குண்டுவெடிப்பு | சற்றுமுன்...




ஜெய்ப்பூரில் தொடர் குண்டு வெடிப்புகள்

May 13th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, குண்டுவெடிப்பு, சுற்றுலா, தீவிரவாதம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூட்டம் நிறைந்த சந்தைப்ப்பகுதியில் தொடர்ந்து குறைந்தபட்சம் ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

Blasts rock Indian tourist city - BBC


இலங்கை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 12 பேர் பலி

April 7th, 2008 பகுப்புகள்: அரசியல், ஈழம் - இலங்கை, குண்டுவெடிப்பு, கொலை, தடகளம், மரணம், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையின் மேல்-மாகாணத்திலுள்ள கம்பஹா மாவட்டத்தில் ஞாயிறு காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலொன்றில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே உட்பட சுமார் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஞாயிறு காலை கம்பஹா மாவட்டத்தில் வலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் புத்தாண்டையொட்டிய மராதான் ஓட்டப்போட்டியொன்றில் பிரதான விருந்திரனாக கலந்துகொண்டிருந்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே, அந்த ஓட்டப் போட்டியினை தொடக்கிவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது.

இதில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயுடன்,

  • இலங்கையின் முன்னாள் தடகளவீரரும், தெற்காசிய மராதான் ஓட்டப் போட்டியில் தங்கப்பதங்கம் வென்றிருந்தவருமான கே.எஸ் கருணாரட்ண மற்றும்
  • தேசிய தடகளப் பயிற்றுவிப்பாளருமான லக்ஸ்மன் டீ அல்விஸ்

உட்பட சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 90க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரியான எஸ்.எஸ்.பி. ஹெக்டர் தர்மசிறி உட்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கம்பஹா, மற்றும் ராகம தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் மிகவும் மோசமான நிலையிலிருந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளூர் தொலைக்காட்சிகளில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும், அதன் பின்னர் மராதான் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையும் விசேட செய்தி அறிவித்தல்களின்போது காண்பிக்கப்பட்டன.

பாதுகாப்புத்தரப்பினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனாலும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து இந்தக் குண்டுவெடிப்புக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியே காரணம் என்று ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தேசிய தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குண்டுத்தாக்குதலையும், அமைச்சரின் படுகொலைச் சம்பவத்தையும் விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயலெனக் கண்டித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கும் தனது அரசின் நடவடிக்கைகளிலும், திடசங்கற்பத்திலும் எவ்வித மாறுதல்களையும் இது ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

55 வயதான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஒரு சட்டத்தரணி ஆவார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததோடு, தனது அரசியல் வாழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து, கிறிஸ்தவ விவகாரங்கள், இனவிவகாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பல துறைகளில் பலவருடங்கள் அமைச்சராகவும் பதவிவகித்திருக்கிறார்.

இறக்கும்போது இவர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், பொருளாளராகவும் கடமையாற்றியிருந்ததோடு, அடுத்தமாதம் கிழக்கு மாகாணசபைக்காக இடம்பெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிய வருகிறது.

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் பின்னர் தென்னிலங்கையில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 8ம் திகதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற தேசநிர்மாண அமைச்சர் தஸ்ஸநாயக, ஜா-எல பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. VIRAKESARI ONLINE: “அமைச்சர் மீதான குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை இரகசிய பொலிஸாரிடம் மரதன் ஓட்டப் போட்டியாளர் போன்றே குண்டுதாரி ஊடுருவல்” | பூரண அரச மரியாதையுடன் வியாழனன்று இறுதிக்கிரியை

2. Pathivu: TAMIL NATIVE! :: பதிவு: தமிழரின் பூர்வீகம்! Tamil: “அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கம்பஹாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலி”

3. TamilNet: 06.04.08 Jeyaraj Fernandopulle killed in bomb blast


மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு

April 4th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆசியா, இந்தியா, குண்டுவெடிப்பு, கொலை, சட்டம் - நீதி, மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்ததுடன் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், ஆனால் அவர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்றும் காவல் துறை கூறியுள்ளது.

சிலிகுரியில் உள்ள குண்டு வெடித்த வீட்டின் உரிமையாளர், தனது வீட்டை திபெத்தியர்கள் கம்யூட்டர் வியாபாரம் செய்வது தொடர்பாக வாடகைக்கு எடுத்திருந்தனர் என்று கூறியுள்ளார். குண்டு வெடிப்புக்குப் பிறகு, சம்மந்தப்பட்ட வீட்டில் இருந்து அதிக அளவிலான வெடிப்பொருட்கள், டிடனேட்டர்கள் மற்றும் நேரத்துக்கு வெடிக்கச் செய்யும் கருவிகளையும் தாம் மீட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | South Asia | Three dead in Indian 'Tibet' bomb: “Siliguri has a high number of Tibetan exiles”

2. Three killed in West Bengal bomb blast | Top News | Reuters


லாகூரில் தற்கொலை தாக்குதல் - 7 பேர் பலி

March 5th, 2008 பகுப்புகள்: அரசியல், குண்டுவெடிப்பு, பாக்கிஸ்தான், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

பாகிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலியாயினர் ; பலர் காயமடைந்தனர். லாகூரில் உள்ள கடற்படை தலைமை அலுவலகம் அருகே இந்த தாக்குதல் நடைபெற்றது.

கடற்படை கல்லூரி அருகே உள்ள மெயில் ரோடு என்ற இடத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரியை ஓட்டிவந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன், அந்த லாரியை வெடிக்கச் செய்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.பலர் காயமடைந்தனர்.

முழுவதும் வாசிக்க: யாஹு

மேலும் விவரங்களுக்கு:

1. Australia decision on Pakistan tour expected in days | Reuters

2. NDTV.com: Seven killed as suicide blasts rock Lahore

3. Five arrested in connection with Pak naval college attack - Pakistan - World - The Times of India


இராக்கில் ஷியா முஸ்லிம்களின் புனித யாத்திரையில் தாக்குதல்: 40 பேர் பலி

February 25th, 2008 பகுப்புகள்: ஆசியா, உலகம், குண்டுவெடிப்பு, மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இராக்கில் ஷியா முஸ்லிம்களின் புனித யாத்திரை ஒன்றில் நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தலைநகர் பாக்தாத்துக்குத் தெற்கே நடந்த இந்தத் தாக்குதலில் குண்டு பொருத்தப்பட்ட சட்டையை அணிந்த ஒருவர் ஷியா முஸ்லிம்களின் கர்பாலா நகரிலிலுள்ள புனிதத் தலத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில் வெடிக்க வைத்திருக்கிறார்.

இறைதூதர் முகம்மது அவர்களின் பேரனான இமாம் ஹசெய்ன் அவர்களிற்காக நடத்தப்படுகின்ற வருடாந்த நினைவு நிகழ்ச்சியின் கடைசி நாளனான இன்று ஞாயிற்றுக் கிழமை இந்த யாத்திரை நடத்தப்பட்டது. இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னதாக பாக்தாத்திலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இந்த யாத்திரிகர் மீது சில சிறு தாக்குதல்கள் நடந்திருந்தன.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Middle East | Bomber strikes Iraq Shia pilgrims

2. Suicide Bomber Kills 40 at Iraq Highway Rest Stop - New York Times


தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தீவிர விசாரணை நடத்த வேண்டும்

February 7th, 2008 பகுப்புகள்: அரசியல், குண்டுவெடிப்பு, குற்றம், கைது, சட்டம் - நீதி, தீவிரவாதம், நீதிமன்றம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

 

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு குறித்து உளவுத் துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் கடந்த 24-ம் தேதி இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பஸ் நிலைய குண்டு வெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியனின் அண்ணன் உள்பட 3 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து வெடிக்காத குண்டு மற்றும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கலவரம் விளைவிப்பதற்காக அவர்கள் அலுவலகத்தை அவர்களே குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒரு பக்கத்தில் பிரசாரம் செய்து கொண்டே இன்னொரு பக்கத்தில் மதக் கலவரங்களை விளைவிக்க திட்டமிடுகின்றனர்.

காவல்துறை, உளவுத்துறை தீவிரமாக விசாரித்தால் இதில் தொடர்புடையவர்களை கண்டு பிடிக்க முடியும். எனவே, உளவுத்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இலங்கை : பஸ்ஸில் குண்டுவெடிப்பு - 20 பேர் பலி

January 16th, 2008 பகுப்புகள்: ஈழம் - இலங்கை, குண்டுவெடிப்பு, குழந்தைகள், சமூகம், தீவிரவாதம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

இலங்கை : பஸ்ஸில் குண்டுவெடிப்பு - 20 பேர் பலி

இலங்கை புத்தள நகரில் பஸ்ஸில் குண்டுவெடித்து 20 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பலர் குழந்தைகள்.

இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. எனினும் இக்குண்டு பேருந்தில் இருந்ததா அல்லது சாலையோரம் பதிக்கப்பட்டிருந்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை.

http://www.gulfnews.com/world/Sri_Lanka/10182314.html


அருமையான நண்பரை இழந்து விட்டோம்: பிரதமர் மன்மோகன்சிங் கவலை

December 27th, 2007 பகுப்புகள்: கலவரம், குண்டுவெடிப்பு, தலைவர்கள் மறைவு, பாக்கிஸ்தான், மரணம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

 அருமையான நண்பரை இழந்து விட்டோம்: பிரதமர் மன்மோகன்சிங் கவலை

புதுடில்லி: அருமையான நண்பரை இழந்து விட்டோம் என பிரதமர் மன்மோகன்சிங் கவலைதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் துணிச்சல் மிக்க பெனசிரை இழந்து விட்டோம் . இந்தியாவுக்கு பெனசிர் ஒரு நல்ல நண்பராக இருந்தார் . அவரை இழந்து தவிக்கும் பெனசிர் குடும்பந்தினருக்கு ஆழ்நத அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
———-

பெனசிர் கொலை : 3 நாள் துக்கம்: முஷாரப் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பெனசிர் புட்டோ கொலை செய்யப்பட்டதற்கு பாக்., அதிபர் முஷாரப் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டு மக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம். அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். சம்பவத்தையடுத்து அவசர உயர் மட்டக்கூட்டத்தை கூட்டி விவாதித்தார். பெனசிருக்கு துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என கூறியுள்ளார்.
————

பெனசிர் புட்டோ சுட்டு கொலை : இந்தியா  ரஷ்யா  அமெரிக்கா கண்டனம்

புதுடில்லி: பாகிஸ்தானில் பெனசிர் புட்டோ சுட்டு கொல்லப்பட்டதற்கு இந்தியா  ரஷ்யா , அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி உள்ளிட்டோர் இரங்கலும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். பிரணாப்முகர்ஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்திய பாகிஸ்தான் .உறவுக்கு துணையாக இருந்த பெனசிர் ஆசியதுணை கண்டத்தில் ஒப்பற்றவராக திகழ்ந்தவர். அவரது இறப்பு பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இது கொடுஞ்செயல் ‌என்றும் கூறியுள்ளார். இதே போல் அமெரிக்கா, பாகிஸ்தான் மக்கள் இந்நேரத்தில் அமைதி காக்க வேண்டும் என கூறியுள்ளது. ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
—————–

வராற்றில் மறக்க முடியாத துன்ப நிகழ்வு : நவாஸ்ஷெரீப்

கராச்சி: பெனசிர் புட்டோ சுட்டுக்கொல்லப்பட்டது பாக்., வராற்றில் மறக்க முடியாத துன்ப நிகழ்வு என எதிர்கட்சி தலைவர் நவாஸ்ஷெரீப் கூறியுள்ளார். இந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

———-

பெனசிர் புட்டோ சுட்டு கொலை : பாகிஸ்தானில் வன்முறை வெடித்தது

இஸ்லாமாபாத்: பெனசிர் புட்டோ சுட்டு கொலை செய்யப்பட்ட தகவல் அந்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து அங்கு கடைகள் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. பல இடங்களில் பெனசிர் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. சாலைகளில் சென்ற வாகனங்கள் நொறுக்கப்பட்டன. ஆங்காங்கே போலீசார் மற்றும் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கலவரம் வெடிக்கும் என அஞ்சப்படுகிறது.

 


பாகிஸ்தானில் அமைச்சரை இலக்குவைத்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் 50 பேர் பலி

December 21st, 2007 பகுப்புகள்: அரசியல், ஆசியா, உலகம், குண்டுவெடிப்பு, கொலை, பாக்கிஸ்தான் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

BBCபாகிஸ்தானில் ஆப்கானிய எல்லைக்கு பக்கத்திலுள்ள பெஷாவர் நகரருகில் நடத்தப்பட்டுள்ள ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் 50 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தற்போது கூறுகிறது.

பதவிக்காலம் முடிவடையும் தருவாயிலுள்ள நாட்டின் உள்துறை அமைச்சரது வீட்டு வளாகத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலில் பெருந்திரளானோர் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடத்திய வேளையில் குண்டுதாரி குண்டை வெடிக்கச்செய்துள்ளார்.

இதில் சுமார் நூறு பேர் காயமடைந்தனர்.

அமைச்சர் அஃப்தாப் கான் ஷெர்பாஓ காயமின்றித் தப்பினாரென்றாலும் அவரது மகன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இத்தாக்குதலைக் கண்டித்துள்ள பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப், தீவிரவாதிகளின் சிதைந்த சிந்தனைதான் இதற்குக் காரணம் என்று கூறி பழி சுமத்தியுள்ளார்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | South Asia | Profile: Aftab Sherpao

2. 'At least 50' dead in mosque bomb - CNN.com

3. CHRONOLOGY-Attacks in Pakistan since July 2007 | Reuters


பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டு வெடிப்பு: 54 பேர் பலி

December 21st, 2007 பகுப்புகள்: குண்டுவெடிப்பு, பாக்கிஸ்தான், மரணம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைமாநிலத்தில் ஷெர்பொ என்ற கிராமத்தில் உள்ல ஜம்மா மசூதியில் முன்னாள் உள்துறை அமைச்சர் அஃப்தாப் அகமதுகான் ஷெர்பொ பங்கு கொண்ட ஒரு ஈத்-உல்-அஜா தொழுகையின் போது ஒரு தற்கொலை தீவிரவாதி வெடித்த குண்டுவெடிப்பில் 54 பேர் வரை மரணமடைந்ததாகத் தெரிகிறது. அதில் அஃப்தாப் மயிரிழையில் உயிர்தப்பினார். அவரது மகன் மற்றும் மருமகன் பலத்த காயமடைந்தவர்களில் அடங்குவர். அவரும் அவரது குடும்பத்தினரும் முதல் வரிசையில் இருந்தபோது தீவிரவாதி இரண்டாம் வரிசையில் இருந்துள்ளான்.

54 killed in suicide attack on Pak mosque


பெய்ரூட் குண்டு வெடிப்பில் ஜெனரல் பிரான்சுவா படுகொலை

December 13th, 2007 பகுப்புகள்: அரசியல், உலகம், குண்டுவெடிப்பு, கொலை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

லெபனானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர், ஜெனரல் பிரான்சுவா எல்.ஹஜ் , பெய்ரூட்டில் நடந்த ஒரு குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். வேறு இருவரும் கொல்லப்பட்ட இந்தக் குண்டுத்தாக்குதலின் இலக்கு இந்த ஜெனெரல்தான் என்று லெபனானிய இராணுவம் கூறியுள்ளது.

இராணுவத்தின் தற்போதைய தளபதி, ஜெனெரல் மிஷெல் சுலைமான் லெபனானின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், இவர்தான் அடுத்த ராணுவத் தளபதியாக வருவார் என்று கருதப்பட்டது.

இந்தக்குண்டுத்தாக்குதலுக்கு சிரியாதான் பொறுப்பு என்று சிரிய எதிர்ப்பு அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். ஆனால், இந்தச் சம்பவத்தின் காரணமாக அனுகூலம் பெறுவது இஸ்ரேலும் அதன் லெபனானிய ஏஜெண்டுகளுமே என்று சிரியா கூறியது.

லெபனானின் அரசியல் நெருக்கடிக்கு முடிவு கட்டுவதற்கும், கடந்த மாதம் பதவி விலகிய, முன்னாள் அதிபர், எமில் லஹூத் அவர்களுக்கு அடுத்தபடியாக வர ஒருவரை கண்டுபிடிப்பதற்குமான முயற்சிகளுக்கு ஜெனரல் எல்.ஹஜ்ஜின் மரணம் ஒரு பெரும் அடியாக இருக்கும் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Middle East | Men questioned over Lebanon blast

2. Recent attacks in Lebanon | Guardian Unlimited, UK

3. SFGate: World Views : Another political murder in Lebanon, another dashed hope for peace


இராஜ்தானி விரைவு இரயிலில் குண்டு வெடிப்பு

December 13th, 2007 பகுப்புகள்: இந்தியா, குண்டுவெடிப்பு | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

திப்ருகர் - புது தில்லிக்கிடையேயான இராஜ்தானி விரைவு இரயிலில் இன்று அசாமின் கொலகாட் பகுதியில் குண்டு வெடித்ததில் 2 பேர் இறந்து போயினர் நான்கு பேர் காயமடைந்தனர்.

அதிகாலை 2 மணிக்கு குண்டு வெடித்தது.

Blast in Rajdhani Express in Assam, 2 killed - TOI