சட்டம் - நீதி | சற்றுமுன்...




மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

July 23rd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, குற்றம், சட்டம் - நீதி, சற்றுமுன், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மனைவியை கொன்ற வழக்கில் பெங்களூர் சாமியாருக்கு ஆயுள் முழுவதும் சிறை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பெங்களூரை சேர்ந்த சாமியார் சரதானந்தா. இவரது மனைவி சாகேரா. சாகேராவின் சொத்துகளை அடைவதற்காக அவருக்கு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாமியார் சரதானந்தா கொடுத்தார். பின்னர் அவரை வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு நீதிபதிகள் பெஞ்சு முன்பு நடந்தது.

அதில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர், `மிகவும் அரிதான இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்’ என்றார். மற்றொரு நீதிபதி, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இரண்டு தீர்ப்புகளும் முரணாக இருந்ததால் வழக்கை மூன்று நீதிபதிகள் பெஞ்சுக்கு தலைமை நீதிபதி மாற்றினார்.

இதையடுத்து நீதிபதிகள் அகர்வால், சிங்வி, அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, “சொத்துக்காக மனைவியை கொலை செய்த சாமியார் சரதானந்தாவை ஆயுள் காலம் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும்” என மூன்று நீதிபதிகளும் ஒன்றாக உத்தரவிட்டனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=427197&disdate=7/23/2008


சென்னை : உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, குற்றம், கைது, கொலை, சட்டம் - நீதி, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

உருட்டு கட்டைகளுடன் பொதுமக்கள் ரோந்து: குடியிருப்பு காவலாளி வேடத்தில் போலீஸôர்

சென்னை வடபழனி அருகே உள்ள புதூர் மற்றும் ஒட்டகபாளையத்தில் பொதுமக்கள் இரவில் விடிய விடிய உருட்டு கட்டைகளுடன் ரோந்து சுற்றி வருகின்றனர்.

சைக்கோ மனிதன் பீதியால், அவர்கள் உருட்டு கட்டைகளுடன் வலம் வருவதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாகவும் போலீஸôர் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வடபழனி, கே.கே.நகர் பகுதிகளில் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகள், குப்பை பொறுக்கும் நபர்கள் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தல், தீ வைத்து எரித்தல் என சுமார் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் வடபழனி மற்றும் கே.கே.நகர், அசோக் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதூர் மற்றும் ஒட்டகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இரவு நேரங்களில் உருட்டு கட்டைகளுடன் வலம் வருகின்றனர். அவ்வழியே செல்பவர்களும் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

காவலாளி வேடத்தில்…: காவலாளிகள் குறி வைத்து கொல்லப்பட்டு வருவதால், போலீஸôரே நேராக அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளாக மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரி சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸôர் காவலாளிகளாக இரவு ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குப்பை பொறுக்கும் நபர்களாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போலவும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகப் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

அசோக்நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த நேபாள இளைஞர்கள் 3 பேரை பிடித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.


காடுவெட்டி குரு அதிகாலையில் கைது

July 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், குற்றம், கைது, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

காடுவெட்டி குரு அதிகாலையில் கைது

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்துக்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் சென்று குருவை கைது செய்தனர்.
காடுவெட்டியைச் சேர்ந்த குரு வன்னியர் சங்க மாநிலத் தலைவராக உள்ளார். கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, அதிமுக பாசறையைத் தொடங்கவுள்ளதாகக் கூறிய காடுவெட்டியைச் சேர்ந்த ஜெ. குணசேகரன் (33) என்பவரை குருவின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில், குரு உள்பட 4 பேர் மீது மீன்சுருட்டி போலீஸôர் மே 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
குரு கைது செய்யப்பட்டதையொட்டி வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.


பாபர் மசூதி இடிப்பு: விசாரணைக் கமிஷன் காலம் 46-வது முறை நீடிப்பு

July 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பாபர் மசூதி இடிப்பு: விசாரணைக் கமிஷன் காலம் 46-வது முறை நீடிப்பு

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து வரும் லிபெரான் விசாரணைக் கமிஷனின் பணிக் காலம் மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி மன்மோகன் சிங் லிபெரான் தலைமையிலான இந்தக் கமிஷனின் பணிக்காலம் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து தற்போது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் கமிஷனின் பணிக்காலம் நீடிக்கப்படுவது இது 46-வது முறையாகும்.

இதுவரை கமிஷன் விசாரணைக்காக ரூ. 7 கோடி செலவிடப்பட்டுள்ளது.
 
 


ஸ்காட்லாந்து யார்ட் தலைவர் மீது ஆசிய அதிகாரி இனவெறி புகார்

June 27th, 2008 பகுப்புகள்: உலகம், சட்டம் - நீதி | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

உலகப் புகழ் பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீஸின் தலைவர் சர் இயான் பிளேர் இனவெறியுடன் நடந்து கொள்வதாக ஆசியாவை பூர்வீகமாக கொண்ட இங்கிலாந்து காவல்துறை அதிகாரி தாரிக் கஃபூர் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வழக்கு தொடரப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்..

ஸ்காட்லாந்து போலீஸில் உதவி ஆணையராக இருப்பவர் தாரிக் கஃபூர். உகாண்டாவை பூர்வீமாகக் கொண்டவர். தன்னை ஸ்காட்லந்து போலீஸ் தலைவர் பாரபட்சத்துடனும், இனவெறியுடனும் நடத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

2012ம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடர் பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டங் களுக்கு தன்னை அழைக்காமல் புறக்கணித்து விட்டதாக அவர் கூறி யுள்ளார். இதற்கு ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தலைவர் சர் இயான் பிளேர்தான் காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பே பிளேருக்கம், கஃபூருக்கும் இடையே மோதல் மூண்டு விட்டதாக கூறப்படுகிறது. கஃபூரை வேண்டும் என்றே முக்கியத்துவம் இல்லாத பணிகளில் பிளேர் நியமித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில்தான் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஷபீர் ஹூசேன் என்ற அதிகாரியும், பிளேர் தன்னிடம் இனவெறி அணுகுமுறையைக் ந கயாளுவததாக குற்றம் சாட்டியிருந்தார். ஆசியர்களையும், பிற சிறுபா ன்மையினரையும் அவர் புறக்கணிப்பதாகவும், தனக்கு ஜால்ரா போடுபவ ர்களை மட்டுமே பக்கத்தில் வைத்துக் கொள்வதாகவும் அவர் கூறியி ருந்தார். இந்த நிலையில் இன்னொரு மூத்த அதிகாரியும் பிளேர் மீது குற்றம் சாட்டியிருப்பது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஃபூரின் குற்றச்சாட்டுக்கு, தேசிய கருப்பர் இன போலீஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. விரைவில் பிளேருக்கு எதிராக கஃபூர் வழக்கு தொடரவிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.


அதிகாரம் என்பது அதிகாரம் செலுத்துவதற்குக் கிடையாது : நாஞ்சில் குமரன்

June 1st, 2008 பகுப்புகள்: *பொது, ஆளுமை, சட்டம் - நீதி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

போலீஸ் கமிஷனராக இருந்த படியே பணியில் இருந்து ஓய்வு பெறுவது காவல் துறை வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சென்னை மாநகர கமிஷனராக இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாஞ்சில் குமரனுக்கு, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பணி நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அவருக்கு சிறப்பு அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது. மனைவி மங்களம், மகள் திவ்யா ஆகியோருடன் நாஞ்சில் குமரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “அதிகாரம் என்பது அதிகாரம் செலுத்துவதற்குக் கிடையாது. மக்களுக்கு சேவை செய்யவே அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். சென்னை கமிஷனராகப் பொறுப்பில் இருப்பது என்பது சவால் நிறைந்த பணியாகும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்’ என்றார்.

கமிஷனராக இருந்த படியே ஓய்வு பெற்றது சிறப்பு: 93-வது கமிஷனராகப் பொறுப்பேற்ற கமிஷனர் நாஞ்சில் குமரன், கமிஷனராக இருந்தபடியே ஓய்வு பெறுவது என்பது சிறப்பம்சம். இதற்கு முன்னர் யாருக்கும் இம்மாதிரி வாய்ப்பு கிட்டவில்லை. சென்னை காவல்துறை வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
 


ராஜஸ்தான் மாநிலத்தில் மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

May 25th, 2008 பகுப்புகள்: அரசியல், இடஒதுக்கீடு, கலவரம், கிளர்ச்சி, சட்டம் - நீதி, சமூகம், மரணம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனத்தாருக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது என இந்திய பொலிசார் கூறுகின்றனர்.

கலவரத்தை அடக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருக்கும் தங்கள் இனத்தை பழங்குடியினத்தவராக அரசு அங்கீகரித்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் சிறப்பு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென குஜ்ஜார்கள் கோரிவருகின்றனர்.

சுமார் ஓராண்டுக்கு முன்னரும் இதேபோல் ஒரு போராட்டமும் கலவரமும் நடந்து அதில் இருபது பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. NDTV.com: Gujjar leader refuses talks with govt

2. Class violence leaves 35 dead in India - CNN.com

3. The Statesman: “Cops gun down 18 more Gujjars”


உறவினருக்கு பரிந்துரை: அமைச்சர் பூங்கோதை ராஜினாமா

May 14th, 2008 பகுப்புகள்: ஊழல், சட்டம் - நீதி, தமிழக அரசியல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றுவதற்காக ஏடிஜிபியிடம் பரிந்துரை செய்த விவகாரத்தில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

DMK Minister - Resignation for Corruption: Phone tapping by Subramania Swamyதமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் துணை இன்ஜினியர் ஜவஹர் என்பவர் சமீபத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் அமைச்சர் பூங்கோதையின் உறவினர் ஆவார். ஜவஹரை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, தமிழக ஏடிஜிபி உபாத்யாயாவை அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடியை, ஜனதா தளம் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆதாரத்துடன் வெளியிட்டார். இதுகுறித்து கவர்னரிடமும் அவர் புகார் செய்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் பேரவையில் இன்று எழுப்பிய பிரச்சனைக்கு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போதைய விஞ்ஞான யுகத்தில் ஒருவர் பேசுவதை மற்றொருவர் பதிவு செய்வது எளிதானது. எனினும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியுடன் பேசியதாக செய்தி வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அமைச்சர் என்பது வேதனையை தருகிறது.

இதற்கு பொறுப்பேற்று தனது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் பூங்கோதை அனுப்பி வைத்துள்ளார். உறவினரை காப்பாற்ற முயற்சிக்கும் செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்று. தனது தவற்றை உணர்ந்து அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து வேறொரு விசாரணைக் குழு தேவையா? அல்லது தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்கும் குழுவே போதுமா? என்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படுகிறது.

லஞ்சம் வாங்குவோருக்கு ஆதரவாக செயல்படுவது குற்றம் ஆகும். நிச்சயம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.

நன்றி: எம்.எஸ்.என் & யாஹு

மேலும் விவரங்களுக்கு: Tamil Nadu minister quits after expose - National News – News – MSN India - News


ஜெய்ப்பூரில் தொடர் குண்டு வெடிப்புகள்

May 13th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, இந்தியா, குண்டுவெடிப்பு, சுற்றுலா, தீவிரவாதம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | மறுமொழிகள் இல்லை » |

ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கூட்டம் நிறைந்த சந்தைப்ப்பகுதியில் தொடர்ந்து குறைந்தபட்சம் ஐந்து வெடிகுண்டுகளாவது வெடித்திருக்கலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

Blasts rock Indian tourist city - BBC


தசாவதாரம்: தடை கோரி வழக்கு

May 10th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், சட்டம் - நீதி, திரைப்படம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 2 மறுமொழிகள் » |

பிரபல தமிழ் நடிகர் கமலஹாசன் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘தசாவதாரம்’ என்கிற தமிழ் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்கும்படி, உலகளாவிய ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சங்கம் என்கிற அமைப்பை சேர்ந்த கோவிந்த ராமானுஜதாசா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

திரைப்படத்தின் விளம்பரங்களில் காட்டப்படும் காட்சிகள், வைஷ்ணவர்கள் பெரிதும் மதித்துப் போற்றும் ராமானுஜரையும் பெருமாளையும் இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகவும், அவர் தமது மனுவில் கூறியிருக்கிறார். அவரது மனுவை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

கோவிந்த ராமானுஜதாசா அவர்களின் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் அவர்கள், தமது திரைப்படத்தில் ராமானுஜரையோ, இந்துமதத்தையோ இழிவுபடுத்தும் காட்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று கூறினார்.

தமது திரைப்படத்தை அதன் முழுமையான வடிவத்தில் பார்த்தால் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாது என்றும் கூறிய அவர், இந்து மதம் உட்பட எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தமக்கோ தமது திரைப்படத்திற்கோ இல்லை என்றும் கூறினார்.

நன்றி: பிபிசி


த. கிருட்டினன் கொலை வழக்கு: அழகிரி நிரபராதி

May 8th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, குற்றம், தீர்ப்பு, நீதிமன்றம் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | ஒரு மறுமொழி » |

முன்னாள் அமைச்சர் த. கிருட்டினன் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து தகுந்த ஆதாரங்களில்லாததால் மு.க. அழகிரியும் மேலும் 12பேரும் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Karunanidhi’s son acquitted in murder case - IBNLive


ஹஜ் : 2008 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து !

April 18th, 2008 பகுப்புகள்: ஆன்மீகம், இந்தியா, சட்டம் - நீதி, சவூதி, நாடாளுமன்றம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

வரும் 2008ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர். ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம்விளக்கினார்.

இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் ‘பச்சை’ வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் வெள்ளை’ வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி ‘அசிசியா’ பகுதி என்றும் குறிப்பிடப்படும். இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும்.

கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது சௌதிக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், சார்தூதர் டாக்டர்.அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.வரும் 2008ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் சௌதி ஹஜ் அமைச்சர் டாக்டர். ஃபுவாத் அல்ஃபார்சியுடன் கையெழுத்தான பின் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமத் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம்விளக்கினார்.

இவ்வாண்டு 1,57,000 யாத்திரிகர்கள் ஹஜ் செய்வதற்காக சௌதிஅரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், கூடுதலாக 15,000 யாத்திரிகர்களுக்காக அனுமதி கோரியிருப்பதாகவும் அதற்கு அநேகமாக ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒப்புதல் கிடைத்திருக்கும் 1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்திரிகர் வருவர் என்றும் மீதிஇடங்கள் தனியார முகவர் மூலம் வருபவர்க்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்காவின் புனிதப்பள்ளி விரிவாக்கப் பணியின் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்திரிகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்கள் இவ்வாண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

புனிதப்பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் ‘பச்சை’ வகைப் பகுதி என்றும், 1 முதல் 6கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் வெள்ளை’ வகைப் பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி ‘அசிசியா’ பகுதி என்றும் குறிப்பிடப்படும். இதில் பச்சைவகைப் பகுதிக்கு யாத்திரிகரிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளைவகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் எல்லைகளுக்கு உட்பட்டிருக்கும்.

கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகள் முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது சௌதிக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், சார்தூதர் டாக்டர்.அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.