கொலை | சற்றுமுன்...




சென்னை : உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, குற்றம், கைது, கொலை, சட்டம் - நீதி, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

சென்னை வடபழனி அருகே உள்ள புதூர் மற்றும் ஒட்டகபாளையத்தில் பொதுமக்கள் இரவில் விடிய விடிய உருட்டு கட்டைகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர்.

சைக்கோ மனிதன் பீதியால், அவர்கள் உருட்டு கட்டைகளுடன் வலம் வருவதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாகவும் போலீஸôர் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வடபழனி, கே.கே.நகர் பகுதிகளில் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகள், குப்பை பொறுக்கும் நபர்கள் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தல், தீ வைத்து எரித்தல் என சுமார் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் வடபழனி மற்றும் கே.கே.நகர், அசோக் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதூர் மற்றும் ஒட்டகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இரவு நேரங்களில் உருட்டு கட்டைகளுடன் வலம் வருகின்றனர். அவ்வழியே செல்பவர்களும் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

காவலாளி வேடத்தில்…: காவலாளிகள் குறி வைத்து கொல்லப்பட்டு வருவதால், போலீஸôரே நேராக அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாக மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரி சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸôர் காவலாளிகளாக இரவு ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குப்பை பொறுக்கும் நபர்களாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போலவும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகப் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

அசோக்நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த நேபாள இளைஞர்கள் 3 பேரை பிடித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.


இலங்கை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 12 பேர் பலி

April 7th, 2008 பகுப்புகள்: அரசியல், ஈழம் - இலங்கை, குண்டுவெடிப்பு, கொலை, தடகளம், மரணம், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையின் மேல்-மாகாணத்திலுள்ள கம்பஹா மாவட்டத்தில் ஞாயிறு காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலொன்றில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே உட்பட சுமார் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஞாயிறு காலை கம்பஹா மாவட்டத்தில் வலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் புத்தாண்டையொட்டிய மராதான் ஓட்டப்போட்டியொன்றில் பிரதான விருந்திரனாக கலந்துகொண்டிருந்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே, அந்த ஓட்டப் போட்டியினை தொடக்கிவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது.

இதில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயுடன்,

  • இலங்கையின் முன்னாள் தடகளவீரரும், தெற்காசிய மராதான் ஓட்டப் போட்டியில் தங்கப்பதங்கம் வென்றிருந்தவருமான கே.எஸ் கருணாரட்ண மற்றும்
  • தேசிய தடகளப் பயிற்றுவிப்பாளருமான லக்ஸ்மன் டீ அல்விஸ்

உட்பட சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 90க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரியான எஸ்.எஸ்.பி. ஹெக்டர் தர்மசிறி உட்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கம்பஹா, மற்றும் ராகம தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் மிகவும் மோசமான நிலையிலிருந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளூர் தொலைக்காட்சிகளில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும், அதன் பின்னர் மராதான் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையும் விசேட செய்தி அறிவித்தல்களின்போது காண்பிக்கப்பட்டன.

பாதுகாப்புத்தரப்பினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனாலும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து இந்தக் குண்டுவெடிப்புக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியே காரணம் என்று ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தேசிய தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குண்டுத்தாக்குதலையும், அமைச்சரின் படுகொலைச் சம்பவத்தையும் விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயலெனக் கண்டித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கும் தனது அரசின் நடவடிக்கைகளிலும், திடசங்கற்பத்திலும் எவ்வித மாறுதல்களையும் இது ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

55 வயதான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஒரு சட்டத்தரணி ஆவார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததோடு, தனது அரசியல் வாழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து, கிறிஸ்தவ விவகாரங்கள், இனவிவகாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பல துறைகளில் பலவருடங்கள் அமைச்சராகவும் பதவிவகித்திருக்கிறார்.

இறக்கும்போது இவர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், பொருளாளராகவும் கடமையாற்றியிருந்ததோடு, அடுத்தமாதம் கிழக்கு மாகாணசபைக்காக இடம்பெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிய வருகிறது.

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் பின்னர் தென்னிலங்கையில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 8ம் திகதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற தேசநிர்மாண அமைச்சர் தஸ்ஸநாயக, ஜா-எல பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. VIRAKESARI ONLINE: “அமைச்சர் மீதான குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை இரகசிய பொலிஸாரிடம் மரதன் ஓட்டப் போட்டியாளர் போன்றே குண்டுதாரி ஊடுருவல்” | பூரண அரச மரியாதையுடன் வியாழனன்று இறுதிக்கிரியை

2. Pathivu: TAMIL NATIVE! :: பதிவு: தமிழரின் பூர்வீகம்! Tamil: “அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கம்பஹாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலி”

3. TamilNet: 06.04.08 Jeyaraj Fernandopulle killed in bomb blast


மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு

April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா, குண்டுவெடிப்பு, கொலை, சட்டம் - நீதி, மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்ததுடன் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஆனால் அவர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்றும் காவல் துறை கூறியுள்ளது.

சிலிகுரியில் உள்ள குண்டு வெடித்த வீட்டின் உரிமையாளர், தனது வீட்டை திபெத்தியர்கள் கம்யூட்டர் வியாபாரம் செய்வது தொடர்பாக வாடகைக்கு எடுத்திருந்தனர் என்று கூறியுள்ளார். குண்டு வெடிப்புக்குப் பிறகு, சம்மந்தப்பட்ட வீட்டில் இருந்து அதிக அளவிலான வெடிப்பொருட்கள், டிடனேட்டர்கள் மற்றும் நேரத்துக்கு வெடிக்கச் செய்யும் கருவிகளையும் தாம் மீட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | South Asia | Three dead in Indian 'Tibet' bomb: “Siliguri has a high number of Tibetan exiles”

2. Three killed in West Bengal bomb blast | Top News | Reuters


டெல்லி துணை கமிஷனர் ராஜ்பீர் சிங் சுட்டுக்கொலை

March 25th, 2008 பகுப்புகள்: கைது, கொலை, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ராஜ்பீரைக் தாம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ள விஜய் பரத்வாஜ், தன்னிடம் பணம் கேட்டு ராஜ்பீர் மிரட்டி வந்ததாகவும், பணம் தர மறுத்தால் கொன்றுவிடுவதாக கூறி வந்ததால், அவரை தாம் சுட்டுக்கொன்றதாகவும் கூறினார்.

டெல்லி போலீஸ் துணைக் கமிஷனர் ராஜ்பீர் சிங், குர்கானில் ரியல் எஸ்டேட் தொழில் புரிந்துவரும் ஒருவரால் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக குர்கான் போலீஸ் கமிஷ்னர் மொகீந்தர் லால் இன்று கூறுகையில், ராஜ்பீர் சிங்கை சுட்டுக்கொன்ற விஜய் பரத்வாஜ் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், மெரவுலி - குர்கான் சாலையிலுள்ள தனது அலுவலகத்தில் தனியாக இருந்தபோது ராஜ்பீர் சுட்டுக்கொல்லப்பட்டதாவும் தெரிவித்தார்.

கடந்த 1982-ல் சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற ராஜ்பீர் சிங் தனது ‘என்கவுன்டர்’ திறமையால் படிப்படியாக பதவி உயர்வு பெற்றவர். இவர், இதுவரை 50-க்கும் மேற்பட்ட என்கவுன்டர்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: யாஹு

மேலும் விவரங்களுக்கு:

1. Encounter specialist killed | Controversial past

2. NDTV.com: Who was ACP Rajbir Singh?

3. Bhardwaj used Rajbir's gun to kill him: Cops - India - The Times of India


உச்சநீதிமன்றம்: பேராசிரியர் சபர்வால் கொலைவழக்கு நாக்பூரிற்கு மாற்றப்பட்டது

March 12th, 2008 பகுப்புகள்: கொலை, தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

உஜ்ஜைன் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் ஹர்பஜன்சிங் சபர்வால் கொலைவழக்கு மத்தியபிரதேச உஜ்ஜைன் நீதிமன்றத்திலிருந்து மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாக்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் பணியாற்றிய அரசு வக்கீலையும் மாற்றிட அர்ஜித் பசயாத் தலமையிலமைந்த உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

நேரில் கண்ட காவல்துறை சாட்சிகளே சாட்சியத்தை மாற்றிக் கொண்டதால், பிஜேபியின் மாணவரணியான ABVP தலைவர்களால் கல்லூரி தேர்தல் இரத்தானதையொட்டி தாக்கப்பட்டு இறந்த சபர்வாலின் வழக்கு “மற்றுமொரு பெஸ்ட் பேக்கரி ” வழக்காகிவிடக் கூடாது என நீதிமன்றம் கருதியது. தவிர காவலர்களே சாட்சி மாறும்போது ஏதெனும் துறைசார்ந்த விசாரணை நடத்தப் பட்டதா எனவும் நீதிபதிகள் வினவினர்.

Prof Sabharwal murder case trial shifted to Nagpur


சுற்றுலாப் பயணி கொலையை மூடி மறைக்க முயன்றதாக கோவா பொலிஸார் மீது குற்றச்சாட்டு

March 10th, 2008 பகுப்புகள்: இந்தியா, கொலை, சட்டம் - நீதி, சமூகம், சுற்றுலா, பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!பதின்ம வயதைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டதை, பொலிஸார் மறைக்க முயன்றதாக, இந்தியாவின் கோவா மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

Host unlimited photos at slide.com for FREE!இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிதும் கவனத்தை ஈர்த்த இந்த விடயத்தில், பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கார்லெட் கீலிங் என்ற பெண் போதைப் பொருளை உட்கொண்டதை அடுத்து நீரில் மூழ்கியதாக ஆரம்பத்தில் பொலிஸார் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்தப் பெண்ணின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பாக மறுவிசாரணை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளூர் நபர் ஒருவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் ராய்ட்டர் செய்தி சேவைக்குக் கருத்து கூறிய கோவாவின் சுற்றுலாத்துறை அமைச்சர், இது ஒரு கொலை என்றும், இதனை பொலிஸார் மறைக்க முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. British teen raped, killed on Goa beach- Hindustan Times

2. The Hindu News Update Service: “Goa death case may affect tourism adversely: Pacheco”

3. NDTV.com: Scarlett's mother under scanner


ஸ்பெயினில் தேர்தலுக்கு முன்பாக அரசியல்வாதி கொலை

March 7th, 2008 பகுப்புகள்: அரசியல், உலகம், ஐரோப்பா, கொலை, தீவிரவாதம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஸ்பெயினின் பாஸ்க் வட்டாரத்தில் முன்னாள் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இப்போதே நிறுத்தப்பட்டுள்ளன.

இச்செயலுக்கு எவரும் உரிமை கோரவில்லை, ஆனால் பாஸ்க் பிரிவினைவாத இயக்கமான எட்டா குழுவினரே இதனைச் செய்திருக்கலாம் என ஸ்பெயினின் உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். எட்டா இயக்கம் கடந்த நாற்பது ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கொலைகளைச் செய்திருக்கிறது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Europe | Spain attack halts poll campaign

2. Eta blamed for murder of Socialist Party councillor Isaías Carrasco - Times Online

3. Timeline: Basque separatist group ETA | International | Reuters


இல‌ங்கை‌ ராணுவம் தாக்குதல் - த‌மி‌ழ் எ‌ம்.‌பி.படுகொலை

March 6th, 2008 பகுப்புகள்: அரசியல், ஈழம் - இலங்கை, கொலை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!இலங்கை ராணுவம் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் த‌மி‌ழ்‌த் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்‌பைச் சேர்ந்த எம்.பி. ‌கி.‌சிவநேச‌ன் கொல்லப்பட்டார்.

இன்று இலங்கை பாராளும‌ன்ற‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்ற சிவநேசன், கொழும்பிலிருந்து ‌திரு‌ம்‌பி‌க் கொ‌ண்டிரு‌ந்தார். மதியம் 1.20 ம‌ணி‌யளவில் வ‌ன்‌னி கனகராய‌ன்குள‌ம் பகு‌தி‌யி‌ல் இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவு‌ம் படை‌யின‌ர் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிவநேச‌ன், அவ‌ரது ஓ‌ட்டுந‌ர் ஆ‌கியோ‌ர் உ‌யிரிழ‌ந்ததார்கள்.

இந்த சம்பவத்திற்கும், அரசுப் படைகளுக்கும் தொடர்பு இல்லை என்று ராணுவம் மறுத்துள்ளது. விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ராணுவ நடமாட்டமே கிடையாது என்று அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற தம்மை ஏற்கனவே சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி இலங்கை ராணுவம் மிரட்டியிருந்ததாக கடந்த பிப்ரவரி 21 ம் தேதியன்று சிவநேசன், பாராளுமன்றத்தில் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் உயிரிழந்துள்ள மூன்றாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவநேசன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது தமிழ் எம்.பியும் ஆவார்.

நன்றி: யாஹு | தட்ஸ்தமிழ்

மேலும் விவரங்களுக்கு:

1. Tamil Daily News Page @ Puthinam.com: “சிறிலங்காப் படையினரால் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் படுகொலை”

2. TamilNet: 06.03.08 Jaffna TNA MP Sivanesan killed in DPU Claymore attack

3. TNA MP Sivanesan dies in a blast in LTTE dominated Wanni - Ministry of Defence (press release), Sri Lanka


இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் பலர் பலி

March 2nd, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், கொலை, மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

இதன் மூலம் கடந்த புதன்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அறுபதிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயுததாரிகள், ஆனால் குழந்தைகள் உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா பகுதியில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதலில் முப்பதிற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்குள் தொடர்ச்சியாக பாலஸ்தீனர்கள் ராக்கெட் தாக்குதலை நடத்தி வருவதால் தங்களுடைய இராணுவத்தினர், டாங்கிகள் மற்றும் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறுகின்றது.

டமாஸ்கஸில் இருந்து கருத்து வெளியிட்ட ஹமாஸ் தலைவர் காலித் மாஷல், இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கை தான் உண்மையான இன அழிப்பு என கூறியுள்ளார்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Middle East | Israel warns of invasion of Gaza

2. Israeli raids on Gaza leave over 50 dead - Times Online

3. Israel’s Gaza Trap - TIME


இந்தியாவில் கொலை குற்றவாளி அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பாக ஏழு பேர் கைது

February 25th, 2008 பகுப்புகள்: குற்றம், கொலை, சட்டம் - நீதி, சமூகம், தொலைக்காட்சி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!இந்தியாவில் கொலை குற்றவாளி ஒருவரை அவர் சுயநினைவை இழக்கும் வரையில் பொலிஸாரின் முன்னிலையிலேயே ஒரு கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த அந்நபரை வெளியே இழுத்து வந்த கும்பல் அவரை அடித்து துவம்சம் செய்துள்ளது.

இந்திய தொலைக்காட்சிகளில் வெளியான காட்சியில், கயிறு ஒன்றின் மூலம் கட்டி இழுத்து வரப்பட்ட அவரது உடலில் அசைவுகள் நிற்கும் வரையில் அவரை கும்பல் அடித்து உதைத்து நொறுக்கியுள்ளது. தற்போது அந்நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Mob stones murder accused in Bihar as cops look on

2. NDTV.com: Mob lynching on the rise in Bihar

3. BBC NEWS | South Asia | Arrests follow India mob attack


சுடப்பட்ட கிழக்குத் தீமோர் அதிபர் நிலை ‘கவலைக்கிடம்’

February 11th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, ஆளுமை, உலகம், கொலை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

கிழக்குத் தீமோரின் அதிபரான ஜோஸ் ராமோஸ் ஹோர்ட்டா அவர்கள், தலைநகர் டிலிக்கு அருகில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது, வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த நாட்டு அதிகாரிகள், அங்கு இரவு நேர ஊரடங்கை பிறப்பித்துள்ளார்கள்.

அவரது நிலைமை மோசமாக இருப்பதாக விபரிக்கப்பட்டது, ஆனால், ஆரம்பக்கட்ட அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நிலைமை ஸ்திரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது பிரதமர் ஷானா குஸ்மாவோ மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால், அவர் பாதிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட கிளர்ச்சிக்குழுத் தலைவரான அல்பிரட் ரெய்னடோ அவர்கள், ஒரு சதிப்புரட்சிக்கு முயற்சித்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் 150 அமைதிகாப்புப் படையினரை கிழக்குத் தீமோருக்கு அனுப்பியுள்ளதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Q&A: East Timor unrest | World news | guardian.co.uk: “Matthew Weaver explains the background to the assassination attempt on the East Timor leadership”

2. BBC NEWS | Asia-Pacific | Curfew after East Timor shooting

3. East Timor's President Shot by Rebels - TIME


மதுரை அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

February 5th, 2008 பகுப்புகள்: கிளர்ச்சி, கொலை, தமிழக அரசியல், போராட்டம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

மதுரை மாவட்டம், கள்ளந்திரியை அடுத்துள்ள பாதமுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் முருகன் (24). இவர் திமுக பிரமுகர்.

இவரது வீட்டிற்கு நேற்று நள்ளிரவு வந்த கும்பல் ஒன்று அவரை ஓட ஓட அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

முருகன் இறந்ததை உறுதி செய்த பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

முருகன் கொலை செய்யப்பட்டது குறித்து ஆத்திரம