வேலைசெய்த எச் பி க்ளோபல்சாஃப்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த, தற்சமயம் நாஸ்காமின் தலைவர் சோம் மிட்டல் பொறுப்பாகும் என்றும் அவர்மீது கர்நாடக அரசின் 2002ஆம் வருட விதிகளின்படி பெண்களை இரவுப்பணிகளுக்கு அமர்த்தக்கூடாது என்ற விதிமீறலுக்காக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திசம்பர் 13,2005இல் பிரதீபாவை அவரது வீட்டிலிருந்து இரவுநேர அலுவலகப் பணிக்கு அழைத்துச் செல்லவந்த சிவகுமார் என்ற வாடகைவண்டி ஓட்டுநர் வேறு தனியிடத்திற்கு கொண்டுசென்று வன்புணர்ந்து கொலை செய்தான். அப்போது கர்நாடக உயர்நீதிமன்றம் சோம் மிட்டலின் மீது வழக்கு தொடர ஆணையிட்டிருந்தது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். நீதியரசர்கள் சீமா மற்றும் மார்கண்டேய கட்ஜு அமர்ந்த உச்சநீதிமன்றம் இன்று இதனை நிராகரித்தது.

பிரதீபா வழக்கை தொடர்ந்து பெங்களூருவில் பெண்கள் மீதான அத்தகைய குற்றங்கள் வளர்ந்துவருவது கவலை அளித்தாலும் வேலை செய்வோர் பாதுகாப்பிற்கு நிறுவனத் தலைவர் ஒருவரை பொறுப்பேற்கச் செய்வது இதுவே முதல்முறையாகும்.

SC passes prosecution of Nasscom chief

SC orders prosecution of ex-MD in BPO staff death


ஆபாசபடமெடுத்த மருத்துவர் பிரகாசிற்கு ஆயுள் தண்டனை

February 7th, 2008 பகுப்புகள்: இணையம், குற்றம், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

சென்னை எலும்பியல் மருத்துவர் எல் பிரகாசிற்கு இணையத்தில் ஆபாசப்படம் வெளியிட்ட வழக்கில் ஆயுள் தண்டனையும் உடனிருந்து உதவிய மூவருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து சென்னை விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி ஆர் ராதா செவ்வாயன்று வழங்கிய இந்த தீர்ப்பில் பிரகாசிற்கு ரூ1.27 இலக்கம் அபராதமும் விதித்தார்.சரவணன், விஜயன், குணசிங் ஆகிய வர்களுக்கு தலா ரூ 2500/- அபராதம் விதித்தார்.

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பிரகாசு். எலும்பியல் மருத்துவரான இவர் அண்ணா நகரில் மருத்துவமனை நடத்தி வந்தார்.

தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்களை மயக்கி, அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவற்றை இன்டர்நெட் மூலம் விற்பனை செய்ததாக சர்ச்சையில் சிக்கினார் பிரகாசு.

நான்கு பெரும் பெண்களுக்கு எதிராக மிகக் கொடூரமான குற்றத்தை இழைத்துள்ளனர். எனவே இவர்களை மன்னிக்க முடியாது என்று நீதிபதி ராதா தெரிவித்தார்.

டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை!!

Chennai doctor gets lifer in cyber-porn case


தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தீவிர விசாரணை நடத்த வேண்டும்

February 7th, 2008 பகுப்புகள்: அரசியல், குண்டுவெடிப்பு, குற்றம், கைது, சட்டம் - நீதி, தீவிரவாதம், நீதிமன்றம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

 

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு குறித்து உளவுத் துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் கடந்த 24-ம் தேதி இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பஸ் நிலைய குண்டு வெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியனின் அண்ணன் உள்பட 3 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து வெடிக்காத குண்டு மற்றும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கலவரம் விளைவிப்பதற்காக அவர்கள் அலுவலகத்தை அவர்களே குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒரு பக்கத்தில் பிரசாரம் செய்து கொண்டே இன்னொரு பக்கத்தில் மதக் கலவரங்களை விளைவிக்க திட்டமிடுகின்றனர்.

காவல்துறை, உளவுத்துறை தீவிரமாக விசாரித்தால் இதில் தொடர்புடையவர்களை கண்டு பிடிக்க முடியும். எனவே, உளவுத்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இஸ்ரேலின் ஏவுகணை சோதனையா?

January 29th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அரசியல், உலகம், சட்டம் - நீதி, நீதிமன்றம், போராட்டம், மத்திய அரசியல் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

இஸ்ரேலின் புதிய உளவு ஏவுகனை சோதனையை இந்தியாவில் நிகழத்த மத்தியில் ஆளும் மன்மோகன் சிங் அரசு இதற்க்கு அனுமதியளித்துள்ளது.

இச்செயலை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தினை தமுமுக வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை மெமோரியல் ஹால் எதிரில் நடத்த உள்ளது.