பதிவுலகம் | சற்றுமுன்...




ஒரு கோடி புத்தகங்களின் சங்கமம்! கோவை புத்தக திருவிழா நாளை துவக்கம்

August 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தகவல், பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஒரு கோடி புத்தகங்களின் சங்கமம்! கோவை புத்தக திருவிழா நாளை துவக்கம்

கோவை, ஆக.12: கோவை மத்திய சிறை மைதானத்தில் ஒரு கோடி புத்தகங்களுடன் “கோவை புத்தகத் திருவிழா’ வியாழக்கிழமை (ஆக.14) தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் 24-ம் தேதி வரை இக் கண்காட்சியை நடத்துகிறது. 176 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தமிழ் புத்தகம் 136 அரங்கிலும், ஆங்கிலப் புத்தகம் 36 அரங்கிலும், மல்டி மீடியா தொடர்பானவை 6 அரங்கிலும் இடம் பெறும். அனைத்து நாளிலும் காலை 11 முதல் இரவு 9 வரை கண்காட்சி நடைபெறும்.
 
 


செய்தி சேகரிக்கச் சென்ற கரூர் பத்திரிகையாளர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு

August 9th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், ஊடகம், தகவல், பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

செய்தி சேகரிக்கச் சென்ற கரூர் பத்திரிகையாளர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு

கரூர், ஆக. 9: செய்தி சேகரிக்கச் சென்ற போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, கரூர் பத்திரிகையாளர்கள் 18 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீஸôர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இதுபற்றிய விவரம்:

கரூர் அருகேயுள்ள தான்தோன்றிமலையில் ராயல் கோச் என்னும் பஸ் கட்டும் நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் பழனிசாமி (55). இந்த நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. புதிதாகக் கட்டப்பட்ட பஸ் தீயில் எரிந்து கொண்டிருந்தது.

இதுபற்றி தகவலறிந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அந்த நிறுவனத்தின் உள்ளே சென்று புகைப்படம், விடியோ எடுக்க முற்பட்டனர். ஆனால், அனைவரையும் நுழைவாயில் முன் ஆலையின் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

மேலும், புகைப்படம் எடுத்தால் கேமராவை உடைத்து விடுவோம் எனத் தொழிலாளர்கள் மிரட்டினர். அப்போது அங்கு வந்த உரிமையாளர் பழனிசாமி, “அனைத்து தொழிலாளர்களும் படிக்காதவர்கள், அவர்கள் நினைத்தால் உங்களை (பத்திரிகையாளர்களை) என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவார்கள். அதனால் நீங்கள் இங்கு நிற்க வேண்டாம். ஓடிவிடுங்கள்’ என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.

அவரது பேச்சைக் கேட்ட மற்ற ஊழியர்கள், ஆவேசமடைந்து, அங்கு நின்றிருந்த பத்திரிகையாளர்கள் ஆர். ராதாகிருஷ்ணன் (36), செபஸ்டியன் (30), சி. ஆனந்தகுமார் (30), எஸ். சங்கர் (30) ஆகியோரைத் தாக்கினர். மேலும், ஆனந்தகுமாரின் கேமராவை பிடுங்கிக் கொண்டு, கீழே தள்ளினர். தகாத வார்த்தைகளால் பேசிய தொழிலாளர்கள், “பத்திரிகையாளர்கள் இங்கிருந்து செல்லாவிட்டால் கை, காலை வெட்டிவிடுவோம்’ என மிரட்டினர்.

சாலையில் நின்றால்கூட அடிவிழும் எனத் தொடர்ந்து தள்ளியபடி இருந்தனர். மொத்தம் 8 பத்திரிகையாளர்களைச் சுமார் 200 பேர் சுற்றிவளைத்துக் கொண்டனர். பசுபதிபாளையம் உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் ஒரு காவலர் அங்கு வந்ததும், தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ஏ. சிவராமனிடம் பத்திரிகையாளர்கள் சி. ஆனந்தகுமார், ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக ராயல் கோச் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் மீது, பத்திரிகையாளர்களைக் கொல்ல முயன்றதாகவும், தகாத வார்த்தையில் திட்டியதாகவும் இரு பிரிவுகளில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல, ராயல் கோச் நிறுவன மேற்பார்வையாளர் ஆர். பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பத்திரிகையாளர்கள் எஸ். ஜெய்சங்கர், செபஸ்டியன், சி. ஆனந்தகுமார் உள்ளிட்ட 18 பத்திரிகையாளர்கள் மீது, 294 (பி) (தகாத வார்த்தைகளால் திட்டுவது), 341 (பணி செய்யவிடாமல் தடுப்பது), 447 (அத்துமீறி உள்ளே நுழைவது), 506 (கொலை மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூர் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்: செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் பிரிவுகளில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு கரூர் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் இல்லாத பத்திரிகையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 
 


எனது புகழுக்குக் காரணமானவர்கள் யார்?: கருணாநிதி

July 27th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

எனது புகழுக்குக் காரணமானவர்கள் யார்?: கருணாநிதி

சென்னை, ஜூலை 26: பெரியார், அண்ணா, தமிழ்ச் சமுதாயம் இட்ட பிச்சை காரணமாகவே புகழ் மாலை சூட்டும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் தமிழ்நாடு அறிஞர் பேரவை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்க விழா மற்றும் “கலைஞர் படைப்புலகம்’ ஆய்வுக் கோவை நூல் வெளியீட்டு விழாவில் அவர் நிகழ்த்திய சிறப்புரை:-

“”தமிழ்நாடு அறிஞர் பேரவையின் அமைப்பாளர் ந. வேலுசாமி, 200-க்கும் மேற்பட்ட அறிஞர்களிடம் ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று அதில் தேர்வு செய்த கட்டுரைகளைத் தொகுத்து 1,100 பக்கங்கள் கொண்ட “கலைஞர் படைப்புலகம்’ என்ற இந்த நூலை வெளியிட்டுள்ளார். இங்கு பேசிய அனைவரும் என்னுடைய வெற்றிக்குக் காரணம் உழைப்புதான் என்று குறிப்பிட்டனர்.

இப்படிப் புகழ்ந்தால் நான் மேலும் உழைப்பேன். அந்த உழைப்பு தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எருவாகும் என்ற காரணத்தால்தான் என்னை பாராட்டியதாக நான் கருதுகிறேன். நீங்கள் எடுத்துரைத்த அவ்வளவு பெருமைகளும் சிறப்புகளும் எனக்கு உரியவை என்று நினைத்தால் இப்போதே நான் வீழ்ந்து விட்டேன் என்று பொருள்.

நான் ஒவ்வொரு அடி உயரமாகத் தெரிகிற போதும், அந்த உயரத்துக்கெல்லாம் காரணம் நான் அல்ல. என்னைத் தூக்கி உலகத்துக்குக் காண்பித்த பெரியாரும் அண்ணாவும்தான். அவர்களைவிட அதிகமாக எனக்கு ஊட்டிய அடக்க உணர்வும் மனிதப் பண்பாடும்தான் இவ்வளவு சிறப்புகளை எனக்குத் தந்திருக்கிறது.

கவிதை எழுதினேன்; கட்டுரை தீட்டினேன்; உரையாடல் எழுதினேன் என்றெல்லாம் நீங்கள் என்னைப் புகழ்ந்தாலும்கூட, இதில் எல்லாம் கிடைக்கும் மிகழ்ச்சியைக் காட்டிலும், ஏழை - பாட்டாளி மக்களின் பசி போக்கவும் அவர்களுடைய வாழ்க்கைச் சக்கரம் ஒழுங்காக உருளவும் இயன்றதைச் செய்வேன் என்பதுதான் நான் எழுதுகின்ற கட்டுரைகளில் எல்லாம் உயர்ந்த கட்டுரை” என்றார் முதல்வர் கருணாநிதி.

முன்னதாக “கலைஞர் படைப்புலகம்’ ஆய்வுக் கோவை நூலை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச. அகஸ்தியலிங்கம் பெற்றுக் கொண்டார். மத்திய அமைச்சர் ஆ. ராசா, கவிஞர் கயல்விழி உரையாற்றினர்.

 

பேத்திக்கு தாத்தா குட்டு - பாராட்டு

“கலைஞர் படைப்புலகம்’ ஆய்வுக் கோவை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் கயல்விழியின் பேச்சை முதல்வர் கருணாநிதி விமர்சித்து பாராட்டினார்.

“”கருத்துரை என்ற பெயரால் நான் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து இங்கு கவிஞர் கயல்விழி நீண்ட உரையாற்றினார். இந்தப் படிப்பை பள்ளிக்கூடத்திலே படித்திருந்தால் பல வகுப்புகளில் முன்னேறி வந்திருக்கலாம்.

தாத்தா (முதல்வர் கருணாநிதி) சொல்கிற வரையில் பேத்தி (கயல்விழி) பேச்சை நிறுத்த மாட்டாள் என்ற ஒரு நிலையை நீங்கள் எல்லாம் தெரிந்து கொண்டீர்கள்.

ஆனால், அழகான உரை. நான் எதிர்பார்க்காத உரை. இவ்வளவு பேசுவாரா? என நினைக்கும் அளவுக்கு ஒரு அற்புதமான உரையை நிகழ்த்திய கயல்விழிக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.
 
 


ஆசியன் புக்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் சல்மாவின் நாவல்

July 26th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தகவல், பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

“ஆசியன் புக்கர்’ விருதுக்கான தெரிவுப் பட்டியலில் சல்மாவின் நாவல்

திருச்சி, ஜூலை 25: ஆசியன் புக்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் கவிஞர் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற நாவல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் எழுத்தாளர் ஒருவர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா (35), தற்போது தமிழக அரசின் சமூக நல வாரியத் தலைவியாக உள்ளார். 2004-ல் பொன்னம்பட்டி ஊராட்சித் தலைவராக சல்மா இருந்தபோது, பாகிஸ்தானில் ஊராட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள, இந்தியாவில் இருந்து சென்ற 30 பேர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

மேலும் 10 பேர்… மேலும் இந்த தெரிவுப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 10 எழுத்தாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஆசியக் கண்டத்தில் இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் எழுத்தாளர்களின் பெயர்கள் இப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. விருதுக்கு தேர்வு செய்யப்படுபவரின் பெயர் வரும் நவம்பர் 13-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
 
 


நூலகத்தில் திருடப்பட்ட நூறு கோடி ரூபாய் புத்தகம் 10 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு

July 14th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

நூலகத்தில் திருடப்பட்ட நூறு கோடி ரூபாய் புத்தகம் 10 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு

இங்கிலாந்து நூலகத்தில் திருடப்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள புத்தகம் 10 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் மீட்கப்பட்டது.

உலக நாடக ஆசிரியர்களின் பிதாமகனான ஷேக்ஸ்பியர் எழுதிய புத்தகம் ஒன்று தர்ஹாம் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து 1998-ல் திருடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள நூலகத்தை அண்மையில் அணுகிய ரெய்மண்ட் ஸ்காட் (51) என்பவர், தான் வைத்திருந்த ஷேக்ஸ்பியர் புத்தகத்தின் மதிப்பு குறித்து ஆய்வு செய்யக் கோரினார்.

நூலக நிர்வாகிகள் அந்த புத்தகத்தை ஆய்வு செய்தபோது, அது இங்கிலாந்து நூலகத்தில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து ரெய்மண்ட் ஸ்காட் கைது செய்யப்பட்டார். 1623-ல் அச்சிடப்பட்ட அந்த புத்தகத்தின் இன்றைய மதிப்பு ரூ.100 கோடியாகும்.

 
 


கருணாநிதி பிறந்த நாள் இனி புத்தக திருநாள்!

June 1st, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, கலை-இலக்கியம், தகவல், பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கருணாநிதி பிறந்த நாள் இனி புத்தக திருநாள்!     

தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி இனி புத்தகத் திருவிழா தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது தமிழ்நாடு தமிழ்ப் பதிப்பாளர் சங்கம்.

இந்த அறிவிப்பை ஜெயகாந்தன் இன்று வெளியிட்டார்.

தமிழ் மொழி, தமிழ்ப் பதிப்பாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் வாசகர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல சிறந்த திட்டங்களைச் செய்தவர் முதல்வர் கலைஞர். எனவே இப்படி ஒரு விழாவுக்கும் போற்றுதலுக்கும் உரியவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் வியப்பில்லை என்றார் ஜெயகாந்தன்.

தமிழை உயர் தனிச் செம்மொழியாக்கப் பாடுபட்டது, பொது நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகப் பிரதிகளின் எண்ணிக்கையை 600லிருந்து 1000 ஆக உயர்த்தியது, தனது சொந்த நிதி ஒரு கோடியை அளித்து, அதிலிருந்து வரும் வட்டித் தொகையைக் கொண்டு ஆண்டுதோறும் 5 தமிழ் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதமும், பிற மொழி எழுத்தாளர் ஒருவருக்கு ஒரு லட்சமும் கொடுத்து வருவது,

ரூ.100 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைந்திட அனைத்து முயற்சிகளையும் செய்தது, பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் உதவிடும் வகையில் புத்தகப் பூங்கா அமைத்திட உத்தரவிட்டது என கருணாநிதி செய்த ஏராளமான தமிழ்ப் பணிகளுக்காக இந்தச் சிறப்பு அவருக்கு செய்யப்படுவதாக தமிழ்நாடு தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

பொது நூலகத்துறையைச் சேர்ந்த மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், தமிழ் வளர்ச்சித் துறை, கன்னிமாரா நூலகம், உலகம் முழுவதிலுமுள்ள தமிழ்ப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இனி ஜூன் 3ம் நாளை புத்தகத் திருவிழா தினமாகக் கொண்டாடுவார்கள்.

அன்றைய தினம் ஒவ்வொரு புத்தக விற்பனைக்கும் 10 சதவிகிதம் சிறப்புக் கழிவாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன், செயலாளர் கே.எஸ்.புகழேந்தி மற்றும் அலையன்ஸ் ஸ்ரீனிவாசன் ஆகியோரும் இந்த அறிவிப்பின்போது உடனிருந்தனர்.


மே-11 ஞாயிறன்று விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு

May 10th, 2008 பகுப்புகள்: இணையம், கணினி, தமிழ், பதிவுலகம், மொழி | தொகுப்பாளர்: இரா.சுகுமாரன் | மறுமொழிகள் இல்லை » |

விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு நடத்துவது என கடந்த ஞாயிறு அன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரம் அவசரமாக நடத்திவிட வேண்டும் என்பது போல விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் கோரிக்கையின் பேரில் நாளை காலை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் நடக்க விருக்கிறது.

அரசுக் கல்லூரி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மாதாக்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் சற்று தூரம் நடந்தால் அரசுக் கல்லூரி உள்ளது.

காலை 9.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் காலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி வருகை தர உள்ளார்.

சென்னை மற்றும் புதுச்சேரியிலிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இப்பயிற்சியில் சுமார் 100 கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மென்பொருட்கள் அடங்கிய குறுந்தகடு எழுதுகோல் குறிப்பேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பல்வேறு தமிழ் மென்பொருட்கள் குறுந்தகடு விலை ரூ15/- என வசூலிக்க இருப்பதாக விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் தமது வலைப்பூவில் தெரிவித்துள்ளனர், அதனால் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தம் பொறுப்பில் குறுந்தகடு இலவசமாக வழங்குவது என முடிவு செய்துள்ளது.

நிகழ்ச்சி நிரல் கீழே உள்ளவாறு நடக்க உள்ளது.

வருகை தர உள்ள அனைவர்க்கும் இந்த நிகழ்ச்சிநிரல் பயிற்சி அரங்கத்தில்அளிக்கப்படும்.

தமிழ் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு-2008. விழுப்புரம்

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – விழுப்புரம்
நாள் 11 மே 2008

நிகழ்ச்சி நிரல்

காலை 08.50 - 9.00 பங்கேற்பாளர்கள் பதிவு செய்தல் (15 நிமிடம்)

காலை 09.00 - 9.30 நிகழ்ச்சிகள் தொடங்கி வைத்தல் (30 நிமிடம்) (

காலை 09.30-10.00 : தமிழ் எழுத்துறுக்கள் செயலி நிறுவுவது - க.அருணபாரதி

ஏகலப்பை (15 நிமிடம்)
குறள் (5 நிமிடம்)
இளங்கோ (5 நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)

காலை 10.01-10.30 : தமிழில் தட்டச்சு செய்வது பேராசிரியர் மு.இளங்கோவன்
தமிழ் 99 (15 நிமிடம்)
ஒலியியலில் உள்ள குறைகள் (5நிமிடம்)
கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 10.30-11.30 வலைப்பதிவு அறிமுகம் – திரு. பாலபாரதி & மா.சிவக்குமார்

மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் (5 நிமிடம்)

வலைப்பதிவு தொடக்கம் (BLOGGER) (20 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (15 நிமிடம்)

வலைப்பதிவில்பின்னூட்டமிடுவது (10 நிமிடம்)

மறுமொழி மட்டுறுத்தல் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

காலை 11.30- 11.45 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

பகல் 11.46- 12.15 வலைப்பதிவு தொடக்கம் - விக்கி

(WORD PRESS) (10 நிமிடம்)

வலைப்பதிவில் எழுதுவது (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 12.16-12.30 படங்கள் இணைப்பது (10 நிமிடம்) – கோ.சுகுமாரன்

காட்சிப்படம் இணைப்பது (10 நிமிடம்)

ஒலிகளை இணைப்பது (5 நிமிடம்) - வினையூக்கி

கேள்வி பதில் (5 நிமிடம்)

பகல் 12.31- 01-00 திரட்டிகளில் இணைப்பது (20 நிமிடம்) – விக்கி & வெங்கடேஷ்

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 01.00-02.00 உணவு இடைவேளை (60 நிமிடம்)

பகல் 02.01- 2.30 குறுந்தகடில் உள்ள மென்பொருட்கள் அதன் பயன்பாடுகள் –க.அருணபாரதிகேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 02.31- 3.00 தமிழில் இயங்குதளங்கள் - மா. சிவக்குமார்

விண்டோஸ் (10 நிமிடம்)

லினக்ஸ் (10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பகல் 3.01-3.30 : கணினியில் தமிழ்ப் பயன்பாடு - இரா.சுகுமாரன்

ஒப்பன் ஆபீஸ் தமிழ் (5 நிமிடம்)

எம்.எஸ் ஆபிஸ் தமிழ் (5 நிமிடம்)

தமிழில் மின்னஞ்சல் (5 நிமிடம்)

தமிழில் அரட்டை (5 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பிற்பகல் 3.31- 4.00 இணைய உலவிகள் பயர் பாக்ஸ் – வினையூக்கி

அதியன் இணைப்பு (10 நிமிடம்)

பத்மா இணைப்பு(10 நிமிடம்)

கேள்வி பதில் (10 நிமிடம்)

பிற்பகல் 04.01-4.15 தேநீர் இடைவேளை (15 நிமிடம்)

மாலை 4.16.- 4.30 தமிழில் இணையதளங்கள் - பேராசிரியர் மு.இளங்கோவன்

விக்கிப்பீடியா (10 நிமிடம்)

மதுரைத்திட்டம் (5 நிமிடம்)

யாழ் நூலகம் (5 நிமிடம்)

பிற தளங்கள் (5 நிமிடம்)

கேள்வி பதில் (5 நிமிடம்)

மாலை 04.31- 4.45 RSS FEED கூகுல் திரட்டியில் இணைப்பது (8 நிமிடம்) சீனுவாசன் கடலூர்

மாலை 4.46-5.15 கூட்டு வலைப்பதிவுகள் அமைப்பது - தூரிகா வெங்கடேஷ்(10 நிமிடம்)

மாலை 5.15-5.45 சொந்தத் தளத்தில் வலைப்பதிவு

word press எப்படி நிறுவுவது (15 நிமிடம்) விக்கி

மாலை 6.00 நிறைவு விழா மற்றும் சான்றிதழ் அளிப்பு

*************************************************
வலைப்பதிவர்களுக்கான பயனுள்ள தளம்
தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கம் http://tamilblogging.blogspot.com/

வலைப்பதிவு பயிற்சி :
தமிழ் வலைப்பதிவர்கள்: http://www.tamilbloggers.org/ (தமிழ்நாடு-புதுச்சேரி)

பயிற்சி ஒருங்கிணைப்பு
புதுச்சேரிவலைப்பதிவர் சிறகம் http://www.pudhuvaitamilbloggers.org/

நிகழ்ச்சி ஏற்பாடு:
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றம்

http://vizhuppuramvalaippathivar.blogspot.com/

********************************************
தமிழின் முழு தானியங்கி வலைத்திரட்டி + வலைவாசல் - தமிழ்.கணிமை.காம் - http://tamil.kanimai.com/

தமிழ்வலைப்பதிவர் கூட்டு முயற்சியில் ஒரு செய்தித்தளம் - சற்றுமுன் -

http://satrumun.com/

புதிய வலைப்பதிவு தொடங்குவதற்கு

தமிழ்ப் பதிவுகள் http://tamilblogs.com/new-index.php

வலைப்பதிவு திரட்டிகள்

தமிழ்மணம் http://www.tamilmanam.net/index.html
தேன்கூடு http://www.thenkoodu.com/
தமிழ்வெளி http://www.tamilveli.com/
திரட்டி http://www.thiratti.com/
மாற்று http://www.maatru.net/
கில்லி http://gilli.in/


சரத்குமார்: ‘மன வியாதியைக் காட்ட ஏதோ ஒரு இணையதள பிளாக்கில் கிறுக்கிய எழுத்துக்கள்’

March 7th, 2008 பகுப்புகள்: ஆளுமை, ஊடகம், கலை-இலக்கியம், சர்ச்சை, திரையுலகம், தொலைக்காட்சி, பதிவுலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 4 மறுமொழிகள் » |

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிடுவது அல்லது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடக்கிறது.

சமீபத்திய ஆனந்தவிகடனில், எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் குறித்து மூத்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது.

அதில், எம்.ஜி.ஆர் தன் இறுதி நாட்களில் பேச முடியாமல் அவதிப்பட்டதைக் கிண்டலடித்து எழுதியிருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது. நடிகர் சங்க செயலாளர் ராதா ரவியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இந் நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கமும் தலையிட்டுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதா ரவி கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்:

இந்திய திரையுலகின் சகாப்தங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரையும் தரக் குறைவாக எழுதப்பட்ட கட்டுரையை வெளியிட்டு வார இதழ் தனது பாரம்பரியத்துக்கு களங்கம் தேடிக் கொண்டுள்ளது.

அந்தக் கட்டுரையை அந்த இதழுக்காக அவர் எழுதியதல்ல. தனது மன வியாதியைக் காட்ட ஏதோ ஒரு இணையதள பிளாக்கில் கிறுக்கிய எழுத்துக்கள் அவை. அதை தானாக வலியச் சென்று வார இதழ் வெளியிட வேண்டிய அவசியமென்ன?.

இந்தப் போக்கை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இதுமட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் இதுபோன்ற அநாகரிக செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றுக்கு நமது கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் வரும் மார்ச் 9ம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது.

சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

வார இதழையும் எழுத்தாளரையும் கண்டித்து இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினி, கமல், உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

நன்றி: தட்ஸ்தமிழ்


இறைதூதர் புகழுக்கு மாசு கற்பிக்க முயலும் விக்கிபீடியா.

February 12th, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, ஆன்மீகம், இணையம், உலகம், ஊடகம், கணினி, குற்றம், சட்டம் - நீதி, சர்ச்சை, பதிவுலகம் | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | ஒரு மறுமொழி » |

உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் தங்களின் உயிரைவிட மேலாகக் கருதும் நபிகள் பெருமானரைக் குறித்து சித்திரம் வெளியிட்ட பல மொழி இணையதளக் கலைக்
களஞ்சியமான விக்கி பீடியா கடும் கண்டனத்தை சந்தித்து வருகிறது.

நபி நாயகம்  புகழுக்கு மாசு கற்பிக்கும் விதமான எந்த செயலையும் முஸ்லிம்கள் அனுமதிப்பதிலை என்ற நிலையில் விக்கி பீடியா கலைக் களஞ்சிய
வலைதளம் நபிகள் நாயகம் குறித்து ஒரு கற்பனை சித்திரத்தை தனது வலைதளத்தில் இடம் பெறச் செய்திருக்கிறது.

விக்கி பீடியாவின் இந்த செயலைக் கண்டித்து பிரிட்டனைச் சேர்ந்த ஃப்பராஸ் அஹ்மத் பட்ங்  www.Petitionsite.com ன்ற பிரத்யேக வலைதளம்  ஒன்றை உருவாக்கி விக்கி பீடியாவின் செயலை கண்டித்து சர்ச்சைக்குரிய சித்திரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து இதுவரை ஒரு லட்சம் பேர் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். சான்பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்டு
விளங்கும் விக்கி பீடியாவை தொடர்ந்து இமெயில்கள் மொய்த்த வண்ணம் உள்ளன.
சர்ச்சைக் குரிய சித்திரத்தை அகற்ற மாட்டோம் என விக்கி பீடியாவின் செய்தி தொடர்பாளர் வால்ஸ் தெரிவத்ததைத் தொடர்ந்து எதிர்ப்புகள் தொடர்கிறது.  மேலும் அறிய…

நன்றி: தமுமுக இணையம்.


தமிழ் படைப்பாளிகள் புதுச்சேரியில் கலந்தாய்வு

February 10th, 2008 பகுப்புகள்: பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தமிழ் படைப்பாளிகள் புதுச்சேரியில் கலந்தாய்வு

“தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்’ என்ற புதிய அமைப்பை துவக்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

“தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்’ என்ற அமைப்பு துவக்கப்பட உள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரியில் நேற்று நடந்தது. கவிஞர் பழமலை தலைமை தாங்கினார். ஓவியர் வீர சந்தனம் முன்னிலை வகித்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். கலை, இலக்கியம், நாடகம், தெருக்கூத்து போன்றவற்றில் சிறந்து விளங்கும் தமிழ் படைப்பாளிகளுக்கு, ஆண்டுதோறும் விருதுகள்