தொலைக்காட்சி | சற்றுமுன்...




பரபரப்புச் செய்திகள்: டிவி சேனல்கள் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

July 2nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், ஊடகம், தொலைக்காட்சி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பரபரப்புச் செய்திகள்: டிவி சேனல்கள் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

நேயர்களைக் கவர்வதற்காக டிவி சேனல்கள் சாதாரண செய்திகளை மிகைப்படுத்தி பரபரப்புச் செய்திகளாக மாற்றுகின்றன என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி குற்றம்சாட்டினார்.

மால்டாவில் செய்தியாளர்களிடம் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:

புது தில்லி அருகே நொய்டாவில் ஆருஷி தல்வார் என்ற இளம் பெண் கொல்லப்பட்டது குறித்தும், டிவி நிகழ்ச்சிக்குப் பின் கோல்கத்தாவில் இளம் பெண் ஷிஞ்சினி சென் குப்தா உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்தும் டிவி சேனல்கள் அளவுக்கதிகமாகவே செய்திகள் வெளியிட்டுள்ளன.
 
 


மக்கள் தொலைக்காட்சிக்கு விருது

April 7th, 2008 பகுப்புகள்: உடல்நலம், ஊடகம், சமூகம், தொலைக்காட்சி, பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 3 மறுமொழிகள் » |

பெண் குழந்தைகளை நேசிக்க ஊக்கப்படுத்தும் சிறந்த ஊடக முயற்சிகளுக்கு ஐ.நா.மக்கள் தொகை நிதியமைப்பு (யூ.என்.எஃப்.பி.ஏ.) சார்பில் ‘லாட்லி’ விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2007-ம் ஆண்டில் ‘மண்ணைக் காக்க பெண்ணைக் காப்போம்’ என்ற சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக மக்கள் தொலைக்காட்சிக்கு இந்த விருது அண்மையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, கடந்த ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சுமார் 3650 தடவை ஒளிபரப்பப்பட்டது. வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் மக்களுக்குத் தேவையான, அவர்களை நல்வழிப்படுத்துகிற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறோம்.

  • புகைப்பழக்கம்.
  • குடிப்பழக்கம்,
  • வரதட்சிணை
  • போன்ற தீய வழக்கங்களுக்கு எதிரான மற்றும்
  • தூய்மைக்கு ஆதரவான

சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் மக்கள் தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ள இந்த விருது, எங்கள் பணி மேலும் சிறக்க உதவும் என மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தன

நன்றி: தினமணி


இந்திய தொலைக்காட்சித் தொடர்களுக்கு ஆப்கானில் புதிய தடை

April 4th, 2008 பகுப்புகள்: ஆசியா, இந்தியா, ஊடகம், கலை-இலக்கியம், சட்டம் - நீதி, சமூகம், தொலைக்காட்சி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

ஆப்கானிய தனியார் தொலைக்காட்சிகளில், இந்தியாவின் தொலைக்காட்சித் தொடர்களை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆப்கானிய அரசு தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சித் தொடர்களை ஒளிபரப்புவதை நிறுத்த ஏப்ரல் 15வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பண்பாடு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் கரிம் கோரம் கூறியுள்ளார். இந்தத் தொடர்கள் இஸ்லாத்துக்கு ஒவ்வாதவை என்று கூறும் ஆப்கானியர்கள் அவற்றுக்கு எதிராக புகார்களைத் தெரிவித்துள்ளதாக அமைச்சகம் கூறுகிறது.

ஆனால் அரசாங்கத்தின் இந்தக் காலக்கெடுவை தொலைக்காட்சி நிறுவனங்கள் குறுக்கீடு என்று வருணித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அதிகரித்துவருவதை இந்த முடிவு காட்டுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Reporters sans frontières - Afghanistan - Reporters Without Borders: “New offensive against privately-owned TV stations by information ministry and Council of Ulemas”

2. Indian Soap Operas Face Ban in Afghanistan

3. What Afghanistan wants to see on television - Telegraph


பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை

March 27th, 2008 பகுப்புகள்: ஊடகம், குற்றம், சட்டம் - நீதி, தீர்ப்பு, தொலைக்காட்சி, நீதிமன்றம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை அவதூறு வழக்காக சேதுராமன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி  மற்றும் வெளியீட்டாளர் இலட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிட்டது.

தகவல் : மக்கள் தொலைக்காட்சி 


தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இணையதளத்தில் ஒளிபரப்பு

March 24th, 2008 பகுப்புகள்: இணையம், கணினி, தொலைக்காட்சி, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகள் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் இணைய தளத்தில் இலவசமாக ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்னையை சேர்ந்த ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திவரும் www.bigflicks.com என்ற இணைய தளத்தின் வழியாக உலகம் முழுவதுமுள்ள தமிழ் நேயர் கள் ராஜ் தொலைக்காட்சி, டிஜிட்டல் பிளஸ், ராஜ் மியூசிக்ஸ் ஆகிய மூன்று அலை வரிசைகளையும் இனி பார்க்கலாம்.

இது குறித்து பிக்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் முதன்மை அதிகாரி கமல்கியான் சந்தானி கூறுகையில், இனி உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் இலவசமாக செய்திகள், உலக நடப்புகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் இணைய தளத்தில் பார்த்து மகிழலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மட்டு மல் லாது, வெளிநாடுகளிலும் இனி ராஜ் குழும அலைவரிசைகளை இலவசமாக இணையதளத்தில் பார்க்கலாம் என ராஜ் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி: விடுதலை


மதபோதகர்: ‘ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சிப் பாட்டுப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு வந்த பெண் சாத்தான்’

March 16th, 2008 பகுப்புகள்: ஆசியா, ஆன்மீகம், இசை, சமூகம், தொலைக்காட்சி, பெண்கள் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் ஒரு தொலைக்காட்சி பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் மூன்று பேர் கொண்ட இறுதிச் சுற்றுக்கு முதல்முறையாகத் தெரிவான பெண்ணொருவரை நேயர்கள் வாக்களித்து போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளனர். போட்டியில் இறுதிச் சுற்றுவரை வந்ததே தனக்குப் பெரிய கௌரவம் என்று கூறிய லிமா சஹார் என்ற அந்தப் பாடகி, தனக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஆனால் இந்தப் ஆப்கன் ஸ்டார் என்ற இந்தப் போட்டியில் பங்கேற்றதற்காக பழமைவாதிகள் அவரை விமர்சித்துள்ளனர். மௌலவி அப்துல் ரயூஃப் என்ற ஒரு மதபோதகர், அப்பாடகியை ஆப்கானிஸ்தானின் சாத்தான் என்று குறிப்பிட்டதோடு, சக ஆப்கானியர்களுக்கு அவர் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Woman vies to be top star at Afghani American Idol

2. Stop the music: conservative critics condemn woman Idol finalist - World

3. The Associated Press: Afghan Woman Voted Off 'Idol' Show


சரத்குமார்: ‘மன வியாதியைக் காட்ட ஏதோ ஒரு இணையதள பிளாக்கில் கிறுக்கிய எழுத்துக்கள்’

March 7th, 2008 பகுப்புகள்: ஆளுமை, ஊடகம், கலை-இலக்கியம், சர்ச்சை, திரையுலகம், தொலைக்காட்சி, பதிவுலகம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | 4 மறுமொழிகள் » |

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிடுவது அல்லது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடக்கிறது.

சமீபத்திய ஆனந்தவிகடனில், எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் குறித்து மூத்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது.

அதில், எம்.ஜி.ஆர் தன் இறுதி நாட்களில் பேச முடியாமல் அவதிப்பட்டதைக் கிண்டலடித்து எழுதியிருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது. நடிகர் சங்க செயலாளர் ராதா ரவியும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இந் நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கமும் தலையிட்டுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதா ரவி கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்:

இந்திய திரையுலகின் சகாப்தங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரையும் தரக் குறைவாக எழுதப்பட்ட கட்டுரையை வெளியிட்டு வார இதழ் தனது பாரம்பரியத்துக்கு களங்கம் தேடிக் கொண்டுள்ளது.

அந்தக் கட்டுரையை அந்த இதழுக்காக அவர் எழுதியதல்ல. தனது மன வியாதியைக் காட்ட ஏதோ ஒரு இணையதள பிளாக்கில் கிறுக்கிய எழுத்துக்கள் அவை. அதை தானாக வலியச் சென்று வார இதழ் வெளியிட வேண்டிய அவசியமென்ன?.

இந்தப் போக்கை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இதுமட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் இதுபோன்ற அநாகரிக செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றுக்கு நமது கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் வரும் மார்ச் 9ம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது.

சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.

வார இதழையும் எழுத்தாளரையும் கண்டித்து இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினி, கமல், உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

நன்றி: தட்ஸ்தமிழ்


இந்தியாவில் கொலை குற்றவாளி அடித்து நொறுக்கப்பட்டது தொடர்பாக ஏழு பேர் கைது

February 25th, 2008 பகுப்புகள்: குற்றம், கொலை, சட்டம் - நீதி, சமூகம், தொலைக்காட்சி | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

Host unlimited photos at slide.com for FREE!இந்தியாவில் கொலை குற்றவாளி ஒருவரை அவர் சுயநினைவை இழக்கும் வரையில் பொலிஸாரின் முன்னிலையிலேயே ஒரு கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த அந்நபரை வெளியே இழுத்து வந்த கும்பல் அவரை அடித்து துவம்சம் செய்துள்ளது.

இந்திய தொலைக்காட்சிகளில் வெளியான காட்சியில், கயிறு ஒன்றின் மூலம் கட்டி இழுத்து வரப்பட்ட அவரது உடலில் அசைவுகள் நிற்கும் வரையில் அவரை கும்பல் அடித்து உதைத்து நொறுக்கியுள்ளது. தற்போது அந்நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Mob stones murder accused in Bihar as cops look on

2. NDTV.com: Mob lynching on the rise in Bihar

3. BBC NEWS | South Asia | Arrests follow India mob attack


ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவருக்கு கைகொடுத்த லாலு பிரசாத்

January 21st, 2008 பகுப்புகள்: அரசியல், இரயில், தொலைக்காட்சி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவருக்கு கைகொடுத்த லாலு பிரசாத்

ஸ்கூட்டர் ஓட்டி வந்தவர் காயமடைந்து உதவிக்கு கூக்குரலிட் டதை பார்த்த மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், காரை விட்டு ஓடி உதவி செய் தார்.

லாலு, தன் மனைவி, குடும் பத்தினருடன், ஒரிசாவில் பூரி, கோனார்க் தலங்களுக்கு பயணம் மேற் கொண்டார். கோனார்க்கில் இருந்து பூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார் லாலு.ஸ்கூட்டர் ஓட்டி வந்த ஒருவர், வண்டியில் கோளாறு ஏற்பட்டு, அதில் இருந்து விழுந்து காயமடைந்தார். தனக்கு உதவும்படி அவர் கூக்குரலிட்டபடி இருந்தார். போக்குவரத்து போலீசார் இதைப் பார்த்தும் கண்டுகொள்ளவில்லை. லாலு கார் போனபின், அவருக்கு உதவலாம் என்று நினைத்தனர். அந்த இடத்தை லாலு கார் கடந்தபோது, அவர் பார்த்து விட்டார். உடனே காரை விட்டு இறங்கினார். தன் பாதுகாப்புக்கு வந்த கார்களில் ஒன்றில் இருந்த விசேஷ டாக்டர்களை அழைத்து, அந்த வாலிபரை மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டார். அந்த வாலிபருக்கு டாக்டர்கள் முதலுதவி செய்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர், தான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். லாலு குடும்பம் தங்குவதற்காக, ரயில்வே விருந்தினர் மாளிகை புதுப்பிக்கப்பட்டது. புது கட்டில்கள், மேஜைகள், “டிவி’க்கள், கம்ப்யூட் டர்கள் வாங்கி வைக்கப்பட்டன. சைவ, அசைவ உணவுகள் தயார் செய்ய, தனித்தனிக்குழுக்கள் வரவழைக்கப்பட்டன. லாலுவின் குடும்ப சுற்றுலா ஏற் பாடுகளை கவனிக்க மட்டும், ரயில்வேயில் இருந்து 200 பேர் வந்திருந்தனர். அவர்கள் பத்து குழுக்களாக பிரிந்து, பல ஏற்பாடுகளையும் செய்தனர்.

www.dinamalar.com


NDTV அலுவலகம் மீது தாக்குதல்

January 19th, 2008 பகுப்புகள்: அரசியல், குற்றம், சட்டம் - நீதி, சர்ச்சை, தொலைக்காட்சி | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | ஒரு மறுமொழி » |

இந்தியாவின் உயரிய விருதான பாரத்ரத்னா விருதுக்காக SMS. மூலம் ஓட்டெடுப்பு எடுத்ததை கண்டித்து ‌இந்து ராம்ராஜ்ய சேனாவினர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சியான NDTV., அலுவலகத்தை தாக்கினர். சமீபத்தில் பாரத் ரத்னா விருதுக்கு யாரை தேர்வு செய்யலாம் என  SMS மூலம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதை கண்டித்து தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அலுவலகத்தை தாக்கியதுடன், அங்கிருந்த இரண்டு ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.


ஊடகத் துறையினருக்கான சுயமுன்னேற்ற சிறப்புப் பயிற்சி

January 17th, 2008 பகுப்புகள்: ஊடகம், தொலைக்காட்சி, பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஊடகத் துறையினருக்கான சுயமுன்னேற்ற சிறப்புப் பயிற்சி

ஊடகத் துறையினர் சொந்த வாழ்விலும், தொழில் சார்ந்த வாழ்விலும் சிறந்து விளங்கும் வகையில் “சமுதாயத்தில் பண்புகளை நிலைநாட்டுவதில் ஊடகத் துறையின் பங்கு’ என்ற தலைப்பில் சுயமுன்னேற்றப் பயிற்சி பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் -ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் அளிக்கப்படுகிறது.

சென்னை சுங்குவார் சத்திரம் பொடவூர் கிராமம் ஹேப்பி வில்லேஜில் அமைந்திருக்கும் பிரம்மா குமாரிகள் புத்துணர்வு மையத்தில் ஜனவரி 19-ம் தேதி மாலை 6 மணி முதல் 20-ம் தேதி மாலை 6 மணி வரை இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விவரங்களுக்கு 27192041 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
 
 www.dinamani.com


கலைஞர் டிவி மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்

January 13th, 2008 பகுப்புகள்: அரசியல், தொலைக்காட்சி | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கலைஞர் டிவி மீது ராமதாஸ் திடீர் பாய்ச்சல்
    

தமிழ்த் தொலைக்காட்சிகளிலேயே கலைஞர் டிவிதான் மிக மோசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கடுமையாக கூறியுள்ளார்.

ராமதாஸ் பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சினிமாவையும் அது தொடர்பான எந்த நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பாமல் ஒரு தொலைக் காட்சியை நடத்த முடியாது என்ற கருத்தை, மக்கள் தொலைக்காட்சி  முறியடித்து வெற்றி பெற்றிருக்கிறது.

சினிமா ரசிகர்களை அதிகம் கொண்ட தமிழகத்தில், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி சிறிதும் இல்லாமல் மக்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகளை அளித்து வருவதாக தொலைக்காட்சி பார்க்கும் நேயர்களே ஒப்பு கொள்ளும் வகையில் அந்த டிவி செயல்பட்டு வருகிறது.

மக்கள் தொலைக்காட்சி தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் மற்ற நாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மலேசியாவில் சன் டிவிக்கு அடுத்தபடியாக  மக்கள் தொலைக்காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் சினிமாவையும், சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளையும் பார்த்து வெறுப்படைந்த மக்கள் மாற்று நிகழ்ச்சிகளுக்காக ஏங்கினார்கள்.  தொலைக்காட்சி பார்வையாளர்களில் 40 சதவிகிதம் பேர் இத்தகைய நிகழ்ச்சிகளை விரும்புவதால் காணப்பட்ட வெற்றிடத்தை நிறைவு செய்ய  எண்ணியே மக்கள் தொலைக்காட்சி  தொடங்கப்பட்டது. அந்த வெற்றிடம் தற்போது நிரப்பப்பட்டு விட்டது.

திமுக தலைவர் கருணாநிதியின் பெயரில் ஒரு தொலைக்காட்சி வெளிவரப்போவதாக நான் முதன் முதலில் கேள்விபட்ட போது, மக்கள் தொலைக்காட்சியை போன்றே அந்த டிவியும் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் மற்ற டிவிகளை போலவே கலைஞர் டிவியும் குப்பைகளைத் தான் ஒளிபரப்புகிறது.  இன்னும் சொல்லப்போனால் மற்ற டிவிக்களை விட மிக மோசமான நிகழ்ச்சிகளை அது ஒளிபரப்புகிறது என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

 www.thatstamil.com