கலை-இலக்கியம் | சற்றுமுன்...




கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

August 15th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, சாதனை, பெண்கள், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது: கருணாநிதி வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ் விருது பெறுபவருக்கு ரூ. 5ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இந்த விருதினை முதல்- அமைச்சர் கருணாநிதி சுதந்திர தின விழாவின் போது வழங்குவார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.ஜோதி நிர்மலா இந்த ஆண்டுக்கான துணிவு மற்றும் சாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

ஜோதி நிர்மலா பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த காலத்தில் ஆற்றுப் பகுதிகளுக்கு சென்று துணிச்சலுடன் மணல் கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி முழுமையாக மணல் திருட்டை அடியோடு ஒழித்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு அச்சுறுத்தலுக்கு இடையேயும் துணிவோடு செயல்பட்டு மதக்கலவரம், திருட்டு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கள்ளச்சாராயம், போதை பொருள் மற்றும் சமூக விரோத செயல்களையும் தடுத்து நீதியை நிலைநாட்ட தீரமுடன் போராடிய அவரது மன உறுதியினைப் பாராட்டி இந்த வருடத்திற்கான 2008 கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

July 20th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, உடல்நலம், சுற்றுச்சூழல், மருத்துவம், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்கள் தத்தெடுப்பு : பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் பேச்சு

இந்திய மருத்துவ கூட்டமைப்பு 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளது என்று பி.சி.ராய் விருது பெற்ற டாக்டர் அஷ்ரப் கூறினார்.

பாராட்டு விழா

கடந்த 2006-ம் ஆண்டு “வாருங்கள் கிராமம் செல்வோம்” என்ற திட்டத்தை கிராமப்புறங்களில் செயல்படுத்தி சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி டாக்டர் அஷ்ரப்பிற்கு மருத்துவ துறையில் தேசிய அளவில் மிக உயர்ந்த விருதான பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

விழாவிற்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு திருச்சி கிளை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர் குணசேகரன், டாக்டர்கள் ஞானதிலகன், கலைக்கோவன், எஸ்.எம்.ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அஷ்ரப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

கிராமங்கள் தத்தெடுப்பு

ஒரு நாள் மருத்துவ முகாம்கள் நடத்துவதால் கிராமப்புற மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை. தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் செல்ல வேண்டும். வியாதிக்கான மருந்துகள் எங்கெல்லாம் கிடைக்கிறது என்று அவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். இந்திய மருத்துவ கூட்டமைப்பில் 2500 கிளைகள் உள்ளன. இதன் மூலம் 5 ஆயிரம் கிராமங்களை தத்தெடுத்து உள்ளோம்.

கடந்த 60 வருடத்தில் நாம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியால் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையே இடைவெளி நீடிக்கிறது. டாக்டர்களின் அணுகுமுறை நோயாளிகளிடம் சிறந்ததாக இருக்க வேண்டும். சாலை விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். நான் அடுத்ததாக சாலை விபத்துக்கள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் கீதாராமனுஜம் நன்றி கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=426581&disdate=7/20/2008&advt=2


தினமணி - நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி கட்டுரைப் போட்டி: கள்ளக்குறிச்சி, காட்டுமன்னார்குடி மாணவிகளுக்கு முதல் பரிசு

July 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், கலை-இலக்கியம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | Comments Off |

தினமணி - நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி கட்டுரைப் போட்டி: கள்ளக்குறிச்சி, காட்டுமன்னார்குடி மாணவிகளுக்கு முதல் பரிசு

தினமணி- நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவினர் இணைந்து, மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் இடையே நடத்திய கட்டுரைப் போட்டியில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தமிழ்செல்வியும், காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவி அ.ஐரிஷ்பானுவும் முதல் பரிசு பெற்றுள்ளனர். கல்லூரி மாணவ, மாணவியருக்கான போட்டியில் முதலிடம் பெற்றுள்ள தமிழ்ச்செல்வி, இந்திலி ரா.க.சண்முகம் கலை அறிவியல் கல்லூரி மாணவி ஆவார். பிஎஸ்சி மாணவியான இவர் ரூ. 2,000 பரிசுத் தொகை பெறுகிறார்.

சென்னை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எம்எஸ்சி மாணவி க.நித்தியா 2-ம் பரிசையும் (ரூ. 1,500), நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியச் சேர்ந்த பிகாம் மாணவி மு.அன்னலட்சுமி 3-ம் பரிசையும் (ரூ.1000) பெற்றுள்ளனர்.

இது தவிர்த்து 5 ஆறுதல் பரிசு (ரூ.500) பெற்ற கல்லூரி மாணவர்கள் வருமாறு: ம.சரவணன், நேஷனல் கல்லூரி திருச்சி; சி.ராணி, சேவாமந்திர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் பரங்கிப்பேட்டை; தி.பிரியதர்ஷ்னி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி, வடபுதுப்பட்டி தேனி; அ.சந்திரரேகா சேவாமந்திர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் பரங்கிப்பேட்டை; ஆரோக்கிய நெப்போலியன் குமார், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி……..

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080713124141&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=7/14/2008&dName=No+Title&Dist=


சாகித்திய அகாதமியைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 8th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், அரசியல், இந்தியா, ஊழல், கலை-இலக்கியம், கிளர்ச்சி, சமூகம், தகவல், தமிழ், போராட்டம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | 6 மறுமொழிகள் » |

சாகித்திய அகாதமியில் புதுச்சேரிக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து புதுச்சேரியில் இன்று (08-06-2008) காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தமிழ் அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

சாகித்திய அகாதமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக புதுச்சேரி அரசின் பரிந்துரையின்படி மகரந்தன, தமிழக அரசின் பிரதிநிதியாக இராம.குருநாதன், பல்கலைக்கழக பிரதிநிதியாக இரா.மோகன் மற்றும் தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாக சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராக சிற்பி பாலசுப்ரமணியத்தை மற்ற மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து தேர்வு செய்தனர். மேலே உள்ள நான்கு பொதுக்குழு உறுப்பினர்களும் சேர்ந்து மேலும் 6 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படியில் புதுச்சேரி மகரந்தன் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய மூவர் பெயரை ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்ரமணியத்திடம் அளித்துள்ளார். ஆனால், இவர் பரிந்துரை செய்த ஒருவரையும் நியமிக்காமல் தன்னிச்சையாக தனக்கு வேண்டிய ஒருவரை சிற்பி நியமித்துள்ளார். பரிந்துரையின் அடிப்படையிலோ அல்லது மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசனையின் அடிப்படையிலோ அவர் தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அவர் தேர்வு செய்துள்ளார். இது புதுச்சேரி இலக்கிய வட்டத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பணத்தில் இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் தமது உறுப்பினர்களுக்கே வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் போது, பொதுமக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க இயலும் என்று இந்த தமிழ் அமைப்புகள் கோருகின்றன.

மேலும் புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒன்பது திட்டமங்களை மகரந்தன் அளித்திருந்தார் அதில் அத்தனையும் அதன் ஒருங்கிணைப்பாளர் நிராகரித்துள்ளார். புதுச்சேரியோ அதன் அருகிலுள்ள மாவட்டங்கள் எதிலும் நிகழ்ச்சி எதற்கும் இதன் ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளிக்கவில்லை. பிறகு ஏன் புதுச்சேரி பகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி என்று புதுவையைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுபபினர். சென்ற பத்து ஆண்டுகளாக புதுச்சேரியில் சாகித்திய அகாதமி சார்பாக இரண்டே இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன.

அத்துடன் ஆரோவில் (தமிழகம்) பகுதியைச் சேர்ந்த இரா.மீனாட்சி என்பவரை சிற்பி அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளனர். அவர் தமிழ் இன விரோத சிந்தனை கொண்டவர். எனவே, அவரை திரும்பப் பெற வேண்டும். புதிதாக புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் கோரினர்.

புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் திராவிடர்க் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு, புதுச்சேரி பூர்வ குடிமக்கள் உரிமைப் பாதுகாப்பு பேரவை, மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் தேசிய இயக்கம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், சமூக நீதி போராட்டக் குழு இராவணன் பகுத்தறிவு இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை உள்ளிட்ட 27 அமைப்புகள் சேர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் ஒரு தொடக்கம் தான் “சாகித்திய அகாதமியின்” நடவடிக்கை ஏதும் மேற் கொள்ளாமல் புதுச்சேரியைத் தொடர்ந்துப் புறக்கணிக்குமானால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் தெரிவித்தார்.


கருணாநிதி பிறந்த நாள் இனி புத்தக திருநாள்!

June 1st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, கலை-இலக்கியம், தகவல், பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கருணாநிதி பிறந்த நாள் இனி புத்தக திருநாள்!     

தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி இனி புத்தகத் திருவிழா தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது தமிழ்நாடு தமிழ்ப் பதிப்பாளர் சங்கம்.

இந்த அறிவிப்பை ஜெயகாந்தன் இன்று வெளியிட்டார்.

தமிழ் மொழி, தமிழ்ப் பதிப்பாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் வாசகர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல சிறந்த திட்டங்களைச் செய்தவர் முதல்வர் கலைஞர். எனவே இப்படி ஒரு விழாவுக்கும் போற்றுதலுக்கும் உரியவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் வியப்பில்லை என்றார் ஜெயகாந்தன்.

தமிழை உயர் தனிச் செம்மொழியாக்கப் பாடுபட்டது, பொது நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகப் பிரதிகளின் எண்ணிக்கையை 600லிருந்து 1000 ஆக உயர்த்தியது, தனது சொந்த நிதி ஒரு கோடியை அளித்து, அதிலிருந்து வரும் வட்டித் தொகையைக் கொண்டு ஆண்டுதோறும் 5 தமிழ் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதமும், பிற மொழி எழுத்தாளர் ஒருவருக்கு ஒரு லட்சமும் கொடுத்து வருவது,

ரூ.100 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைந்திட அனைத்து முயற்சிகளையும் செய்தது, பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் உதவிடும் வகையில் புத்தகப் பூங்கா அமைத்திட உத்தரவிட்டது என கருணாநிதி செய்த ஏராளமான தமிழ்ப் பணிகளுக்காக இந்தச் சிறப்பு அவருக்கு செய்யப்படுவதாக தமிழ்நாடு தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

பொது நூலகத்துறையைச் சேர்ந்த மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், தமிழ் வளர்ச்சித் துறை, கன்னிமாரா நூலகம், உலகம் முழுவதிலுமுள்ள தமிழ்ப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இனி ஜூன் 3ம் நாளை புத்தகத் திருவிழா தினமாகக் கொண்டாடுவார்கள்.

அன்றைய தினம் ஒவ்வொரு புத்தக விற்பனைக்கும் 10 சதவிகிதம் சிறப்புக் கழிவாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன், செயலாளர் கே.எஸ்.புகழேந்தி மற்றும் அலையன்ஸ் ஸ்ரீனிவாசன் ஆகியோரும் இந்த அறிவிப்பின்போது உடனிருந்தனர்.


தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

May 24th, 2008 பகுப்புகள்: ஆளுமை, விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சமுதாய நல்லிணக்க அமைப்பின் தேசிய சமுதாய நல்லிணக்க விருதுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தனிநபர், ஓர் அமைப்பு, நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்பட பல்கலைக்கழகத்தில் செயல்படும் மாணவர் பேரவை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு தனிநபர் தேசிய ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கத்திற்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது 35-க்கு மேல் இருக்க வேண்டும். சட்டப் பேரவை, நாடாளுமன்றம், அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் இருக்க வேண்டும்.

அமைப்பைப் பொருத்த வரையில், அந்த அமைப்பு சட்டப் படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் துறையில் 5 ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுகிற மாணவர் பேரவை சம்பந்தப்பட்ட துணைவேந்தர் விருதுக்கான செயற்குறிப்பை பரிந்துரைக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் குறைந்தது 5 ஆண்டுகால அளவில் தொடர்ச்சியாக, குறிப்பிடும்படியாக செயலாற்றியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதியில் சமுதாய நல்லிணக்க அமைப்பு ஏற்பாடு செய்யும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

தகுதியுடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையைப் பொருத்தவரை மாநகர காவல்துறை ஆணையரிடம் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூன் 30-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும்.
 
 


இந்திய வானொலிக்கு சர்வதேச பரிசு

May 23rd, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, அறிவிப்பு, ஊடகம், விருது | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

இந்திய வானொலிக்கு சர்வதேச பரிசு     

 

All India Radio

ஈரானில் நடைபெற்ற 9-வது சர்வதேச வானொலி விழாவில் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய வானொலியின் ஒரிசா சம்பல்பூர் ஒலிபரப்பு நிலையம் தயாரித்த ‘ஜனிபா, ஆமே கமா கரிபா’ (உலகளாவிய சிந்தனையும், உள்ளூர் செயல்பாடும்) என்ற சிறுவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரானில் நடந்த சர்வதேச வானொலி விழாவில் ஒலிபரப்பப்பட்டது. பத்மலோசன்தாஸ் என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒரிய மொழியில் இந்த நிகழ்ச்சியை தயாரித்திருந்தார்.

வானிலை மாற்றங்கள், நாட்டின் வளங்களை பாதுகாத்தல் போன்ற விஷயங்களை தனது இரண்டு குழந்தைகளுக்கு ஒரு தாய் தாலாட்டாக போதிப்பது போன்று இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு விழாவில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் சிறந்த நிகழ்ச்சிகளுக்கான முதல் பரிசையும் தட்டிச் சென்றது.

இதையொட்டி தயாரிப்பாளர் பத்மலோசன் தாஸுக்கு 2000 யூரோ ரொக்கப்பரிசும், தங்க விக்கிரகமும் பரிசளிக்கப்பட்டது. கடந்த 2007ல் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஈரான் வானொலி நடத்திய போட்டியிலும் சிறந்த நிகழ்ச்சிக்கான முதல் பரிசையும் தாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.


ஒரு வரி செய்திகள் - விடுதலை

April 14th, 2008 பகுப்புகள்: *பொது, கலை-இலக்கியம், கல்வி, சட்டம் - நீதி, சென்னை | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

  • சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பதிப்போவியங்கள் தொடர்பாக நிரந்தர காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. (மேலும்: The Hindu : Front Page : Facelift for heritage buildings in Chennai)
  • மக்கள் வீடுகளுக்கே சென்று நீதி வழங்குவதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் ஏழாயிரம் கிராம நீதிமன்றங்களை ஏற்படுத்த உள்ளது என மத்திய அமைச்சர் வேங்கடபதி கூறியுள்ளார். (முந்தைய செய்தி: The Hindu : Union Minister of State for Law and Justice K. Venkatapathy: Centre planning ‘gram nyayalayas’ (village courts))
  • நாடு முழுவதும் உள்ள கிராம பள்ளிகளில் மேல் நிலைப் படிப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு பாரத ஸ்டேட் வங்கி தலா ரூ. 1001 ரொக்கப் பரிசு வழங்கும் என அவ்வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். (மேலும்: The Hindu : ‘The State Bank of India Talent Awards’: SBT awards for toppers)

முழுவதும் வாசிக்க: விடுதலை


அம்பேத்கர் விருது: திருமாவளவன் நாளை வழங்குகிறார்

April 14th, 2008 பகுப்புகள்: அரசியல், ஆளுமை, விருது | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் நாளை நடைபெறும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. திருச்சி உழவர் சந்தை திடலில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை புரிந்த 6 பேருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்,

  1. பாவலர் இன்குலாபிற்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்படுகிறது.
  2. ‘சொல்லின் செல்வர்’ ஆ.சக்திதாசனுக்கு ‘அயோத்தி தாசர் ஆதவன்’ விருதும்,
  3. வே.ஆணைமுத்துவிற்கு ‘பெரியார் ஒளி விருது’ம் வழங்கப்படுகிறது.
  4. இலக்கிய செல்வர் குமரி அனந்தனுக்கு ‘காமராசர்’ விருது,
  5. அப்துல் நாசிர் மதானிக்கு ‘காயிதே மில்லத் பிறை’ விருது,
  6. கவிஞர் காசி ஆனந்தனுக்கு ‘செம்மொழி ஞாயிறு’

ஆகிய விருதுகளை திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார்.

நன்றி: யாஹூ


பிரான்ஸ் அதிபர் சர்கோஸின் மனைவியின் நிர்வாணப் படம் ரூ.36 லட்சத்துக்கு ஏலம்

April 13th, 2008 பகுப்புகள்: உலகம், கலை-இலக்கியம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

முன்னாள் மாடல் அழகியும், பிரான்ஸ் அதிபர் சர்கோஸின் மனைவியுமான கார்லா புரூனியின் நிர்வாணப் படம் ரூ.36 லட்சத்துக்கு