தீர்ப்பு | சற்றுமுன்...




இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது: தீர்ப்பாய ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை

August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, *பொது, சட்டம் - நீதி, தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடை தொடர்கிறது: தீர்ப்பாய ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை

புதுதில்லி, ஆக. 6: “சிமி’ எனப்படும் இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு தடையை நீக்கி சிறப்புத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2001-ம் ஆண்டில் இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த பிப்ரவரி 7-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து தில்லியில் உள்ள சிறப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை நீதிபதி கீதா மித்தல் விசாரித்தார்.

சிமி இயக்கத்தின் மீது தடையை நீட்டிப்பதற்கு புதிய ஆதாரம் ஏதுமில்லை என்று அவர் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு கூறினார்.

இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது. சிறப்புத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது.

3 வாரங்களில் பதில் அளிக்குமாறு சிமி இயக்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
 


மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, குற்றம், சட்டம் - நீதி, சற்றுமுன், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பெங்களூரை சேர்ந்த சாமியார் சரதானந்தா. இவரது மனைவி சாகேரா. சாகேராவின் சொத்துகளை அடைவதற்காக அவருக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாமியார் சரதானந்தா கொடுத்தார். பின்னர் அவரை வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு நீதிபதிகள் பெஞ்சு முன்பு நடந்தது.

அதில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர், `மிகவும் அரிதான இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்’ என்றார். மற்றொரு நீதிபதி, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இரண்டு தீர்ப்புகளும் முரணாக இருந்ததால் வழக்கை மூன்று நீதிபதிகள் பெஞ்சுக்கு தலைமை நீதிபதி மாற்றினார்.

இதையடுத்து நீதிபதிகள் அகர்வால், சிங்வி, அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, “சொத்துக்காக மனைவியை கொலை செய்த சாமியார் சரதானந்தாவை ஆயுள் காலம் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்” என மூன்று நீதிபதிகளும் ஒன்றாக உத்தரவிட்டனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=427197&disdate=7/23/2008


த. கிருட்டினன் கொலை வழக்கு: அழகிரி நிரபராதி

May 8th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, குற்றம், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | ஒரு மறுமொழி » |

முன்னாள் அமைச்சர் த. கிருட்டினன் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து தகுந்த ஆதாரங்களில்லாததால் மு.க. அழகிரியும் மேலும் 12பேரும் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Karunanidhi’s son acquitted in murder case - IBNLive


உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்

April 10th, 2008 பகுப்புகள்: இடஒதுக்கீடு, தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியது. ஐந்து பேர்கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது; இந்த ஒதுக்கீட்டில் வசதிபடைத்தோர், கிரீமி லேயர், விலக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது. இவ்வாறு விலக்கபடவில்லையெனில் இடஒதுக்கீட்டின் பலன்கள் வேண்டுபவர்களுக்கு சென்றடையாது எனக் கருத்து தெரிவித்துள்ளது. நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மக்களுக்கு இந்த ஒதுக்கீடு விலக்கப் படவேண்டும் எனவும் கூறியுள்ளது.

தனியார் கல்விநிறுவங்களில் இந்த ஒதுக்கீடுபற்றி எதுவும் கூறவில்லை. தன்னிடம் எழுப்பப்படாத கேள்வியை உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.

SC upholds OBC quota in educational institutes

உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு செல்லும் - சுப்ரீம் கோர்ட்


பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை

March 27th, 2008 பகுப்புகள்: ஊடகம், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, தொலைக்காட்சி, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை அவதூறு வழக்காக சேதுராமன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி  மற்றும் வெளியீட்டாளர் இலட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிட்டது.

தகவல் : மக்கள் தொலைக்காட்சி 


உடன்பிறந்தவர்களுடன் உறவு கொள்வது குற்றம் - செர்மனி சட்டம்

March 19th, 2008 பகுப்புகள்: உடல்நலம், உலகம், ஐரோப்பா, குற்றம், சட்டம் - நீதி, சமூகம், தீர்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!‘நெருங்கிய உறவினர்களுடன் பாலுறுவு கொள்வதற்கு எதிரான சட்டம் இருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது அல்ல’ என்று செருமனியின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இதனால், தன்னுடைய 23 வயது சகோதரியுடன் நான்கு குழந்தைகளைப் பெற்றிருக்கும் பாட்ரிக் என்பவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு வலுத்திருக்கிறது. ஏழு வருடங்களுக்கு முன்புதான் பேட்ரிக், தனது தங்கையை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு விவரங்களுக்கு: Incest Ruling: Sibling Sex Remains Prosecutable in Germany - International - SPIEGEL ONLINE - News: “Germany’s high court ruled on Thursday that laws against incest do not violate the constitution. The ruling means that a man in a high-profile national incest case will soon be sent to prison for siring four children with his sister.”


உச்சநீதிமன்றம்: பேராசிரியர் சபர்வால் கொலைவழக்கு நாக்பூரிற்கு மாற்றப்பட்டது

March 12th, 2008 பகுப்புகள்: கொலை, தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

உஜ்ஜைன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஹர்பஜன்சிங் சபர்வால் கொலைவழக்கு மத்தியபிரதேச உஜ்ஜைன் நீதிமன்றத்திலிருந்து மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாக்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் பணியாற்றிய அரசு வக்கீலையும் மாற்றிட அர்ஜித் பசயாத் தலமையிலமைந்த உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

நேரில் கண்ட காவல்துறை சாட்சிகளே சாட்சியத்தை மாற்றிக் கொண்டதால், பிஜேபியின் மாணவரணியான ABVP தலைவர்களால் கல்லூரி தேர்தல் இரத்தானதையொட்டி தாக்கப்பட்டு இறந்த சபர்வாலின் வழக்கு “மற்றுமொரு பெஸ்ட் பேக்கரி ” வழக்காகிவிடக் கூடாது என நீதிமன்றம் கருதியது. தவிர காவலர்களே சாட்சி மாறும்போது ஏதெனும் துறைசார்ந்த விசாரணை நடத்தப் பட்டதா எனவும் நீதிபதிகள் வினவினர்.

Prof Sabharwal murder case trial shifted to Nagpur


சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம்: அரசாணை பிறப்பிப்பு

March 2nd, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, சமூகம், தீர்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

சிதம்பரம் நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைச் செயலர் கோ.சந்தானம் பிப்.29-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார்.

திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகசாமி கடந்த 8-5-2005-ல் தமிழில் தேவாரம் பாடச் சென்றபோது அவர் தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். பின்னர் தீட்சிதர்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை இணை ஆணையர் சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார். பின்னர் சிவனடியார் ஆறுமுகசாமி அறநிலையத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார்.

அதன்மீது விசாரணை முடிவுற்று திருச்சிற்றம்பல மேடையில் நின்று பூஜை காலங்களை தவிர பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடலாம் என 30-4-2007ல் இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி தீர்ப்பு அளித்தார். அத்தீர்ப்பை எதிர்த்து பாட அனுமதியளிக்கக் கூடாது என ஆலய பொதுதீட்சிதர்கள் அறநிலையத்துறைச் செயலரிடம் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில் விசாரணை முடிவுற்று அறநிலையத்துறைச் செயலர் சந்தானம் பிப்.29-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார்.

‘தீட்சிதர்கள் நடத்தும் காலபூஜையின் அங்கமாகவே தேவாரம் பாடப்பட வேண்டும். பூஜை முடிந்தவுடன் திருச்சிற்றம்பல மேடையில் நின்று பக்தர்கள் தமிழில் தேவாரம் பாடி வழிபடலாம். அவ்வாறு பாடக்கூடாது எனக் கூறுவது பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும். மேலும் சிற்றம்பலமேடையில் நின்று வழிபடுவர்களிடம் தீட்சிதர்கள் கட்டணம் ஏதும் வசூலிக்கக்கூடாது’ என அந்த அரசாணையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு: The Hindu News Update Service: “Tension inside Chidambaram temple”


ம‌ண்‌ணி‌ன் மை‌ந்த‌ன் கொ‌ள்கையை ஏ‌ற்க முடியாது: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்

February 22nd, 2008 பகுப்புகள்: அரசியல், இந்தியா, கலவரம், சட்டம் - நீதி, தீர்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மு‌ம்பை உ‌ள்‌ளி‌ட்ட மரா‌ட்‌டிய மா‌நில‌த்‌தி‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் கலவர‌ம் வெடி‌ப்பத‌ற்கு‌க் காரணமான மரா‌ட்டிய நவ‌நி‌ர்மா‌ண் சேனா அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ரா‌ஜ் தா‌க்கரே‌வி‌ன் வட இ‌ந்‌திய‌ர்களு‌க்கு எ‌திரான பே‌ச்சு‌க்க‌ள் வரு‌த்தம‌ளி‌க்‌கிறது எ‌ன்று‌ம், ம‌ண்‌ணி‌ன் மை‌ந்த‌ன் கொ‌ள்கையை ஏ‌ற்க முடியாது எ‌ன்று‌‌ம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் கூ‌றி‌யு‌ள்ளது.

இது தொட‌ர்பான இர‌ண்டு பொதுநல வழ‌க்குக‌ளை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி. பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌திக‌‌ள் ஆ‌ர்.‌வி. ர‌வீ‌ந்‌திர‌ன், மா‌ர்க‌ண்டேய க‌ட்ஜூ ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட முத‌ன்மை அம‌‌ர்வு, “மரா‌ட்டிய‌த்‌தி‌ல் ‌நிலவு‌ம் சூழ‌லையு‌ம், அ‌ங்கு எ‌ன்ன நட‌ந்தது எ‌ன்பதையு‌ம் நா‌ங்க‌ள் பு‌ரி‌ந்து கொ‌ண்டோ‌ம். இது ஒ‌ன்றுப‌ட்ட நாடு. இ‌ங்கு ம‌ண்‌ணி‌ன் மை‌ந்த‌ன் கொ‌ள்கையை ஏ‌ற்று‌க்கொ‌ள்ள மா‌ட்டோ‌ம்.” எ‌ன்றன‌ர்.

இரு‌ந்தாலு‌ம், வ‌ன்முறைக‌ள் தொட‌ர்பான இ‌ந்த‌ப் பொதுநல வழ‌க்குக‌ளி‌ன் ‌மீது எ‌ந்த உ‌த்தரவையு‌ம் ‌பிற‌ப்‌பி‌க்க ‌நீ‌திப‌திக‌ள் மறு‌த்து ‌வி‌ட்டன‌ர்.

மனு‌க்க‌ளி‌ல் கூ‌ற‌ப்ப‌‌ட்டு‌ள்ள ‌விடய‌ங்க‌ள் முழு‌க்க முழு‌க்க‌ச் ச‌ட்ட‌ம் ஒழு‌ங்கு சா‌ர்‌ந்தவை எ‌ன்பதா‌ல், அவை மா‌நில அர‌சி‌ன் கவன‌த்‌தி‌ற்கு‌க் கொ‌ண்டுசெ‌ல்ல உக‌ந்தவை எ‌ன்று‌ம், மனுதார‌ர்க‌ள் மு‌ம்பை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்தை அணு‌கி‌‌த் த‌ங்க‌ள் மனு‌க்களை‌த் ‌திரு‌ம்ப‌ப் பெ‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று‌ம் உ‌ச்ச ‌நீ‌திம‌‌ன்ற‌ம் கூ‌றியு‌‌ள்ளது.

நன்றி: வெப்துனியா

மேலும் விவரங்களுக்கு:

1. Deccan Herald - SC opposes Thackeray's theory but refuses PIL

2. SC voices displeasure over Raj Thackeray's remarks- Hindustan Times

3. DNA - India - About Raj’s arrest, the drama, and violence thereafter - Daily News & Analysis


மறுமணம் செய்த பெண்ணுக்கு மறைந்த கணவரின் சொத்தில் பங்கு உண்டு

February 21st, 2008 பகுப்புகள்: இந்தியா, சட்டம் - நீதி, சமூகம், தீர்ப்பு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

கேரளாவைச் சேர்ந்த செரோட்டை பாரதி என்ற பெண்ணின் கணவர் இறந்து விட்டார். கணவரின் மரணத்திற்குப்பின் பாரதி வேறொரு வரை திருமணம் செய்து கொண்டார். எனினும், முதல் கணவர் மறைந்தாலும் தனக்கு அவரது சொந்தில் பங்கு உண்டு என்று பாரதி உரிமை கோரினார்.

ஆனால் இன்னொருமுறை அவர் திருமணம் செய்து கொண்டதால் அவருக்கு முதல் கணவரின் சொத்தில் பங்கு உரிமை கிடையாது என்று செரோட்டே சுகாதன் என்பவரும், சட்டப்பூர்வமான மற்ற வாரிசுகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

1856-ஆம் ஆண்டு இந்து விதவைகள் திருமணச் சட்டப்படி மறைந்த தனது கணவரின் சொத்தில் பாரதி பங்கு கேட்க முடியாது என்று வழக்கும் தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்திலும் பின்னர், கேரள உயர்நீதிமன்றத்திலும் நடந்தது. அப்போது இரண்டு நீதிமன்றங்களுமே ‘இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி முதல் கணவரின் சொத்தில் பாரதிக்கு பங்கு உண்டு’ என்று தீர்ப்பு கூறி மனுதாரர்களின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்தன.

இதை எதிர்த்து செரோட்டே சுகாதனும், சட்டப் பூர்வமான மற்ற வாரிசுகளும் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.பி. சின்கா, பி.எஸ். சிர்புர்கர் ஆகியோர் கொண்ட பெஞ்ச் நேற்று (19.2.2008) தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதிகள் இருவரும் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். இதற்கு முன்பு பல்வேறு வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகளை மேற்கொள்காட்டிய நீதிபதிகள் கூறியதாவது:

இந்து திருமணச் சட்டம் ஒரு விதவைப் பெண்ணுக்கு, மறைந்த கணவரின் சொத்தை ஆளும் முழு உரிமையையும் அளிக்கிறது. அந்த பெண் மறு திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக மறைந்த கணவரின் சொத்தில் அவருக்கு உள்ள உரிமையை பறிக்க முடியாது. 1956-ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்டம், ஏற்கெனவே இருந்த இந்து சட்டத்தில் கடலளவு மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டது. இதன்படி ஆண் வாரிசுதாரர்களுக்கு சமமாக இந்து விதவைகளும் பாவிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்து விதவைகள் மறுமணச் சட்டம் உள்ளிட்ட எந்த இந்து சட்டத்தையும்விட இந்து திருமணச் சட்டத்தின் 9-ஆம் பகுதி பெண்களுக்கு அதிக உரிமைகளை வழங்கியிருக்கிறது. எனவே மனுதாரர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறோம்.

நன்றி: விடுதலை

முந்தைய சற்றுமுன்: இரண்டாம் மனைவியின் பிள்ளைகளுக்குச் சொத்துரிமை உண்டு - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மேலும் விவரங்களுக்கு:

1. Widows can get share of property after remarrying: SC - India - The Times of India

2. Deccan Herald - Remarriage: SC relief to widows: “A widow who remarries cannot be deprived of a share in her dead husbands property, the Supreme Court has ruled.”


BPO பெண் மரணத்திற்கு நிறுவன நிர்வாகியே பொறுப்பு: உச்சநீதிமன்றம்

February 21st, 2008 பகுப்புகள்: குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, நீதிமன்றம், பெண்கள் | தொகுப்பாளர்: மணியன் | 4 மறுமொழிகள் » |

2005இல் பெங்களூருவில் நடந்த BPO ஊழியரின் பாலியல்வன்முறை மற்றும் மரணத்திற்கு அந்த சமயம் அவர் வேலைசெய்த எச் பி க்ளோபல்சாஃப்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த, தற்சமயம் நாஸ்காமின் தலைவர் சோம் மிட்டல் பொறுப்பாகும் என்றும் அவர்மீது கர்நாடக அரசின் 2002ஆம் வருட விதிகளின்படி பெண்களை இரவுப்பணிகளுக்கு அமர்த்தக்கூடாது என்ற விதிமீறலுக்காக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திசம்பர் 13,2005இல் பிரதீபாவை அவரது வீட்டிலிருந்து இரவுநேர அலுவலகப் பணிக்கு அழைத்துச் செல்லவந்த சிவகுமார் என்ற வாடகைவண்டி ஓட்டுநர் வேறு தனியிடத்திற்கு கொண்டுசென்று வன்புணர்ந்து கொலை செய்தான். அப்போது கர்நாடக உயர்நீதிமன்றம் சோம் மிட்டலின் மீது வழக்கு தொடர ஆணையிட்டிருந்தது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். நீதியரசர்கள் சீமா மற்றும் மார்கண்டேய கட்ஜு அமர்ந்த உச்சநீதிமன்றம் இன்று இதனை நிராகரித்தது.

பிரதீபா வழக்கை தொடர்ந்து பெங்களூருவில் பெண்கள் மீதான அத்தகைய குற்றங்கள் வளர்ந்துவருவது கவலை அளித்தாலும் வேலை செய்வோர் பாதுகாப்பிற்கு நிறுவனத் தலைவர் ஒருவரை பொறுப்பேற்கச் செய்வது இதுவே முதல்முறையாகும்.

SC passes prosecution of Nasscom chief

SC orders prosecution of ex-MD in BPO staff death


பெனாசிர் நவாஸ் கட்சிகள் பெருபான்மை!

February 19th, 2008 பகுப்புகள்: *பொது, அரசியல், இராணுவம், தீர்ப்பு, பாக்கிஸ்தான் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | ஒரு மறுமொழி » |

முஷரஃப் ஆதரவு கட்சியின் நிலை ? 

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் மறைந்த தலைவர் பெனாசிர் மற்றும் முன்னாள்     
பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோரது கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அவ்விரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகால முஷாரப்பின் ஆதரவு கட்சியின் ஆட்சிக்கு முடிவுக்கு வரவுள்ளது.

இதுவரை தெரியவந்துள்ள 243 பாராளுமன்ற இடங்களுக்கான முடிவுகளில், பெனாசிர் மற்றும் நவாஸின் கட்சிகள் மொத்தம் 149 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 85 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)கட்சி 64 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

முஷாரப்பின் ஆதரவு கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) 36 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது; முத்தாஹிதா குவாமி இயக்கம் (எம்.கியூ.எம்) 19 இடங்களிலும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 39 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தத் தேர்தலில் அவசியம் ஏற்படின் ஆட்சியமைக்க ஆதரவு நல்கப்படும் என்று பெனாசிர் மற்றும் நவாஸ் ஆகியோரது கட்சிகள் ஏற்கெனவே பரஸ்பர ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.