விருது | சற்றுமுன்...




கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

August 15th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சாதனை, பெண்கள், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ் விருது பெறுபவருக்கு ரூ. 5ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இந்த விருதினை முதல்- அமைச்சர் கருணாநிதி சுதந்திர தின விழாவின் போது வழங்குவார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.ஜோதி நிர்மலா இந்த ஆண்டுக்கான துணிவு மற்றும் சாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

ஜோதி நிர்மலா பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த காலத்தில் ஆற்றுப் பகுதிகளுக்கு சென்று துணிச்சலுடன் மணல் கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி முழுமையாக மணல் திருட்டை அடியோடு ஒழித்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு அச்சுறுத்தலுக்கு இடையேயும் துணிவோடு செயல்பட்டு மதக்கலவரம், திருட்டு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் சமூக விரோத செயல்களையும் தடுத்து நீதியை நிலைநாட்ட தீரமுடன் போராடிய அவரது மன உறுதியினைப் பாராட்டி இந்த வருடத்திற்கான 2008 கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளது என்று பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் கூறினார்.

பாராட்டு விழா

கடந்த 2006-ம் ஆண்டு “வாருங்கள் கிராமம் செல்வோம்” என்ற திட்டத்தை கிராமப்புறங்களில் செயல்படுத்தி சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி டாக்டர் அஷ்ரப்பிற்கு மருத்துவ துறையில் தேசிய அளவில் மிக உயர்ந்த விருதான பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு திருச்சி கிளை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர் குணசேகரன், டாக்டர்கள் ஞானதிலகன், கலைக்கோவன், எஸ்.எம்.ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அஷ்ரப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கிராமங்கள் தத்தெடுப்பு

ஒரு நாள் மருத்துவ முகாம்கள் நடத்துவதால் கிராமப்புற மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் செல்ல வேண்டும். வியாதிக்கான மருந்துகள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். இந்திய மருத்துவ கூட்டமைப்பில் 2500 கிளைகள் உள்ளன. இதன் மூலம் 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளோம்.

கடந்த 60 வருடத்தில் நாம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையே இடைவெளி நீடிக்கிறது. டாக்டர்களின் அணுகுமுறை நோயாளிகளிடம் சிறந்ததாக இருக்க வேண்டும். சாலை விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். நான் அடுத்ததாக சாலை விபத்துக்கள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் கீதாராமனுஜம் நன்றி கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=426581&disdate=7/20/2008&advt=2


தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

May 24th, 2008 பகுப்புகள்: ஆளுமை, விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சமுதாய நல்லிணக்க அமைப்பின் தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனிநபர், ஓர் அமைப்பு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகத்தில் செயல்படும் மாணவர் பேரவை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு தனிநபர் தேசிய ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கத்திற்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது 35-க்கு மேல் இருக்க வேண்டும். சட்டப் பேரவை, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும்.

அமைப்பைப் பொருத்த வரையில், அந்த அமைப்பு சட்டப் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் துறையில் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற மாணவர் பேரவை சம்பந்தப்பட்ட துணைவேந்தர் விருதுக்கான செயற்குறிப்பை பரிந்துரைக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் குறைந்தது 5 ஆண்டுகால அளவில் தொடர்ச்சியாக, குறிப்பிடும்படியாக செயலாற்றியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதியில் சமுதாய நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்யும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையைப் பொருத்தவரை மாநகர காவல்துறை ஆணையரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.
 
 


இந்திய வானொலிக்கு சர்வதேச பரிசு

May 23rd, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, ஊடகம், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய வானொலிக்கு சர்வதேச பரிசு     

 

All India Radio

ஈரானில் நடைபெற்ற 9-வது சர்வதேச வானொலி விழாவில் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய வானொலியின் ஒரிசா சம்பல்பூர் ஒலிபரப்பு நிலையம் தயாரித்த ‘ஜனிபா, ஆமே கமா கரிபா’ (உலகளாவிய சிந்தனையும், உள்ளூர் செயல்பாடும்) என்ற சிறுவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரானில் நடந்த சர்வதேச வானொலி விழாவில் ஒலிபரப்பப்பட்டது. பத்மலோசன்தாஸ் என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒரிய மொழியில் இந்த நிகழ்ச்சியை தயாரித்திருந்தார்.

வானிலை மாற்றங்கள், நாட்டின் வளங்களை பாதுகாத்தல் போன்ற விஷயங்களை தனது இரண்டு குழந்தைகளுக்கு ஒரு தாய் தாலாட்டாக போதிப்பது போன்று இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு விழாவில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் சிறந்த நிகழ்ச்சிகளுக்கான முதல் பரிசையும் தட்டிச் சென்றது.

இதையொட்டி தயாரிப்பாளர் பத்மலோசன் தாஸுக்கு 2000 யூரோ ரொக்கப்பரிசும், தங்க விக்கிரகமும் பரிசளிக்கப்பட்டது. கடந்த 2007ல் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஈரான் வானொலி நடத்திய போட்டியிலும் சிறந்த நிகழ்ச்சிக்கான முதல் பரிசையும் தாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.


அம்பேத்கர் விருது: திருமாவளவன் நாளை வழங்குகிறார்

April 14th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, விருது | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் நாளை நடைபெறும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. திருச்சி உழவர் சந்தை திடலில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை புரிந்த 6 பேருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்,

  1. பாவலர் இன்குலாபிற்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்படுகிறது.
  2. ‘சொல்லின் செல்வர்’ ஆ.சக்திதாசனுக்கு ‘அயோத்தி தாசர் ஆதவன்’ விருதும்,
  3. வே.ஆணைமுத்துவிற்கு ‘பெரியார் ஒளி விருது’ம் வழங்கப்படுகிறது.
  4. இலக்கிய செல்வர் குமரி அனந்தனுக்கு ‘காமராசர்’ விருது,
  5. அப்துல் நாசிர் மதானிக்கு ‘காயிதே மில்லத் பிறை’ விருது,
  6. கவிஞர் காசி ஆனந்தனுக்கு ‘செம்மொழி ஞாயிறு’

ஆகிய விருதுகளை திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார்.

நன்றி: யாஹூ


உலக அழகி 2008 க்கு கேரள பெண் தேர்வு

April 6th, 2008 பகுப்புகள்: தகவல், பொழுதுபோக்கு, விருது | தொகுப்பாளர்: மணியன் | 5 மறுமொழிகள் » |

Miss World 2008சனி இரவு நடந்த பண்டலூன் பெமீனா உலக அழகி 2008 போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 20 வயது பார்வதி ஓமனக்குட்டன் பட்டம் சூட்டப்பட்டார்.மும்பையைச் சேர்ந்த 22 வயதுள்ள சிம்ரன் கௌர் இரண்டாவதாக (முதல் ரன்னர் அப்)வந்து பிரபஞ்ச அழகி 2008 போட்டிக்கு இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மூன்றாவது இடத்தில் 20 வயதுள்ள கோவாவைச் சேர்ந்த ஹர்ஷிதா சக்ஸ்சேனா தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Kerala girl wins Miss World crown


உலக கேரம் சாம்பியன் இளவழகியின் துயரங்கள்

February 28th, 2008 பகுப்புகள்: சென்னை, விருது, விளையாட்டு | தொகுப்பாளர்: மணியன் | 7 மறுமொழிகள் » |

Ilavazhagi.jpgஉலகின் பிறநாட்டு விளையாட்டுவீரர்களுக்கு கோடிகளில் பணம் வழங்கும் இந்தியாவில் உலக அரங்கில் கேரம் விளையாட்டில் விருதுகளை சத்தமின்றி கொணர்ந்து சேர்க்கும் இளவழகியின் சாதனைகளை ‘கண்டு’கொள்ள நேரமெங்கே ? தானி ஓட்டுநரின் 24 வயது மகளான இவருக்கு தனது சாதனைகளை ஊடகங்கள் கவனிக்கவில்லையே என இருக்கும் மனவருத்தம் சொல்லில் வடிக்க முடியுமா ?
உலக அரங்கில் அவரது சாதனைகள் உலகசாம்பியன் பட்டம்வரை உயரும்போது அவரது வரவேற்பு குழுக்கள் அதே விகிதத்தில் குறைந்து வந்துள்ளது. பிரான்ஸின் கான்நகரில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் போட்டியில் பெண்களூக்கான முதன்மை விருது பெற்றார். இவரை எதிர்த்து இறுதி ஆட்டத்தில் ஆடியவரும் இந்தியரே; நிர்மலா என்பவரை 25-11,25-11 என்ற கணக்கில் வென்றார். தவிர இந்தியாவில் பிப்.7இல் நடந்த போட்டிகளில் முதலாவதாக வந்தார்.

வடசென்னையின் வியாசர்பாடியைச் சேர்ந்த இளவழகி தானி ஓட்டுநர் இருதயராஜ் மற்றும் செல்விக்கு முதல் மகளாவார்.அவரது எதிர்காலம் என்ன என்பதே இருதயராஜின் கவலை. இளவழகி கடந்த ஒருவருடமாக ஒரு வேலை தேடியவாறே காரம் ஆடிவந்துள்ளார்.

பிரான்சிலிருந்து வெற்றிவாகை சூடி சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு வந்த அவரை வரவேற்க அவரது தந்தையும் தங்கையும் சென்னை மாவட்ட காரம் அதிகாரிகளுமே இருந்தனர்.அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு மலர்கொத்தைக் கண்டே மிகவும் மகிழ்ந்தார்.

Did you know - world carom champ is Chennai girl

கடைசிச் செய்தி : இளவழகிக்கு தமிழ் மையம் ரூ. ஒரு இலட்சம் பரிசளிப்பு. அரசு உதவி அளிக்க கனிமொழி உறுதி


அமெரிக்க இராணுவ தடுப்புக்காவலில் இறந்த ஆப்கானிய இளைஞருக்கு ஆஸ்கர் விருது விழாவில் அஞ்சலி

February 25th, 2008 பகுப்புகள்: அமெரிக்கா, அரசியல், ஆசியா, உலகம், கலை-இலக்கியம், குறும்படம், திரைப்படம், திரையுலகம், விருது | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஹாலிவுட்டில் நடந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவின்போது அமெரிக்க இராணுவத்தின் தடுப்புக் காவலில் இறந்த ஆப்கானிய இளம் வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

டாக்ஸி ஆன் த டார்க் சைட் என்ற படத்துக்காக சிறந்த விவரணப் பட விருதை வாங்கிய அமெரிக்க இயக்குநர் அலெக்ஸ் கிப்னீ, தனது படைப்பை டிலாவர் என்றஅந்த 22 வயது ஓட்டுநருக்கு அர்ப்பணித்தார்.

2002ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு சிறையில் நிகழ்ந்த அவரது மரணம், அமெரிக்கப் படைகளின் புலன் விசாரணை உத்திகளை ஆராய்வதாக அமைந்துள்ள இந்தப் படத்தின் கருவாக ஆனது. அவர் குற்றமற்றவர் என்று விசாரணையாளர்கள் முடிவுதெரிவித்த பின்னரும் அவர் மோசமாக நடத்தப்பட்டதாக பிற்பாடு ரகசியமாக கசியவிடப்பட்ட ஒரு அமெரிக்க இராணுவ அறிக்கையில் கண்டறியப்பட்டிருந்தது.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. www.kansascity.com | 02/24/2008 | Documentary | ‘Taxi to the Dark Side’

2. BBC NEWS | South Asia | Oscars tribute to torture victim

3. Think Progress » Taxi to the Dark Side wins best documentary.


கற்பழிப்பு வெறியருக்கு அரசு “நல்லாசிரியர்’ விருது

February 9th, 2008 பகுப்புகள்: குற்றம், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஒரு மறுமொழி » |

கற்பழிப்பு வெறியருக்கு அரசு “நல்லாசிரியர்’ விருது
 

குஜராத் மாநிலம் படானில் உள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர் பயிற்சி கல்லுõரியில், தலித் மாணவியை ஆசிரியர்கள் பலர், பல முறை கற்பழித்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த ஆசிரியரில் ஒருவர் நல்லாசிரியர் விருது பெற்றது திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

படானில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் செக்ஸ் சில்மிஷங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வகுப்பறைகளிலேயே மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷங்கள் செய்வது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது, அருவெறுப்பான வகையில் ஜோக் சொல்வது, ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஆசிரியர்கள் பலரும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது அம்பலத்துக்கு வந்துள்ளது.ஆசிரியர்களின் செயல்பாடுகள் பற்றி வெளியில் சொன்னால், மாணவிகளின் செயல்முறை தேர்வு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்று மிரட்டி வந்துள்ளனர். தலித் மாணவி ஒருவர் பல ஆசிரியர்களால், பலமுறை கற்பழிக்கப்பட்டார். ஆசிரியர்களின் கொடுமை தாங்காமல், இது குறித்து அந்த மாணவி புகார் செய்ததும் தான், அந்த கல்லுõரியின் ஆசிரியர்களின் செக்ஸ் வெறி அம்பலத்துக்கு வந்தது.

www.dinamalar.com
 


பிரணாப் முகர்ஜி, டாடாவுக்கு பத்ம விபூஷண் விருது: மம்தா எதிர்ப்பு

January 28th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, இந்தியா, விருது | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்குவதற்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“அரசியல் காரணங்களுக்காகத்தான் பிரணாப் முகர்ஜிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாட்டுக்கு என்ன சேவை செய்திருக்கிறார்” என்றார் மம்தா.

“மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார் பிரணாப் முகர்ஜி. தில்லியில் காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை வெளியிடுகிறார். அரசியல் காரணங்களுக்காகத்தான் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்” என்றும் மம்தா கூறினார்.

“இதே போல தொழிலதிபர் டாடாவுக்கு பத்ம விபூஷண் வழங்கப்பட்டிருப்பதும் அரசியல் காரணங்களுக்காகத்தான். இந்த விருது அரசியல் விருதாக மாறிவிட்டது. நீச்சல் வீராங்கனை பூலா சௌத்ரிக்கும் பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அவரை நாங்கள் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாகத்தான் கருதுகிறோம்” என்றார் மம்தா பானர்ஜி.

நன்றி: தினமணி


அமீரக இந்திய தொழிலதிபருக்கு பத்மஸ்ரீ விருது

January 26th, 2008 பகுப்புகள்: அமீரகம், தொழில், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அமீரக இந்திய தொழிலதிபருக்கு பத்மஸ்ரீ விருது

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்பொருள் அங்காடிகளை நடத்தி வரும் கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலிக்கு இந்திய அரசின் பதம்ஸ்ரீ விருது சமுதாயப் பணிக்காக இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இவ்விருதைப் பெறும் முதலாமவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2008/January/theuae_January759.xml&section=theuae&col=

http://www.luluhypermarket.com/

http://www.emkegroup.ae

http://www.mecsc.org/newsletter/nlnews_view.php?id=276


எழுத்தாளர் சிவசங்கரிக்கு கோபிசந்த் இலக்கிய விருது

January 25th, 2008 பகுப்புகள்: கலை-இலக்கியம், விருது | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!ஆந்திர மாநிலத்தின் இலக்கிய கலைக் குழுவான யுவகலாவாஹினியின் ‘கோபிசந்த் இலக்கிய தேசிய விருது’ தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்படுகிறது.

கடந்த இருபதாண்டுகளாக தெலுங்கு எழுத்தாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த இந்த விருதை, இந்திய மொழிகள் அனைத்திற்குமான தேசிய விருதாக மாற்ற இவ்வாண்டு தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல் விருதுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் விழாவில், ஞானபீட விருது பெற்ற பிரபல தெலுங்கு கவிஞரான டாக்டர் சி. நாராயண ரெட்டி போன்ற முன்னணி இலக்கியவாதிகளின் முன்னிலையில், அவருக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது.

நன்றி: தினமணி